சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இது படைத்தவன் தவறோ ? Khan11

இது படைத்தவன் தவறோ ?

+3
rammalar
*சம்ஸ்
Muthumohamed
7 posters

Go down

இது படைத்தவன் தவறோ ? Empty இது படைத்தவன் தவறோ ?

Post by Muthumohamed Fri 17 May 2013 - 17:48

கோடி கோடியாய்
கொட்டி கிடக்கும் பணங்களுடன்
எட்டி பார்க்காத ஆசை ...

ஒரு தெருக்கோடி ஓரமாய்
கொட்டி கிடக்கும் குப்பைகளுக்குள்
எட்டி பார்த்த ஆசை .....

ரசிக்க ஆயிரம் வகைகள்
ருசிக்க ஆயிரம் வகைகள்
பசிக்க மறந்த மனங்கள் .....

ரசிக்க ஆயிரம் இலைகள்
ருசிக்க ஆயிரம் பந்திதொட்டிகள்
பசியோடு வாழும் மனங்கள் ....

ஆயிரம் வண்ணவிளக்குகள்
அழகாய் வடிவமைத்த வீட்டை
அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள் ....

ஆயிரம் வானவேடிக்கைகள்
அங்காங்கே விழுந்த ஓட்டைகளுடன்
அலங்கரித்த சுவரில்லா குடிசை .....

வண்ண வண்ண ஆடைகள்
எண்ணிட கூட இங்கே ஆட்கள்
அணிவதை கூட மறந்திடும்
அடுக்கடுக்காய் ஆடைகள் .....

வண்ண வண்ண ஆடைகள்
எண்ணங்களில் மட்டுமே
எண்ணிடும் ஆடைகள்
எண்ணங்களை வண்ணங்கள் ஆக
எண்ணியே உடுத்திடும் கந்தல் ஆடைகள் .....

அங்கே வண்ணங்கள் உண்டு
என்ன எண்ணங்கள் இல்லை ...

இங்கே ஆயிரம் எண்ணங்கள் உண்டு
வர்ணம் இழந்த வண்ணங்களாக
வாழ்வோர் வாழ்க்கை ...

இது படைத்தவன் தவறோ ?
இல்லை பார்ப்பவன் தவறோ ?
இன்னும் விளங்கவில்லை
படிப்போரும் விளங்காமலே
பார்ப்போரும் கலங்கியே ...



பூவேந்திரன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இது படைத்தவன் தவறோ ? Empty Re: இது படைத்தவன் தவறோ ?

Post by *சம்ஸ் Fri 17 May 2013 - 18:55

அருமையான வரிகள் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது படைத்தவன் தவறோ ? Empty Re: இது படைத்தவன் தவறோ ?

Post by rammalar Fri 17 May 2013 - 19:04

கவிதை இது படைத்தவன் தவறோ ? 800522
-
முரண்பாடுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை...
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதில்லை -
என்று பாடியபடியே, ரயில் பிச்சைக்காரன்
மனிதர்களிடம் கையேந்துகிறான்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இது படைத்தவன் தவறோ ? Empty Re: இது படைத்தவன் தவறோ ?

Post by நண்பன் Fri 17 May 2013 - 19:42

மிகவும் அருமையாக உள்ளது :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இது படைத்தவன் தவறோ ? Empty Re: இது படைத்தவன் தவறோ ?

Post by veel Fri 17 May 2013 - 21:11

இது படைத்தவன் தவறோ ? 800522 இது படைத்தவன் தவறோ ? 2027189708
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

இது படைத்தவன் தவறோ ? Empty Re: இது படைத்தவன் தவறோ ?

Post by gud boy Fri 17 May 2013 - 21:21

கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?







ஓரிறையின் நற்பெயரால்
கடவுள் மறுப்பாளர்களின் பிரதான கேள்வியாக இன்று இது கேட்கப் படுகிறது. ஆரம்பத்தில் கடவுளை கண்முன் காட்டுங்கள் ,அவ்வாறு காட்டினால் நாங்களும் ஏற்றுக் கொள்ள தயார் என்று அறை கூவல் விட்ட பகுதறிவளர்கள்(?) உண்மையிலேயே இந்த வினா பகுத்து அறிவதற்கு உரியது என்பதை நிதர்சனமாக உணர்ந்து அதனை புறந்தள்ளி அடுத்து கையில் எடுத்த வினா தான் . . .


உலகத்தை படைத்தது காக்கும் கடவுள் ஏழை, பணக்காரன், வறியவர், உழைப்பாளி, விவசாயி,உடல் ஊனமுற்றோர், என மக்கள் மத்தியில் பலதரப்பட்ட நிலைகளை ஆக்கியது ஏன்? நீதமாக செயல் படும் கடவுள் என்று சொல்பவர் இப்படி ஏற்ற ,தாழ்வுகளை ஏற்படுத்தலாமா...?


இது படைத்தவன் தவறோ ? 36330_132642233429734_100000518754230_279159_8209673_nஇக்கேள்வியே படிக்கும் போது, ஆமாம்! ஏன் கடவுள் அவ்வாறு படைத்துள்ளார் ., என்று நடுநிலையாளர்கள் கூட ஒருகணம் சிந்திக்கத்தான் செய்வார்கள். ஆம்! அச்சிந்தனையை தான் இஸ்லாமும் வரவேற்கிறது. இயற்கை மார்க்கமான இஸ்லாம் இக்கேள்விக்கான பதிலை மிக தெளிவாகவும், அழுத்தமாகவும் உரைக்கிறது.


அல்லாஹ் திருமறையில்


இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை (51:56)
ஆக,மனிதன் படைக்கப்பட்டதின் முழுமுதற் காரணம் அவனை வணங்கு வதற்காகவே என்பது தெளிவு! அவ்வாறு வணங்குவதற்காக படைக்கபட்ட மனிதனின் தோற்றம் பற்றி வல்ல நாயன் கூறுகிறான்,


மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய ன்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான் (4:01)

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (49:13)

மனித சந்ததி ஒரே பெற்றோர்களிடமிருந்து உருவாயிற்று ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டே குலங்களாகவும்,கோத்திரங்ககளாகவும் பிரித்து வைக்கப்பட்டிருகிறார்கள் என்பதின் மூலம் மனிதனின் பிறப்பின் அடிப்படையில் எந்த வித ஏற்ற தாழ்வுகள் ஏற்படுத்தபடவில்லை என்பதை மேற்கண்ட வசனத்திற்கு மேலதிக விளக்கம் இல்லாமலே புரிந்து கொள்ளலாம்.


அடுத்து ,மிக முக்கியமாக விவாதிக்கப்படும் மனித வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வு பற்றி காண்போம்.

இவ்வுலக வாழ்வு குறித்து இஸ்லாம் கூறும் இலக்கணத்தை சற்று அறிந்து கொண்டால் இந்நிலைபாடு ஏன் என புரியும், இறந்த பிறகு இருக்கும் ஒரு நிலையான வாழ்வுக்கு தன்னை தயார் படுத்தி கொள்ளவதற்க்கான ஒரு சோதனை கூடம் தான் இவ்வுலக வாழ்வு என்கிறது இஸ்லாம்.
நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களின் அடிப்படையில் இறந்தபிறகு அதற்காக வெகுமதியோ,தண்டனையோ இறைவன் புறத்திலிருந்து கொடுக்கப்படும் என்பதே இஸ்லாம் கூறும் மறு உலக நம்பிகை.
எனவே இவ்வுலகம் சோதனைக்காக படைக்கப்பட்டிருப்ப்பதால் தான் மனிதர்களிடையே இத்தகையே ஏற்ற தாழ்வை இறைவன் உருவாக்கி இருக்கிறான்.


ஏனெனில் யாராக இருந்தாலும் அவர் பெற்ற, செலவழித்த செல்வம் குறித்து நாளை(மறுமையில்) கேள்வி கேட்டபடுவார். எனவே இறைவனுக்கு பயந்து செல்வந்தர்கள் நல்ல வழியில் பொருளிட்டினார்களா? செலவு செய்தார்களா?
அதுபோல,ஏழைகள் இருக்கும் செல்வத்திற்கு அதிகமாக பெற தவறான வழியில் செல்லாமல் மேலும் பெற நியாயமான முறையில் உழைத்தார்களா... என்பனவற்றிக்காகவே அல்லாஹ் செல்வத்தை மக்களிடையே மாறி மாறி வர செய்கிறான்.


இதனை தன் திருமறையில்...
"நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள் (8:28)

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.(64:15)

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.(3:186)

ஆக இளவயதில் மரணம், திடீர் விபத்துக்கள்,உடல் ஊனங்கள், குழந்தை பேரின்மை, பசி, வறுமை, மழையின்மை, பூகம்பம், இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்கள் அந்தந்த குடும்ப மற்றும் சமூகங்களுக்கு சோதனையாக அமைகின்றன.


அத்தகைய சுழலில் அவர்களை சார்ந்தோர் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. சுருக்கமாக சொன்னால்... அவ்வாறு ஏற்படும் சூழ்நிலையில் மனிதன் இறைவனுக்காக பொறுமையே மேற்கொள்கிறானா,அல்லது தன் கோபத்தின் வெளிப்பாட்டால் தான்தோன்றி தனமாக செயல்படுகிறானா என்பதை கண்டறிவதற்கான இறைவனின் ஏற்பாடே இது ஆகும். திருமறையில்...


உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன் (67:2)

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக (2:155)

அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக) (47:31)


மேற்கண்ட வசனத்தின் வாயிலாக சோதிப்பதற்காகவே எந்த ஒரு இழப்பும் நம்மை வந்தடைகிறதுஎன்பதை விளங்கலாம். உலகின் அதிபதியான அளவற்ற அன்புடையோனகிய வல்ல நாயன் அணுவளவேணும் அநியாயம் எவருக்கும் இழைத்திட மாட்டான்.


பகுத்தறிவு பார்வைக்கு இறுதியாக ... மனித பார்வையில் கால்நடைகளும், பறவையினங்களும் வெறும் ஐயறிவு உயரினமாக தென்படும்போது., அவ்வுயிர்கள் தேவைக்காக மட்டுமே பயன்படும் நிலையில் இருக்கும் போது அவ்வுயிர்களை படைத்திட்ட உண்மை இறைவன் கூறுவதை கேளுங்கள்.


பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும் (6:38)

மனித படைப்போடு ஏனைய உயிரினங்களையும் ஒப்பு நோக்கியிருக்கும் இறைவனின் நீத தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
அல்லாஹ் மிக அறிந்தவன்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இது படைத்தவன் தவறோ ? Empty Re: இது படைத்தவன் தவறோ ?

Post by ahmad78 Sat 18 May 2013 - 9:42

நல்ல தகவல்கள்



பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இது படைத்தவன் தவறோ ? Empty Re: இது படைத்தவன் தவறோ ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum