Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அணுசக்தி துறையில் இந்தியா-ஜப்பான் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அணுசக்தி துறையில் இந்தியா-ஜப்பான் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து
டோக்கியோ, மே 30-
அணுசக்தி துறையில் இந்தியாவும், ஜப்பானும் நேற்று கூட்டாக ஒப்பந்தம் செய்தன. பிரதமர் மன்மோகன்சிங்கும், ஜப்பான் பிரதமர் ஷின்ஷு அபேவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். கடந்த 2 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நேற்று அந்த நாட்டு பிரதமர் ஷின்ஷு அபேவை சந்தித்து பேசினார்.
இருவரும் பல்வேறு துறைகள் சம்பந்தமாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக, அணுசக்தி துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு எடுத்தனர். இந்த பேச்சு வார்த்தையில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டது.
பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அணுசக்தி துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, இந்தியாவுக்கு ஜப்பான் பல்வேறு திட்டங்களுக்கு கடன் உதவி அளிப்பது ஆகியவை இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பேச்சு வார்த்தையின் முடிவில் இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த கூட்டறிக்கையில், "2011-ம் ஆண்டில் ஜப்பானில் புகுஷிமா நகரில் அணுமின் நிலையத்தில் நடந்த விபத்துக்குப் பின்னர் இரு நாடுகளும் அணுசக்தி துறை தொடர்பான பேச்சு வார்த்தையை நிறுத்தின. இந்த பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குவது, இரு நாடுகளும் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த மீண்டும் வேகமான நடவடிக்கை எடுப்பது உள்பட அணுசக்தி துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"சர்வதேச அணு மூலப்பொருள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக ஆக்கவும், ஏவுகணை தொழில் நுட்ப கட்டுப்பாட்டு மண்டலத்தில் இந்தியாவை உறுப்பினராக்க ஒத்துழைப்பது, ஆஸ்திரேலியா மண்டல நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவையும் சேர்ப்பது, மேற்கத்திய ஒப்பந்தம், சி.டி.பி.டி மற்றும் என்.பி.டி. ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட முயற்சிகள் மேற்கொள்வது, அணுசக்தி பாதுகாப்புக்கு முக்கியம் அளிப்பது" என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"இந்தியாவின் பல்வேறு திட்டங்களுக்கு, குறிப்பாக ரூ.7 ஆயிரம் கோடியிலான மும்பை மெட்ரோ ரெயில் 3-வது திட்டம், ரூ.781 கோடியிலான தமிழக திட்டம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடிக்கும் மேலாக கடன் உதவி அளிக்க ஜப்பான் ஒத்துக்கொண்டுள்ளது. இது தவிர மேலும் பல பொருளாதார திட்டங்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பது என்று இரு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்" என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பின்னர் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன்சிங், "இரு நாடுகளும், ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை, கூட்டு ஒத்துழைப்பு மற்றும் வளம், செழிப்பு ஆகியவற்றை விரும்புகின்றன. அத்துடன் அரசியல் நிலவரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடற்படை கூட்டு பயிற்சி, உயர் தொழில் நுட்பம், வானவெளி ஆராய்ச்சி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீரமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு உள்பட சர்வதேச விவகாரங்கள் பற்றியும் விவாதித்தோம்" என்று தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் ஷின்ஷு அபே கூறுகையில், "இரு நாடுகளுக்கு இடையே கடற்படை ஒத்துழைப்பு, இந்தியாவில் அதிவேக ரெயிலை அறிமுகம் செய்தல், ஜப்பான் மன்னர் மற்றும் ராணியின் இந்திய சுற்றுப்பயணம்" உள்பட பல விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுத்தோம்" என்று சொன்னார்.
இரு நாட்டு பிரதமர்கள் மற்றும் உயர்மட்டக் குழு பேச்சு வார்த்தை நடத்திய அரங்குக்கு வெளியே அணுசக்தி எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பேச்சு வார்த்தையின் முடிவில், பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட இந்திய குழுவினருக்கு ஜப்பான் பிரதமர் விருந்து அளித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இந்தியா - மலேசியா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து
» போலிப் பொருட்களைத் தடுக்கும் ஒப்பந்தம்: 8 நாடுகள் கையெழுத்து
» போலிப் பொருட்களைத் தடுக்கும் ஒப்பந்தம்: 8 நாடுகள் கையெழுத்து
» இந்தியா-சீனா கடலோர ஒப்பந்தம்
» அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா விருப்பம்
» போலிப் பொருட்களைத் தடுக்கும் ஒப்பந்தம்: 8 நாடுகள் கையெழுத்து
» போலிப் பொருட்களைத் தடுக்கும் ஒப்பந்தம்: 8 நாடுகள் கையெழுத்து
» இந்தியா-சீனா கடலோர ஒப்பந்தம்
» அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா விருப்பம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum