சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Khan11

சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க...

Go down

சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Empty சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க...

Post by Muthumohamed Thu 16 May 2013 - 18:17

சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Tamil-Daily-News_59323847294

மனித வாழ்வில் வீடு கட்டுவதற்கும், திருமணம் நடத்துவதற்கும்தான் மிகப் பெரும் செலவும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் திருமணத்தையும் வீட்டையும் சமமாக வைத்துப் பேச முடியாது. திருமணம் என்பது சட்ட ரீதியாக ஒரு கையெழுத்துடன் முடிந்துவிடக்கூடியது. மற்ற செலவுகள் அனைத்தும் நம்பிக்கைகளுக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும், சமுதாய அந்தஸ்தைப் பறைசாற்றிக்கொள்ளவும் செய்யப்படுபவை.

ஆனால் சொந்த வீடு வாங்குவதற்கான செலவு அப்படியல்ல. அதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் வீடுகளின் விலை விண்ணைத் தொடுகிறது. ஒரு சொந்த வீடாவது வாங்கிவிட நினைக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. வீடு வாங்குவதற்காக பல தியாகங்களைச் செய்கிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் இருந்தன. இருக்கும் உறுப்பினர்களைத் தவிர வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களுக்காகவும், இடம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் வீட்டின் அளவு தீர்மானிக்கப்படும்.

தினமும் அலுவலகத்துக்குச் செல்ல பல கிலோமீட்டர் தூரம் பயணிப்பவர்கள் இருக்கிறார்கள். தினமும் அரக்கோணத்திலிருந்தும், செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு வந்து போகும் பலருக்கு அவ்வாறான நெடும் பயணங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வாக மாற, சொந்த வீடும் ஒரு முக்கியக் காரணம். நகரம் விரிவடைந்திருப்பது வீடு வாங்கும் ஆசையின் மற்றொரு விளைவு. இருக்கும் விலைவாசியில் நகரத்தின் மையத்தில் வீடு வாங்குவது நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனி. எனவே புறநகர்ப் பகுதிகளில் வீடுகள் வாங்கப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன் கிராமம் போல் இருந்த வேளச்சேரி இன்று சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்று.

ஆனால் எத்தனையோ மாற்றங்களையும் இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு சொந்த வீட்டில் வசிக்கப் பலர் விரும்புகிறார்கள். ‘‘சொந்த வீடு வாங்கத் தூண்டும் முதல் காரணம் வாடகை வீடுகளில் வீட்டு ஓனர் பிரச்னை. மூன்று ரூம்கள் இருக்கும் வீட்டுக்கு சென்னையில் இன்று மினிமம் 12,000 வாடகை தர வேண்டி இருக்கிறது, அவ்வளவு வாடகை கொடுத்தாலும், அந்த வீட்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கக் கூடாது. சொந்தக்காரர்கள் வரவே கூடாது. வந்தாலும் இரவில் தங்கக் கூடாது போன்ற கண்டிஷன்கள் போடப்படுகின்றன.

அடிக்கடி வீடு மாற்றத் தேவைப்படும் உழைப்பும் அதற்கான செலவுகளும் சொந்த வீடு வாங்கத் தூண்டும் காரணங்களில் முக்கியமானது. சமுதாய அந்தஸ்தும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், திருமணம் பேச ஆரம்பிக்கும்போது கேட்கப்படும் முதல் கேள்வி, ‘மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கா?‘ என்பதுதான். இவை எல்லாவற்றுக்கும் மேல், வீடு என்பது அதிக லாபம் தரும் முதலீடாக இருக்கிறது. அதிக வருவாய் தரும் முதலீடுகள் தங்கமும் வீடு / நிலமும்தான்.

நாட்டில் பொதுவாகவே விலைவாசி உயர்ந்தாலும் வீட்டின் விலை உயர்வு மட்டும் ஏன் மிக அதிகமாக இருக்கிறது? ‘‘நிலப் பற்றாக்குறை நிலத்தின் விலையை உயர்த்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கட்டுமானப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டன. இதுவே வீடுகளின் விலை உயர்வுக்குக் காரணம்‘‘ என்று விளக்குகிறார் வீடு கட்டும் தொழிலில் முன்னணியில் உள்ள நிறுவன அதிகாரி ஒருவர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க... Empty Re: சொந்த வீடு கட்டுங்க... சந்தோஷமா இருங்க...

Post by Muthumohamed Thu 16 May 2013 - 18:18

சிறந்த கட்டுனர் விருது

அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் திருவள்ளூர் கட்டுனர் விருது வழங்கு விழாவும், சர்வதேச கட்டுனர் சங்கத்தின் அமைப்பான மிதிகிகீறிசிகி பீஸ்மா விருது பெற்ற, அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு விழாவும், திருவள்ளூர் மையத்தின் சார்பில் நடந்தது.

இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் திரு.என்.சுவாமிநாதன் மற்றும் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் திரு.வி.ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கட்டுனர்களுக்கான விருதை திரு.எம்.நாகபூஷனம் லோகோஸ் கன்ஸ்ட்ரக்ஷன், கல்பனா கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் பிரவன் டிசைனர்ஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன் மையத் தலைவர் கே.குமார், மைய நிறுவன தலைவர் கே.ஜி.ஜானகிராமன்.

ஹோம் லோன் வாங்க...


ஹோம் லோன் வாங்கப் போறீங்களா..? அதுக்கு முன்னால கொஞ்சம் ஹோம் வொர்க் செய்யலாமா...?
இன்னொரு முக்கியமான விஷயம்... உங்களுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் மிகவும் அவசியம்.

ஏதேனும் ஒரு பேங்க்குல அக்கவுன்ட் வச்சிருக்கணுமே... பாஸ்புக் கைவசம் இருக்கா..? இது ரொம்ப முக்கியமுங்க.

வங்கி மேலாளரை அணுகும்போது இருப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டுன்னு எதையாச்சும் காண்பிச்சே ஆகணும். வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா..? அதையும் மறக்காம கொண்டு போங்க. மாத வருமானம் பெறுவதற்கான சேலரி ஸ்லிப் இருந்தால் உத்தமம்.

விவசாயம் செய்யறது. விசைத் தறி ஓட்டறதுன்னு ஏதோ பொழப்பு ஓடிட்டிருக்கு. இதுல நிலையான மாத வருமானத்தை நினைச்சுக் கூட பார்க்க முடியாதே...? உங்களின் கவலை நியாயமானதுதான். ஆனா, அதுக்கும் வழி இருக்கே... ஏதேனும் ஒரு வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் தொடர்ந்து சேமிப்பவராக இருந்தால் அதையே நிலையான வருமானமாக காட்ட முடியும்.

ஃபாரின் வங்கி, தனியார் வங்கி, தேசிய வங்கின்னு இப்படி ஏகப்பட்ட வங்கிகள்... என்னங்க தலை சுத்துதா..? தடுமாறாம யோசிங்க. எந்த பேங்க்குல வட்டி விகிதம் குறைவு? தவணை முறை சுலபமாக இருக்கிறதா...? இதையெல்லாம் கொஞ்சம் நிதானமாத்தான் அலசணும். ஒவ்வொரு பேங்க்குலயும் இவ்வளவு நாளைக்குள் பணம் கட்டலாம்ன்னு ஒரு லிமிட் இருக்கு. ஐந்து வருடங்களில் ஆரம்பித்து, பதினைந்து, இருபது வருடங்கள் வரை காலக்கெடுவை நீட்டிப்பார்கள். இதுவும் கூட உங்கள் சாய்ஸ்தான்.

காலி நிலத்துல வீடு கட்டப் போறீங்களா...? அது உங்களோட சொந்த நிலம்தான் என்பதற்குரிய அத்தனை அத்தாட்சிகளும் வேண்டும். கார்ப்பரேஷன் அனுமதி, கிராமமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் முறையான சான்றுன்னு இதையெல்லாம் வாங்கி வைச்சுக்கோங்க. நீங்க வீடு கட்டப்போகிற இடமானது விளைச்சல் நிலமாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமானதாகவோ இருக்கக் கூடாதில்லையா..? அதனால, நிலத்திற்குரிய பத்திரங்கள். வில்லங்கச் சான்றிதழ்கள் கட்டாயம் கவனிக்கப்படும்.

உடனே கடன் கிடைச்சுடுமா....? அதான் நடக்காது. வங்கியின் சார்பில் ஒரு வழக்கறிஞர் வருவார். எல்லா சான்றிதழ் சமாச்சாரங்களையும் அலசிவிட்டு வில்லங்கம் ஏதுமில்லை என்று அவர் விளக்கம் கொடுத்தால்தான் மேற்படி வேலைகள் நடக்கவே ஆரம்பிக்கும். தொகையை நீங்களே நிர்ணயித்தால் போதுமா..? போதாது. வங்கியின் சார்பில் ஒரு இன்ஜினீயரை அனுப்புவார்கள். அவர் வந்து பார்வையிட்டு இடத்தின் அளவு, மதிப்பு விவகாரங்களை ரிப்போர்ட் செய்யும் பட்சத்தில் உங்களின் கடன் தொகையை, சம்பந்தப்பட்ட வங்கி பரிசிலிக்கும்.

ஏற்கனவே கட்டப்பட்ட வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் ஏதேனும் ஒரு ஃப்ளாட்டை வாங்குவதானாலும் இதே விதிமுறைகள்தான். ஃப்ளாட்டின் சதுர அடி, அது அமைந்திருக்கும் இடம். தற்போதைய விலை மதிப்பு, முறையான அனுமதி என அத்தனையும் பரிசோதிக்கப்படும்.

எனக்குன்னு சொந்தமா நிலமும் இல்லை... வீடும் கிடையாது வாடகை வீட்டுலதான் வாழ்ந்திட்டிருக்கேன்... அடடா எதுக்குங்க இந்தப் புலம்பல்..? உங்களுக்கும் வங்கிக் கடன் பெற வழி இருக்கே. முறையான, அரசு அனுமதிபெற்ற காலி நிலத்தை விலைக்கு வாங்க தாராளமாக கடன் தரப்படுகிறது. அப்படியே அதில் ஒரு வீடும் கட்டிக்கொள்ளலாம்.

நன்றி : தினகரன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum