Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறந்தாங்கி: திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் 45 பவுன் நகை கொள்ளை
3 posters
Page 1 of 1
அறந்தாங்கி: திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் 45 பவுன் நகை கொள்ளை
புதுக்கோட்டை, ஜூன். 19-
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நகரை சேர்ந்தவர் கணபதி. இவரது மகள் ஹேமா. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள களப்பக்காடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் மகன் உதயகுமாருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
அதன்படி இவர்களது திருமணம் இன்று அறந்தாங்கி நகரின் மையப்பகுதியான அக்ரகாரம் தெருவில் அமைந்துள்ள சுபாஷினி திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.
முன்னதாக நேற்று இரவு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று காலை நடைபெறும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.
காலை முகூர்த்தம் என்பதால் ஒருபுறம் சமையல் செய்வதற்கான பணிகள் இரவு முதலே தொடங்கின. இதில் மணப்பெண் வீட்டார் மட்டும் இரவில் திருமண மண்டபத்திலேயே தங்கினர்.
இந்தநிலையில் மணப்பெண் ஹேமாவின் அண்ணியான நளினி என்பவர் மணப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தனது மகனுடன் தங்கியிருந்தார். அந்த அறையில் திருமணத்திற்கான நகைககள் 3 சூட்கேசுகளில் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே நள்ளிரவில் திடீரென்று எழுந்த நளினியின் மகன் தன்னை ஏ.சி. அறையில் தூங்க வைக்குமாறு கேட்டு அழுதுள்ளான். உடனே தனது மகனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த ஏ.சி. அறைக்கு சென்று தனது மகனை படுக்கவைத்துவிட்டு மீண்டும் தான் தங்கியிருந்த அறைக்கு திரும்பினார்.
அப்போது அந்த அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 3 சூட்கேசுகளும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த 45 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு நளினி பெரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த அறையில் இருந்த 15 ஆயிரம் ரொக்க பணம், 3 செல்போன்களும் கொள்ளை போயிருந்தது.
உடனே இதுபற்றி திருமண மண்டபத்தில் தங்கியிருந்த தனது உறவினர்களிடம் நளினி தகவல் தெரிவித்தார். திருமண மண்டபம் முழுவதும் தேடிப்பார்த்தும் சந்தேகத்திற்கு இடமான முறையில் யாரையும் காணவில்லை.
நகையை திருடிய மர்ம நபர்கள் யார் என்ற விபரமும் தெரியவில்லை. இதுபற்றி இன்று காலை மணப்பெண் வீட்டார் அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நள்ளிரவில் மணப்பெண் அறையில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அறந்தாங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகைகளின் விவரம்: 5 பவுன் ஆரம், 5.5 பவுன் ஆரம், 7.5 பவுன் நெக்லஸ், 4 பவுன் கல் நெக்லஸ், 2 பவுன் செயின், 5 பவுன் கல் வளையல்கள் 2 செட், 4 பவுன் டாலர் செயின், 3.5 பவுன் கல் வைத்த ஜிமிக்கி 2 செட் உள்ளிட்ட 45 பவுன் நகைகள் திருடு போனது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறந்தாங்கி: திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் 45 பவுன் நகை கொள்ளை
இப்படியா கவனமில்லாம இருப்பாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறந்தாங்கி: திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் 45 பவுன் நகை கொள்ளை
பானுகமால் wrote:இப்படியா கவனமில்லாம இருப்பாங்க
அதான் நானும் கேட்கிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum