சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Khan11

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

2 posters

Go down

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Empty நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

Post by Muthumohamed Mon 13 May 2013 - 9:31

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

Post by Muthumohamed Mon 13 May 2013 - 9:32

பஸ்சில் தவறிய பட்டுப் புடவை

என் பெற்றோர் கடலூரில் புது வீடு கட்டியிருந்தார்கள். கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக வரும் சொந்த பந்தங்களுக்கு புதுத் துணிகள் கொடுத்து மரியாதை செய்ய விரும்பினார்கள். அதற்காக சென்னையில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடையில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்கினார்கள். அவைகளை எடுத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

இவர்களுக்கு அருகிலேயே பட்டுக்கோட்டைக்கு செல்வதற்காக வயதான ஒரு தம்பதியினரும் காத்திருந்திருந்திருக்கிறார்கள். எனது பெற்றோர் வைத்திருந்த பையும் அந்த தம்பதியினர் வைத்திருந்த பையும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது. அந்த தம்பதியினர் பேருந்தில் ஏறும் அவசரத்தில் எனது பெற்றோர் வைத்திருந்த பையை தவறுதலாக எடுத்துச் சென்று விட்டனர்.

அந்த பையில் பட்டுப்புடவைகளைத் தவிர எனது அப்பாவின் வங்கி பாஸ்புக் உட்பட சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது. வீட்டுக்கு வந்ததும் பை மாறியதைக் கண்டு திடுக்கிட்ட எனது பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் அபசகுனம் என்று கூறிவிடுவர் என அஞ்சியிருக்கிறார்கள்.

அந்த சுபநிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனது அப்பாவின் செல்போனில் தொடர்பு கொண்ட அந்த தம்பதியினர் ``பையை தவறுதலாக மாற்றி எடுத்து வந்துவிட்டோம் மன்னித்து விடுங்கள் `கூரியரில்' பையை உங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டோம். பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் பையையும் அனுப்பிவைத்துவிடுங்கள்'' என்று கூறியிருக்கிறார்கள்.

`பையை' பெற்றுக்கொண்ட பிறகுதான் அப்பா எங்களிடம் இதைக் கூறினார். அந்த பட்டுப்புடவைகள் விலைமதிப்புள்ளவை என்றாலும் அதை அனுப்பிவைத்த அந்த முதிய தம்பதியினரை நாங்கள் பாராட்டினோம்.

சோ.மீரா, சென்னை-37.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

Post by Muthumohamed Mon 13 May 2013 - 9:32

பாட்டு கேட்டது! பண்பு பறந்தது!

எனது நண்பர் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கண்ணியமானவர். ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் அவர் நேர்மை தெரியும்.

சமீபத்தில் ஒருநாள் அவரிடம் பேச செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது மறுமுனையில் அழைப்புமணிக்கு பதிலாக `தோழியா என் காதலியா யாரடி நீ...' என்ற பாடல் ரிங்டோனாக ஒலித்தது. இதைக்கேட்டதும் எனக்கு அதிர்ச்சியும் கூடவே ஆச்சரியமும் ஏற்பட்டது. அன்று அவர் போனை எடுத்து பேசவில்லை. நானும் அதோடு விட்டுவிட்டேன்.

அடுத்த சில நாட்களில் சிற்றுண்டி விடுதி ஒன்றில் நான் உணவருந்திக் கொண்டிருந்தேன். என் அருகில் இருந்து இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் பேச்சைக் கவனித்தபோது அவர்கள் இருவரும் நான் மேலே குறிப்பிடும் அந்த நண்பரின் நிறுவனத்தில் முன்பு வேலை பார்த்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் `நமது பழைய எம்.டி. செல்போனில் எப்படிப்பட்ட பாட்டு வைத்திருக்கிறார் தெரியுமா? இந்த வயசுலே இப்படிப்பட்ட பாட்டு தேவையா?' என்று கிண்டலடித்து அந்த நண்பரின் பெயரையும் குறிப்பிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

மேலும் பொறுமைகாக்க முடியாமல் அந்த ரிங்டோன் விஷயத்தைக்கூற அந்த நண்பரின் வீட்டிற்கு சென்றேன். அந்த செய்தியை அவரிடம் கூற, அதிர்ந்து போனார். தனக்கே தெரியாமல் இது எப்படி நடந்தது? என்று குழம்பியவர், சட்டென நினைவுக்கு வந்தவராய் `சென்ற மாதம் எனது மகள் தனது மகனை அழைத்துக் கொண்டு வந்து இரண்டு நாட்கள் என்வீட்டில் தங்கியிருந்தாள். எனது பேரன் செல்போனை எடுத்து கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விளையாட்டாக ஸ்டார் பட்டனை அழுத்தி இருக்கலாம்' என்றவர், அவமானத்தால் கூனிக் குறுகி போனார்.

நான் அவரிடம் "உடனே கஸ்டமர் பிரிவுக்கு போன் செய்து சொல்லுங்கள். தானாகவே பாட்டு கேன்சல் ஆகிவிடும்'' என்று சொல்லி விட்டு திரும்பினேன்.

செல்போனை ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பிலே வைத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் இதுபோன்ற கேலி, கிண்டல் நிறைந்த அனுபவங்களை சந்திக்க வேண்டி வரும்!

ஆர். ரவீந்திரன், காப்பரத்தான்பட்டி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

Post by Muthumohamed Mon 13 May 2013 - 9:33

வழங்கலாமே, `வங்கி அன்பளிப்பு காசோலை'!

என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டேன். வந்திருந்த அன்பளிப்புகள் ஏராளம். அதைக்கண்டு மகிழ்ந்த மணப்பெண் அவற்றை பிரித்ததும் மனம் வருந்தினாள். காரணம் வந்ததில் பாதிக்கும் மேல் கடிகாரம்... பிளாஸ்டிக் டின்னர் செட்... பிளாஸ்டிக் சாமான்கள் தான். இரண்டு பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் ஒரே பொருளில் பத்து செட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?

ஒரே பொருளை பலரும் வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாய் பணமாய் கொடுத்திருந்தாலாவது நன்றாக இருந்திருக்குமே, அதை வைத்து தேவைப்படும் பொருளை வாங்கியிருக்கலாமே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அன்பளிப்பு பொருட்களை எல்லாம் பார்த்த நெருங்கிய உறவினர்கள் சிலர், `இத்தனையையும் வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டு, பணம் கொடுக்காமலே பாதிப் பொருட்களை தங்களுக்காக எடுத்துக்கொண்டார்கள்.

இதனை பார்த்த எனக்கு வருத்தமாய் இருந்தது. 250 ரூபாய்க்கு மேல் அன்பளிப்பு வழங்க நினைப்பவர்கள் அதனை வங்கி அன்பளிப்பு காசோலையாக வழங்கினால், புதுமண தம்பதியினர், தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக்கொள்வார்களே! பல அரசு, தனியார் வங்கிகள் வழங்கும் இந்த அன்பளிப்பு காசோலைகளை பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். அதுவே புதுமண தம்பதியினருக்கு சிறந்த, பயனுள்ள அன்பளிப்பாகவும் அமையும்.

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்-34.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

Post by Muthumohamed Mon 13 May 2013 - 9:34

சைக்கிளை சாய்த்தது, தாவணி

நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகளுக்கு பாவாடை, தாவணி தான் சீருடை. பள்ளி சற்று தூரம் என்பதால் மாணவிகள் பெரும்பாலும் சைக்கிளில் தான் செல்வார்கள்.

அன்று ஒரு மாணவி பள்ளிக்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். பள்ளிக்கு நேரமாகி விட்ட அவசரத்தில் தாவணியின் முந்தானையை எடுத்து செருகாமல் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்தார். அப்போது தாவணி சைக்கிள் சக்கரத்தில் சிக்கி, நிலைகுலைய வைத்து மாணவியை நடுரோட்டில் சாய்த்துவிட்டது.

மாணவியின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. நல்லவேளையாக அப்பகுதியில் வாகனங்களின் வருகை குறைவு என்பதால், மாணவியின் உயிருக்கு ஆபத்தில்லை. பாவாடை, தாவணி அணிந்து கொண்டு சைக்கிளில் செல்லும் மாணவிகள் கவனமாக செல்ல வேண்டும். பெற்றோரும் அவசரகதியில் மாணவிகள் பள்ளிக்கு செல்லாத அளவிற்கு பார்த்துக்கொள்ளவேண்டும்.

-ம. தமயந்தி, கீழக்குமரேசபுரம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

Post by Muthumohamed Mon 13 May 2013 - 9:34

பஸ் பயணத்தில் பாத்ரூம் அவஸ்தை

விழுப்புரம் அரசுப் பேருந்தில் சேலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்தில் நல்ல கூட்டம். வழியில் கள்ளக்குறிச்சியில் பேருந்தை நிறுத்திய டிரைவர், "கழிவறை செல்பவர்கள், டீ சாப்பிடுபவர்கள் சென்று விட்டு வரலாம். பேருந்து 10 நிமிடங்கள் நிற்கும். இதை விட்டால் இனிமேல் சேலத்தில் தான் நிற்கும்'' என்றார். பின்பு ஓட்டுனரும், நடத்துனரும் டீ சாப்பிடச் சென்றனர். பயணிகளும் இறங்கி, அவரவர் தம் கடமையை முடித்துவிட்டு, பேருந்தில் ஏறினர். பேருந்து 10 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிடங்கள் கழித்தே புறப்பட்டது.

என் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், இந்த 15 நிமிட இடைவெளியில் கீழே இறங்காமல், பேருந்திலேயே அமர்ந்திருந்தார். மீண்டும் புறப்பட்ட பேருந்து வாழப்பாடியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அவர் என்னிடம், "சேலம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது? எப்போது சென்றடையும்?'' என்று கேட்டார். நான் அவரிடம் "இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கிறது. எப்படியும் 30-லிருந்து 45 நிமிடங்களாவது ஆகும்'' என்று அவரிடம் கூறினேன். அவர் என்னிடம்"நான் ஒரு சர்க்கரை நோயாளி. நான் இப்பொழுது அவசரமாக சிறுநீர் கழித்தாக வேண்டும். என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை'' என்று அவஸ்தையாக கூறிவிட்டு, நேராக நடத்துனரிடம் சென்று அவருடைய நிலையை விளக்கிக் கூறினார். பேருந்தை நிறுத்துமாறு கெஞ்சினார்.

நடத்துனர் அவரை கோபத்துடன் பார்த்துவிட்டு, சத்தம் போட்டு திட்டினார். "கள்ளக் குறிச்சியில் பேருந்து 15 நிமிடங்கள் நின்றபோது என்ன செய்தீர்கள்? இப்போது பஸ்சை நிறுத்த முடியாது'' என்றார்! அந்தப் பயணி மீண்டும் கெஞ்சினார். பரிதாபப்பட்ட ஓட்டுனர், பேருந்தை நிறுத்தினார். கீழே இறங்கியவர் 3-4 நிமிடங்கள் ஆகியும் மேலே ஏறவில்லை. பயணிகளில் ஒரு சிலர் "யோவ்! போதும்யா. மேலே ஏறு!'' என்று சத்தம் போட்டனர். மேலே ஏறியவர், அவமானத்தில் யாரையும் பார்க்காமல் கூனி குறுகிப் போனார். இவரைப் போன்று நெடுந்தொலைவு பயணிப்பவர்கள் ரெயில் பயணத்தை தேர்வு செய்யலாம். அல்லது அதற்குரிய இடைவெளியில் இந்த இயற்கை உபாதைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

- ரி.குப்புசாமி, மேட்டுப்பாளையம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

Post by Muthumohamed Mon 13 May 2013 - 9:35

பாசம் வேஷமானபோது..

என் தோழிக்கு இரண்டு தங்கை, ஒரு அண்ணன். சிறு வயதிலே அவளது அப்பா இறந்து போனார். ஓரளவு நிலபுலன்கள் உண்டு. அதில் கிடைத்த வருமானத்தை வைத்து கூழோ, கஞ்சியோ குடித்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

தோழியின் அம்மாவுக்கு ஒரு தங்கை உண்டு. அவருக்கு தன் அக்கா குடும்பத்தினரின் அனுதின போராட்ட வாழ்க்கை தெரியும். அன்று தோழியின் வீட்டுக்கு வந்த அம்மாவின் தங்கை ரொம்ப அக்கறையோடு பேசியிருக்கிறார். `நான் எப்போதும் உங்களுக்கு உதவி செய்ய ஓடோடி வருவேன். நிலத்தை விற்று எனக்கு 1 லட்சம் ரூபாய் கொடுங்கள். அதில் பழைய வேன் ஒன்றை வாங்கி வாடகைக்கு விடுவேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் பங்கு தருவேன். அசலையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தந்துவிடுவேன்' என்று கூறியிருக்கிறார். இவர்களும் அதை நம்பி, நிலத்தை கேட்ட விலைக்கு விற்று பணத்தை கொடுத்துவிட்டார்கள். அவரும் வேன் வாங்கிவிட்டார்.

முதல் இரண்டு மாதங்கள் சிறுதொகையை வருமானம் என்ற பெயரில் கொடுத்திருக்கிறார். பின்பு பணமே கொடுக்கவில்லை. தொடர்ந்து நாலைந்து மாதங்கள் பணமே வரவில்லை என்றதும், தோழியின்அம்மா தனது தங்கையின் வீடு தேடி போய் பணத்தைக் கேட்டிருக்கிறார். அவரோ, `வருமானமே இல்லாமல் எங்கிருந்து தருவது?' என்று கோபக்குரல் எழுப்பியிருக்கிறார். உண்மையில் அந்த குடும்பம் வேன் வாடகை மூலம் கிடைக்கிற வருமானத்தில் செழிப்பாக இருக்கிறது. தன் சுயநலத்துக்காக திட்டமிட்டு அக்கா குடும்பத்தை எமாற்றிய அந்த தங்கையின் செயலால் அவர்கள் நிலத்தையும் இழந்து, வருமானத்தையும் இழந்து வாடுகிறார்கள்.

நிஷா, திருவாரூர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

Post by rammalar Mon 13 May 2013 - 14:00

அனைத்தும் நெகிழ வைத்த சம்பவங்களே...!
-
பகிர்வு நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  800522
-
நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Flowers07
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு  Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள் -தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum