Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தென்னை மரம் - சிறுவர் பாடல்
+2
பானுஷபானா
rammalar
6 posters
Page 1 of 1
மழை - சிறுவர் பாடல்
வானில் மேகம் கலையுது
வாடைக்காற்று வீசுது
கானக் குயில்கள் கூவுது
கால மழையும் வருகுது
-
இடியும் முழங்கிக் குமுறுது
இருண்ட வானம் மின்னுது
நெடிய மரங்கள் ஆடுது
நெடுகத் தவளை கத்துது
-
மேகம் பார்த்த மயிலுமே
மகிழ்வில் ஆடித் திரியுது
காகம் குருவிப் பறவைகள்
கவிந்த கிளையில் பதுங்குது
-
உழவர் உள்ளம் குளிரவே
உவகை பொங்கிப் பெருகுது
கழனி காடு விளையவே
கருணை இறையை வேண்டினர்
-
வெம்மை ஆறித் தணியவே
விழுது விழுதாய் மழையுமே
செம்மையாகப் பெய்தது
செழிப்பு விஞ்சித் திகழுதே!
-
=========================
>கவிஞர் தே.ப.பெருமாள்
நன்றி: சிறுவர் அமுது (பாடல்கள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தென்னை மரம் - சிறுவர் பாடல்
*_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
காய்கறிகள் – சிறுவர் பாடல்
-
காம்பு நீண்ட கத்தரிக்காய்
கடையில் விற்கும் கத்தரிக்காய்!
பாம்பு போலும் புடலங்காய்
பச்சை வண்ண பீர்க்கங்காய்!
-
குண்டு குண்டு பூசணிக்காய்
கூடை போலும் பரங்கிக்காய்!
உண்டுகளிக்க வெள்ளரிக்காய்
உயரத் தொங்கும் பாகற்காய்!
-
கடித்துத் தின்ன வெண்டைக்காய்
கசப்பைக் கொடுக்கும் சுண்டைக்காய்
முடிச்சுப் போல் முருங்கைக்காய்
முற்றிப் போன வாழைக்காய்!
——————–
>கவிஞர் வ.நஞ்சுண்டன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
தென்னை மரம் - சிறுவர் பாடல்
--
ஓங்கி நிற்கும் மரம் – அடர்ந்த
ஓலைகள் நிறைந்த மரம்!
தேங்காய் நல்கும் மரம் – காற்றில்
தலைவிரித்தாடும் மரம்
-
வேர்கள் படர்ந்த மரம் – தரத்தில்
வித விதமான மரம்!
ஊர்தோறும் வளர் மரம் – நல்
உரத்தை உறிஞ்சும் மரம்!
-
மருந்தாய்ப் பலன் தரும் மரம் – குருத்து
மண்டிக் கிடக்கும் மரம்!
பெருத்த நிழல்தரும் மரம் – யாவரும்
பெரிதே போற்றும் மரம்.
-=======================
-கவிஞர் கோ.ஜெயச்சந்திரன்
நன்றி: பாட்டுப் பாடு பாப்பா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தென்னை மரம் - சிறுவர் பாடல்
:”@: பகிர்வுக்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
எல்லாமும் படிக்கணும் - சிறுவர் பாடல்
-
ஆத்திச் சூடி படித்து - நீ
ஆத்திரத்தை அடக்கணும்
-
மூதுரையைப் படித்து - நீ
தீய உரையை விலக்கணும்
-
'நல்வழி'யை படித்து - நீ
நல் வழியில் நடக்கணும்
-
கொன்றை வேந்தன் படித்து - நீ
கொல்லாமை கற்கணும்
-
திருக்குறளை படித்து - நீ
அறவழியில் மிளிரணும்
-
அவ்வை மொழிகள் யாவையும்
அவுடதமாய் அருந்தணும்
-
நிறைவுடன் வாழவே -நீ
நீதி நூல்கள் படிக்கணும்
-
கற்ற வழிநடக்கணும்
கடமை செய்தே பிழைக்கணும்
-
---------------------------
>வேலவன், வாழப்பாடி
நன்றி: தங்க மலர்
ஆத்திச் சூடி படித்து - நீ
ஆத்திரத்தை அடக்கணும்
-
மூதுரையைப் படித்து - நீ
தீய உரையை விலக்கணும்
-
'நல்வழி'யை படித்து - நீ
நல் வழியில் நடக்கணும்
-
கொன்றை வேந்தன் படித்து - நீ
கொல்லாமை கற்கணும்
-
திருக்குறளை படித்து - நீ
அறவழியில் மிளிரணும்
-
அவ்வை மொழிகள் யாவையும்
அவுடதமாய் அருந்தணும்
-
நிறைவுடன் வாழவே -நீ
நீதி நூல்கள் படிக்கணும்
-
கற்ற வழிநடக்கணும்
கடமை செய்தே பிழைக்கணும்
-
---------------------------
>வேலவன், வாழப்பாடி
நன்றி: தங்க மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum