சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

ஆங்கில மொழியின் தோற்றம்!   Khan11

ஆங்கில மொழியின் தோற்றம்!

Go down

ஆங்கில மொழியின் தோற்றம்!   Empty ஆங்கில மொழியின் தோற்றம்!

Post by நண்பன் Fri 11 Feb 2011 - 14:22


ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சி யும் பெற்ற மொழியாக உள்ளது. இன்று இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகை யில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர்.

மொத்தம் 53 நாடு களில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல் வணிகம், தொடர்பாடல் (ஊடகம்) அரசியல் என எல்லாத்துறைகளிலும் இம்மொழியின் தாக்கம் பெரிதாக உள்ளது. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ -சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஓர் உலக மொழியாக இருக்கிறது.

பழங்கால ஆங்கிலம் (400-1100)

கி. பி. 5ம் நூற்றாண்டளவில் பிரிட்டனை மூன்று ஜெர்மன் குழுக்கள் (ஆங்கில்சு, சாக்சன், யூட்) இன்றைய ஜெர்மன்/ டென்மார்க் நிலப்பரப்பில் இருந்து ஆக்கிரமித்தன. இந்தக் குழுக்கள் தம்மிடையே புரிந்து கொள்ளக் கூடிய ஒத்த மொழிகளைப் பேசின. அப்போது அங்கு பேசப்பட்டு வந்த கெல்டிக் மொழிக் குழுக்கள் வடக்கேயும் மேற்கேயும் தள்ளப்பட்டன.

“ஆங்கிலோ இனத்தவர்கள்” ஆங்லோ லாந்து எனும் பகுதியில் இருந்தே வந்தனர். இவர்கள் பேசிய மொழி “இங்கிலிசுக்” எனும் ஜெர்மனிய மொழிக் குடும்பத்து மொழியாகும்.

இப்பெயர்களே இன்று மருவி இங்கிலாந்து இங்கிலிசு என்றானது இக்காலத்தில் பேசப்பட்ட ஆங்கிலம் பழம் ஆங்கிலம் எனப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சில ஆக்கங்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. தற்கால ஆங்கிலத்தின் பெரிதும் புழங்கும் 50 விழுக்காடு சொற்களுக்கு பழ ஆங்கில வேர்கள் உண்டு.

இடைக்கால ஆங்கிலம் (1100-1500)

பிரான்சின் நோர்மண்டி சிற்றரசின் மன்னன் வில்லியம் இங்கிலாந்தை 1066 கைப்பற்றினான். இந்தப் புதிய ஆக்கிரமிப்பாளர்கள் நோர்மன் எனப்பட்டனர். இவர்கள் ஒரு வகை பிரான்சிய மொழியைப் பேசினர். அரச அவையிலும், வணிகத்திலும் பிரான்சிய மொழியே செல்வாக்கு பெற்றது. ஆட்சித் தொடர்புடைய உயர் பிரிவு மக்கள் பிரான்சிய மொ¡யையும், பொது மக்கள் அல்லது கீழ்ப்பிரிவு மக்கள் ஆங்கிலத்தையும் பேசினர்.

இக் காலத்தில் பல பிரான்சிய சொற்கள் ஆங்கிலத்துடன் கலந்தன. இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கியம் த ‘காண்டர்பர்ரி கதைகள் ஆகும். நோர்மன் ஆக்கிரமிப்புக்கு பின்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் அரச ஆவணம் ப்ரோவிஷன்ஸ் ஆஃப் ஆக்சுபோர்டு (1258) ஆகும். 1362 ஆம் ஆண்டு எட்வர்ட் 3 என்னும் அரசன் முதல் முதலில் ஆங்கிலத்தில் நாடாளுமன்றத்தில் பேசினான். ஆங்கிலத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.

முன் முற்கால ஆங்கிலம் (1500-1800)

15ம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் உயிரெழுத்து மாற்றம் நிகழ்ந்தது. முதல் ஆங்கில அகராதி 1604ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இக்காலப்பகுதிக்கு சற்று முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அச்சுத்தொழில் நுட்பத்தால் (1476) பல்வேறு நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவரத் தொடங்கின. பெரும்பான்மையான பதிப்பகங்கள் இருந்த இலண்டனின் வட்டார வழக்கு தரப்படுத்தப்பட்ட ஆங்கிலமாக மருவியது.

இக்காலத்தில் வாழ்ந்த ஷேக்ஷ்பியர் (1564- 1616) ஆங்கிலத்தின் 3க்கு மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். இவை ஆங்கிலத்தின் உயர்ந்த இலக்கியமாக இன்றுவரை கருதப்படுகிறது. 1702 முதல் ஆங்கில நாளிதழ் ‘த டெய்லி கூரான்’ இலண்டனில் வெளியிட ப்பட்டது. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் 1768, 1771 முதலில் வெளியிடப்பட்டது.

தற்கால ஆங்கிலம் (1800-2010)

1900 களில் தொழிற்புரட்சி இடம்பெற்றது. பிரிட்டன் உலகின் பெரும்பாகத்தைத் தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாறியது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில் நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. 1922 பிபிசி ஒலிபரப்புச் சேவை தொடங்கி ஆங்கிலத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல உதவியது.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின்படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக் கொண்டுள்ளது.

தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக் கொண்டுள்ளது. வானொலி தொலைக்காட்சி, இயங்குபடம், வரைகதை, இணையம் என பல்வேறு ஊடக தொழில் நுட்பங்கள் ஆங்கில உலகிலேயே முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் ஊடாக ஆங்கிலம் தன்னை மேலும் வேரூன்றிக் கொண்டது. எ. கா. இணையம் இயங்கும் பல்வேறு நெறிமுறைகள் ஜிrotoணீols வலைத்தளங்கள் கட்டமைக் கப்படும் குறியீட்டு மொழிகள் markup langunagues நிரல் மொழிகள் ஆகியவை ஆங்கிலத் திலேயே உள்ளன.

வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன. தொடக்கத்தில் இலத்தின், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கில மும் ரஷிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன. இன்று ஆங்கிலமே தனிப்பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது. உலக அரசியலும், வணிகமும் இன்று பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே
நடைபெறுகிறது.

ஆங்கில மொழியின் தோற்றம்!   I


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum