சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Yesterday at 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Yesterday at 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Yesterday at 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Yesterday at 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

பழமொழிகள்-1 Khan11

பழமொழிகள்-1

Go down

பழமொழிகள்-1 Empty பழமொழிகள்-1

Post by ராகவா Wed 18 Sep 2013 - 16:35

அகல இருந்தால் நிகளௌறவு கிட்டவந்தால் முட்டப்பகை
அகல உழுகிறதைவிட ஆழ உழு
அகல் வட்டம் பகல் மழை
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அசைந்து தின்கிறது யானை அசையாமல் தின்கிறது வீடு
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கம் உடையார் அறிஞர் அடங்காதவர் கல்லார்.
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி நாக்கிலே நஞ்சும் நுனிநாக்கில் அமுதமும்
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
அணில் கொம்பிலும் ஆமை கிணற்றிலும்.
அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வாராது
அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு
அந்தி மழை அழுதாலும் விடாது
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம் உள்ளுரானுக்கு மரத்திடியில் பயம்
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன கழுதை மேய்ந்தாலென்ன.
அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக் கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
அள்ளிக் கொடுத்தால் சும்மா அளந்து கொடுத்தால் கடன்.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை
அறச்செட்டு முழு நட்டம்.
அற்ப அறிவு அல்லற்கிடம்.
அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
அறிவில்லார் சினேகம் அதிக உத்தமம்.
அறிவீன இடத்தில் புத்தி கேளாதே
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்
அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும் அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
ஆய்ந்து பாராதான் காரியந்தான் சாந்துயரன் தரும்.
ஆரால் கேடு வாயால் கேடு.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் (னாலடியார்) இரண்டும் (குறள்) சொல்லுக்குறுதி
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப்பூச் சக்கரை
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்
ஆழமறியாமல் காலை இடாதே
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு
ஆறின கஞ்சி பழங்கஞ்சி
ஆறு கடக்கிற வரையில் அண்ணன் தம்பி ஆறு கடந்தால் நீ யார்? நான் யார்?
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
ஆறுகெட நாணல் இடு ஊருகெட நூலை விடு
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்
ஆனை படுத்தால் ஆள் மட்டம்
ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
ஆனைக்கு ஒருகாலம் பூனைக்கு ஒருகாலம்
ஆனைக்கும் அடி சறுக்கும்.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
இங்கே தலை காட்டுகிறான் அங்கே வால் காட்டுகிறான்.
இஞ்சி இலாபம் மஞ்சளில்
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாளைக்கு
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தொ1யாது.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே
இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
இராகு திசையில் கெட்டவனும் இல்லை
இராசா மகளானாலும் கொண்டவனுக்கு பெண்டுதான்.
இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமனைப்போல் சேவகனும் இருப்பான்.
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா
இருவர் நட்பு ஒருவர் பொறை.
இல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
இளங்கன்று பயமறியாது.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இறுகினால் களி இளகினால் கூழ்.
இறைக்க ஊறும் மணற்கேணி ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
இறைத்த கிணறு ஊறும் இறையாத கேணி நாறும்.
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

ஈக்கு விடம் தலையில் தேளுக்கு விடம் கொடுக்கில்.
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.

உட்கார்ந்தால் அல்லவா படுக்கவேண்டும்.
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
உடல் உள்ளவரையில் கடல் கொள்ளாத கவலை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை.
உண்ட உடம்பிற்கு உறுதி உழுத புலத்தில் நெல்லு.
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும் ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உலோபிக்கு இரட்டை செலவு
உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
உளவு இல்லாமல் களவு இல்லை.
உள்ளது சொல்ல ஊருமல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.
உள்ளது போகாது இல்லது வாராது.
உள்ளம் தீயொ1ய உதடு பழஞ் சொரிய
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
ஊண் அற்றபோது உடலற்றது.
ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
ஊர் உண்டு பிச்சைக்கு குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர் வாயை மூட உலைமூடி இல்லை.
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.

எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய் உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்?
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு (நெருப்பில்லாது புகையாது)
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா!
எட்டி பழுத்தென்ன ஈயார் வாழ்ந்தென்ன.
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு
எண் இல்லாதவர் கண் இல்லாதவர்.
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமல் செய்கிறவன் மட்டி
எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமல் செய்வது வேளாண்மை
எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா
எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம்
எதார்த்தவாதி வெகுசன விரோதி
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்
என்னிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகா
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்
எருமை வாங்கும் முன்னே நெய்விலை கூறாதே
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்
எருது நோய் காக்கைக்கு தொ1யுமா
எழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் து1க்கிறவர் யார்
எலி அழுதால் பூனை விடுமா
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்கு கொண்டாட்டம்
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா
எழுத்தறச் சொன்னாலும் பெண்புத்தி பின்புத்தி
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா
எழுதி வாங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஒர் உழவு
எள்ளு என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
எறும்பு ஊர கல்லுன் தேயும்
எறும்புன் தன் கையால் எண்சாண்
எதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை

ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏரி நிறைந்தால் கரை கசியும்
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்
ஏழை என்றால் எவர்க்கும் எளிது
ஏழை பேச்சு அம்பலம் ஏறாது
ஏறச்சொன்னால் எருது கோபம் இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச் சுரைக்காய்க்கு
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா

ஓட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை (வி~ம்)
ஒரு கை (வெறுங்கை) முழம் போடுமா
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா
ஒரு நன்றி செய்தவரை உள்ள அழவும் நினை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்
ஒருமைப்பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்
ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் அம்பலம்
ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்
ஓதியமரம் துர்ணாமோ, ஓட்டாங்கிளிஞ்சல் காசாமோ
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஓன்பது வழி
ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை..

நன்றி:தலம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum