சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

 சிறப்பு சேர்க்கும் ரயில் பெயர்கள் Khan11

சிறப்பு சேர்க்கும் ரயில் பெயர்கள்

Go down

 சிறப்பு சேர்க்கும் ரயில் பெயர்கள் Empty சிறப்பு சேர்க்கும் ரயில் பெயர்கள்

Post by rammalar Fri 19 Jul 2013 - 3:50

மொழி, இலக்கியம், இயற்கைக்கு சிறப்பு சேர்க்கும் பெயர்கள் ரயில்களுக்குச் சூட்டப்படுவதை மொழியார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருமைக்குரிய நிகழ்வாக கருதுகின்றனர்.

அண்மைக் காலமாக தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய ரயில் வழித்தடங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் - குறிப்பாக மொழி மற்றும் இலக்கியத்தை நினைவுப்படுத்தும் வகையில் பெயர்கள் - சூட்டப்படுகின்றன.

ரயில் இயக்கப்படும் பகுதி இலக்கியத்தில் சிறப்பாக பேசப்பட்ட பகுதியாக இருந்தால் அதுகுறித்த பெயரும், இயற்கை வளத்தின் சிறப்பு என்றால் அதன் பெயரும் மற்றும் வரலாற்றில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வின் பெயரும் சூட்டப்படுகிறது.

டி.ஆர். பாலு எம்.பி. மத்திய ரயில்வே நிலைக் குழுத் தலைவர் பதவிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான ரயில்களுக்கு மொழி, இலக்கியம் மற்றும் சிறப்புக்குரிய ஆறுகளின் பெயர்களைச் சூட்டி வருகிறார்.

மன்னார்குடி பகுதியில் விவசாயத்தை செழிக்கச் செய்து மக்களின் வாழ்வாதாரத்துக்குத் துணையாக இருக்கும் பாமணி ஆற்றை நினைவுப்படுத்தும் வகையில் மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயிலுக்கு பாமணி விரைவு ரயில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை - மானாமதுரை வழித்தடத்தில் இயங்கவுள்ள ஒரு ரயிலுக்கு கண்ணகியின் அணிகலனைக் குறிக்கும் வகையில் சிலம்பு விரைவு ரயில் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மன்னார்குடி - சென்னை ரயிலுக்கு மன்னை விரைவு ரயில் என பெயரிடப்பட்டு இயக்கப்படுகிறது.

அடுத்து மன்னார்குடி- கோவை விரைவு ரயிலுக்கு கோவையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நினைவுபடுத்தும் வகையில் செம்மொழி விரைவு ரயில் என்ற பெயர் சூட்டப்பட்டு, மொழிக்குப் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் மொழியார்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் ரயில்களை இயக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே வேளையில் தமிழகத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களின் பெயரானது மொழி, இலக்கியம், வரலாறு, மண் சார்ந்து மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளது என்பது வருந்தத்தக்கது.

குறிப்பாக தமிழகம் நீங்கலாக தென் மற்றும் வட மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களான மும்பை - நிசாமுதீன் ரயிலுக்கு ஆகஸ்ட் புரட்சியை நினைவுப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் கிராந்தி ராஜதானி எக்ஸ்பிரஸ் என்றும் நேதாஜியின் சுதந்திர இந்தியா முழக்கத்தை நினைவு கூரும் வகையில் புனே-ஹவுரா ரயிலுக்கு ஆசாத்ஹிந்த் விரைவு ரயில் என்றும் மும்பை-ஹவுரா ரயிலுக்கு ரவீந்திரநாத் தாகூரை போற்றும் வகையில் கீதாஞ்சலி விரைவு ரயில் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

புத்த மதத்தை இலங்கைக்குச் சென்று முதலில் பரப்பிய அசோகரின் மகள் சங்கமித்திரையை நினைவுபடுத்தும் வகையில் பாட்னா - பெங்களூருக்கு இடையே சங்கமித்ரா விரைவு ரயில், யஷ்வந்த்பூர் - பாகல்கோட் இடையே இயக்கப்படும் ரயிலுக்கு கர்நாடக சீர்திருத்தவாதி பசவேஸ்வரை சிறப்பிக்கும் வகையில் பசவா எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

செகந்திராபாத் - சிரபூர்காகஜ்நகர் இடையே தெலங்கானா விரைவு ரயில், தக்கான பீடபூமியை நினைவுப்படுத்தும் வகையில் மும்பை - புனே இடையே டெக்கான் குவீன் எக்ஸ்பிரஸ், வங்க எழுத்தாளர் தாரா ஷங்கர் கங்கோபத்யாய எழுதிய நூலைக் குறிக்கும் வகையில் ஹவுரா-ஆசிம்கஞ்ச் இடையே கணதேவதா எக்ஸ்பிரஸ்.

கோமதி நதியைச் சிறப்பிக்கும் வகையில் புதுதில்லி -லக்னோவுக்கு என அந்த பகுதிகளின் பெருமைகளைப் பரப்பிடும் வகையில் கோமதி எக்ஸ்பிரஸ், ஜீலம் நதியை குறிக்கும் வகையில் புனே-ஜம்முதாவிக்கு இடையே ஜீலம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அல்லது அதன் வழியாக வருங்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய ரயில்களுக்கு சரித்திரம், இலக்கியம், மொழிசார்ந்த பெயர்களைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும்.

திருச்சி - நெல்லை, சென்னை - கோவைக்கு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை - வேளாங்கண்ணிக்கு வேளாங்கண்ணி விரைவு ரயில் என்ற பெயரில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களின் பெயர்களை அந்தந்தப் பகுதியின் சிறப்பை பறைசாற்றும் வகையில் சூட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதே மொழியார்வலர்களின் எதிர்பார்ப்பு.
-
======================

>சிவா. சித்தார்த்தன்
நன்றி: தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum