சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5 Khan11

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5

3 posters

Go down

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5 Empty தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5

Post by gud boy Sat 29 Jun 2013 - 19:08



اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَسْأَلَةِ وَخَيْرَ الدُّعَاءِ وَخَيْرَ النَّجَاحِ وَخَيْرَ الْعَمَلِ وَخَيْرَ الثَّوَابِ وَخَيْرَ الْحَيَاةِ وَخَيْرَ الْمَمَاتِ وَثَبِّتْنِيْ وَثَقِّلْ مَوَازِيْنِيْ وَأَحِقَّ إِيْمَانِيْ وَارْفَعْ دَرَجَتِيْ وَتَقَبَّلْ صَلاَتِيْ وَاغْفِرْ خَطِيْئَتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ .
21. யா அல்லாஹ்! சிறந்த வேண்டுகோளையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த அமலையும் சிறந்த நன்மையையும் சிறந்த உயிர்வாழ்வையும் சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (யா அல்லாஹ்!) என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! என்னுடைய தராசை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக! என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக! என் அந்தஸ்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தை மன்னித்தருள்வாயாக! (யா அல்லாஹ்!)சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(தப்ரானி)


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَظَاهِرَهُ وَبَاطِنَهُ، وَالدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.
22. யா அல்லாஹ்! நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்பம், முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(தப்ரானி)


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أنْ تَرْفَعَ ذِكْرِيْ، وَتَضَعَ وِزْرِيْ، وَتُصْلِحَ أَمْرِيْ، وَتُطَهِّرَ قَلْبِيْ، وَتُحَصِّنَ فَرْجِيْ، وَتُنَوِّرَ لِيْ قَلْبِيْ ، وَتَغْفِرَ لِيْ ذَنْبِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْـجَنَّةِ
23. யா அல்லாஹ்! நீ என்னுடைய ஞாபகத்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் என் காரியத்தை சீர்படுத்துவதையும் என் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதையும் என் அபத்தை (கற்பை) பத்தினித்தனமாக்குவதையும் என்னுடைய உள்ளத்தை இலங்கச் செய்வதையும் என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.(யா அல்லாஹ்!) இன்னும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تُبَاِركَ لِيْ فِيْ نَفْسِيْ، وَفِيْ سَمْعِيْ، وَفِيْ بَصَرِيْ، وَفِيْ رُوْحِيْ، وَفِيْ خَلْقِيْ، وَ فِيْ خُلُقِيْ، وَفِيْ أَهْلِيْ، وَفِيْ مَحْيَايَ، وَفِيْ مَمَاتِيْ، وَفِيْ عَمَلِيْ، فَتَقَبَّلْ حَسَنَاتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.
24. யா அல்லாஹ்! என் ஆத்மாவிலும் என் கேள்விப்புலனிலும் என் பார்வையிலும்; என் உயிரிலும் என் உடலமைப்பிலும் என் குணத்திலும் என் குடும்பத்திலும் என் உயிர்வாழ்விலும் என்னுடைய மரணத்திலும் என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். ஆகவே, என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! (யா அல்லாஹ்!)சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)


اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوْءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ.
25. யா அல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (புகாரி)


اَللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ.
26. உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! (திர்மிதி)


اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ.
27. உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!. (முஸ்லிம்)


اَللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَارْضِنَا وَارْضَ عَنَّا.
28. யா அல்லாஹ்! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக! எங்களுக்குக் குறைத்துவிடாதே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! எங்களை இழிவு படுத்திவிடாதே! (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக! (உன் அருளைப்பெறாத) துற்பாக்கியவான்களாக எங்களை ஆக்கிவிடாதே! (உன் அருளைப்பெற) எங்களை தேர்ந்தெடுப்பாயாக! பிறரை எங்களைவிட தேர்ந்தெடுக்காதே! எங்களை பொருந்திக் கொள்வாயாக! இன்னும் எங்களைத் தொட்டும் (அமல்களை) பொருந்திக் கொள்வாயாக! (திர்மிதி)


اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُوْرِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ.
29. யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! (அஹ்மத்)


اَللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُوْلُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيْكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ الْيَقِيْنِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيْبَاتِ الدُّنْيَا وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلاَ تَجْعَلْ مُصِيْبَتَنَا فِيْ دِيْنِنَا وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلاَ مَبْلَغَ عِلْمِنَا وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا.
30. யா அல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களைத் தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் (மன) உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! (யா அல்லாஹ்!) எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்தியையும் நீ எங்களை உயிர்வாழ வைக்கும் காலமெல்லாம் (குறைவின்றி) இயங்கச் செய்வாயாக! அதனையே எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்கியருள்வாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனையை ஏற்படுத்திவிடாதே! இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! (எங்களின் பாவங்களினால்) எங்கள்மீது இரக்கம் காட்டாதவனை எங்களுக்கு பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே! (திர்மிதி)


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مُوْجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ.
31. யா அல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (தப்ரானி)


اَللَّهُمَّ لاَ تَدَعْ لِيْ ذَنْبًا إِلاَّ غَفَرْتَهُ، وَلاَ هَمّاً إِلاَّ فَرَّجْتَهُ، وَلاَ دَيْنًا إِلاَّ قَضَيْتَهُ، وَلاَ حَاجَةً مِنْ حَوَائِجِ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلاَّ قَضَيْتَهَا بِرَحْمَتِكَ يَا أرْحَمَ الرَّاحِمِيْنَ.
32. யா அல்லாஹ்! என்னுடைய பாவத்தை, நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே! கவலையைப் போக்காமல் விட்டுவிடாதே! கடனை அடைக்காமல் விட்டுவிடாதே! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக மற்றும் மறுமையின் தேவைகளில் எத்தேவைகளையும் உன் அருளைக் கொண்டு எங்களுக்கு நிறைவேற்றாமல் விட்டுவிடாதே! (தப்ரானி)


اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْفَوْزَ عِنْدَ الْقَضَاءِ، وَنُزُلَ الشُّهَدَاءِ، وَعَيْشَ السُّعَدَاءِ، وَمُرَافَقَةَ الأَنْبِيَاءِ، وَالنَّصْرَ عَلَى الأَعْدَاءِ
33. யா அல்லாஹ்! தீர்ப்பு நேரத்தில் (நாளில்) வெற்றியையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் நபிமார்களுடன் இருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஸஹீஹ் இப்னு குஸைமா)


اَللَّهُمَّ إِنِّيْ أسْألُكَ صِحَّةً فِيْ إِيْمَانٍ، وَإِيْمَاًنا فِيْ حُسْنِ خُلُقٍ، وَنَجَاحًا يَتْبَعُهُ فَلاَحٌ، وَرَحْمَةً مِنْكَ وَعَافِيَةً وَمَغْفِرَةً مِنْكَ وَرِضْوَانًا
34. யா அல்லாஹ்! ஈமானில் உறுதியையும் நல்லொழுக்கத்தில் உறுதியையும் வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் உன்னிடமிருந்து அருளையும் ஆரோக்கியத்தையும் பிழை பொறுப்பையும் திருப்பொருத்தத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஹாகிம்)


اَللَّهُمَّ إِنِّيْ أسْألُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ، وَالْأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ، وَالرِّضَى بِالْقَدْرِ.
35. யா அல்லாஹ்! ஆரோக்கியத்தையும் பத்தினித் தனத்தையும் அமானிதத்தை பேணுதலையும் நல்லொழுக்கத்தையும் விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஷுஅபுல் ஈமான் லில்பைஹகி)


اَللَّهُمَّ إِنَّكَ َتَرَى مَكَانِيْ، وَتَسْمَعُ كَلاَمِيْ، وَتَعْلَمُ سِرِّيْ وَعلاَنِيَتِيْ، لاَ يَخْفَى عَلَيْكَ شَيْئٌ مِنْ أمْرِيْ، أنَا الْبَائِسُ الْفَقِيْرُ، الْمُسْتَغِيْثُ الْمُسْتَجِيْرُ، الْوَجِلُ الْمُشْفِقُ، الْمُقِرَّ الْمُعْتَرِفُ بِذَنْبِهِ، أسْألُكَ مَسْألةَ الْمِسْكِيْنِ، وَأبْتَهِلُ إِلَيْكَ إِبْتِهَالَ الْمُذْنِبِ الذَّلِيْلِ، وَأدْعُوْكَ دُعَاَءَ الْخَائِفِ الضَّرِيْرِ، مَنْ خَضَعَتْ لَكَ رَقَبَتُهُ، وَذَلَّ جِسْمُهُ، وَرَغِمَ أنْفُهُ.
36. யா அல்லாஹ்! என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் பேச்சை நீ கேட்கின்றாய். என் அந்தரங்கத்தையும் பகிரங்கத்தையும் (ஒன்று போல்) நீ அறிகிறாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத்தன்மையுள்ள, இழகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன், மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகின்றேன். பணிந்த நிலையில் மண்டியிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். (யா அல்லாஹ்!) பிடரியைப் பணியவைத்து, மேனியைப் பணிவாய் வைத்து, மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் வைத்து குருடரான பயந்தவனின் பிரார்த்தனையாக, நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். (தப்ரானி)


اَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْلِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ.
37. யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன். (புகாரி, முஸ்லிம்)


اَللَّهُمَّ اغْفِرْلِيْ مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ.
38. யா அல்லாஹ்! நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் இரகசியமாய் செய்தவற்றையும் பகிரங்கமாக செய்தவற்றையும் எல்லை கடந்து அதிகப்படியாகச் செய்தவற்றையும் மேலும் எந்தப் பிழைகளை நீ என்னை விட அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப்பிழைகளையும் நீ மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (முஸ்லிம்)


اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ.
39. யா அல்லாஹ்! உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வாயாக! (அபூதாவூத், நஸாயி)


اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ.
40. யா அல்லாஹ்! கஞ்சத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் கோழைத்தனத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் அதிமுதிர்ந்த வயது வரையில் எனது வாழ்வு நீடிக்கச் செய்யப்படுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன், மேலும் உலகத்தின் குழப்பத்தை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (புகாரி)


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.
41. யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், மேலும் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாவலும் தேடுகின்றேன். (அபூதாவூத்)


اَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ أَحْيِِنِيْ مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِيْ، وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِيْ، اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَأَسْأَلُكَ نَعِيْمًا لاَ يَنْفَدُ، وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَ تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَأَسْأَلُكَ الشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ وَلا فِتْنَةٍ مُضِلَّةٍ اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الإِيمَانِ وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِيْنَ.
42. யா அல்லாஹ்! உன்னுடைய மறைவான அறிவைக் கொண்டும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றலைக் கொண்டும் (நான் கேட்கின்றேன்) நான் (இவ்வுலகில்) வாழ்வது எனக்கு நலவாக இருந்தால் என்னை உயிர் வாழ வைப்பாயாக! நான் மரணிப்பது எனக்கு நலவாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! மறைவான நிலையிலும் வெளிப்படையான நிலையிலும் உனக்கு அஞ்சி வாழ்வதை கேட்கின்றேன். சந்தோச நிலையிலும் கோபப்படும் போதும் சத்தியத்தை மொழியும் பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன். செல்வ நிலையிலும் வறுமையிலும் நடுநிலை பேணுவதை கேட்கின்றேன். முடிவில்லாத அருட்பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது தீர்ப்பின் மீது திருப்தி கொள்ளும் (மனோ) நிலையை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் மரணத்தின் பின் இதமான வாழ்க்கையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது திருமுகத்தை காணும் இன்பத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், இன்னும் வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதில் ஆர்வத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், யா அல்லாஹ்! ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு எங்களை அழகு படுத்துவாயாக! மேலும் நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக! (அஹ்மத்,நஸாயி)


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ يَااَلله بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِيْ ذُنُوبِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ .
43. யா அல்லாஹ்! நிச்;சயமாக நீ ஏகன், தனித்தவன், தேவையற்றவன், யாரையும் பெறாதவன்,எவராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எவரும் எதுவும் இல்லை என்ற (உன் திருநாமம் மற்றும் உன் பண்புகளைக்) கொண்டு நான் உன்னிடம் கேட்கின்றேன், நீ என் பாவத்தை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீ, மிக பிழை பொறுப்பவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றாய். (அபூதாவூத்)


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لاَ إِلَهَ إِلاَّ أنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ الْمَنَّانُ يَا بَدِيْعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّوْمُ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.
44. யா அல்லாஹ்! நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானது, வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ தனித்தவன், உனக்கு யாதொரு இணை துணை இல்லை, மிக கொடையாளன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரி இன்றி படைத்தவனே! மகத்தவமும் கண்ணியமும் உடயவனே! நித்திய ஜீவனே! (இத்தனை உனது பெயர் மற்றும் தன்மைகளை) கொண்டு நிச்சயம் நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், இன்னும் நரகத்திலிருந்து பாதுகாப்பும் தேடுகின்றேன். (அபூதாவூத், திர்மிதி, பராஉ இப்னு ஆஸிப் -ரலி-)
எழுதியவர் மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
source . islamkalvi.com
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5 Empty Re: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5

Post by ansar hayath Sat 29 Jun 2013 - 19:58

:flower: அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி  தருவானாக ...:flower:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5 Empty Re: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5

Post by நண்பன் Sat 29 Jun 2013 - 23:15

ansar hayath wrote::flower: அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி  தருவானாக ...:flower:
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன் .....heart 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5 Empty Re: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் 5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum