சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்! Khan11

ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!

Go down

ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்! Empty ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!

Post by Muthumohamed Sat 15 Jun 2013 - 13:07

நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழலில் ஜிண்டால் குழுமத்தைப் பற்றி விவாதிப்பதை குறைத்துக் கொண்டு தப்ப வைப்பதற்கு ரூ 100 கோடி ரூபாய் கேட்டதாக’ ஜீ டிவி மீது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டாலுக்குச் சொந்தமான ஜிண்டால் பவர் நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார். ஜீ நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் சுதீர் சௌத்ரி மீதான அந்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார் மாநிலங்களுக்கிடையேயான குற்றப்பிரிவுக்கு அதனை விசாரணைக்கு அனுப்பியுள்ளனர்.

மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனநாயக முன்னணி நிலக்கரி வயல்களை தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதில் பல தனியார் கார்ப்பரேட்டுகள் ஆதாயம் அடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டுக்கு ரூ 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் இப்போதைய மத்திய அமைச்சரான நவீன் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு அதிக பட்ச ஆதாயம் கிடைத்திருக்கிறது. ஜிண்டால் பவருக்கு 2,580 மில்லியன் டன் அளவிலான நிலக்கரிப் படுகைகளைக் கொண்ட வயல்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நிலக்கரியை குறைந்த விலைக்குப் பெற்றாலும், உற்பத்தி செய்யும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ 3.85, ரூ 4.80 என்று அதிக விலைக்கு விற்றிருக்கிறது ஜிண்டால் பவர். இதே காலத்தில் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி ஒரு யூனிட் ரூ 2.20க்கு மின்சாரத்தை வழங்கியிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி தில்லியின் லா மெரிடியன் ஹோட்டலில் நிலக்கரி வயல் ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி கேட்ட ஜீ தொலைக்காட்சி நிருபரைப் பிடித்துத் தள்ளி தனது வெறுப்பைக் காட்டியிருக்கிறார் நவீன் ஜிண்டால்.

நவீன் ஜிண்டால் ஹரியானா மாநிலத்தில் குருக்ஷேத்திரா தொகுதியின் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர். நவீன் ஜிண்டாலின் தந்தை ஓ பி ஜிண்டால் ஹரியானா மாநில அமைச்சராக இருந்தவர், தாய் சாவித்ரி ஜிண்டால் ஹரியானா சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார். நவீன் ஜிண்டால் நாட்டிலேயே அதிகம் சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 2011-12ம் ஆண்டில் அவரது சம்பளமான ரூ 73.42 கோடி சென்ற ஆண்டை விட ரூ 6 கோடி அதிகம்.

‘ஆண்டுக்கு ரூ 20 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ரூ 100 கோடி விளம்பரங்கள் கொடுப்பதாக ஒத்துக் கொண்டால் நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் அதன் ஈடுபாட்டைப் பற்றி பேசுவதை நிறுத்தி விடுவதாக ஜீ தொலைக்காட்சி’ சொன்னதாக ஜிண்டால் பவர் புகார் அளித்திருக்கிறது. இது தொடர்பான தொலைபேசி பதிவுகளையும், தில்லியின் ஹையத் ரீஜன்சி ஹோட்டலில் செப்டம்பர் 13, 17, 19 தேதிகளில் நடந்ததாக சொல்லப்படும் சந்திப்புகளில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களையும் ஜிண்டால் நிறுவனம் போலீசுக்குக் கொடுத்துள்ளது.

இந்தப் புகாரில் ஜீ டிவியின் சொந்தக்காரர்களான எஸ்ஸல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா, அவரது மகன் புனீத் கோயங்கா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜிண்டால் நிறுவனத்தின் புகாரின்படி:

செப்டம்பர் 7ம் தேதிக்கும் 13ம் தேதிக்கும் இடையில் ஜீ நியூஸ் தொலைக்காட்சி வேண்டுமென்றே ஜிண்டால் பவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஒளிபரப்பியது.

இதைத் தொடர்ந்து ஜிண்டால் பவர் நிறுவனம் ஜீ ஊழியர்களை சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டது. ஹையத் ஹோட்டலில் 13ம் தேதி ஜீ பிசினஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் சமீர் அலுவாலியா ஜிண்டால் பவரின் மூன்று மேலாளர்களை சந்தித்தார். அந்தக் கூட்டத்தில் அலுவாலியா ரூ 20 கோடி விளம்பரத் தொகையாகக் கொடுத்தால் ஜிண்டால் பவரைப் பற்றிய செய்திகளை குறைத்துக் கொள்வதாகச் சொன்னாராம்.

இதைப் பற்றி மேலிடத்தில் விவாதித்து விட்டு பதில் சொல்வதாகச் சொன்ன ஜிண்டால் மேலாளர்கள் மீண்டும் 17ம் தேதி ஜீ தொலைக்காட்சி மேலாளர்களை சந்தித்திருக்கின்றனர்.

அப்போதும் பேரம் படியாததால் 19ம் தேதி இன்னொரு முறை சந்தித்து விட்டு கடைசியில் தில்லியின் குற்றவியல் காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செயதிருக்கின்றனர்.

‘ஜிண்டால் பவர் நிறுவனம் தனது மேலாளர்களுக்கு ரூ 100 கோடி லஞ்சம் கொடுப்பதாக சொன்னது’ என்று ஜீ டிவி எதிர்க் குற்றச்சாட்டை முன் வைக்கிறது. ‘நிலக்கரி வயல் ஒதுக்கீடு பற்றிய செய்திகளை தவிர்த்தால், ஆண்டுக்கு ரூ 20 கோடி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள்’ என்கிறது அது.

இப்படி ஊடகத் துறையின் உள் நடைமுறைகளை பொதுவில் போட்டு உடைப்பதைக் குறித்து பிராட்காஸ்ட் எடிட்டர்ஸ் அசோசியேஷன் (ஒளிபரப்பு ஆசிரியர்கள் கூட்டமைப்பு) கவலைப்படுகிறது. அதைப் பற்றி விசாரிப்பதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்திருக்கிறது.

தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிகைகளும் ஊழல்களை அம்பலப்படுத்துவது அவர்கள் சொல்லிக் கொள்வது போல ‘பொது வாழ்க்கையை தூய்மைப் படுத்துவதற்காக’ இல்லை, மாறாக அவர்களது ‘சொந்த நிதி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்காகத்தான்’ என்று இதன் மூலம் தெரிகிறது.

விளம்பரப் பணம் கொடுப்பது அல்லது தவிர்ப்பது மூலம் ஊடகஙளை ஆட்டிப் படைக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், வழக்கமாக தங்கள் பெயர் முன்னுக்கு வராமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த விவகாரத்தில் நடந்த பேரத்தை அம்பலப்படுத்தி ஜீ டிவிக்கு ஒரு பாடம் கற்பித்துத் தர ஜிண்டாலும் ஆளும் கும்பலும் முடிவு செய்திருக்கின்றன.

இது போன்ற பேரங்களும் செய்திகள் அமுக்கப்படுதலும் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் இடையே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நன்றி வினவு.காம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum