சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

  கந்த சஷ்டி விழா Khan11

கந்த சஷ்டி விழா

Go down

  கந்த சஷ்டி விழா Empty கந்த சஷ்டி விழா

Post by ராகவா Mon 9 Sep 2013 - 17:07

அருள்மிகு கந்தக் கடவுளின் சிறப்பான விழாவான கந்த சஷ்டி விழா ஒவ்வோர் ஆண்டும் முருகன் குடிகொண்டுள்ள ஆறுபடைவீடு கோவில்களிலும், சிவாலயங்களிலும், மற்ற முருகன் கோயில்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருக பக்தர்கள் ஆறுபடைவீடு கோயில்களுக்குச் சென்று அந்த வள்ளி மணாளனைப் போற்றித் துதிபாடி வழிபடுகின்றனர்.

நாள்:

ஐப்பசி மாத அமாவாசைகளில் பிறகு வரும் ஆறாம் நாள் (சஷ்டி தினம்) அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக் கிழமை.

பூஜை:

வீட்டில் பூஜை அறையில், அல்லது பலரும் அமர்ந்து பார்க்கும் விதமாக வசதியான இடத்தில் வள்ளி தெய்வாணையுடன் கூடிய சுப்ரமணியக் கடவுளின் படத்தை வைத்து, மலர் மாலை அணிவித்து அலங்கரித்து முருகனை ஆவாஹனம் செய்ய வேண்டும். கலசம் வைத்தும் சுப்ரமண்ய சுவாமியை ஆவாஹனம் செய்யலாம். விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை முதலியன செய்தபின் சுப்ரமண்ய அஷ்டோத்திர பூஜை செய்ய வேண்டும். காலை வேளையில் ராகுகாலம் தவிர்த்து நல்ல நேரத்தில் பூஜை செய்கிறோம். சுகந்த மணமுள்ள மலர்களான ரோஜா, மல்லிகை, மருக்கொழுந்து முதலிய மலர்களால் அர்ச்சனை செய்தல் நலம்.

தூபு தீப, ஆராதனைக்குப் பின் நிவேதனம் செய்தல் வேண்டும்.

நிவேதனம்:

பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல், வடை, பயாசம் மஹா நிவேத்யம் எனப்படும் அன்னம், மற்றும் தேங்காய் அல்லது எலுமிச்சை சாதம்.

துதிக்க:

கந்த சஷ்டி கவசம், நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப் படை, திருப்புகழ், ஷண்முக கவசம் மற்றும் அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடிச் சிந்து பாடல்கள் உகந்தவை.

விரதமுறை:

ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி, சஷ்டி முடிய ஆறு நாட்களிலும் அதிகாலையில் நீராடி தூய்மையான ஆடை அணந்து, படத்திலோ அல்லது கும்பத்திலோ முருகனை தியானித்து, பூஜை செய்து கந்தபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். சஷ்டி தினம் அன்று உபவாசம் இருந்து முருகனை தியானம் செய்து கொண்டாட வேண்டும். ஏழாம் நாள் பூஜை முடித்து அடியவர்களுக்கு உணவளித்துப் பின் உண்ண வேண்டும். ஆறு நாட்களுமே உபவாசம் இருப்பவர்களும் உண்டு.


பலன்:

"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்," என்பது பழமொழி. இந்த விரதம் கடைப்பிடித்தால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு உத்தமமான குழந்தை பிறக்கும்.

மஹிமை:

பாரதத்தில் கண்ணன் "சேனாதிபதியில் நான் கந்தனாக இருக்கிறேன்," என்கிறார். சிங்க முகன், சூரபத்மன், தாரகாசுரன் என்ற அசுரர்களுடன் போர் புரிந்து, தேவர்களின் குறைதீர்த்து, இந்திரனுக்கு அவன் இராஜ்ஜியத்தை மீட்டுக் கொடுத்து, வெற்றிக் கொடி நாட்டினான் கந்தவேள். இந்திரனின் மகளான தெய்வானையை மணமுடித்தான்.

கார்த்திகேயன் அவதாரம்:

ஒரு சமயம் சிவபெருமான் கடுமையான தவம் மேற்கொண்டு சமாதி நிலையில் இருந்தார். சிங்க முகன் போன்ற அசுரர்களின் தொல்லைகள் எல்லை மீறிய போது, தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டனர். அவர் தேவர்களை சிவபெருமானிடம் அனுப்பினார். சிவனின் தவம் கலையவில்லை. மன்மதனாகிய காமனை ஏவி சிவனின் தவத்தைக் கலைக்க முயன்றபோது, சிவபெருமானின் கோபத்திற்கு ஆளான காமன் எரிந்து சாம்பலானான். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட கோபக்கனல் சரவண என்ற புற்காட்டிற்குள்ளிருந்த பொய்கையில் விழுந்தன. அதிலிருந்து ஆறு அழகிய குழந்தைகள் வெளிவந்தன. பார்வதிதேவி அன்புடன் அக்குழந்தைகளைக் கட்டியணைக்க ஆறுமுகமும் பன்னிரு கைகளும் கொண்ட சரவணபவன் வருவானான். ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயன் தாயிடமிருந்து சக்திவேலைப் பெற்று அசுரர்களுடன் பக்தர்களைக் காக்கும் குமரனாக விளங்குகின்றான்.

சிறப்பு:

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற ஆறுபடை வீட்டுக் கோயில்களில் கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் மிகச் சிறப்பாக நடக்கும். கந்த சஷ்டியன்று திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரக் காட்சியைக் காண பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடுவர். ஏழாம் நாள் காலை தெய்வானைத் திருமணம் என்ற விழாவும் திருத்தணியில் வள்ளி கல்யாணமும் நடக்கும். முருக பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என்று பல காவடிகள் சுமந்து முருகனைத் தரிசிக்க வருவது கண்கொள்ளாக் காட்சி.

தம் குறை தீர்க்க முருகனை வேண்டி நின்ற பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு, காவடியும் சுமந்து வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். இலங்கையில் கதிர்காமம் என்ற ஊரில் கதிர்வேல் முருகன் காட்சி தரும் திருக்கோயிலிலும் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விரதங்கள் இருந்து முருகனின் திருவடிகளில் சரணம் அடைந்த பக்தர்களுக்கு இங்கே முருகப் பெருமான் காட்சியளிக்கிறார் என்பது பரவலான நம்பிக்கை.

நன்றி:வெப்தூனியா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum