சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் Khan11

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்

4 posters

Go down

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் Empty நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Post by *சம்ஸ் Fri 31 May 2013 - 12:36

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் 91e45d02-b1e7-45ee-ae62-44ee15daea8a_S_secvpf
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தின் போது பசுமை தாயகம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி பொது மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

எலும்புக்கூடு முகமூடி அணிந்துக் கொண்டு, புகை குடிப்பதால் ஏற்படும் உடல் நல பிரச்னைகளை விளக்கி சொல்கிறார்கள். கடந்த 1987-ல் உலக சுகா தார நிறுவனம் மே 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது. ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் இறந்து வருகிறார்கள்.

இவர்களுள் 10 லட்சம் பேர் இந்தியர்கள். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57% பேரும், பெண்களில் 10.8% பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் உபயோகிக்கின்றனர். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்று நோய் இந்தியாவில் லட்சத்திற்கு 10 பேரை பாதிக்கிறது. 2020-ம் ஆண்டில் இந் தியாவில் 13% மரணங்களுக்கு புகையிலை பழக்கம் காரணமாக அமையும்.

உலகில் ஆண்கள் 47%, பெண்கள் 12% புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்கள். வளர்ந்த நாடுகளில் 42% ஆண்களும் 24% பெண்களும், வளரும் நாடுகளில் 48% ஆண்களும் 7% பெண்களும் புகைபிடிக்கிறனர்.

இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும் (குறிப்பாக வயது வந்த இளம் பெண்கள்) புகைப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எய்ட்ஸ் நோய் (எச்.ஐ.வி.), காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படுவது அதிகமாக இருக்கிறது.

புகை பிடிப்பது மூலம் வாய், நூரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்று நோய், ஆஸ்துமா, காச நோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் வருகின்றன. தொடர் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் விரைவிலேயே வருகிறது.

புற்று நோய், இதய நோய் ஆகியவற்றை புகைப்பழக்கம் 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. புகைப்பழக்கத்திற்கு உலகம் முழுவதும் 115 (2011 நிலவரம்) கோடிக்கும் மேலானவர்கள் அடிமையாகியுள்ளனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

இவர்கள்தான் அதிகமாக புகை பிடிக்கிறார்கள். தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது. புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி ஆகியவற்றின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனை வருகிறது.

ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே உலை வைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும், அது இறந்தே பிறக்க கூடும். ஆர்வக் கோளாரினால் புகைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள்.

பெற்றோர், உறவினர், நண்பர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களை பார்த்துப் புகை பிடிப்பவர்கள் அதிகம். ஒருவர் புகை பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வலிப்பு நோய் போன்றவை படிப்படியாக குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புகை பழக்கத்தைக் கைவிட்டு 10-15 ஆண்டுகள் கழித்து தான் மனிதன் முழு ஆரோக்கியம் பெறுகிறான். அது வரைக்கும் அதன் பாதிப்பு உடலுக்குள்ளே இருந்துக் கொண்டேதான் இருக்கும் தாய்லாந்து, தைவான், மலேசியா போன்ற நாடுகளில் வயது வந்தோருக்கு மட்டுமே கண்டிப்பாக பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.

அது தீவிரமாகவும் அமல்படுத்தப்படுகிறது. இதனால், அங்கு சிறுவர்கள் புகைப்பது என்பது அரிதாகவே காணப்படுகிறது. இந்தியாவில் சட்டம் என்ன தான் போட்டாலும், பெரும்பாலான வியாபாரிகள், வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். எந்த ஒரு வருமானமும் நியாமானதாக இருக்க வேண்டும் என்று வியாபாரிகள் செய்தால் இது போல் செய்யமாட்டார்கள்.

18 வயதுக்கு குறைவான வர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பது தமிழ்நாட்டில் குற்றம். மீறி விற்கும் கடைக்காரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறித்து பொது மக்களும் புகார் கொடுக்க முன் வரவேண்டும். புகை பிடிப்பவர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் ஆரோக்கிய பராமரிப்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவிகிதம் செலவிடப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் இது வெறும் 3% ஆக இருக் கிறது. புகை பிடித்தலுக்கும் பண் புகளின் சீர்குலைவிக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியலாளர்கள் முன்பே அறிந்திருந்தனர்.

ஆனால், மனித பண்புகளை பாதிக்கின்ற காரணிகள் பல இருப்பதால், புகைபிடித்தல் பண்புகளில் சீர்குலைவை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு கூறமுடியவில்லை. புகைபிடித்தல் மன அழுத்த அறிகுறிகளை உருவாக்கலாம் என்றும், அந்த அறிகுறிகளை போக்கும் விதமாக புகைபிடித்தலை தொடர்ந்து, அப்பழக்கத்திற்கு அடிமையாகும் ஆபத்து அதிகரிக்கும் என்ற கருத்திற்கு ஆதரவாக இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன.

அதாவது புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் தனது உடலளவில் ஏற்படும் மாற்றங்களை போக்க அனைவரும் எண்ணுவர். இருமல், கை நடுக்கம் உள்ளிட்ட அழுத்த உணர்வுகளின் பல அறிகுறிகளிலிருந்து உடனடியாக விடுபட மீண்டும் புகை பிடித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

இவ்வாறு தொடர்வதால் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகி அதிலிருந்து மீள்வது கடினமாகிறது. இளைஞர்களுக்கு புகை பிடிக்காதீர்கள், புகைபிடிக்க ஒரு முறை கூட முயற்சிக்க வேண்டாம் என்பதே இந்த ஆய்வின் செய்தியாக உள்ளது. எப்போதாவது புகைபிடித்தால் கூட, அது நீண்டகால பாதிப்புகளை கொண்டு வரும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.

பெரியோர் புகைப் பிடித்து விட்டு தூக்கி எறியும் துண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து புகைக்க நினைக்கும் இளம் வயதினருக்கு இந்த ஆய்வு ஓர் எச்சரிக்கை. புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ஒன்றும் உலக மகா கஷ்டமான காரியமல்ல.

மனது வைத்தால் எல்லாம் முடியும். புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது நூலகம், கோவில் போகலாம்; தியானம் செய்யலாம். வாழ்வை புகையாக்கும் புகை பழக்கம் நமக்கு வேண்டாமே. புகை நமக்கு பகை. மொத்தத்தில் புகையிலையை ஒழித்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் Empty Re: நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Post by gud boy Fri 31 May 2013 - 14:01

நாளைக்கு ஒரு நாளாவது புகை பிடிக்காம இருங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் Empty Re: நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Post by பானுஷபானா Fri 31 May 2013 - 14:50

kiwi boy wrote:நாளைக்கு ஒரு நாளாவது புகை பிடிக்காம இருங்க..

நீங்களும் இருங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் Empty Re: நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Post by Muthumohamed Fri 31 May 2013 - 19:38

kiwi boy wrote:நாளைக்கு ஒரு நாளாவது புகை பிடிக்காம இருங்க..

புகை பிடிப்பவர்கள் புகை பிடிக்காதீர்கள்

நான் :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் Empty Re: நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Post by gud boy Fri 31 May 2013 - 19:41

பானுகமால் wrote:
kiwi boy wrote:நாளைக்கு ஒரு நாளாவது புகை பிடிக்காம இருங்க..

நீங்களும் இருங்க

இது வரைக்கும் என் வாழ்க்கையில் சிகரெட் குடித்தது இல்லை..இனி மேலும் குடிக்க மாட்டேன்..
சிகரெட் யார் குடித்தாலும் எனக்கு பிடிக்காது..சக வயது தோழர்களாக இருந்தால்,நாசுக்கான முறையிலோ,அல்லது கிண்டலாகவோ எடுத்து சொல்வேன்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் Empty Re: நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Post by Muthumohamed Fri 31 May 2013 - 19:43

kiwi boy wrote:
பானுகமால் wrote:
kiwi boy wrote:நாளைக்கு ஒரு நாளாவது புகை பிடிக்காம இருங்க..

நீங்களும் இருங்க

இது வரைக்கும் என் வாழ்க்கையில் சிகரெட் குடித்தது இல்லை..இனி மேலும் குடிக்க மாட்டேன்..
சிகரெட் யார் குடித்தாலும் எனக்கு பிடிக்காது..சக வயது தோழர்களாக இருந்தால்,நாசுக்கான முறையிலோ,அல்லது கிண்டலாகவோ எடுத்து சொல்வேன்..

@. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் Empty Re: நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Post by பானுஷபானா Fri 31 May 2013 - 20:34

kiwi boy wrote:
பானுகமால் wrote:
kiwi boy wrote:நாளைக்கு ஒரு நாளாவது புகை பிடிக்காம இருங்க..

நீங்களும் இருங்க

இது வரைக்கும் என் வாழ்க்கையில் சிகரெட் குடித்தது இல்லை..இனி மேலும் குடிக்க மாட்டேன்..
சிகரெட் யார் குடித்தாலும் எனக்கு பிடிக்காது..சக வயது தோழர்களாக இருந்தால்,நாசுக்கான முறையிலோ,அல்லது கிண்டலாகவோ எடுத்து சொல்வேன்..
சூப்பர் :flower: :flower:

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் Empty Re: நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum