சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இளம் தலைமுறைக்கான ஆபத்து.. Khan11

இளம் தலைமுறைக்கான ஆபத்து..

Go down

இளம் தலைமுறைக்கான ஆபத்து.. Empty இளம் தலைமுறைக்கான ஆபத்து..

Post by jafuras Mon 15 Jul 2013 - 14:21

இளம் தலைமுறைக்கான ஆபத்து..



நிலத்தில் வாழும் விலங்களுக்கும், நீரில் வசிக்கும் விலங்களுக்கும் சிறுநீரகங்களில் வேறுபாடு உண்டு. எவ்வளவு சிறுநீரை அவற்றால் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்பது முக்கிய வேறுபாடு. மீனில்கூட, கடலில் வசிக்கும் மீனுக்கும், ஆற்றில் வசிக்கும் மீனுக்கும் வித்தியாசம் உண்டு. கடல் மீன் தனக்குள் உப்பைச் சேமித்து வைக்காது. ஆற்றுமீன் ஓரளவு உப்பைத் தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும். இதற்குக் காரணம், இவற்றின் சிறுநீரகங்கள் பணிபுரிவதில் உள்ள வேறுபாடுதான். இதனால்தான் ஆற்று மீனைக் கடலில் போட்டால் அது இறந்துவிடுகிறது. ஆக சிறுநீரகங்களுக்கென தனித்தன்மை உண்டு.

கடந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் இருக்கிறது என்றாலும், மனிதச் சிறுநீரகம் ஒரே வித வடிவத்தைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த பத்து வருடங்களில் நமது வாழ்க்கைமுறை பெரிதும் மாறுபட்டு இருக்கிறது. இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் சிறுநீரகள் திணறுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடுதான், சிறுநீரகக் கற்கள்.நம் ரத்தம் அடிப்படையில் காரச் சத்து அதிகம் கொண்டது (காரம் என்றதும் மிளகாயின் தன்மையை நினைத்துக் கொள்ளக்கூடாது. இந்தக் கட்டுரையில் காரப்பொருள் என்று குறிப்பிடப்படுவத 'ஆல்கலி' எனப்படுவது. அதாவது அமிலத்துக்கு நேரெதில் தன்மைகள் கொண்டது.) ரத்தத்தில் பொதுவாக, 7.4 ஜீபி கொண்டதாக இருக்கும். அதாவது இந்த எண்ணிக்கை 7 அல்லது அதற்குக் கீழ் என்றால் அதற்கு அமிலத்தன்மை வந்துவிடும். (அமிலமும் அல்லாத காரப் பொருளும் அல்லாத தண்ணீரின் அளவு 7 ஜீபி) உடலில் அமிலம் எப்படிச் சேர்ந்தாலும் அது சிறுநீரகத்தின் வழியாகத் தான் வெளியேறவேண்டும். 6 ஜீபிவரை குறைந்தால், சிறுநீரத்தால் அதைத் தாக்குப்பிடிக்க முடியும். அதைவிட அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் (அதாவது ஜீபி எண்ணிக்கை மேலும் குறைந்தால்) சிறுநீரகப் பாதையில் எரிச்சல் உண்டாகும். உடனடியாக அதிகப்படி நீரையேலா காரப்பொருளையோ உடலில் சேர்த்துக் கொண்டு இதைச் சரிகட்ட வேண்டும்.

பசுமையான காய்கறிகளிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளிலும் காரப்பொருள் உண்டு. இவை உடலில் அமிலத்தின் அடர்த்தி அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளக் கூடியவை. இப்போதெல்லாம் பதப்படுத்திய உணவுகளையும், வறுக்கப்பட்ட மற்றும் வேகவைத்த உணவுகளையும் அதிகமாக உட்கொள்கிறார்கள். இவற்றில் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும்.
ஸ்ட்ரெஸ் எனப்படும் மன இறுக்கத்தின் காரணமாகவும் உடலில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். தற்போது பெரும்பான்மையான நேரம் அலுவலகத்திலேயே கழிக்கும் சாஃபட்வேர் இன்ஜினீயர்கள் போன்றவர்களுக்கு இப்படி மன இறுக்கம் தோன்ற வாய்ப்பு அதிகம்.சுத்தமான காற்றில் காரப்பொருளின் அளவு, அதிகமாக இருக்கும். ஆனால் மணிக்கணக்கில் அலுவலங்களில் இயங்கும் ஏசி வழியாக நமக்குக் கிடைக்கும் காற்றில் காரப்பொருளின் பங்கு மிகக் குறைவு. தவிர, ஏ.சி. சூழலிலேயே அதிக நேரம் இருக்கும்போது தாகம் எடுப்பதில்லை. எனவே, தண்ணீர் குடிப்பது குறைந்து விடுகிறது. தவிர அவ்வப்போது வெளியேற்றாமல் சிறுநீரை அடக்கிக்கொள்வதன் காரணமாகவும், ஏ.சி. காரணமாக வியர்வை வெளியேறாமல் இருப்பதாலும் அமிலம் வெளியேறும் வாய்ப்பு மேலும் குறைகிறது.

பலரும் தூள் உப்பையும் (ஜிணீதீறீமீ ஷிணீறீt) கல் உப்பையும் ஒன்றாகக் கருதுகிறார்கள். ஒரு கிலோ கல் உப்பு பயன்படுத்தும் இடத்தில் கால் கிலோ தூள் உப்பைப் பயன்படுத்தினால் போதுமானது. கல் உப்பில் 30 சதவிகிதம் சோடியம் சத்து உண்டு. பாக்கி 70 சதவிகிதத்தில் உள்ள கால்ஷியம், மக்னீஷியம் சத்துக்களைப் பிரித்துத் தனியாக உரமாக விற்றுவிடுகிறார்கள். மீதம்தான் தூள் உப்பாக நம் கைக்கு வந்து சேர்கிறது.சோடியம் காரணமாக நம் உடலில் அமிலச்சத்து அதிகமாகிறது. இதைச் சரிசெய்ய மக்னீஷியம் மற்றும் கால்ஷியம் தேவை. எலும்புகளில் இவை உண்டு. எனவே, கால்ஷியம் அதிகமுள்ள குறிப்பாக கழுத்து, இடுப்பு போன்ற எலும்புகள் சேரும் இடத்தில் உள்ள எலும்பு கரையத் தொடங்குகிறது. இதைத்தான் 'ஆஸ்டியோபொராசிஸ்' என்கிறோம். இதைத் தொடர்ந்து சிறுநீரகங்களில் க்ளைகேட்ஸ் (நிறீஹ்நீணீtமீs) உருவாகிறது. மணல் போல் தோன்றும் இவை நாளடைவில் கற்களாக மாறுகின்றன.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகத் தொடங்கும்போது, நம்மால் அதை ஓரளவு உணரமுடியும். சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் வெளியாகும். அது டாய்லெட் பீங்கானில் இலேசான படிமத்தைக் கூட உண்டாக்கக்கூடும். இந்தக்க கட்டத்துக்குப் பிறகு, சிறுநீர் கழிக்கையில் கடும் எரிச்சல் உண்டாகும்.
இவற்றையெல்லாம் தவிர்க்க மேலே குறிக்கப்பட்ட காரணிகளைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது ஒருநாளைக்கு மூன்று லிட்டர் திரவம் நம் உடலில் சேர வேண்டும். தண்ணீராக இரண்டு லிட்டரும், பிற உணவுப் பொருட்கள் மூலம் ஒரு லிட்டரும் சேரலாம். உணவில உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க விடுங்கள். சிட்ரிக் அமிலம் மற்றும் லாக்டிக் அமிலம் ஆகியவற்றை நம் உடல் ஏற்றுக்கொள்கிறது. இவை எளிதில் நம் உடலில் பிற பொருள்களாக மாறிவிடுகின்றன. சிட்ரிக் அமிலம் எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் உள்ளது. லாக்டிக் அமிலம் தயிரில் இருக்கிறது.பெட்ரோலில் ஓடும் காரில் டீசலை நிரப்பி ஓட்ட முடியாது. அதுபோல், வாழ்க்கைமுறையை மாற்றிக் கொண்டால் சிறுநீரகங்களால் அந்த மாறுதல்களை எளிதில் எதிர்கொள் முடிவதில்லை. கற்கள் உருவாவது மட்டுமல்ல, மாறிவரும் புதிய சூழல். மலட்டுத்தன்மையையும் உருவாக்கும் ஆபத்து உண்டு. உடலில் மக்னீஷியம் மிகக் குறைந்து, சோடியம் மிகவும் அதிகமானால், விந்துக்களின் ஆயுள் குறைந்துவிடும். முன்பெல்லாம் பெண்களுக்குச் சிறுநீரகக்கல் என்று கேள்விப் பட்டதில்லை. இப்போது அதுவும் அறிமுகமாகிவிட்டது.சிறுநீரகச் சிக்கல்கள் நம் வாழ்க்கை ஆனந்தத்தையே பறித்துவிடலாம். எனவே, நம் வாழ்க்கை முறையை ஓரளவாவது மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

சிறுநீரகம் & சில பாதுகாப்பு நடவடிக்கைகள்:

இந்த நூலின் பல பகுதிகள் உங்களைப் பயமுறுத்தி இருக்க வாய்ப்பு உண்டு. சத்தம் போடாமல் மௌனமாக இருந்தே கழுத்தறுக்கும் பாகம் என்று சிறுநீரகம் குறித்து நீங்கள் முடிவெடுத்திருக்கலாம்.என்றாலும் நம்மால் முடிந்த சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் பலவித சிறுநீரகச் சிக்ல்களைத் தவிர்க்க முடியும்.

1. தினமும் போதிய அளவு தண்ணீர் குடியுங்கள்-.
2. வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி விழுங்க வேண்டாம்.
3. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.
4. சர்க்கரை நோய்க்காரர்கள் தொடர்ந்து தங்கள் சர்க்கரை அளவைக் கண்காணியுங்கள்.
5. உங்கள் பரம்பரையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்தால், மேலும் கவனத்துடன் 35 வயதில் இருந்தே அவ்வப்போது சிறுநீரகப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
6. ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டாம்.


இளம் தலைமுறைக்கான ஆபத்து.. 993914_554925867886328_1045896989_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum