Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: ஐ.நா. சபைக்கு சிரியா அவசர கடிதம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: ஐ.நா. சபைக்கு சிரியா அவசர கடிதம்
டமாஸ்கஸ், செப். 2-
சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார். அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கசின் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21-ம் தேதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து வெளியான நச்சு புகையில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 1300-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் மேகம் சூழ்ந்துள்ள வேளையில் அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி, 'அமெரிக்காவில் தொடங்கி அனைத்து மேற்கத்திய நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா? என்று தேடி வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக சில காட்சியமைப்புகளை உருவாக்கவும் சிலர் துடிக்கின்றனர்.
எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் 1973ல் யோம் கிப்பூர் போரின் போது கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை இப்போதும் அளித்து எங்களை தாக்க நினைப்பவர்களின் சுடுகாடாக சிரியாவை மாற்றுவோம்' என்று அவர் கூறினார்.
எனினும், அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொன்று குவித்த சிரியாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. சிரியா மீது தாக்குதல் நடத்த தனது நெருங்கிய நட்பு நாடான இங்கிலாந்துடன் பேசி போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
இதுகுறித்து எம்.பி.க்களின் ஆதரவை திரட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முடிவு செய்தார். சிரியா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. டேவிட் கேமரூனின் தீர்மானத்துக்கு எதிராக 285 எம்.பி.க்களும் ஆதரவாக 272 எம்.பி.க்களும் வாக்களித்தனர். 13 ஓட்டு வித்தியாசத்தில் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் தோல்வியடைந்தது.
இதற்கிடையில், சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் 426 குழந்தைகள் உள்பட 1429 பேர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என அமெரிக்க ராணுவ மந்திரி ஜான் கெர்ரி கூறியுள்ளார்.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:-
எங்கள் கூட்டு நாடுகளுடனும் அமெரிக்க காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம். அப்பாவி குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவில் நடைபெற்ற ரசாயன ஆயுத தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர். போர்களில் கூட இவ்வகை ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என மனித நேயம் மிக்க 99 சதவீதம் மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், மனிதநேயத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், நாம் தவறான சிமிக்ஞையை அனுப்புகிறோம் என்ற அர்த்தமாகி விடும். அந்த சிமிக்ஞை நமது நாட்டின் பாதுகாப்புக்கே கூட அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.
இந்த விவகாரத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏராளமான மக்கள் கருதுகின்றனர். ஆனால், யாருமே, எதுவும் செய்ய முன்வரவில்லை. சர்வதேச விதிமுறைகளை மீறிய வகையில் சிரியாவில் நடைபெற்றுள்ள ரசாயன தாக்குதல் சிரியாவின் அண்டை நாடுகளும், நமது நட்பு நாடுகளுமான இஸ்ரேல், துருக்கி, ஜோர்டான் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதுடன் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக உள்ளது.
சிரியாவில் உள்ள ரசாயன தீவிரவாதிகள் கையில் சிக்கினால் விளைவுகள் விபரீதமாகி விடும். சிரியாவின் ரசாயன ஆயுத குவியலுக்கு ராணுவ தாக்குதலின் மூலமாக மட்டுமே விடையளித்துவிட முடியும் என நான் நம்பவில்லை. காலாட்படைகளை களமிறக்குவது தொடர்பாக நாங்கள் ஆலோசிக்கவில்லை. சிரியா மீது எந்த வகை தாக்குதல் நடத்துவது என்பது தொடர்பாக இன்னும் நான் இறுதி முடிவு எடுக்கவில்லை'
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்தின் துணை இல்லாமல் போனாலும் சிரியா மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதலில் பிரான்சும் பங்கேற்கும் என்று அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கடந்த வாரம் அறிவித்தார். சிரியா மீது தாக்குதல் நடத்தும் முடிவில் உறுதியாக உள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இது தொடர்பாக அனைத்து கட்சி எம்.பி.க்களின் ஆதரவையும் பெற காய் நகர்த்தி வருகிறார்.
இதேபோல், நேரடியாக ராணுவ ஒத்துழைப்பை அளிக்காவிட்டாலும், சிரியா மீது தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் தார்மீக அடிப்படையில் இதர நாடுகளின் ஒத்துழைப்பை பெற வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.
உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு கேட்டு ஒபாமா ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு தார்மீக ஆதரவு அளிக்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.
இது தொடர்பாக இன்று ஆஸ்திரேலிய வெளியுறவு துறை மந்திரி பாப் கர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி ஆஸ்திரேலியாவில் ஒத்துழைப்பை கேட்டிருந்தார்.
இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவிக்கிறது. எனினும், அமெரிக்கா எங்களிடம் ராணுவ உதவி எதையும் கேட்கவில்லை. நாங்களும் ராணுவ உதவி அளிப்பதாக உறுதி அளிக்கவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களின்படி, தங்களின் நாட்டை தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமே ஒருநாடு இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியும். சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஐ.நா. சபை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
ஐ.நா.வின் ஒப்புதலை பெறாமல் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும், அது சர்வதேச போர் மரபுகளை மீறிய தாக்குதலாகவே கருதப்படும் என தெரிகிறது.
ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இடங்களில் இருந்து சில மாதிரிகளை சேகரித்த ஐ.நா. அதிகாரிகள் தற்போது அந்த மாதிரிகளை ஆய்வகங்களில் பரிசோதித்து வருகின்றனர்.
இந்த சோதனையில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டால் அது அமெரிக்காவின் தாக்குதல் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இன்று பேட்டியளித்த சிரியா வெளியுறவு துறை இணை மந்திரி பைசல் மெக்தாத், 'அமெரிக்காவின் ஆதரவு பெற்ற போராளிகள் குழுதான் சிரியாவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது' என்று கூறினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் முயற்சியை தடுத்து நிறுத்தும்படி ஐ.நா. சபைக்கான சிரியா தூதர் பஷர் ஜாஃப்ரி, ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி-மூன் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் மரியா கிரிஸ்டினா பெர்சவெல் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
'சிரியா மீது தேவையற்ற தாக்குதலை நடத்த நினைக்கும் அமெரிக்காவை தடுத்து நிறுத்தவும், சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலைக்கு அரசியல் ரீதியான அணுகுமுறையின் மூலம் தீர்வு காணவும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச சட்டவரம்புகளை மீறிய வகையில் சிரியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பதை ஐ.நா. சபை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்.
தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்ட புனை கதைகளையும், இண்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்ட போலி புகைப்படங்களையும் மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது.
தனது கொள்கைகளை எதிர்ப்பவர்களை ஆயுத பலத்தை காட்டி ஒடுக்க நினைப்பதை அமெரிக்கா கைவிட வேண்டும் என ஐ.நா. சபை வலியுறுத்த வேண்டும்.
சிரியா பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் ரஷ்யாவின் முயற்சியில் ஐ.நா. சபையும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும்' என அந்த கடிதத்தில் பஷர் ஜாஃப்ரி தெரிவித்துள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: ஐ.நா. சபைக்கு சிரியா அவசர கடிதம்
போரை தவிர்ப்பது நல்லது
அங்கும் எண்ணை வளம் இருப்பதை அமெரிக்க மோப்பம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது
அங்கும் எண்ணை வளம் இருப்பதை அமெரிக்க மோப்பம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது
Re: அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: ஐ.நா. சபைக்கு சிரியா அவசர கடிதம்
உண்மைதான் இருந்தும் இருந்தும் அந்த பசார் ஆசத் நாய்க்கு மருந்து கட்ட வேண்டாமா அடித்து நொறுக்கட்டும் ))&Muthumohamed wrote:போரை தவிர்ப்பது நல்லது
அங்கும் எண்ணை வளம் இருப்பதை அமெரிக்க மோப்பம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: ஐ.நா. சபைக்கு சிரியா அவசர கடிதம்
நொறுக்கட்டும் அப்ப தான் அவனுக்கு பாடம் கிடைக்கும்நண்பன் wrote:உண்மைதான் இருந்தும் இருந்தும் அந்த பசார் ஆசத் நாய்க்கு மருந்து கட்ட வேண்டாமா அடித்து நொறுக்கட்டும் ))&Muthumohamed wrote:போரை தவிர்ப்பது நல்லது
அங்கும் எண்ணை வளம் இருப்பதை அமெரிக்க மோப்பம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது
Re: அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: ஐ.நா. சபைக்கு சிரியா அவசர கடிதம்
உடனே நடக்கட்டும்....(_ (_ (_Muthumohamed wrote:நொறுக்கட்டும் அப்ப தான் அவனுக்கு பாடம் கிடைக்கும்நண்பன் wrote:உண்மைதான் இருந்தும் இருந்தும் அந்த பசார் ஆசத் நாய்க்கு மருந்து கட்ட வேண்டாமா அடித்து நொறுக்கட்டும் ))&Muthumohamed wrote:போரை தவிர்ப்பது நல்லது
அங்கும் எண்ணை வளம் இருப்பதை அமெரிக்க மோப்பம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: ஐ.நா. சபைக்கு சிரியா அவசர கடிதம்
!_ !_அச்சலா wrote:உடனே நடக்கட்டும்....(_ (_ (_Muthumohamed wrote:நொறுக்கட்டும் அப்ப தான் அவனுக்கு பாடம் கிடைக்கும்நண்பன் wrote:உண்மைதான் இருந்தும் இருந்தும் அந்த பசார் ஆசத் நாய்க்கு மருந்து கட்ட வேண்டாமா அடித்து நொறுக்கட்டும் ))&Muthumohamed wrote:போரை தவிர்ப்பது நல்லது
அங்கும் எண்ணை வளம் இருப்பதை அமெரிக்க மோப்பம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்: ஐ.நா. சபைக்கு சிரியா அவசர கடிதம்
!_நண்பன் wrote:!_ !_அச்சலா wrote:உடனே நடக்கட்டும்....(_ (_ (_Muthumohamed wrote:நொறுக்கட்டும் அப்ப தான் அவனுக்கு பாடம் கிடைக்கும்நண்பன் wrote:உண்மைதான் இருந்தும் இருந்தும் அந்த பசார் ஆசத் நாய்க்கு மருந்து கட்ட வேண்டாமா அடித்து நொறுக்கட்டும் ))&Muthumohamed wrote:போரை தவிர்ப்பது நல்லது
அங்கும் எண்ணை வளம் இருப்பதை அமெரிக்க மோப்பம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐ. சி. சி. எச்சரிக்கை கடிதம்
» ஜெயலலிதா அவசர கடிதம்
» கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.
» பிரான்சின் அவசர நிதி நிலை அறிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சர்கோசி கடிதம்.
» ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
» ஜெயலலிதா அவசர கடிதம்
» கலைஞர் கருணாநிதிக்கு டக்ளஸ் எழுதிய அவசர கடிதம்!.
» பிரான்சின் அவசர நிதி நிலை அறிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சர்கோசி கடிதம்.
» ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum