சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Khan11

பொய் பேசுபவனின் மறுமை நிலை!

+4
Muthumohamed
நண்பன்
*சம்ஸ்
gud boy
8 posters

Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by gud boy Sun 30 Jun 2013 - 11:00

சமுரா இப்னு ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்;

''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம்.

அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.

ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரு(வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் –

பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள்இ செல்லுங்கள்' என்றனர்.

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள்.
நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், 'இவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று என்னிடம் கூறினர்.

அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவந் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்திஇ கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார்.

(அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், 'இவ்விருவரும் யார்?' என்று கேட்டேன். அவர்கள்இ என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' என்று கூறினார்கள்.

நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், 'இவர் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம்இ 'செல்லுங்கள்  செல்லுங்கள்' என்று கூறினர்.

அப்படியே நடங்கள் அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில்
வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், 'இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?' என்று கேட்டேன்.

அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், 'அதில் ஏறுங்கள்' என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது.

நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காணகிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு)பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்' என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசூசை நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பிவந்தனர்.

அவ்விருவரும் என்னிடம் 'இது (-இந்த நகரம்) தான் 'அத்ன்' எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்' என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், 'இது உங்கள் இருப்பிடம்' என்றனர். நான் அவர்களிடம், 'உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்' என்றேன். அவ்விருவரும், 'இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்) அதில் நுழையத்தான் போகிறீர்கள்' என்றனர்

நான் அவ்விருவரிடமும் 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

கல்லால் தலை நசுக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக் கொண்டு விட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார்.

அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர்.

இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சி
லர் 'இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)' என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் '(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்' என்று பதிலளித்தார்கள்.
(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்இ) ஒரு பாதி அழகாகவும் மறுபாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள் நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்துவிட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்று கூறினர்). (புகாரி 7047)

இந்த நீண்ட ஹதீஸில் முதலாவதாக பொய் சொல்லுபவருக்கு ஏற்படும் தண்டனை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மையில் பொய் பேசி அதை உலகம் முழுவதும் பரவச் செய்தவருக்கு அல்லாஹ் மறுமையில் ஏற்படுத்தியுள்ள தண்டனை கொக்கியால் முகவாயைப் பிடரி வரையும் அதேபோல் மூக்குத் துவாரம் கண்; ஆகியவற்றைப் பிடரி வரையும் கிழித்தல். சிலர் சிந்திக்கக்கூடும் பொய் சொல்பவருக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று. பொய் சொல்வதென்பது சாதாரண ஒரு விஷயம் கிடையாது.

பாவங்கள் அத்தனைக்கும் ஆணிவேராக இந்த பொய் இருக்கின்றது. அல்லாஹ் பொய் கூறுபவர்களைப் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடுகையில்இ

அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது.
அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்தால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்-குர்ஆன் 2:10)

இந்த அல்குர்ஆன் வசனத்தில் பொய் சொல்பவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கின்றது எனக் குறிப்பிடுகின்றான். விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் படி தொடர்ந்து பொய் பேசுபவர்கள் குழப்ப நிலையில் உள்ளவர்கள் அதாவது உடல் நலமில்லாதவர்கள்  என்ற உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். எனவேஇ 1400 வருடங்களிற்கு முன் அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆன் இந்த இடத்திலும் மெய்ப்பிக்கப்படுகின்றது.

சிலருக்கு பொய் கூறுவதென்பது என்பது குழாயிலிருந்து நீர் வருவதுபோல் அவ்வளவு சுலபமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் ரெடிமேடாக பொயயைத் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தாங்கள் பொய்யினால் காரியத்தை சாதித்து விட்டோம் என்ற பெருமிதம் வேறு. ஆனால் இவர்களின் ஒரு பொய்யால் மனித சமூகத்தில் ஏற்படும் பல தீங்குகளைப் பற்றி இவர்களுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது.

அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்

(ஒருமுறை) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள்.
இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் 'அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன். (நூல்: புகாரி 5976, 5977)


மேலுள்ள ஹதீஸிலிருந்து பொய் பேசுவது பெரிய பாவத்தில் அடங்குவதாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்று அநேகமான முஸ்லிம் வியாபாரிகளிடம் பொய் கலந்த வியாபாரமே காணப்படுகின்றது. தரங்குறைந்த பொருட்களை பொய் கூறி விற்று வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றனர். பொய் கூறி பொருட்களை விற்ற காரணத்தினால் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய பாவமும் இதனுடன் வந்து சேர்கின்றது. இன்னொரு வகை வியாபாரிகள் பணக் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் பொய் கூறி பணத்தை நேரத்திற்கு கொடுக்காமல் ஏமாற்றி சமுதாயத்தில் கடனாளியாகவும் ஏமாற்றுப்பேர்வழியாகவும் நாணயமில்லாதவனாகவும் காணப்படுகின்றனர்.

சில பெண்கள் மற்ற பெண்களிடம் கதைக்கும்போது தம்மிடம் இல்லாதவற்றையும் இருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு பொய் கூறுகின்றனர். இதனுடன் பெருமை என்ற நோயும் இவர்களை ஆட்கொள்கின்றது. இதனால் மற்றவர்களின் மனதையும் புண்படுத்துகின்றனர். வீணாக சமுதாயத்தில் கேளிக்குரியவர்களாகின்றனர். இன்று அநேகமான பெண்களிடம் தம் குடும்பத்தவர்களைப் பற்றி பொய்களையெல்லாம் சேர்த்து வர்ணித்து அவர்களின் பிள்ளைகளைப்போல் வேறு யாரும் சிறந்தவர்கள் இல்லை என பெருமையடிக்கும் பழக்கம் ஒரு பொழுதுபோக்காக உள்ளது..

அற்பமானவை தவிர பெரும்பாவங்களையும் வெட்கக்கேடானவற்றையும் யார் தவிர்த்துக் கொள்கிறாரோ உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். உங்களை பூமியிலிருந்து படைத்தபோதும்இ உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்தபோதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். (அல்-குர்ஆன் 53:32)

திருமணம் பேசும் விஷயங்களில் சொல்லும் பொய்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஆயிரம் பொய்கள் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்று எவனோ சொன்ன பொய்யிற்கு அடிபணிந்து அநேகமான தம்பதிகளின் வாழ்க்கை விவாகரத்தில் முடியுமளவிற்கு இவர்களின் பொய் விவகாரம் தலைவிரித்தாடுகின்றது.

ஒருவன் பொய் சொல்லுவதற்குத் தயங்காத நிலையில்இ ஏனைய அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் மறைக்க முற்படுவான். எனவே, அனைத்து பாவங்களிற்கும் அடித்தளமாக பொய் அமைகின்றது.
எனவேதான் பொய் ஒரு சமுதாய மக்களிடையே கேடுகளையே விளைவிப்பதால் அல்லாஹ் அதற்குரிய தண்டனையையும் அவ்வாறு அமைத்துள்ளான்.

எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுவதை அநேகமானோர் சர்வசாதாரணமாகக் கருதுகின்றனர். எந்தவித அச்சமுமின்றி அல்லாஹ்வையே தமது பொய்யிற்கு சாட்சியாக்குகின்றனர்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். "இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்" என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது. (அல்-குர்ஆன் 11:18)

மேலும் சிலர் இன்று இஸ்லாம் மார்க்கத்தில் குர்ஆன், சுன்னாவிற்கு அப்பாற்பட்ட நிலையில் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். மார்க்கத்தில் இல்லாதவற்றை புதிதாகப் புகுத்தி இது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டது என்று பொய்யுரைத்து அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட இந்த தூய்மையான மார்க்கத்தில் கலங்கம் விளைவிக்கின்றனர்.

'இது அனுமதிக்கப்பட்டது, இது விலக்கப்பட்டது' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:116)

உண்மையாகவே பொய் உரைப்பவனுக்கு ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்ற அனைத்தும் மறந்து போய் வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படும். இதனால் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படும் அபாய நிலை தோன்றும். இவர்களது இவ்வுலக வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் அருள் இருக்காது, மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக!
-ஃபாத்திமா ஷஹானா கொழும்பு
source: http://rasminmisc.com
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty Re: பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by *சம்ஸ் Sun 30 Jun 2013 - 17:16

உண்மையாகவே பொய் உரைப்பவனுக்கு ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்ற அனைத்தும் மறந்து போய் வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படும். இதனால் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படும் அபாய நிலை தோன்றும். இவர்களது இவ்வுலக வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் அருள் இருக்காது, மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக!)* 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty Re: பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by நண்பன் Sun 30 Jun 2013 - 18:11

*சம்ஸ் wrote:
உண்மையாகவே பொய் உரைப்பவனுக்கு ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்ற அனைத்தும் மறந்து போய் வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படும். இதனால் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படும் அபாய நிலை தோன்றும். இவர்களது இவ்வுலக வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் அருள் இருக்காது, மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக!)* 
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty Re: பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by Muthumohamed Sun 30 Jun 2013 - 18:55

*சம்ஸ் wrote:
உண்மையாகவே பொய் உரைப்பவனுக்கு ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்ற அனைத்தும் மறந்து போய் வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படும். இதனால் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படும் அபாய நிலை தோன்றும். இவர்களது இவ்வுலக வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் அருள் இருக்காது, மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக!)* 

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty Re: பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by ahmad78 Mon 1 Jul 2013 - 15:00


 உண்மையாகவே பொய் உரைப்பவனுக்கு ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்ற அனைத்தும் மறந்து போய் வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படும். இதனால் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படும் அபாய நிலை தோன்றும். 


உலகத்திலும் நிம்மதியில்லாத நிலை.



இவர்களது இவ்வுலக வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் அருள் இருக்காது, மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

மறுஉலகிலும் நிம்மதியில்லாத நிலை.

அருமையான பதிவு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty Re: பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by *சம்ஸ் Wed 10 Jul 2013 - 12:30

Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:
உண்மையாகவே பொய் உரைப்பவனுக்கு ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்ற அனைத்தும் மறந்து போய் வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படும். இதனால் மனஅழுத்த நோயால் பாதிக்கப்படும் அபாய நிலை தோன்றும். இவர்களது இவ்வுலக வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் அருள் இருக்காது, மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக!)* 

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

 )* !_ !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty Re: பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by பானுஷபானா Wed 10 Jul 2013 - 13:41

சிறப்பானதோர் பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty Re: பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by jafuras Thu 11 Jul 2013 - 14:10

சிறப்பான  பகிர்வு
 :/
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty Re: பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by kalainilaa Fri 12 Jul 2013 - 17:43

:”@: :”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பொய் பேசுபவனின் மறுமை நிலை! Empty Re: பொய் பேசுபவனின் மறுமை நிலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum