சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Khan11

பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Go down

Sticky பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 18:51

20 ஆம் நூற்றாண்டின்   முடிவில் 10 % ஆன பெண் கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமே  பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளர்கள் கடந்த சில நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற கண்டுபிடிப்புக்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக் பெண்களின் பெயர்கள் இருக்கும் பொதுவாக ஒருபெண் தனது கண்டுபிடிப்புக்களை வெளி கொண்டுவருவதற்கு அதிக அளவு தடைகளை தண்டவேண்டி இருக்கிறதுபெண் கண்டுபிடிப்பாளர்கள் GirlPower_thumb%5B3%5D

1700 களில் அமெரிக்காவிலும் பெண்கள் விஞ்ஞான கற்கைகளை கற்பது விரும்பத்தகாததாக இருந்தது 1700 களில் அமெரிக்காவில் ஒரு சட்டம் இருந்தது 


பெண்களுக்கு எந்த ஒரு சொத்தும் உரிமையாக இருத்தல் கூடாது என்பதுதான் அது  இவர்கள் இக்காலத்தில் தமது கண்டுபிடிப்புக்களையோ அல்லது ஒரு உள்ளநாட்டு தயாரிப்பையோ வெளியிட நேர்ந்தால் தமது தந்தையின் பெயரிலோ அல்லது கணவரின் பெயரிலோதான் உரிமம் பெற்று வெளியிடப்படவேண்டியிருந்தது.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் QTOUD00Z

இவற்றை தாண்டி தனது தயாரிப்பிற்கு தனது பெயரிலேயே உரிமம் பெற்ற  முதல் அமெரிக்க பெண்  Mary  kies  1809 இல் பெற்றார் .1 ஆம் உலகப் போரினால் பெண்களுக்கு ஒரு எதிர்பாராத நன்மை ஏற்பட்டது.உலகப் போருக்கு முன்பாக பெண்கள் ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்பும்,வோட்டுரிமையும் கேட்டு வன்முறையை பரிசாகவாங்கிக்கொண்டார்கள்.உலகப் போரின் போது ஆண்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவப்பையிற்சி என்றசட்டம் இருந்தது.இதனால் ஆண்கள் பணிபுரிந்த தொழிற்சாலைகள்,சுரங்கங்கள்,ஆயுதக்கிடங்குகள்,இரசாயன நிலையங்கள் என அனைத்து இடங்களுக்கும் ஆடகள் தேவை..வேறுவழி இல்லை பெண்களைத்தான் இவற்றிற்கு அமர்த்தினார்கள்.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Ww-340-women-drivers

நடைமுறையில் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பலவிடயங்களை பெண்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் 


இங்கு சில பெண் கண்டுபிடிப்பாளர்களையும் அவர்களது கண்டுபிடிப்புக்களையும் நோக்குவோம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 18:53

Circular saw


18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த "Tabiththa babbitt " என்றபெண்தான் இதை கண்டுபிடித்தார்இவர் நெசவாளர் இது ஒரு வட்ட தட்டு உருவான வாள்.
பெண் கண்டுபிடிப்பாளர்கள் Circular_saw_old150

இவர் ஒரு நெசவாளர் 1810 இல் இவர் 2  மனிதர்கள் வாள் ஒன்றை பயன்படுத்தி மரம் அரிவதை அவதானித்தார் இருவரும் இருதிசையிலும் வாளை   இழுத்து அரிந்தார்கள் வாளின் முனை ஒருபக்கமாக சரிவாக இருந்ததால் ஒரு பக்கமாக  அரியும்போது மாத்திரமே  வாள்  வெட்டியது மற்றைய பக்கம் இழுக்கும் போது சக்திச்ச்செலவு மாத்திரமே மிஞ்சியது இதை அவதானித்து 


கண்டு பிடிக்கப்பட்டதுதன் circular  saw 


பெண் கண்டுபிடிப்பாளர்கள் Babbittsaw2

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Circular_saw_table
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 18:53

Liquid  paperபெண் கண்டுபிடிப்பாளர்கள் Liquid_paper

டிபேஸ் என நாம் பயன்படுத்தும் உபகரணத்தை போன்றதுதான்   இந்த liquid paper இதைக்கண்டு பிடித்தவர்  "Bette Nesmith Graham  "  என்ற பெண் இவர் ஒரு டைபிஸ்ட்  தனது வேலையில் பல தவறுகளை செய்துவிடுவார் 1950 இல் மின்சாரத்தில் இயங்கும்  typewritter அறிமுகப்படுத்தப் பட்டது இதன்  கார்பன் ரிபனால் பதியப்பட்ட எழுத்துக்கள் திருத்துவதற்கு கடினமாக இருந்தது ஒரு நாள் grahm ஒரு பேங்க் யன்னலில் சிலர் ஓவியம் வரைவதை அவதானித்தார் அவர்கள் வரையும்போது 


தாம் செய்த தவறை சரி செய்ய அதன்மேல் வேரொரு வர்ணத்தை  தீட்டி தவறை சரி செய்தார்கள் இதுதான் grahm  ஐ இக்கண்டு பிடிப்பிற்கு தூண்டியது 

தனது சமையல் அறையில் கிரைண்டேரில் tempera பெயிண்ட் ,டை ,நீர் என்பவற்றை சேர்த்து அரைத்துத்தான்   இதை கண்டுபிடித்தார் 

தனது அலுவலகத்தில் இதை விநியோகித்தார் அலுவலகப்பணிகளை விட அதிகநேரம் தனது கண்டுபிடிப்பை விநியோகிக்க செலவிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார் 1958 இல் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை பெற்றார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 18:55

Chocolate chip cookies

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Ruthwakefield

இது ஒரு சாப்பாட்டு ஐட்டம் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமானது இதைக்கண்டுபிடித்தவர் Ruth wake field 1930 இல் கண்டுபிடித்தார்.இவர் ஒரு டயரிசன் அத்துடன் பூட் lecturer ஒருநாள் இவர் விருந்தினருக்கு கூகீஸ் தயாரித்துக்கொண்டிருந்தார் இதற்கு வழக்கமாக உருக்கிய சாக்லேட் தான் சேர்ப்பார்கள்   விரைவாக கூகிஸ் செய்ய வேண்டியதன்  காரணமாக சாக்லேட் துண்டை  உருக வைப்பதற்கு பதிலாக சிறு துருவல்களாக்கி கூகியில் தூவி bake பண்ணினார் இதனால் சாக்லேட் உருகிவிடும் என நம்பினார் ஆனால் சாக்லேட் உருகவில்லை அதற்கு மாறாக பெறப்பட்டதுதான் இந்த சாக்லேட் சிப் கூகீஸ்

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Chocolate-chip-cookies
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 18:56

The Compiler and COBOL computer language 


இதைக்கண்டுபிடித்தவர் கடற்படை அதிகாரியான ஹொப்பர்.இவர் 1943 இல் இராணுவத்தில் இணைந்துகொண்டார்.ஹவேர்ட் பல்கலைக்கழகத்தில் IBM இன் முதலாவது லார்ஜ் ஸ்கேல் கணணியான  Harvard Mark I ஐ இயக்குவதில் ஈடுபட்டிருந்தார்.இக்கணணியை ப்றோக்கிராம் செய்த மூன்றாவது நபர் இவர்தான்.1950 இல் இவர் ஒரு கணணையைக்கண்டுபிடித்தார்.இதில் ஆங்கில மொழியில் கட்டளைகளை கோட்டாக வழங்கமுடியும்.

 அமெரிக்காவின் முதல் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட கணணியான Universal Automatic Computer 1,2 களில் இவரது கொம்பைலர்கள்தான் பயன்படுத்தப்பட்டன.ஆரம்பகாலங்களில் இருந்த கணணி மொழிகளில் முக்கீயமானவற்ருள் ஒன்றாக இருந்த Common Business-Oriented Language (COBOL)  ஐ டெவலப் செய்தவர்களுள் முக்கியமானவர் இவர்தான்.இவரது இக்கண்டுபிடிப்புகளால் தான் ப்ரோகிராமெர்ஸ் பிழையின்றி தமது ப்ரோக்கிராம்களை எழுதமுடிந்தது.இவற்றிற்காக ஹொப்பர் பல விருதுகளைப்பெற்றுள்ளார்.அத்துடன் இவரைக்கௌரவிக்கும் முகமாக அமெரிக்க யுத்தக்கப்பலுக்கு இவரது பெயரைவைத்துள்ளார்கள்.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Grace-Murray-Hopper

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Envision-hopper

Colored Flare Systemபல ஆங்கிலபடங்களில் குகைகள் இருளான பிரதேசங்களில் அல்லது கடலுக்கடியில் கையில் ஒன்றை வைத்து அழுத்தும் போது பீறிட்டு எரியும் பாருங்கள் அதன் பெயர்தான் Colored Flare System  இதைக்கண்டுபிடித்தவர் Martha Coston 1847 இல் தனது 21 ஆவது வயதில் விதவையாக்கப்பட்டார்.இவரது கணவனின் குறிப்புப்புத்தகத்தில் இதை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி இடப்பட்டிருந்தது ஆனால் அக்குறிப்புப்புத்தகத்தில் இருப்பது நடைமுறையில் சாத்தியப்படவில்லை தன் கணவனின் கனவை நன்வாக்க எண்ணி அடுத்த 10 வருடங்கள் தொடர்ந்து இதற்காக கடுமையாக முயற்சி செய்தார்..இறுதியில் இதைக்கண்டுபிடித்து விஞ்ஞானிகள் இராணுவ அதிகாரிகளுக்கு முன்பாக பரிசோதனை செய்து காட்டினார்.ஆனால் அது நீண்ட நீரம் எரியாததால் பரிசோதனை தோல்வியில் முடிந்தது.பின்பொருநாள் தனது மகங்களுடன் வானவேடிக்கையை பார்க்க சென்றபொழுது இவருக்கு இதற்கான திட்டம் பளிச்சிட்டது.பின்னர் அமெரிக்க நேவி இவருக்கு உரிமத்தை வழங்கியது..பின்னர் நடைபெற்ற சிவில் யுத்தங்கள் முதல் அனைத்து யுத்தங்களிலும் இவரது கண்டுபிடிப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Flare+signals

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Martha-coston
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 18:57

The Square-bottomed Paper Bagகண்டுபிடித்தவர் Margaret Knight.இவர் பேப்பர் பாக்கை கண்டு பிடிக்கவில்லை சாதாரணமாக பயன்படுத்தப்படும் பேப்பர்பாக்கில் பொருட்களைக்கொண்டு செல்லல் கடினமாக இருந்தது. இதற்குத்தீர்வாக சதுர முகத்தைக்கொண்ட பேப்பர்பாக்கை உருவாக்கினால் இலகுவாக இருக்கும் என எண்ணி சதுரமுகம் கொண்ட பேப்பர் பாக்கை உருவாக்கினார்.இதை உருவக்குவதற்காக சிக்கலான இயந்திரமொன்றையும் உருவாக்கினார்.Charles Annan என்பவர் இவரது இயந்திரத்தை திருடி அது தன்னுடைய தயாரிப்பு என்றும் இதே போல ஒரு சிக்கலான இயந்திரத்தை ஒரு பெண்ணால் எப்படி உருவாக்கமுடியும் எனவும் அறிவித்தார்.ஆனால் Margaret Knight  இயந்திரத்தின் சரியான அளவீடுகள்,விபரங்களை தன்வசம் வைத்திருந்ததால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Grocery-bag5

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Margaret+knight

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Paperbag+machine
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 18:57

Dishwasherஇதைகண்டுபிடித்தவர் Josephine Cochrane 1883 இல் இவர் கணவனை இழந்தார்.தனது வேலையாட்கள் மீது அதிருப்தியடைந்ததால் இவர் இதைக்கண்டுபிடிக்க நேர்ந்தது.இவரது டிஸ்வோஸர் உயர் அமுக்கத்தில் இயங்குமாறு வடிவமைத்திருந்தார்.இதை விளம்பரப்படுத்தல் மிக கடினமாக இருந்தது இதை பயன்படுத்துவதற்கு ஹீட்டர் தேவையாக இருந்தது ஹீட்டர் பலரது வீட்டில் அக்காலத்தில் இருக்கவில்லை இதனால் இவர் ஹீட்டர்ளை பயன்படுத்துவதற்கு இலவசமாக வழங்கினார்.ஆரம்பத்தில் இல்லத்தரசிகளிடம் இது பிரபலமடைந்தது.பின்னர் பெரிய கம்பனிகள்வரை இது சென்றது.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Cochrane_Josephine_Garis1பெண் கண்டுபிடிப்பாளர்கள் Cochran_dishwasher_big
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 18:58

Windshield Wiperஇதைக்கண்டுபிடித்தவர் Mary Anderson .இவர் பனி பெய்துகொண்டிருக்கும் சமயம் பேருந்தில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார்.அப்பொழுது ஓட்டுனர் ஒவ்வொரு தடவையும் பேருந்தை நிறுத்தி நிறுத்தி கண்ணாடியை துடைத்தார்.இதனை அவதானித்த மேரி இதற்காக ஒரு உபகரணத்தை வடிவமைத்து ஓட்டுனரிடம் வழங்கினார்.அவ்வுபகரணத்தை பேருந்தின் உள்ளே இருந்தே இயக்க முடியும்.கண்ணாடியை சுத்தம் செய்ய வேண்டியிருப்பின் ஒரு கைபிடி செய்யப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி உள்ளே இருந்தே சுத்தம் செய்ய முடியும்.

இதை மேரி முதலில் கண்ணாடி சுத்தம் செய்யும் தொழிலார்களுக்கு பரிந்துரைசெய்தார்.பின்னர் மக்கள் இதை வாகனங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் அடுத்த 10 வருடத்தில் அனைத்து வாகனங்களிலும் இவரது தயாரிப்புத்தான் இருந்தது.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Mary_Anderson

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Windshieldபெண் கண்டுபிடிப்பாளர்கள் 400px-Scheibenwischer1.svg
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 18:59

Nystatinஇது ஒரு பங்கஸ் கொல்லியாகும்.கண்டுபிடித்தவர்கள் Rachel Fuller Brown, Elizabeth Lee Hazen இவர்களது கூட்டுத்தயாரிப்புத்தான் இது.1940 இல் New York State Department of Health இல் 1940 ஆம் ஆண்டு இது தொடர்பான பரிசோதனையில் ஈடுபட்டார்கள் 1950 இல் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்கள்.இது பின்னர் பல பிராண்ட் பெயர்களில் இப்பொழுது பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் 280px-Elizabeth_Lee_Hazen_Rachel_Fuller_Brown_1950s

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Nystatin
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Muthumohamed on Mon 2 Sep 2013 - 19:00

KevlarStephanie Kwolek என்ற பெண் அமெரிக்காவில் 1964 இல் du Pont என்ற இரசாயன நிறுவனத்தில் மொலிக்கியூல்களை உறுதியான நார்களாக மாற்றுதல் தொடர்பான ஆராச்சியில் ஈடுபட்டிருந்தார்.இதன்விழைவாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் kevlar இது வலுவான நாரால் ஆக்கப்பட்ட மெற்றீரியலாகும்.உலக அளவில் 1970 களில் இருந்து அதிக கேள்வி உடையதாக இருந்து வருகின்றது.இதை பயன்படுத்தித்தான்.கூடாரங்கள்,புள்ளட் புரூஃப் உடைகள் தயாரிக்கப்படுகின்றன.

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Kevlar-body-armor

பெண் கண்டுபிடிப்பாளர்கள் Stephanie_kwolek

இப்படி நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல விடயங்களைக்கண்டுபிடித்தவர்கள் நம்ம தாய்க்குலங்கள் தான்...


நன்றி: வெங்காயம்.காம்
மகா பிரபு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by rammalar on Mon 2 Sep 2013 - 19:06

கண்டு பிடித்த பெண்களுக்கு நன்றி
சொல்வோம்...
-


 பெண் கண்டுபிடிப்பாளர்கள் Bbbbbbbb
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15704
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பெண் கண்டுபிடிப்பாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum