Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சூறாவளியை விட பயங்கரமான அழிவுகளை மிக விரைவில் ஏற்படுத்தக்கூடியது சுழல் காற்று
Page 1 of 1

புகைவண்டி போன்ற பாரிய வாகனங்களையும் தூக்கி வீசும் வல்லமை கொண்டது
சுழல் காற்று (ஹிornaனீo) என்பது மின்னலையும், இடியையும் தோற்று விக்கக்கூடிய முகிலொன்றின் உட்பகுதியிலிருந்து தொடங்கி நிலமட்டம் வரை நீட்சியடைந்த, கூடிய வேகத்துடன் சுழல்கின்ற வளிநிரல் ஆகும்.
இச்சுழல் காற்று சிறிய அளவிலான சூறாவளியாகும். கடும் இடி, மின்னல், புயல்கள் ஏற்படும்போதே ரொர்னா டோக்கள் உருவாகின்றன. இவை சூறாவளியிலும் பார்க்க பயங்கரமானவை. இவை குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் பாரிய அழிவை ஏற் படுத்தக்கூடியன.
சுழல் காற்றொன்றின் விட்டம் 2 கிலோ மீற்றர்கள் வரையாக இருக்கக்கூடும். சராசரி சுழல் காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு 120 கிலோமீற்றர் முதல் 500 கிலோ மீற்றர்வரை வேறுபடலாம். இவ்வாறு சுழல்கின்ற வளி நிரலின் நடுப்பகுதியில் வளி மண்டல அமுக்கம் மிகக் குறை வாகக் காணப்படும். எனவே இவ்வகைச் சுழல் காற்று தரையிலுள்ள பொருட்களை உறிஞ்சி மேலே இழுத்தெடுக்கின்றது.
புவியின் வடவரைக் கோளத்தில் உருவாகும் சுழல் காற்றுக்கள் தமது தாழமுக்க மையத்தைச் சுற்றி இடஞ்சுழியாகச் சுழற்சியடைகின்றன. அதேவேளை, புவியின் தென்அரைக் கோளத்தில் உருவாகும் சுழல்காற்றுக்கள் வலஞ்சுழியாகச் சுழல்கின்றன. சுழல் காற்றொன்று இடம்பெயராமல் ஒரேயிடத்தில் சுழன்று வீசலாம். அல்லது வலிமையாகச் சுழற்சியடைகின் றவாறே முன்னோக்கி நகரலாம். இந்த நகர்வு வேகம் மணிக்கு 110 கிலோ மீற்றர் வரை இருக்கக்கூடும்.
சாதாரண புயல் காற்றைப் போலன்றி தான் நகரும் குறுகிய பாதை நெடு ங்கிலும் மட்டுமே சுழல் காற்று அழிவை ஏற்படுத்துகிறது. சுழற்காற்றின் விட்டத்துக்கு ஏற்பவே இவ்வழிவுப் பாதையின் அகலம் அமைந்திருக்கும். இரு புறத்திலும் உள்ள வீடுகள் எவ்வித பாதிப்பும் அடையாத நிலை யில் நடுவிலுள்ள வீடு மாத்திரம் சுழல் காற்றினால் சிதைந்துபோன நிகழ்வுகள் சாதாரணமாக இடம்பெற்றுள்ளன.
மிகத் தாழ்ந்த அமுக்கங்களில், ஒடுங்கிய நீராவியினால் ஆக்கப்பட்ட நிரலொன்று உருவாகும் சந்தர்ப்பங்களில் சுழல்காற்று கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக இருக்கும். மழை மேகம் பூமியைத் தொட்டுக்கொண்டிருப்பது போல் அவ்வேளைகளில் தோற்ற மளிக்கும். சுழல்காற்று பெருமளவு புழுதியைக் கிளப்Fச் செல்லும் சந்தர்ப்பங்களிலும் கண்ணுக்குப் புலப்படக்கூடியதாக மாறும்.
முதிர்ந்த சுழல் காற்றொன்று ஒரு தூண் போல நேராகவோ அல்லது சாய் வாகவோ காணப்படலாம். சில வேளைகளில் முகில் முழுவதும் பூமியைத் தொட்டுக்கொண்டிருப்பது போல அது பரந்ததாகத் தோன்றலாம். இன்னுஞ் சில சந்தர்ப்பங்களில் யானையின் அசைகின்ற தும்Fக்கை போல அது தென்படக்கூடும். வன் மையான சுழல் காற் றொற்றின்போது Fரதான சுழலைச் சுற்றிவரப் பல சிறு சுழல்கள் காணப்படும்.
உலகிலே வருடாந்தம் அதிக எண்ணிக்கையான சுழல் காற்றுக்கள் தோன்றும் நாடு ஐக்கிய அமெரிக் காவாகும். இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியா இருக்கின்றது.
இவை தவிர சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கி லாந்து, ஜெர்மனி, வங்கா ளதேசம் உட்படப் பல நாடுகள் சுழல் காற்றுத் தாக்குதலுக்கு உட்படுகின்ன.
சுழல் காற்றுக்களின் வேக ங்களை நேரடியாக அளப்பது சிரமமான காரியமாகும். அது ஆபத்தானதும் ஆகும். அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த வளிமண்ட லவியற் பேராசிரியரான டெட்சுயா ஃவுஜித்தா என்பவர் சுழல் காற்றுக்களை வகைப் படுத்துவதற்கான அளவுத் திட்ட மொன்றை 1971ம் ஆண்டு அறிமுகப் படுத்தினார்.
சுழல் காற்றினால் கட்டடங்களுக்கும் மனிதனால் நிர்மாணிக்கப்பட்ட ஏனைய அமைப்புகளுக்கும் ஏற்படும் சேதத்தை அடிப்படையாக வைத்தே இந்த பூஜிற்றா அளவுத் திட்டம் (F-Scale) அமைக் கப்பட்டுள்ளது.
இந்த அளவுத் திட்டத்தின் படி F0, F1, F2, F3, F4, F5 என ஆறு வகைகளாகச் சுழல் காற்றுக்கள் வகைப்படுத்தப் படுகின்றன. இவற்றுள்
F0, F1 நலிவான சுழல் காற்றுக்கள்,
F2, F3வலிமையானவை,
F4, F5பயங்கரமானவை,
F5 வகை சுழல் காற்று வீடுகளை அத்திவாரத்தோடு Fடுங்கி எறியக்கூடியதாக இருக்கும்.
F4, F5வகைச் சுழல் காற்றுக்கள் தாம் செல்லும் பாதை நெடுங் கிலும் பேரழிவை ஏற்படுத்த வல்லவையாகும். இவற்றினால் வீடுகளும், பெருமரங்களும் அடியோடு பெயர்க்கப்பட்டு வீசப்படுகின்றன. பஸ் வண்டிகள், ரயில் வண்டிகள் போன்ற பெரிய வாகனங்கள் கூட நிலத் திலிருந்து தூக்கி எறியப்படு கின்றன. வீட்டுக் கூரைகள் பல கிலோமீட்டர் தூரத்துக்குத் தூக்கிச் செல்லப்படுகின்றன.
இவ்வாறு தூக்கி எறியப்படும் பொருட்கள் காரணமாக மேலும் சேதங்கள் ஏற்படுகின்றன. வன்சுழல் காற்றினால் தூக்கி எறியப்படும் வேகம் காரணமாக மென்மையான பொருட்கள் கூட பேரழிவை ஏற்படுத்தலாம்.
சுழற்காற்றுகள் எவ்வாறு உருவாகி ன்றன என்பது பற்றி இது வரை தெளிவாக அறியப்படவில்லை. இடி முகிலை நோக்கி மேலே எழும்பும் வெப்பமான காற்றுக்கும், முகிலிலிருந்து கீழ் நோக்கி இறங்கும் குளிரான காற் றுக்கும் இடையில் ஏற்படும் சிக்கலான இடைத்தாக்க ங்களே சுழல் காற்றுக்குக் காரணமாக அமைவதாக வானிலையியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
கடலின் மீது சுழல் காற்று ஏற்படும்போது கடல் நீர் முகிலை நோக்கித் தாரையாக உறிஞ்சி இழுக்கப்படும். இத்தோற்றப்பாடு தீatலீr ஷிprout என அழைக்கப்படு கின்றது. கடல் நீரோடு மீன் கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களும் இவ்வாறு முகிலை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதுண்டு. சில இடங்களில் மழை பெய்யும் போது வானிலிருந்து மீன்கள் விழுவதற்கு இவ்வகைச் சுழல்காற்றே காரணம் என நம்பப்படுகின்றது.
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அமெரிக்காவை தாக்கிய சுழல் காற்று வியக்கவைக்கும் புகைப்படங்கள் (பட இணைப்பு) _
» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
» இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி: ஜடேஜா 'சுழல்' ஜாலம்
» பயங்கரமான புகைப்படங்கள்
» புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில் 'சுழல்' வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum