Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சின்ன ஐயா சி.எம். ஆனால்..
2 posters
Page 1 of 1
சின்ன ஐயா சி.எம். ஆனால்..
நேற்றிரவு பயங்கரமான கனவு. அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டிருந்தார். அவரது மனைவி சௌமியா அன்புமணி, புதுச்சேரி முதல்வர். காணாக்குறைக்கு, காடுவெட்டி குரு, துணை முதல்வர். இதோ, யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!
'வீரப்பன் வீர மரணமடைந்த, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 110 கோடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும். அருகிலேயே சந்தனக் காடும், யானைகள் காப்பகமும் அமைக்கப்பட்டு அதைப் பராமரிக்கும் பொறுப்பு பசுமைத் தாயகம் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். அதேபோல தைலாபுரத்தில் 'பல்லவப் பேரரசர்’ போதி தர்மருக்கும், தஞ்சையில் 'வீர வன்னிய’ ராஜராஜ சோழனுக்கும் தலா 110 கோடியில் வானுயர்ந்த சிலை அமைக்கப்படும்’- என்ற அறிவிப்புகளில் முதல் கையெழுத்து போடுவார் முதல்வர் அன்புமணி ராமதாஸ். 'தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க-வையும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை எரித்த தி.மு.க-வையும் தடை செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதை எதிர்த்துப் பேச முயலும் தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சகட்டுமேனிக்குத் தாக்கப்படுவார்கள்.
மட்டைப்பந்து (அதாங்க கிரிக்கெட்) முற்றாகத் தடை செய்யப்பட்டு, மாவட்டம் தோறும் சாதிச் சண்டை மைதானங்கள் அமைக்கப்படும். அந்தச் சண்டையில் பா.ம.க. உறுப்பினர்கள் மட்டும் அடித்து ஆடலாம்... மற்றவர்கள் தடுப்பாட்டம்தான் ஆட வேண்டும் என்று விதி இயற்றப்படும். மொழிப் போர் தியாகிகளுக்கு வழங்கப்படுவதைப் போல, சாதிக் கலவரத் தியாகிகளுக்கு பென்ஷனும், அவர்களது வாரிசுகளுக்கு அரசு வேலையும் வழங்கப்படும்.
மதுக் கடைகளுக்கும், குடிப்பகங்களுக்கும் பூட்டு போடப்படும். பின் பக்க வாசல் வைத்து வழக்கம்போல் வியாபாரம் நடக்கும் என்பதால், பாட்டாளி சொந்தங்கள் பயப்படத் தேவை இல்லை. நடிகர்கள் அரசியலுக்கு வரத் தடை விதிக்கப் படும். 'அடுத்த முதல்வர் நான்தான்’ என்று சொல்லும் நடிகர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
குடிசை மாற்று வாரியம்... குடிசை எரிப்பு வாரியமாகப் பெயர் மாற்றப்படும். இதேபோல மரம் வெட்டி வாரியம், படப்பெட்டி தூக்கி வாரியம் போன்றவையும் தொடங்கப்படும். பண்பாட்டு (கலாசாரம்) பாதுகாப்புத் துறை அமைச்சராக காடுவெட்டி குரு நியமிக்கப்படுவார். காதல் கவிதை எழுதுபவர்களின் கட்டை விரல் நறுக்கப்படும். காதல் பட இயக்குநர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
மதுரை மாவட்டத்திற்குள் மருத்துவர் ராமதாஸ் நுழையத் தடை விதித்த கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, அமைச்சர் காடுவெட்டி குருவின் துறைக்கு செயலாளராக நியமிக்கப் பட்டு பழிக்குப் பழி வாங்கப்படுவார்.
அப்பாவிப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் நாடகக் காதலை தடுக்கும் விதத்தில் பெண்களின் திருமண வயது 39 ஆகவும், ஆண்களின் திருமண வயது 49 ஆகவும் உயர்த்தப்படும். இருவரும் ஒரே சாதிதான் என்று சாதிச் சான்றிதழைக் காட்டினால்தான், சட்டப்படி திருமணம் பதிவுசெய்யப் படும். மற்ற திருமணங்கள் செல்லாது என்றும் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் தீண்டாமை என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக சட்டசபையில் 'ஆண்ட சாதி’யினர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும்.
பெற்ற தாயைத் தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்படும். போயஸ் கார்டன் வீட்டு முன்பு, அரசு செலவில் கண்ணகி சிலை அமைக்கப் படும். சேலம் மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கும்படியும், சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும்படியும் ஒபாமாவிடம் போனில் பேசுவார் அன்புமணி. பொது இடத்தில் ஜீன்ஸ் பேன்ட் அணியத் தடை விதிக்கப்படும். தமிழ் மின் ஊடகங்களில் வரும் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப் பாளர்கள் அனைவரும் வேட்டி, சேலை மட்டுமே அணிய வேண்டும் என்று உத்தரவிடப்படும்.
மதுரை சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில், சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும். இதேபோல வைகாசியில் ராமேஸ்வரம் கடற்கரை, ஆனியில் திருநெல்வேலி பொருட்காட்சித் திடல், ஆடியில் கன்னியாகுமரி கடற்கரை, ஆவணி யில் விருதுநகர் தேசபந்து மைதானம் என்று மாதம் ஓர் ஊரில் முழு நிலவு மாநாடு நடத்தப்பட்டு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பேணிக் காக்கப் படும்!
- ராஜா செல்லம், கே.கே.மகேஷ்
டைம் பாஸ்
Re: சின்ன ஐயா சி.எம். ஆனால்..
நல்லா டைம் பாஸ் பண்ற செய்தி..!!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum