Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆடி -18, பதினெட்டாம் பெருக்கு
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆடி -18, பதினெட்டாம் பெருக்கு
`நடந்தாய் வாழி காவேரி‘ என்கிறது சிலப்பதிகாரம். `காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு‘ என்றெல்லாம் காவிரியைப் போற்றிப் பாடுகிறோம். காவிரி ஆற்றை அன்னையாகப் பாவித்து பல கவிஞர்கள் பாடியுள்ளனர். `அன்னையின் அருளே வா வா வா, ஆடிப்பெருக்கே வா வா வா,‘ என்று அரவணைத்து மகிழும் சிறப்பான திருநாளான ஆடிப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு 3ம் தேதி வியாழக்கிழமை இவ்வாண்டு பதினெட்டாம் பெருக்கு வருகிறது.
ஓடி வருகிறாள் அன்னை:-
கோடை வெய்யிலின் தாக்கத்தால் வறண்டு, அடங்கி ஒடுங்கி ஓர் ஓரமாக மெல்ல ஊர்ந்து செல்லும் காவிரி, தேக்கி வைக்கப்பட்ட மழைநீர் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, மடை திறந்த வெள்ளமாக சீறிப்பாய்ந்து கங்கு கரையின்றி, நுங்கும் நுரையுமாக ஓடி வருகிறாள். இப்புது வெள்ளம் காணும் மக்களின் மனத்தில் பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது. காவிரி நதியும், அதன் கிளை நதிகளும் பாய்ந்து வளம் பெருக்கும் தஞ்சை, திருச்சி, கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் வாழும் மக்கள் இத்திருநாளின் அருமையுணர்ந்தவர்கள்.
ஆடிப்பட்டம்:-
விவசாயக் குடிமக்கள் இந்நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். `ஆடிப்பட்டம் தேடி விதை‘ என்றுணர்ந்த இவர்கள் தம் வயலில் நெல், மற்றும் காய்கறி வகையின் புது விதை தூவி, வரும் பொங்கலின் போது நல்ல விளைச்சல் காண வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றனர். இதற்கு முன்பாகக் காலையில் நல்ல நேரத்தில் காவிரியன்னைக்கு மலரிட்டு பூஜை செய்து, நீர்வளம் சிறக்க வேண்டுகின்றனர்.
அன்னைக்கு ஆராதனை:-
காவிரி நதிநீர்ப் பிரச்சனை இன்று போல் விச்வரூபம் எடுக்காத காலம் அது! காலையில் எண்ணெய்க் குளியல் செய்து, புத்தாடை உடுத்தி, மாலையில் ஆற்றங்கரை நோக்கிக் குடும்பத்தோடு சென்று, ஓடி வரும் காவிரி அன்னைக்கு பூஜை செய்வர். பின் தம்முடன் கொண்டு வந்துள்ள சித்ரான்னங்களான புளியோதரை, மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் இனிப்பிற்காக வெல்லமும் தேங்காயும் சேர்ந்த வெல்ல சாதம் முதலியவற்றை அன்னைக்கு நிவேதனம் செய்து, உடனிருக்கும் நண்பர்களுடன் பகிர்ந்துண்பர் என்கிறார் தஞ்சை மாவட்டம் மாயவரத்தில் வாழ்ந்து இந்நாளை அனுபவித்த அன்பர் ஒருவர்.
ஆற்றங்கரைக்குப் போகும் பொழுதே, ஒரு முறத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை, கருகமணி, திருமங்கல்யச் சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, மற்றொரு முறத்தில் மூடி எடுத்துச் செல்வர். ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்குவர். தீபங்களை ஒரு வாழை மட்டையில் வைத்து, முறத்துடன் ஆற்றில் மிதக்க விடுவார்களாம். திருமங்கல்யச் சரட்டை மணமுடித்த பெண்கள் தாம் அணிந்து கொண்டு, மற்ற பொருட்களை முறத்தில் வைத்து, மூடிய முறம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்வதைப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும் என்று நினைவு கூர்கிறார், தஞ்சையில் காவிரிக்கரைக்கு அருகே தம் இளமையைக் கழித்த ஒரு வயதான பெண்மணி.
திருவரங்கன் தரிசனம்:-
பிற மாவட்டங்களில் வாழ்ந்தாலும், எங்கெல்லாம் ஆற்றங்கரையிருக்கிறதோ, அங்கெல்லாம் இந்நாளில் கொண்டாட்டம் தான். திருச்சியில் காவிரிக் கரையில் அமைந்துள்ள அம்மாமண்டபத்தில், ஸ்ரீரங்கத்திலிருந்து பெருமாள் ஸ்ரீரங்கநாதன் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவார். மாலையிலும் உற்சவருக்கு விசேஷ பூஜைகள் உண்டு. சிறுவர், சிறுமிகள் இன்றும் மாலையில் ஆற்றங்கரையில் கூடி மகிழ்ந்து, உணவுண்டு இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். தென் மாவட்டங்களில் குறிப்பாகத் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
நகர்ப்புறங்களில் ஆற்றிற்கு எங்கே போவது? வீட்டிலேயே காவிரி அன்னையை நினைத்து, பூஜை செய்து சித்ரான்னங்களுடன், பாயசம் முதலியவற்றை நிவேதனம் செய்து கூடி உண்பது இன்றும் பழக்கத்தில் உள்ளது. கடற்கரை போன்ற இடங்களுக்கு இவற்றை எடுத்துச் சென்று அங்கே குழந்தைகளுடன் பொழுதை இனிமையாகக் கழிக்கத் தடையொன்றுமில்லையல்லவா?
நன்றி:வெப்தூனியா

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆடி -18, பதினெட்டாம் பெருக்கு
:/ ஆடி பதினெட்டாம் பெருக்கைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆடி -18, பதினெட்டாம் பெருக்கு
rammalar wrote::/ ஆடி பதினெட்டாம் பெருக்கைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஆடிப் பெருக்கு...!!
» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு
» ஆடிப் பெருக்கு 03-08-2015
» இலக்கிய நூல்கள் பட்டியல்>சங்க காலம் முதல் இன்று வரை!
» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு
» ஆடிப் பெருக்கு 03-08-2015
» இலக்கிய நூல்கள் பட்டியல்>சங்க காலம் முதல் இன்று வரை!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum