Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
Page 1 of 1
மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
- ஒரு பெண்ணின் பெருமை அந்தப் பெண் தாய்மையடைவதில்தான் இருக்கிறது. இந்த தாய்மைக்கு அடித்தளம் பூப்பெய்தலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாதவிடாய் சுழற்சியும்தான். தற்போது நவீன உணவு மாறுபாட்டால் 9 முதல் 12 வயதிற்குள் சிறுமிகள் பூப்பெய்துகிறார்கள். இந்த பூப்பெய்தல் என்பது கருப்பையில் உருவாகும் கருமுட்டைகள் முதிர்ந்து போதிய வளர்ச்சியடைந்து அதனால் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் கருப்பை வளர்ச்சியுற்று அதன் உட்புறச் சவ்வின் கசிவே உதிரமாக வெளியேறுகிறது. இது மாதம் ஒருமுறை அதாவது 27-30 நாட்களுக்கு ஒருமுறை என சுழற்சியாக நடைபெறும். 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும்.
- பொதுவாக 14 வயது முதல் 45 வயது வரை மாதவிலக்கு சுழற்சி நடைபெறுகிறது. பழங்காலத்தில் பெண்கள் அடிக்கடி குழந்தை பெற்றுக்கொள்வதால் மாதவிலக்கு சுழற்சியிலிருந்து விடுபட்டனர். அதுபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது மாதவிடாய் சுழற்சி ஒருசிலருக்கு தடைபடும்.
- இந்த மாதவிலக்குக் காலங்களில் பெண்களை தனியாக தங்க விடுவார்கள். எந்த வேலையும் செய்ய விடாமல் முழு ஓய்வு கொடுப்பார்கள். சிலர் இதை மூடப் பழக்கம் எனலாம். ஆனால் அந்த பழக்கத்திலும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
- தற்போது நவீன உலகத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது இல்லை. பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு சுழற்சியை ஒரு சாபமாக நினைக்கின்றனர். பசி, தூக்கம் போல் இதுவும் ஒரு வித இயற்கை நிகழ்வுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சில பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி போன்றவற்றால் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
- இதனால் மாதவிலக்கை தள்ளிப் போடவும், சில சமயங்களில் வெகு விரைவில் வரவும் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது. இயல்பாக மாதம் ஒருமுறை என்ற சுழற்சியை மாற்றினால் பின் வரும் காலங்களில் பல உபாதைகளை சந்திக்கவேண்டி வரும்.
- பெண்களின் மாதவிலக்கானது வாத, பித்த, கப அடிப்படையில் உடலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
- வாத உடம்புக் காரர்களுக்கு மாதவிலக்கின் இடைவெளி ஒழுங்கற்றிருக்கும். ஓரளவுக்கு உதிரம் குறைவாக, உறைந்த நிலையில் சிறு கட்டிகளாகக் கூட வெளியேறும். இந்த காலகட்டத்தில் அடிவயிறு இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும். வயிற்றுவலியும் கூடவே மலச்சிக்கலும் ஏற்படும். சில நேரங்களில் வயிற்றுப் போக்கு கூட ஏற்படலாம். எரிச்சல், கோபம், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.
- இந்த வாதஉடம்புக் காரர்கள் அதிக வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் எடையைக் குறைக்க நினைத்தால் சில சமயங்களில் மாதவிலக்கு தள்ளிப்போக வாய்ப்புண்டு.
- பித்த உடம்பைக் கொண்ட மகளிருக்கு மாதவிலக்கு இடைவெளி குறையும். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். 5 நாட்களுக்கு மேல்கூட உதிரப்போக்கு இருக்கும். வயிற்றுப்போக்கு, முகத்தில் பருக்கள் தோன்றும். உடம்பு தடித்து காணப்படும். ஒருபக்க தலைவலி தோன்றலாம்.
- கப உடம்பு மகளிருக்கு இயல்பான உதிரப்போக்கு இருக்கும். ஆனால் இவர்களுக்கு பல உபாதைகள் அதாவது மார்பகங்களில் வீக்கம், முதுகு, இடுப்பு, கை, கால்களில் வலி போன்றவை ஏற்படும். அஜீரணக் கோளாறு ஏற்படும். இத்தகைய உபாதைகளுக்கு உணவு மூலமும், ஓய்வின் மூலமும் நடைமுறையிலேயே தீர்வு காணலாம்.
கடைபிடிக்க வேண்டியவை
- முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.
- மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும்.
- மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
- எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
- அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.
- அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.
- ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.
- டீ, காபி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.
- காய்ச்சி ஆறவைத்த நீரை அருந்துவது நல்லது.
- வாசனை திரவியங்களை உபயோகப் படுத்த வேண்டாம்.
மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால்
- பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும்.
- மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும்.
- மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை
» அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!!
» வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
» கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
» நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
» அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!!
» வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
» கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
» நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum