Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்கள் குழந்தைகளிடம் உருவாகும் வன்முறை உணர்வு
2 posters
Page 1 of 1
உங்கள் குழந்தைகளிடம் உருவாகும் வன்முறை உணர்வு
‘குழந்தையின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தால் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறது. அதை பக்கத்து வீட்டு பெண் தொட்டாலே கோபப்படுகிறது. யாராவது அந்த பொம்மையை எடுத்து சென்றால் உடனே உருண்டு புரண்டு அடம் பிடிக்கிறது.
உடனுக்குடன் எங்கள் குழந்தையின் குணாதிசயம் மாறுகிறது. புரிந்து கொள்ளவே முடியவில்லை’ என்று தடுமாறும் பெற்றோர்கள் மிக அதிகம். இந்த பிரச்சினை வீட்டுக்கு வீடு இருப்பதால் எல்லோரும் பயன் அடையும் விதத்தில் குழந்தைகளின் மனோநிலை பற்றிய அடிப்படையான விஷயங்களை இங்கே தருகிறேன்.
தாய் வயிற்றில் கரு உருவாகி, வளர்ந்து கொண்டிருக்கும்போது அந்த வீட்டில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறதோ, கர்ப்ப காலத்தில் தாயின் மனோநிலையில் என்ன மாதிரியான உணர்வுரீதியான மாற்றங்கள் ஏற்படுகிறதோ. அதற்குத்தக்கபடி வயிற்றில் வளரும் குழந்தையின் குணாதிசயங்கள் அமையும்.
அதையட்டியே பிறந்த குழந்தை கவலை, மகிழ்ச்சி, திருப்தி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும். பொதுவாக குழந்தையிடம் ஒரு வயதில் கோபமும், பயமும் தோன்றும். இரண்டு வயதாகும்போது பொறாமை, குற்ற உணர்வு போன்றவை உருவாகும்.
அதனால் குழந்தை பருவத்திலே எதற்கு பொறாமைப்படுகிறது? எதற்கு கோபம் கொள்கிறது? என்பதை பெற்றோர் உணர்ந்து, அதற்குத் தக்கபடி குழந்தையை வளர்க்க முன்வர வேண்டும்.
இன்றைய சமூக சூழலில் குழந்தைகளிடம் கோப உணர்வு அதிகரித்து வருகிறது. தனக்கு பிடிக்காத விஷயங்கள் நடக்கும்போதோ, தன்னை யாராவது தொந்தரவு செய்யும்போதோ உடனடியாக கோபம் கொள்கிறார்கள். உடலில் அட்ரினாலின் ஹார்மோன் அதிகம் சுரப்பது அதற்கு காரணமாக அமைகிறது.
குழந்தைகளின் கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
வயிற்றில் இருக்கும்போதே குணாதிசயங்கள் உருவானாலும், பிறந்த பின்பு குழந்தையை வளர்க்கும் முறையில் குணாதிசயங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம். குழந்தையோடு வசிக்கும் பெற்றோர்களும், உடன்பிறந்தோரும் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளாமல், அமைதியாக பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.
அதைப் பார்த்து குழந்தை வளர வேண்டும். குழந்தைக்கு எதுஎதற்கெல்லாம் கோபம் வருகிறது என்பதை கண்டறிந்து, கோபத்தால் அதன் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்த்தவேண்டும். கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. மாறாக கோபப்படுபவர்களை எல்லோரும் புறக்கணிப்பார்கள் என்பதை சொல்லித் தர வேண்டும்.
‘உன் பென்சிலை யாராவது உடைத்தால் உனக்கு வருத்தம் வரும் என்பது உண்மை தான். அதற்காக கோபப்பட்டு, பென்சிலை உடைத்த தோழியை அடிப்பது பென்சிலை மீண்டும் பெற்றுத் தராது’ என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அடித்ததால் அந்த தோழிக்கு ஏற்பட்ட வலியையும், துக்கத்தையும் அவளை வைத்தே சொல்ல வைக்க வேண்டும்.
குழந்தை யாரையாவது அடித்தாலோ, வேண்டும் என்றே ஏதாவது பொருட்களை கீழே போட்டு உடைத்தாலோ, சிறிது நேரம் ஒரு தனியறையில் அந்த குழந்தையை உட்கார வையுங்கள். செய்தது தவறு என்பதை உணர்த்தி அதற்காக மன்னிப்பு கேட்க வற்புறுத்துங்கள்.
குழந்தைக்கு கோபம் வரும் போது அதனை வீட்டிற்குள்ளே பாதுகாப்பாய் சைக்கிள் ஓட்டச்செய்யுங்கள். படம் வரைதல், தோட்ட வேலை செய்தல் போன்ற எதையாவது செய்ய வைத்து அதன் கோப சக்தியை சரியான பாதைக்கு திருப்பி விடுங்கள்.
குழந்தைகள் சின்ன சின்ன விஷயங்களுக்காக அடம்பிடித்து தனது பெற்றோரை ஆழம் பார்க்கும். பொது இடங்களில் அழுது அடம்பிடித்து தான் விரும்புவதை பெற முயற்சிக்கும். அதனை முளையிலே கிள்ளி எறிந்துவிடவேண்டும்.
அடம் பிடிப்பதற்கு செவி சாய்த்தால் நாளுக்கு நாள் அது அதிகரித்து காலப்போக்கில் மோசமான விளைவுகளை உருவாக்கி விடும். குழந்தைகளின் அடத்தை போக்க, பெற்றோர் இருவரும் ஒரே முடிவினை எடுத்து நடைமுறைப்படுத்தவேண்டும்.
அம்மா, ஒரு பொருளை வாங்கித் தர மாட்டேன் என்று கூறும்போது, அப்பா தான் வாங்கித்தருவதாக கூறக்கூடாது. தேவையற்றதை வாங்கித் தரும்படி கேட்கும்போது, அது தேவையல்ல என்பதை உணர்த்துங்கள். பயனற்றதை கேட்டு எந்த கோணத்தில் அடம் பிடித்தாலும், அதை வாங்கித்தர மாட்டோம் என்பதில் நீங்கள் உறுதியாக இருங்கள்.
அளவுக்கு மீறி அடம் பிடிக்கும் போது வழக்கமாக வாங்கிக் கொடுக்கும் பொருட்களில் ஒன்றிரண்டை குறிப்பிட்ட காலம் வரை வாங்கிக் கொடுக்காதீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல மாற்றங்கள் குழந்தைகளிடம் ஏற்படும்போது பாராட்டுங்கள்.
திடீர் பரிசுகளை வாங்கிக்கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள். அடம் பிடிக்கும் குழந்தைகளை அடக்கும் மருந்து பெரும்பாலும் தாயிடம் தான் இருக்கிறது. தாய், தனது தேவைகளை நிறைவேற்ற கணவரிடம் அடம் பிடித்தால், அதை பார்த்து வளரும் குழந்தை, தன் தேவைகளை நிறைவேற்ற தாயிடம் அடம் பிடிக்கும்.
அதனால் குழந்தைகளிடம் மாற்றங்களை உருவாக்க விரும்பும் பெற்றோர் முதலில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் இருக்கிறது. உடல் ஊனம் போல், குணாதிசய ஊனம் சில குழந்தைகளிடம் இருக்கக்கூடும்.
கட்டுக்கடங்காத கோபம், வன்முறை எண்ணம், அலறுதல், அளவற்ற பயம், நோய் பயம் மற்றும் மரண பயம், தூக்கமின்மை போன்றவை தொடர்ச்சியாக இருந்தால் அவை குணாதிசய ஊனத்தின் அறிகுறியாக இருக்கலாம். அப்படிப்பட்ட குழந்தைகளை பரிவுடன் கையாண்டு மனநல நிபுணரின் கவுன்சலிங்குக்கு உட்படுத்துங்கள்.
- விஜயலட்சுமி பந்தையன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கோழி குஞ்சு உருவாகும் கதை (இது பற்றி உங்கள் ஆலோசனை என்ன)
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம் ******************************************************.
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம்
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம் ******************************************************.
» குழந்தைகளிடம் அன்பு காட்டுவோம்
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum