Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
3 posters
Page 1 of 1
சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
சென்னை, மே.25-
போலீஸ் ஏட்டு பெயர் தியாகராஜன் (வயது 45). இவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார். ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார்.
ஏட்டு தியாகராஜன் நேற்று மாலை 3.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை செல்லம்மா தோட்டம் குடிசை பகுதியில் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார்.
இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடுவதில் பலே குற்றவாளி. இவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர். வீடு புகுந்து திருடிய வழக்கில் ஐஸ் அவுஸ் போலீசார் இவரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று இவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்.
போலீஸ் ஏட்டு தியாகராஜன் அவரை நேரில் சந்தித்து நேற்று மாலை கடுமையாக எச்சரித்தார். இனிமேல் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டால் உன்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரவுடி விமல்ராஜிடம் கண்டிப்புடன் கூறினார்.
அப்போது திடீரென்று விமல்ராஜ், ஏட்டு தியாகராஜனை கீழே தள்ளி தாக்கினார். மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தியாகராஜனை சரமாரியாக வெட்டினார். ஏட்டு தியாகராஜனுக்கு கழுத்து, மார்பு போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது. அந்த பகுதியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது.
அந்த கோவில் முன்பு ஏட்டு தியாகராஜன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அக்கம்,பக்கத்தினர் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏட்டு தியாகராஜன் மதுரை அருகே உள்ள மேலூரை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் மாமதி (40). இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், பூபதிராஜன் என்ற மகனும் உள்ளனர். சித்ரா என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மகன் பூபதிராஜன் பிளஸ்-2 மாணவர்.
சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் இவர்கள் வசிக்கிறார்கள். தியாகராஜன் வெட்டுப்பட்ட தகவல் கிடைத்தவுடன், அவரது மனைவி மாமதியும், மகள் சித்ராவும் கதறி அழுதபடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அவர்களை போலீசார் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் பவானீஸ்வரி, லட்சுமி, உதவி கமிஷனர்கள் நந்தகுமார், சிவசேகர், இன்ஸ்பெக்டர்கள் தளவாய்சாமி, ரகுராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
ஏட்டு தியாகராஜனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற ரவுடி விமல்ராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ரவுடி விமல்ராஜ் சைக்கோ மனப்பான்மை கொண்டவர். அவர் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
இந்த அம்மா ஆட்சியில ரவுடிஇசம் இருக்காதே இதென்ன புதுசா இருக்கு
Re: சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
ரவுடிசம் இருக்கும்...
ஆனால் அது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்..!
ஆனால் அது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்..!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
rammalar wrote:ரவுடிசம் இருக்கும்...
ஆனால் அது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்..!
இருந்தால் சரி (அறவே ஒழிப்பது சிறந்தது )
Re: சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
ஏட்டு தியாகராஜன் சிகிச்சை பலனின்றி
மரணமடைந்தார்.
தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர்
கதறி துடித்தனர்.
மரணம் அடைந்த
தியாகராஜன் உடல் ராயப்பேட்டை
அரசு ஆஸ்பத்திரியில் இன்று பரிசோதனை
செய்யப்பட்டு மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
மரணமடைந்தார்.
தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர்
கதறி துடித்தனர்.
மரணம் அடைந்த
தியாகராஜன் உடல் ராயப்பேட்டை
அரசு ஆஸ்பத்திரியில் இன்று பரிசோதனை
செய்யப்பட்டு மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பெங்களூர் குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
» மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது
» தொழிலதிபருடன் விபச்சாரம்! பிரபல நடிகை கைது
» இயக்குனர் கவுதமன் சென்னையில் திடீர் கைது
» ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னையில் 6 இடங்களில் சோதனை- 5 புரோக்கர்கள் கைது
» மனைவியைக் கடத்தி 100 இடங்களில் பிளேடால் வெட்டி சித்திரவதை செய்த கணவன் கைது
» தொழிலதிபருடன் விபச்சாரம்! பிரபல நடிகை கைது
» இயக்குனர் கவுதமன் சென்னையில் திடீர் கைது
» ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னையில் 6 இடங்களில் சோதனை- 5 புரோக்கர்கள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum