சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா? Khan11

மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா?

2 posters

Go down

மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா? Empty மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா?

Post by Muthumohamed Fri 17 May 2013 - 22:04

மாத்திரைகளை உடைத்துத் துண்டாக்கி உட்கொள்வது என்பது பரவலான ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆனால் இது நல்லதல்ல என அண்மைய ஒரு ஆய்வு கூறுகிறது. நோயாளிகள் மட்டுமல்ல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உடைத்துக் கொடுக்கிறார்கள். மருத்துவமனைகளில் கூட மாத்திரைகளை உடைத்துத் துண்டாக்கி கொடுப்பது வழக்கம். ஜேர்மனியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பரிகாரம் கொடுக்கப்படும் மருந்துகளில் சுமார் 25% உடைத்தே பாவிக்கப்படுகிறது என்பது தெரிய வந்தது.

ஏன் உடைக்கிறார்கள்.
பலரும் வெவ்வேறு காரணங்களுக்காக மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளும் சில பெரியவர்களும் மாத்திரை பெரிதாக இருப்பதாக எண்ணி அதை உடைத்தால் சுலபமாக விழுங்க முடியும் என்பதற்காக உடைத்து உட்கொள்கிறார்கள்.

சில மாத்திரைகள் நோயாளரின் தேவைக்கு ஏற்ற அளவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. அதனால் உடைத்து விழுங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. உதாரணமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் HCT என்ற மாத்திரை 50 mg அளவிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஆனால் இலங்கையில் பெரும்பாலும் 25 mg அளவே நோயாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் உட்பட எவருமே 50 mg மாத்திரையை இறக்குமதி செய்வதில்லை. இதனால் எல்லா நோயாளிகளும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதே போல கொலஸ்டரோலுகக்கு உபயோகிக்கும் Atrovastatin மாத்திரை 10 அல்லது 20 mg அளவிலேயே கிடைக்கிறது. 5 அல்லது 15 mg உபயோகிக்க வேண்டிய அனைவரும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டியிருக்கிறது.

பொருளாதாரக் காரணங்களுக்காகவும் பலர் உடைத்து உட்கொள்கிறார்கள். ஒருவருக்கு 20 mg Atrovastatin தேவையெனில் அதை 5mg மாத்திரையாக வாங்கும் செலவை விட 10 mg மாத்திரையை பாதியாக உடைக்கும்போது குறைவாகவே இருக்கும். இக் காரணத்திற்காகவும் பலர் மாத்திரையை உடைத்து உபயோகிக்கிறார்கள்.

பாதிப்புகள் என்ன?
ஆனால் மாத்திரைகளை உடைக்கும்போது
அவை சரிபாதியாக உடைபடுவதில்லை.
அத்துடன் உடைக்கும் போது துகள்களாக சற்று உதிரவும் செய்கின்றன.
உடைக்கவே கூடாத மருந்துகளும் உள்ளன. Slow release, Extended release போன்றவை படிப்படியாக அல்லது நீண்ட நேரம் எடுத்து உணவுக் கால்வாயில் கரைவதற்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டவை. இவற்றை உடைத்தால் அதன் நோக்கமே சிதறிவிடும்.

Slow release, Extended release போன்றவற்றை உடைக்கவே கூடாது


உடைக்கும் முறைகள்
மாத்திரைகளை உடைப்பதற்கு பலரும் வெவ்வேறு வேறான முறைகளை உபயோகிக்கின்றனர்.

இந்த ஆய்வின் போது மாத்திரையை அதை உடைப்பதற்கான Pilomat device மூலம் உடைப்பது. சமையலறைக் கத்தி மூலம் உடைப்பது, கத்தரிக்கோலால் வெட்டுவது, மற்றும் உடைப்பதற்கான அடையாளம் இடப்பட்ட மாத்திரைகளை எதையும் பயன்படுத்தாது கையால் உடைப்பது ஆகியனவே அவையாகும். எல்லா முறைகளின்போதும் மருந்தின் அளவு குறைந்திருந்தபோதும் Pilomat device மூலம் உடைக்கும்போது சேதம் குறைவு எனத் தெரியவந்தது. இவ்வாறு சேதம் உறுவதால், நோயாளி ஒரு வேளைக்கு உபயோகிக்கும் மருந்திற்கும் அடுத்த நேரம் உபயோகிக்கும் மருந்திற்கும் இடையே அளவில் மாற்றம் ஏற்படும். பெரும்பாலும் உபயோகிக்க வேண்டியதிலும் பார்க்கக் குறைந்த அளவு மருந்தே கிடைக்கும் என நம்பலாம்.

இது ஆய்வுபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் Journal of Advanced Nursing என்ற சஞ்சிகையின் ஜனவரி 2011 இதழில் வெளியாகியுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தியபோது உடைத்தவற்றில் 31 சதவிகிதமானவை சரியாக உபயோகிக்க வேண்டிய மருந்தின் அளவை விட 15 சதவிகிதம் குறைந்திருந்தது காணப்பட்டது. மேலும் 14 சதவிகிதமானவை 25 சதவிகிதம் குறைந்திருந்தது. அதாவது மருந்தின் அளவு 1/6 - மூ ¼ குறைந்திருந்தது.

வேறொரு விதத்தில் சொன்னால் ஒருவருக்கு 100 மி.கி மருந்து சிபார்சு செய்திருந்தால் உடைத்து உபயோகிக்கும் போது 75 மிகி முதல் 85 மிகி மட்டுமே கிடைக்கும் எனலாம். இவ்வாறான மருந்து அளவுகளின் மாற்றம் நோயின் தாக்கத்தில் பாரிய மாற்றங்களை உண்டு பண்ணலாம் என்பதை விளக்க வேண்டியதில்லை. அத்துடன் பாவிக்கும் மருந்தானது பக்கவிளைவுகள் அதிகம் உள்ளதாயின் மருந்தின் அளவில் சிறுமாற்றம் கூட உடலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?
எனவே முடிந்தவரை மருந்துகளை சரியான அளவுகளில் வாங்குங்கள்.
மாத்திரையாக வேண்டிய அளவில் கிடைக்காவிடின், திரவ வடிவில் மருந்து கிடைக்குமாயின் சரியான அளவை எடுக்க அது உதவலாம்.

சரியான அளவைப் பெறுவதற்கு இரண்டு மாத்திரைகளை சேர்த்து உபயோகிக்க முடியுமாயின் அவ்வாறு செய்யுங்கள். உதாரணமாக 75 மிகி மாத்திரை கிடைக்காவிட்டால் 50 மிகி மாத்திரையை உடைப்பதற்குப் பதிலாக 50 மிகி மாத்திரையுடன் 25 மிகி மாத்திரையைச் சேர்த்து உபயோகிக்கலாம்.

இச் செய்தியை அனுப்பி வைத்தவர்: யோகன் - டென்மார்க்
பனிப்புலம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா? Empty Re: மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கலாமா?

Post by பானுஷபானா Sat 18 May 2013 - 4:44

பயனுள்ள பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum