Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உயரம் ! இப்படியெல்லாம் இருக்கா?
Page 1 of 1
உயரம் ! இப்படியெல்லாம் இருக்கா?
நமது உடலின் உயரம் நமது வாழ்க்கையின் தரத்தையும் பாதிக்கிறது என்று டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
டென்மார்க்கில் உள்ள நோவோ நார்டிஸ்க் மையத்தைச் சேர்ந்த உடல்நலம் சார்ந்த பொருளாதார வல்லுநர் டார்ஸ்டன் கிறிஸ்டென்சன் தலைமையில், 'உயரத்திற்கும் உடல்நலம் சார்ந்த வாழ்க்கைத் தரத்திற்கும் உள்ள தொடர்பு' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், நமது உயரம் எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவு அதிகமாக உடல்நலமும். மனநலமும் பாதிக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
கிறிஸ்டென்சன் கூறுகையில், ''உயரம் குறைவாக உள்ளவர்கள் தங்களின் வாழ்வில் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றவர்களுடன் உள்ள நட்புறவு ஆகியவற்றில் சிரமங்களைச் சந்திக்கிறார்கள்.
இருந்தாலும் உயரத்திற்கும் மன நிலைக்கும் உள்ள தொடர்பு மிகச் சரியாக நிரூபிக்கப்படவில்லை.
உடல்நலம், மனநலம் சார்ந்த சிக்கல்களை உயரமானவர்களை விடக் குறைவாக உணர்ந்ததாகவே குட்டையானவர்கள் தெரிவிக்கின்றனர் என்று ஆய்வில் கண்டறிந்தோம்'' என்றார்.
உயரத்திற்கும் உடல்நலம் சார்ந்த வாழ்க்கைத் தரத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், முன்பு கிடைத்த கருத்துக் கணிப்பின் முடிவு ஆதாரமாகக் கொள்ளப்பட்டது.
கடந்த 2003- ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 14,416 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் உடல்நலம் சார்ந்த வாழ்க்கைத் தரம் (health-related quality of life (HRQoL)) தொடர்பான வினாத்தாள் கொடுக்கப்பட்டது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களின் உடல்நலம் எப்படி உள்ளது என்பதைவிட, அவர்கள் தங்களின் உடல் நலத்தைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அளவிடவே வினாத்தாள் பயன்படுத்தப்பட்டது.
அதில், சுய பாதுகாப்பு, அன்றாட நடவடிக்கைகள், வலி, பாதுகாப்பின்மை, மனஅழுத்தம், கோபம், சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றின் அனுபவத்தை வெளிக் கொண்டுவரும் வகையில் கேள்விகள் இருந்தன.
அவற்றுக்கு அளிக்கப்பட்ட விடைகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அதில், சமூகப் பிரிவு, நீண்டநாள் நோய்கள், உடல் எடை, பால், வயது ஆகியவை தொடர்பான கொடுக்கப்பட்டிருந்த விடைகள் HRQoL குறிட்டைச் சுட்டிக் காட்டின.
அதனடிப்படையில் மனிதர்களின் வாழ்க்கைத் தரம் உயரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது என்று முடிவு செய்யப்பட்டது.
அதாவது, 162 செ.மீ க்குக் குறைவான உயரமுள்ள ஆண்கள், 151 செ.மீ க்குக் குறைவான உயரமுள்ள பெண்கள் ஆகியோரின் HRQoL குறியீடு குறைவாக இருந்தது.
உயரம் சிறிது அதிகரித்தாலும் குட்டையானவர்களின் வாழ்க்கையில் சாதகமான முன்னேற்றம் ஏற்படுகிறது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்தது.
ஆண்களுக்கு 7 செ.மீ, பெண்களுக்கு 6 செ.மீ என்று அதிகரித்தால் அவர்களின் HRQoL குறியீடு 6.1 விழுக்காடு அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இன்னொரு ஆய்வில் உலகில் குட்டையாக இருப்பவர்கள் அதிக வாழ் நாள் கொண்டவர்களாகவும், உயரம் அதிகம் உள்ளவர்கள் குறைவான வாழ்நாள் கொண்டவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஆசின்...இப்படியெல்லாம் வதந்தி!
» இப்படியெல்லாம் முத்தமா கொடுமைய்யா
» காதலுக்கு உயரம் ஒரு தடையல்ல
» குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம்.
» உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரும்?
» இப்படியெல்லாம் முத்தமா கொடுமைய்யா
» காதலுக்கு உயரம் ஒரு தடையல்ல
» குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம்.
» உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum