Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1

இந்து மத புத்தகங்களில் வர்ணாசிரமம் பற்றி இருக்கிறது அதனால் தான் இந்தியாவில் ஜாதி/தீண்டாமை பிரச்சனை என்று பல அறிவாளிகள் கூறுகின்றனர். என்னைப்பொறுத்தவரை இது ஒரு அறிவிலித்தனமான கூற்று.
இந்தியாவில் இருந்த/ இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஜாதி. இந்த ஜாதி பிரச்சனைகளுக்கு காரணம் இந்து மதம் தான் என்று ஒரு சிலர் அல்லது பலர் கூறலாம்.
இந்த மாதிரி ஜாதி பிரச்சனைகளில்/தீண்டாமையில் ஈடுபடும் எவனும் இது இந்து மதம் சொல்கிறது அதனால் இதை செய்கிறேன் என்று சொல்லமாட்டன்.
வர்ணாசிரமம் பற்றி கூறும் ஒரு சில குறிப்புகள் கொண்ட நூலை பற்றி ,அந்த வசனங்கள் பற்றி தீண்டாமையில் ஈடுபடுபவர்களுக்கும் சரி, ஈடுபடாதவர்களுக்கும் சரி ஒன்றும் தெரியாது எனபதே உண்மை. (வர்ணாசிரமம் பற்றி அப்படி என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி பிறகு பார்ப்போம்.)
ஏன் எனில்பெரும்பாலான இந்திய மக்கள் இவற்றை இந்து மத நூல்களாக ஏற்று இரவும் பகலும் படித்து இறைவன் தந்த வேதம் என்று போற்றுவதில்லை. கிருத்துவமானாலும் சரி, இசுலாமானாலும் சரி குறைந்தது வீட்டிற்கு ஒரு புனித நூல், அதிக பட்சம் ஆளுக்கு ஒரு நூல் வைத்திருப்பார்கள். ஆனால் மேற்கூறிய இந்த ஜாதி பற்றி கூறும் இந்து மத நூல்கள் ஊருக்கு ஒன்று இருப்பதே அபூர்வம். அப்படி இருக்க இந்த மத நூல்களால் தான் சில பல இந்தியர்கள் / இந்துக்கள் தீண்டாமையில் ஈடுபடுகின்றனர் என்பதை எப்படி ஏற்க இயலும்?
தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தான் . மனிதத்தன்மையற்ற செயல்தான் அதில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் தண்டனை யாருக்கு தரப்பட வேண்டும் தீண்டாமையில் ஈடுபட்டவர்களுக்குத்தானே ? அவர்களை மட்டும் தானே குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டும்? அதை விடுத்து ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஜாதி வெறி பிடித்த இந்துக்கள் என்று சொல்வது எப்படி முறையாகும்?
எப்படி ஒரு மதத்தை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த மதத்தையும், ஒரு நாட்டை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த நாட்டையும் குறை செல்வது தவறோ அதைப்போலத்தான் ஒருவன் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த இந்தியாவையும், இந்துக்களையும் குறை சொல்வதும் தவறாகும்.
உலகில் எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும் உள்ளது போல் இந்தியாவிலும் எல்லா மதங்களிலும் தீண்டாமை இருப்பதை மறுப்பதற்கில்லை. இவைகள் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டியவை. தீண்டாமையை ஒழிக்கும் வழிகளை ஆராயும் முன் தீண்டாமைக்கு காரணம் என்ன என்பதை பற்றி பார்க்க வேண்டும்.
நீங்கள் தீண்டாமையில் ஈடுபடவில்லையா?
இன்றைய சூழ்நிலையில் உலகில் பெரும்பாலானோர் குற்றமாக கருதப்படும் தீண்டாமையில் ஈடுபடவில்லை என்றாலும் குற்றமாக கருதப்படாத, ஏன் தீண்டாமை என்றே அறியாமல் பல தீண்டாமைகளை இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் செய்துகொண்டுதான் வருகின்றோம்.
நான் என்ன சொல்கிறேன் நீங்களும் தீண்டாமையில் தான் ஈடுபடுகிறீர்கள் ஆனால் என்ன அது சட்டத்தால், சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இந்த தீண்டாமைக்கு மூல காரணம் என்னவெனில் ஒரு மனிதன் தன்னை விட மற்றொருவனை தாழ்வாக நினைப்பதுதான். நான் இந்த விதத்தில் உயர்ந்தவன் அவன் அந்த விதத்தில் தாழ்ந்தவன் என்று நாம் ஒவ்வொருவரும் ஒரு அளவுகோலை வைத்துள்ளோம்.
இல்லை நான் தீண்டாமையில் ஈடுபடுபவன் இல்லை என்கிறீர்களா?
இதோ என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்...பின்வரும் கேள்விக்கு ஒரு கேள்விக்கு நீங்கள் இல்லை என்று பதில் சொன்னாலும் நீங்கள் தீண்டாமையில் ஈடுபடுகின்றீர்கள் என்று தான் பொருள். கேள்விக்கு தயாரா?
உங்கள் மகளை நீங்கள் ஒரு பிச்சைக்காரனுக்கு மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?
உங்கள் மகனுக்கு பிச்சைக்கார பெண்ணை மணம் முடித்து வைத்துள்ளீர்களா? வைப்பீர்களா?
நீங்கள் உண்ணும் தட்டில் பிச்சைக்காரனுக்கு உணவளித்துள்ளீர்களா ? உணவளிப்பீர்களா?
பிச்சைக்காரன் உண்ட தட்டில் நீங்கள் உணவு உண்டுள்ளீர்களா? உண்பீர்களா?
அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் இல்லை என்றுதான் பதில் சொல்லி இருப்பீர்கள். ஏன் எனில் நீங்கள் அவர்களை மனிதர்களாக மதிக்கவில்லை.
நீங்கள் பிச்சைக்காரனைவிட உங்களை உயர்வாக எண்ணுகிறீர்கள்.
இதற்க்கு காரணம் பல. இதற்க்கு என்ன காரணம் என்று உங்கள் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.
எந்த வகையான தீண்டாமையையும் எந்த வகையிலும் நான் நியாப்படுத்த வில்லை.மாறாக காரணத்தைத்தான் அலசுகிறேன் என்பதை மனதில் வையுங்கள்.
இன்றைய இணைய உலகத்திலேயே, பெரிய படிப்பெல்லாம் படித்து விட்ட நீங்களே, தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசும் நீங்களே தீண்டாமையில் ஈடுபடும்பொழுது பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தீண்டாமையில் ஈடுபட்டிருப்பதில் என்ன வியப்பு? என்ன அசிங்கம்?
சரி இதை விடுங்கள்....
பணமும் தீண்டாமைக்கு வித்திடுகிறதா இல்லையா?
என்னதான் உயர்த்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று இருந்தாலும் அவர்களுக்கு மத்தியிலும் தீண்டாமை உண்டா இல்லையா?
ஒரே ஜாதியில் இருந்தாலும் பணக்காரன் ஏழைக்கு பெண் தரமாட்டான்
ஒரே ஜாதியில் இருந்தாலும் பணக்காரன் ஏழையை வீட்டிற்கு கூப்பிட்டு தன்னுடைய தட்டில் உணவளிக்க மாட்டான்.
உண்மையா இல்லையா? இதுவும் தீண்டாமை தானே? என்ன இது குற்றமற்ற தீண்டாமை.
மிருகங்களிடத்திலும் தீண்டாமையா?
அறிவியல் படித்திருப்பவர்களுக்கு தெரியும். ஒரு மிருகம் இனப்பெருக்கத்திற்கு எப்படி தன்னுடைய இணையை தேர்ந்தெடுக்கின்றது என்று. எல்லா விதத்திலும் உயர்ந்த,சிறந்த ஒரு ஆண் மிருகத்தைத்தான் பெண் மிருகங்கள் தேர்ந்தேடுக்குமாம். இங்கே சிறந்தது என்பது வீரமாக இருக்கலாம், உடல் பலமாக இருக்கலாம்,அழகாக இருக்கலாம், தனக்கு பிடித்த மாதிரியான உடல் வாசனையாக இருக்கலாம், நோயற்ற தன்மையாக இருக்கலாம். (ஆண் தேர்ந்தெடுக்கும் பொழுதும் அப்படித்தான்......வன்புணர்ச்சிகள் எனபது வேறு). தன்னுடைய எதிர்கால சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி மிருகங்கள் கூட இனையைத்தேர்ந்தேடுக்கும் பொழுது சில அளவுகோலை வைத்துள்ளது. இதுவும் யாரை தீண்டக்கூடாது என்பதற்கான ஒன்றுதான். இதுவும் தீண்டாமைதான்.
காதல் கலப்பு மணத்தில் தீண்டாமை ?
இன்றும் மனிதர்களுக்கு மத்தியில் என்னதான் கலப்பு மனங்கள் காதல் மனங்கள் நடக்கின்றது என்றாலும். தன்னுடைய வசதிக்கு,அழகிற்கு படிப்பிற்கும் தகுந்த முறையில் தான் நடக்கின்றதே தவிர எவனும் அல்லது எவளும் எதையும் பார்க்காமல் காதலிப்பதில்லை.இதிலும் தீண்டாமை இன்றளவும் உண்டு. (ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்? ).
நண்பர்களுக்கு மத்தியில் தீண்டாமை ?
ஏன் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் பொழுதும் கூட இன்று ஜாதியை பார்க்காமல் இருக்கலாம் ஆனால் வசதி, படிப்பு, ஒத்த சிந்தனை, பழகும் விதம், பேசும் விதம், ஒழுக்கம் என பல அளவுகோல்கள் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தப்படுகிறது. இதுவும் ஒரு தீண்டாமை தானே?
ஜாதி வீட்டு ஜாதி திருமணம் செய்ய மறுக்கிறார்கள் ஜாதி வெறியர்கள் என்று குரல் கொடுக்கின்றனர். இதுபோல் தான் யாரும் மதம் விட்டு மதம் யாரும் திருமணம் செய்வதில்லை. இதுவும் ஒரு தீண்டாமைதானே?
இந்தியாவில் இந்து மதத்தில் இதுவும் தீண்டாமையா?
இந்து மதத்தில் ஜாதிக்கு ஒரு மயானம் - இது தீண்டாமையாக பார்க்கப்படுகிறது.
ஏன் பல தெய்வங்கள்/இறைவன்கள் இருப்பதையும் சிலர் குறை கூறுகின்றனர்.
சிலர் சில கோயிலுக்கு போவதே இல்லை
இதை விளக்க ஒரு குட்டி கதை சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.
"தீடிரென்று இன்று வேற்று கிரகத்தில் இருந்து சிலர் பூமிக்கு வந்துவிடுகின்றனர். அவர்கள் உலகின் பல நாட்டு அரசியல்வாதிகளை சிறையில் அடைத்துவிட்டு, இவ்வுலகையே அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகின்றனர்.
அவர்கள் பின்பற்றுவது புண்ணாக்கு மதம். இந்த பூமியில் பின்பற்றப்பட்ட பிறமதங்களை அவர்கள் பூமி மதம் என்று பெயரிட்டு விடுகின்றனர்.
சில தலைமுறைகள் கடந்துவிட்டன வேற்று கிரக வாசிகள் தங்களை அடிமைபடுத்தியுள்ளதால் பூமியை சேர்ந்தவர்கள், பூமி மதத்தினர் ஒட்டுமொத்தமாக அவர்களை எதிர்க்கின்றனர். (இப்பொழுது இவர்கள் பல மதங்களை சார்ந்தவர்கள் எனபதே அவர்களுக்கு தெரியாது)
இவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்தால் தான், அவர்களுக்கு இடையே சண்டை உருவானால் தான் நாம் நிம்மதியாக சுரண்ட முடியும் வாழ முடியும் எனபதை வேற்று கிரக புண்ணாக்கு மதத்தினர் உணர்கிறார்கள். வேற்று கிரக வாசிகள் பூமி மதத்தில் இருக்கும் வேறுபாடுகளை பார்க்கின்றனர். இவற்றை பல தந்திரங்கள் மூலமாக பெரிதாக்குகின்றனர். பூமி மதத்தினரின் ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர்.
இப்பொழுது புண்ணாக்கு மதத்தினர் "எங்கள் மதமே சிறந்தது, உங்கள் மதத்தில் பல தீண்டாமைகள் உள்ளன. உங்கள் மதத்தில் சிவனுக்கு ஒரு கோயில், அல்லாவுக்கு ஒரு கோயில், ஏசுவுக்கு ஒரு கோயில். அல்லாவை வழிபடுபவர்கள் அந்த கோயிலுக்குள் பிற கடவுளை வணங்குபவர்களை அனுமதிப்பதில்லை. அதுபோலவே பிற இறைவன் கோயிலுக்கும் பிறர் போவதில்லை. தீண்டாமை எப்படி தலை விரித்தாடுகிறது பாருங்கள்.
அதுமட்டுமா சிவனை வணங்குபவர்கள் பிணத்தை தனியாக ஒரு மயானத்தில் எரிக்கின்றனர். அல்லாவை வணங்குபவர்களுக்கு தனியாக பிணத்தை புதைக்க ஒரு மயானம், கர்த்தரை வணங்குபவருக்கு தனியாக ஒரு மயானம். உங்கள் மதத்தில் பாருங்கள் எவ்வளவு தீண்டாமை.எத்தனை இறைவன்கள். எனவே இந்த தீண்டாமையிலிருந்து தப்பிக்க நீங்கள் எங்கள் புண்ணாக்கு மதத்திற்கு மாறுங்கள்" என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர்.
இந்த கதையில் நீங்கள் பூமியை இந்தியாவிற்கும், பூமி மதத்தை இந்து மதத்திற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் பல உண்மைகள் உங்களுக்கு தெரியும். நூற்றுக்கு நூறு இக்கதை பொருந்த விட்டாலும் பெருமளவிற்கு பொருந்தும்.
இன்றைய இந்து மதம் என்பது பல சமயங்களின் சங்கமம், பல மதங்களையும் ஏதோ ஒரு காரணத்தால் யாரோ இந்து மதம் என்று அழைத்து விட்டனர்.அதனால் தான் பல வித்தியாசங்கள், சிக்கல்கள் இந்து மதத்தில் உள்ளது
பூமி மதத்தில் எப்படி தீண்டாமை உருவானதோ அப்படித்தான் இந்தியாவிலும் தீண்டாமை உருவாகி இருக்க வேண்டும்.
என்னதான் தீண்டாமைக்கு காரணம் கூறினாலும். இரட்டை குவளை முறை, தாழ்த்தப்பட்டவர்களை பஞ்சாயத்து தலைவர்களாக ஏற்க்க மறுத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு புரிய வைக்க முயல வேண்டும்(பல கிரமாங்களில் இந்நிலை இல்லை சில கிராமங்களில் மட்டுமே குறிப்பாக மதுரை பக்கத்தில் இது இருப்பதாக கேள்வி). வேண்டும் என்றே புரிந்து கொள்ள மாட்டேன் என்று தீண்டாமையை ஆதரிக்கும் செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றமான தீண்டாமையை உடனடியாக ஒழிக்க வேண்டும்.
குற்றமான தீண்டாமையையும் குற்றமற்ற தீண்டாமையையும் அழிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும். அது எப்படி என்பதை பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம்.
இப்பதிவின் நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல, மாறாக என்னுடைய சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதே, தீண்டாமையின் மூலத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. இப்பதிவில் எங்கு தவறு இருந்தாலும் சுட்டி காட்டுங்கள் உடனடியாக திருத்திக்கொள்கிறேன். தீண்டாமைக்கான காரணங்களை அலசியுள்ளதால் தீண்டாமைக்கு நான் ஆதரவு என்று யாரும் எண்ண வேண்டாம். தீண்டாமை, ஜாதி, மதம் இவற்றை கண்டிப்பாக அழித்தே ஆக வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். தீண்டாமைக்கு காரணம் இந்தியாவும் அல்ல இந்து மதமும் அல்ல மனிதர்களே என்று நான் உறுதியாக கூறுகிறேன். இதை நீங்களும் ஏற்ப்பீர்கள் என நம்புகிறேன்.
இவன்
உங்களைப்போலவே சில இடங்களில் தீண்டாமையால் பாதிக்கப்படுபவனும், சில இடங்களில் தீண்டாமையில் ஈடுபடுபவனும், தீண்டாமையை அழிக்க விரும்புபவனுமாவான்.
என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி
நன்றி:தளம்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?
:/
ஆண்டவனை தரிசிக்க ஜாதிபேசும் மனிதா!
மாண்டவுடன் செல்லுமிடம் யாதென்று தெரியாதா
ஆடி அடங்கும் வாழ்க்கையிலே உனக்கு
ஆறடி நிலமும் இல்லையென்பதே கணக்கு

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?
:/ :/ :/rammalar wrote::/
ஆண்டவனை தரிசிக்க ஜாதிபேசும் மனிதா!
மாண்டவுடன் செல்லுமிடம் யாதென்று தெரியாதா
ஆடி அடங்கும் வாழ்க்கையிலே உனக்கு
ஆறடி நிலமும் இல்லையென்பதே கணக்கு
பதிவுக்கு :”@: :”@: :”@: அக்கா
Re: இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?
நன்றி நண்பர்களே!!
தொடர்ந்து வாருங்கள்.
இன்னும்பல புதியவைகளை பார்ப்போம்..*_
தொடர்ந்து வாருங்கள்.
இன்னும்பல புதியவைகளை பார்ப்போம்..*_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» இந்து மதம்
» இந்து மதம் ஒரு பொக்கிசம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» இந்து மதம்
» இந்து மதம் ஒரு பொக்கிசம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
» அர்த்தமுள்ள இந்து மதம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum