Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
4 posters
Page 1 of 1
ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
எந்த பங்ஷனும் லேட்டாகத்தான் ஆரம்பிப்பார்கள். ஆகவே நாம ஊருக்கு முன்னே போய் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது என்பார்கள் சிலர். வாஸ்தவமான பேச்சு.
ரிஸப்ஷன் 6 மணிக்கு என்று போட்டிருந்தால் அதை அப்படியே எடுத்துக்கொண்டு விடக்கூடாது.
அது அதனுடைய லிஸ்ட் ப்ரைஸ். நாம் பேரம் செய்து குறைத்துக் கேட்கலாம்.
6 மணி போட்டிருந்தால் நாம் ஏழே முக்காலுக்குப் போகலாம். ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்து கொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கோ அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு அந்த உருவம் வந்து சேரும.
ஒரே ஜிகினா மயம். பட்டுப் புடவையின் பளபளப்பு, போதாதென்று உடம்பு பூரா ஜிகினாப் பவுடர் மாதிரி எதையோ தூவிவிடுவார்கள்.
கர்நாடகத்துக்கும் நவ நாகரிகத்துக்கும், கிழக்குக் கலாசாரத்துக்கும் மேற்கத்திய நாகரிகத்துக்கும் நடக்கும் போரை அல்லது கலவரத்தை, கலகத்தை, கலக்கலை மணமகள் உடம்பில் பார்க்கலாம். வியர்த்துக் கொட்டும்.
பெடஸ்டல் விசிறி வைத்தால் மேக்கப்பை அலைக் கழிக்கும் என்பதால் கை விசிறியால் ஒரு வாண்டு 'அக்கா'வுக்கு விசிறக் கூடும்.
விசிறி முதுகில் இடித்தால், மணமகள் அதை நிறுத்தும்படி சமிக்ஞை செய்வாள். விசிறி வாண்டுவும் பொழச்சேண்டியக்கா
என்று சந்தோஷமாகத் தப்பி ஓடிவிடும்.
ஆறு மணியிலிருந்து ஏழரை வரை ரிஸப்ஷன். அப்புறம் டின்னர் என்று போட்டிருந்தாலும். ஏழரைக்கு முன்னதாகவே ஏழிலிருந்தே சாப்பாட்டு ஹால் மாடியிலா கீழேவா என்பது போன்ற கவலைகள் நம்மை அரிக்க ஆஜராகிவிடும்.
சில முன்னடைவுள்ளவர்கள் தானே சென்று கதவு சாத்தப்பட்ட ஹாலை நைஸாகத் திறந்து எட்டிப் பார்ப்பார்கள். பிறகு வெறுப்போடு ''இன்னும் கேசரி போண்டா க்ளாஸே முடியலை போலிருக்கு'' என்று ரிப்போர்ட் சமர்ப்பிப்பார்கள்.
சிலபேர் ரொம்ப உரிமை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட உறவினரிடமோ அல்லது உறவினர் என்று தப்பாக நினைத்துக்கொண்டு வேறு யாரிடமோ ''இலை போட இன்னும் நாழியாகுமா'' என்று கேட்டுவிடுவார்கள்.
கேட்கப்பட்டவரும் வாய்விட்டு ''ஆகும் ஒரு மணி நேரம். நீங்கள் சாயந்தரம் டி·பன் சாப்பிட்டீங்களோ?'' என்பார்.
'அதையும் கொட்டிக் கொண்டா இப்படி அலையறீர்?' என்ற எரிச்சலின் பாதிப்பு அவர் கேள்வி.
ஆகவே - திருமண ரிசப்ஷனுக்குப் போகும் விஷயங்களில் பரபரப்பு காட்ட வேண்டாம்.
நண்பன் நாராயணன் எந்த முகூர்த்தத்துக்கும் லேட்டாகத்தான் போவான். குறைந்தது ஒரு மணி தாமதமாக போவான்.
லேட்டாகப் போகிறவருக்கு ஒரு அனுகூலம் என்னவென்றால், சபை ஓரளவு கூடியிருக்கும். வாசலில் வரவேற்புக் குழுவாக நாலைந்து பேர் நின்றுகொண்டிருப்பார்கள், 'வாங்கோ, வாங்கோ' என்று ஊமைப்படம் மாதிரி சிரிப்பு ஆக்ஷன் காட்டி வரவேற்பார்கள்.
தாலி கட்டுவதற்கு பத்து நிமிடம் முன்னால் போதும் என்பான் நாராயணன். ஆனால் நான் அவன் பேச்சை நம்பி போகமாட்டான்.
ஏனென்றால் எப்போது தாலி கட்டுவார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியாது. அந்த விஷயம் புரோகிதர் ஒருத்தருக்குத்தான் தெரியும். இருபது லட்சம் செலவு செய்து திருமணம் பண்ணுகிற பெண்ணின் அப்பாவுக்கோ, தாலி கட்டப் போகிற மாப்பிள்ளைக்கோ, தாலி கட்டிக்கொள்ளப்போகிற பெண்ணுக்கோகூடத் தெரியாது.
திருமண அழைப்பில் எட்டிலிருந்து ஒன்பது முகூர்த்தம் என்று போட்டிருக்கும். ஓரொரு வாத்தியார் எட்டு ஐம்பத்தேழுக்கு தாலியைத் தூக்கி பையன் கையில் தருவார்.
சிலரோ (அவருக்கு இன்னொரு முகூர்த்த அவசரமாக இருக்கலாம்.) எட்டு மணி இரண்டு நிமிஷத்துக்கே முகூர்த்தத்தை முடித்து விடுவார். எட்டிலிருந்து ஒன்பதுக்குள் - இடைப்பட்ட அந்த அறுபது நிமிடத்திற்குள் எந்த நொடியிலும் தாலி கட்டக் கட்டளையிடும் சுதந்திரம் அதிகாரம் அவருக்கு உண்டு.
சிலபேர் டூ இன் ஒன்னைத் தவிர்ப்பதற்காக காலை டிபனுக்குப் போகாமல் ஒரேயடியாக சாப்பாட்டுக்கே நேராகப் போய்விடலாம் என்று ஒரு சொந்த காப்பியை மட்டும் குடித்துவிட்டு வந்து எப்போது சாப்பாடு போடுவார்கள் என்று கவா கவா என்று காத்திருப்பார்கள்.
சாதாரண விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்கு கோபம் கோபமாக வரும். கல்யாணத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பான ஏற்பாடுகள் அவர்களுடைய கண்ணில் படாது.
அட்டைப் பெட்டி பழரசக் கோப்பைகள் அவர்களைத் தாண்டிப் போகிறபோது பாய்ந்து எடுத்துப் பருகுவார்கள்.
கூச்சநாச்சம் பார்க்காமல் இரண்டாவது மூன்றாவது ரவுண்டு கூட வழிமறித்துக் குடிப்பார்கள். யார் என்ன சொல்லுவது, யார் என்ன நினைத்துக்கொள்ளுவது? அவரவர் பசி அவரவருக்குத் தெரியும்.
'பத்து மணிக்கு இலை போடுகிறார்களாம்' என்று யாரும் கேட்காமலே டிரான்ஸ்சிஸ்டர் மாதிரி தானே பேசிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் போவார்கள்.
லேட்டாகிக்கொண்டிருந்தால் எரிச்சல் அதிகமாகி சிலர், தான் கொண்டு வந்த மொய்ப் பணக் கவரிலிருந்து ஐம்பது, நூறு குறைத்துவிடுவார்கள்.
கல்யாணம் எப்படி என்று அந்த பசிப் பிராணிகளைக் கேட்டால் ''நன்னாயிருந்தது. ஆனால் அரேஞ்சுமெண்டு போதாது'' என்பார்கள்.
அரேஞ்சுமெண்டு என்று அவர்கள் குறிப்பிடுவது எட்டு ஐம்பத்தைந்துக்கு டிபன் செக்ஷன் முடிந்ததும் ஒன்பது மணிக்கு சாப்பாடு செக்ஷன் துவக்காததைப் பற்றித்தான்.
என்னைப் பொறுத்தவரையில் கல்யாண ரிஸப்ஷனுக்குப் போகுமுன் வயிற்றை ஓரளவாவது நிரப்பிக்கொண்டு போய் விடுவேன்.
அதனால் விருந்தை ருசித்துச் சாப்பிட முடியாமல் போய்விடும் என்பார்கள்.
பரவாயில்லை. சமையல் செய்த சமையல்காரருக்கு மதிப்பெண் போட்டு பரிசுக் கோப்பை தரவா நாம் போகிறோம்.
மணமக்களை மனதார வாழ்த்துவதற்குப் போகிறோம். வயிறு காலியாக இருந்தால் எரிச்சலுடன் வாழ்த்துவோமே என்பதற்காகத்தான் சாப்பாட்டுக்கு முன் அடிக்கடி ஜூஸ் அது இது என்று தருகிறார்கள்.
நண்பன் நாராயணனிடம் நான் சொன்னேன். அல்சர் காரணமாக உ னக்கு எரிச்சல் எற்பட்டால் கல்யாண வீட்டில்
எல்லாரிடமும் 'எனக்கு அல்சர் எனக்கு அல்சர்' என்று டமாரம் போடவேண்டாம். ஒரு கப் பாயசம் உடனடியாக
வரவழைத்து யாராவது தருவார்கள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் வேண்டாம். பாக்கெட்டில் நாலு பிஸ்கட்டை
பொட்டலம் கட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும்விட சிறப்பு கல்யாணத்துக்கோ ரிஸப்ஷனுக்கோ லேட்டாகப் போங்கள். ஆனால் பந்திக்கு முந்திக்கொள்ளுங்கள்.
பாக்கியம் ராமசாமி!

Re: ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
பந்திக்கு பிந்திதான் மொய்ப்பணம் கொடுக்கறது
எல்லாம்..!!
எல்லாம்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
முஹம்மத் wrote:ஆனால் பந்திக்கு முந்திக்கொள்ளுங்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum