Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மோடிக்கு கண்டனம்
+2
jafuras
gud boy
6 posters
Page 1 of 1
Re: மோடிக்கு கண்டனம்
குஜராத் மாநிலம் மின்சக்தியில் தன்னிறைவு பெற்று
அடுத்த மாநிலங்களுக்கும் வழங்குகிறதே...
-
மது விலக்கை வெற்றிகரமாக அமுல் படுத்தி
உள்ளதே...அது எப்படி?
-
தமிழ் நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு, இலவசங்கள்
வழங்கப்படுகின்றன...அவை இல்லாமலே
அந்த மாநில மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே
...அது எப்படி?
-
பல காரணங்களுக்காக அவரை வெறுத்தாலும்
அவரது நிர்வாக திறமையையாவது காப்பி அடித்து
தமிழ் நாடு முன்னேறுமா..?!

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மோடிக்கு கண்டனம்
!_ !_rammalar wrote:குஜராத் மாநிலம் மின்சக்தியில் தன்னிறைவு பெற்று
அடுத்த மாநிலங்களுக்கும் வழங்குகிறதே...
-
மது விலக்கை வெற்றிகரமாக அமுல் படுத்தி
உள்ளதே...அது எப்படி?
-
தமிழ் நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு, இலவசங்கள்
வழங்கப்படுகின்றன...அவை இல்லாமலே
அந்த மாநில மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே
...அது எப்படி?
-பல காரணங்களுக்காக அவரை வெறுத்தாலும்
அவரது நிர்வாக திறமையையாவது காப்பி அடித்து
தமிழ் நாடு முன்னேறுமா..?!
!_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மோடிக்கு கண்டனம்
அண்ணா உங்களின் கருத்தை நானும் ^)பானுஷபானா wrote:!_ !_ !_rammalar wrote:குஜராத் மாநிலம் மின்சக்தியில் தன்னிறைவு பெற்று
அடுத்த மாநிலங்களுக்கும் வழங்குகிறதே...
-
மது விலக்கை வெற்றிகரமாக அமுல் படுத்தி
உள்ளதே...அது எப்படி?
-
தமிழ் நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு, இலவசங்கள்
வழங்கப்படுகின்றன...அவை இல்லாமலே
அந்த மாநில மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே
...அது எப்படி?
-பல காரணங்களுக்காக அவரை வெறுத்தாலும்
அவரது நிர்வாக திறமையையாவது காப்பி அடித்து
தமிழ் நாடு முன்னேறுமா..?!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மோடிக்கு கண்டனம்
ரிப்பீட்டு*சம்ஸ் wrote:அண்ணா உங்களின் கருத்தை நானும் ^)பானுஷபானா wrote:!_ !_ !_rammalar wrote:குஜராத் மாநிலம் மின்சக்தியில் தன்னிறைவு பெற்று
அடுத்த மாநிலங்களுக்கும் வழங்குகிறதே...
-
மது விலக்கை வெற்றிகரமாக அமுல் படுத்தி
உள்ளதே...அது எப்படி?
-
தமிழ் நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு, இலவசங்கள்
வழங்கப்படுகின்றன...அவை இல்லாமலே
அந்த மாநில மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே
...அது எப்படி?
-பல காரணங்களுக்காக அவரை வெறுத்தாலும்
அவரது நிர்வாக திறமையையாவது காப்பி அடித்து
தமிழ் நாடு முன்னேறுமா..?!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மோடிக்கு கண்டனம்
மோடி யால் இவை அனைத்தும் நடக்கவில்லை...அவருக்கு முன்னே இதெல்லாம் உள்ளது தான்...குஜராத் எத்தனை விசயத்தில் பின் தங்கி உள்ளது என்று தெரியுமா??rammalar wrote:குஜராத் மாநிலம் மின்சக்தியில் தன்னிறைவு பெற்று
அடுத்த மாநிலங்களுக்கும் வழங்குகிறதே...
-
மது விலக்கை வெற்றிகரமாக அமுல் படுத்தி
உள்ளதே...அது எப்படி?
-
தமிழ் நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு, இலவசங்கள்
வழங்கப்படுகின்றன...அவை இல்லாமலே
அந்த மாநில மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே
...அது எப்படி?
-
பல காரணங்களுக்காக அவரை வெறுத்தாலும்
அவரது நிர்வாக திறமையையாவது காப்பி அடித்து
தமிழ் நாடு முன்னேறுமா..?!
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மோடிக்கு கண்டனம்
இந்த புள்ளிவிபரங்களின் படி மோடியை விட சிறந்த நிர்வாகத்தை தமிழகத்தில் கலைஞரும், பீகாரில் நிதீஷ்குமாரும் கொடுத்திருக்கிறார்கள்.
மிகச்சிறந்த நிர்வாகத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் தான் மோடியை ஆதரிக்கிறோம் என்பவர்கள் தங்களுடைய மதவெறியை முகமூடி போட்டு மறைத்திருக்கிறார்கள் என்பதே அப்பட்டமான உண்மை!
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மோடிக்கு கண்டனம்
இந்தியாவின் சப்பான் குஜராத் என்று குட்டிகரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்காணும் பட்டியலை படித்து விட்டு இனி குஜராத் சப்பான் சிங்கபூரு என்று அளந்துவிடுவது நல்லது....!!!
*தனி நபர் வருமாணம் - இந்தியாவில் குஜராத்திற்கு 10 ம் இடம்.
*ஹூமன் டெவலப்மெண்ட் 527புள்ளிகள் இந்தியாவில் 14 இடம்.
*ஜிடிபி(Gross domestic product (GDP) - இந்தியாவில் 5ம் இடம்.
வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்திரபிரேதசம் கூட 3 ம் இடத்தில் உள்ளது.
*எழுத்தறிவில் 18 ம் இடம்
*ஏழைகள் குறைந்த மாநிலத்தில் 10 ம் இடம்.
*சாலைகள் பராமரிப்பு 11 ம் இடம்.
* தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தில் முதல் 4 நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.
*பிரவச கால குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன.பிற மாநிலங்களில் 12முதல் 14 வரை.
*மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்
ஆண்கள் 63.12
பெண்கள் 64.10
பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67,பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.
References:
1. http://www.rediff.com/business/slide-show/slide-show-1-indian-states-with-highest-per-capita-income/20120912.htm#10
2. http://en.wikipedia.org/wiki/Human_Development_Index
http://indiatext.net/hdi-india/
3. http://indiatext.net/gdp-indian-states/
http://www.census2011.co.in/literacy.php
4. http://business.rediff.com/slide-show/2010/jul/15/slide-show-1-indias-top-10-states-with-lowest-povtery.htm#9
5. http://www.infrawindow.com/reports-statistics/road-denstiy-in-india-dispartiy-persist_15/
6. http://www.jagranjosh.com/general-knowledge/indian-states-that-have-the-maximum-number-of-industries-1303192911-1
7. http://infochangeindia.org/women/statistics/life-expectancy-and-infant-mortaltiy-rates-for-selected-indian-states.html
8. http://infochangeindia.org/women/statistics/life-expectancy-and-infant-mortaltiy-rates-for-selected-indian-states.html
டேய் அப்பாடக்கருகளா போதும்டா.... நீங்க ஓட்டுனது... ரீல் அறுந்து போச்சு.....
இத்தோட நிறுத்திக்குவோம்.... !!!

இருள் கவ்விக் கிடக்கும் குஜராத்
எங்கள் மாநிலத்தில் விவசாயிகள் காரில் செல்லும் அளவிற்கு வசதியாக வாழ்கிறார்கள் என்று மிகப்பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார் மோடி. ஆனால், 2003 முதல் 2012 முடிய 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையை பதிவு செய்ய வேண்டாம் என மோடி அரசு உத்தரவிட்டிருப்பதாக போலீசு அதிகாரியே அம்பலப்படுத்துகிறார். சுமார் 85 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி நாசமான போது சல்லிக்காசு கூட நிவாரணம் வழங்காமல் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்தவர் தான் மோடி. மின் உற்பத்தியில் உபரி எனப் பீற்றிக் கொள்ளும் மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு 10 மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை.
• மாநில மொத்த உற்பத்தி (SGDP) அளவில் குஜராத் 8-வது இடத்தில் இருக்கிறது.
• வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கையில் 18-வது இடத்தில் (அதாவது வறுமை ஒழிப்பில்) உள்ளது குஜராத். பின்தங்கிய ஒடிசா, குஜராத்தை விட பல படி மேலே உள்ளது.
• பெண் சிசுக்கொலை இன்னும் தொடர்கிறது. ஆண்-பெண் விகிதம் 1000-க்கு 918 என்ற அளவில் 18-வது இடத்தில் உள்ளது.
• 44% பேர் மட்டுமே காங்கிரீட் கூரையில் வாழ்கின்றனர். பிறர் மோசமான நிலையில் வாழ்கின்றனர்.
• கல்வியில் மிகப் பின்தங்கிய நிலையில் 15-வது இடத்தில் உள்ளது குஜராத்.
• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்குவதில் 7-வது இடத்தில் உள்ளது. அதாவது 100 நாட்களுக்கு பதில் 34 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
• குழந்தை மரணத்தைத் தடுப்பதில் 18-வது இடத்திலும், மகப்பேறு கால மரணத்தைத் தடுப்பதில் 5-வது இடத்திலும் இருக்கிறது குஜராத்.
• 50% குழந்தைகள் சத்தான உணவு இன்றியும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 65% பேர் சத்துணவு இன்றியும் வாழ்கின்றனர்.
• பெண்களில் பாதி பேர் ரத்த சோகை கொண்டவர்கள். இது பற்றி கேட்டபோது, குஜராத் பெண்கள் அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டி உணவைக் குறைத்து சாப்பிடுவதால் தான் பிரச்சினை என்று மோசடி வாதத்தை முன்வைத்தார் மோடி.
• மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பு உருவாக்குவது முற்றிலும் நின்று போய் விட்டது.
• தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 4-ல் 3 பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்கு சான்று.
• சிறுபான்மையினர் குறிப்பாக இசுலாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர். வாழ்க்கை நிலையில் பீகார் முசுலீமை விட கீழ் நிலையிலேயே உள்ளனர்.
• கிராமங்களில் 16% பேருக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தியாவின் 3-வது மிகப்பெரிய கடனாளி மாநிலமும் குஜராத்-தான்.
• சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ள 88 இந்திய நகரங்களில் 8 குஜராத்தில் உள்ளன.
இதுதான் மோடி நிர்வாகத்தின் யோக்யதை. ‘மோடி நடத்துவது ஆட்சி அல்ல, மளிகைக் கடை; இங்கு லாபம் மட்டுமே வளர்ச்சியின் அளவுகோல்’ என்றார் ஒருவர். இது தான் உண்மை நிலை. ஆர்.எஸ்.எஸ் கும்பல் 2002-ல் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு மூலகர்த்தா மோடி தான் என சஞ்சீவ் பட் போன்ற போலீசு அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். படுகொலை உத்திரவுகளை நிறைவேற்றிய போலீசு அதிகாரி வன்சாரா நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருக்க வேண்டியவர் அல்ல, சபர்மதி சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரும் மோடியை உத்தமர் என்றும், அவர் தான் நாட்டை காக்கக் கூடிய வல்லமை பெற்றவர் என்றும் ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் ஒரே குரலில் பேசக் காரணம் குஜராத் மக்களை ஒடுக்கியது போல, இந்திய மக்களை அனைவரையும் ஒடுக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான தடைகளை நீக்குவார் என்பதே. மோடியும், ஆர்.எஸ்.எஸ்-ம் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், தொழிலாளிகள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரானவர்கள் தான். குஜராத்தில் முதலாளிகளின் லாபம் உயரும் அதே வேகத்தில் தொழிலாளிகளின் ஊதியம் வீழ்ச்சி அடைகிறது என்பதே உண்மையான நிலவரம்.
தமிழகத்தில் மோடியின் முகமூடியை அணிந்து வளர்ச்சி, வல்லரசு வாய்ச் சவடாலுடன் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலை வீழ்த்த வேண்டியது இன்றை அவசர கடமையாகும். திராவிட இயக்கத்தை விமர்சிப்பது என்னும் பெயரில் தந்தை பெரியார் உருவாக்கிய மதச்சார்பற்ற பண்பாட்டை சீர்குலைக்கவும், கம்யூனிச எதிர்ப்பை நயவஞ்சகமாய் முன்னெடுக்க இனவாதிகளும், முதலாளிகளும் பாஜக பின்னால் அணிவகுக்கும் அபாயகரமான சூழலில் உழைக்கும் மக்களாகிய நாம் ஓரணியில் திரள்வோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கும்பலை வீழ்த்துவதன் மூலம் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க அணி திரள்வோம். வாரீர்.
_________________________________________________________________________

நல்ல விடயங்களை நான் வரவேற்கிறேன் ஆனால் மோடியை எனக்கு சுத்தமாக பிடிக்காது.
இதுதான் உண்மை!*
இதுதான் உண்மை!*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மோடிக்கு கண்டனம்
தமிழ் நாட்டில் எத்தனை வீடுகளுக்கு
இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்?
-
இந்தியாவில் தமிழ்நாடு இதில் எத்தனையாவது
இடத்தில் உள்ளது...!
-
முதலில் நம் மாநிலத்தைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்...
-
விபரம் தெரிந்தவர்கள் பகிருங்கள்...
-
இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்?
-
இந்தியாவில் தமிழ்நாடு இதில் எத்தனையாவது
இடத்தில் உள்ளது...!
-
முதலில் நம் மாநிலத்தைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்...
-
விபரம் தெரிந்தவர்கள் பகிருங்கள்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மோடிக்கு கண்டனம்
இனப் படுகொலையை முன்னின்று நடத்தியவன்...இந்திய நாட்டை ஆளத் தகுதி இல்லாதவன்..
இதனால் உலகப் ப்யங்கரவாதி அமெரிக்கா கூட இந்த பயங்கரவாதிக்கு விசா மறுக்கிறது...இது ஒன்றே போதுமானது மோடியின் தகுதியை கூற..
இனவெறி அதிகமாக உள்ள அத்வானிக்கு வயதாகிவிட்டதால்,அதற்கு அடுத்த நிலையில் உள்ள மோடியை பிஜேபி முன் மொழிந்தது..அதுவும் RSS ன் முழு நேர ஊழியர் என்பதால்...
கண்டிப்பாக மோடி ஆட்சியில் அமர்ந்தால் இந்தியா நாறி விடும்...
இதனால் உலகப் ப்யங்கரவாதி அமெரிக்கா கூட இந்த பயங்கரவாதிக்கு விசா மறுக்கிறது...இது ஒன்றே போதுமானது மோடியின் தகுதியை கூற..
இனவெறி அதிகமாக உள்ள அத்வானிக்கு வயதாகிவிட்டதால்,அதற்கு அடுத்த நிலையில் உள்ள மோடியை பிஜேபி முன் மொழிந்தது..அதுவும் RSS ன் முழு நேர ஊழியர் என்பதால்...
கண்டிப்பாக மோடி ஆட்சியில் அமர்ந்தால் இந்தியா நாறி விடும்...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மோடிக்கு கண்டனம்
பாஜக என்று ஒரு கட்சி, இதுவரை ஒருமுறை கூட தேர்தல்களில் அருதிப் பெரும்பான்மை பெற்றதில்லை, மற்ற கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்கக்கூடிய அவலம், இது காங்கிரஸுக்கும் பொருந்தும் என்றாலும் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடன் ஏதோ அவர் இப்போதே பிரதமர் ஆகிவிட்டது போன்ற ஒரு கருத்துருவாக்கத்தை ஊடகங்கள் கட்டமைக்கின்றன.
கருத்துருவாக்க அரசியல் பற்றி அமெரிக்க மொழியியலாளரும் தீவிர சிந்தனையுடையவருமான நோம் சாம்ஸ்கி 'மேனுபேக்சரிங் கன்சென்ட்' என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அதாவது பரப்புரை அல்லது பிரச்சாரம் என்பது வெறும் ஒரு விஷயத்தை பற்றிய செய்தி மட்டுமல்ல. அது ஒரு கருத்தை தயாரித்து வினியோகித்து எதிர்காலத்தில் இதுவே நடைபெறவேன்டும் என்று மக்களின் கருத்தோட்டத்தையே முன் கூட்டியே கட்டமைக்கும் அரசியல் செயல்பாடாகும்.
இந்தியா ஒரு (போலி) ஜனநாயக நாடு. குறைந்தது தேர்தல்கள் நடைபெற்று வருகிறதுஅவ்வளவே!! முறையாக என்று கூற முடியாது. மோடி முதலில் தேர்தலில் நின்று மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அதன் பிறகே அவர் பிரதமராக முடியும். இதுதான் மக்களாட்சியின் புரோசஸ். ஆனால் பிரதமர் வேட்பாளராக, அதுவும் ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டவுடன் அவர் பிரதமர் ஆனது போல் ஊடகங்கள் சித்தரிப்பதும் அவரது முன்னேற்றம், வாழ்க்கையில் அவர் கடந்து வந்த பாதை என்றெல்லாம் பிம்பக் கட்டுமானம் (இமேஜ் ஸ்பின்னிங்) செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானதே.
பாஜக-வின் மூத்த தலைவர் அத்வானியின் அதிருப்தியையும் மீறி இந்துத்த்வா ஆர்.எஸ்.எஸ்.-இன் வெளிப்படையான நெருக்கடி காரணமாக மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காரணம் மோடியின் சிறுவயது முதலான ஆர்.எஸ்.எஸ். சேவை!!
17, செப்டெம்பர் 1950ஆம் ஆண்டு பிறந்த நரேந்திர மோடி, ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். தனது சகோதரனுடன் தேநீர் ஸ்டால் வைத்திருந்தவர் மோடி. அப்போது முதலே இந்துத்துவாவிற்காக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்.
அதன் பிறகு 2001ஆம் ஆண்டு குஜராத் முதல்வராகும் வரை வளர்ந்து தொடர்ந்து முதல்வாராகவே நீடித்து தற்போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவையெல்லாம் ஒரு கட்சியில் ஒரு தனி நபர் வளர்ச்சியடைந்த விதம். இதனாலெல்லாம் அவர் வந்தால் நாடு சுபிட்சமாகிவிடும், ஊழல் ஒழிந்து விடும் என்று நடுத்தர வர்க்க மனசுகள் கனவு காண்கிறதே எப்படி? காரணம் ஊடகங்கள், குஜராத்தில் அதைச் செய்தார், இதைச் செய்தார் என்றெல்லாம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இந்தியா முழுதும் பிம்பக் கட்டுமான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முழுப் பெரும்பான்மையுடன் ஒரு மாநிலத்தில் சில விஷயங்களை மேற்கொள்வதற்கும் இந்திய அளவில் அதுவும் அருதிப்பெரும்பான்மை பெற முடியாது மற்ற கட்சிகளின் தயவை நாடியிருக்கும் நிலையில் பிரதமராக திறமையாக செயல்படுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.
மோடி குறித்த இதுபோன்ற மாயைக் கட்டமைப்பிற்கு காங்கிரஸும் தன் பங்கிற்கு பங்களிப்பு செய்துள்ளது. அவர் எது கூறினாலும் கடுமையாக அவர் மீது தாக்குதல் தொடுத்து அவர் எப்பவும் செய்திகளில் இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டது காங்கிரஸ்.
மேலும் மன்மோகன் சிங்கே பிரதமராக இருக்கும்போது நாம் ஏன் இருக்கக்கூடாது என்று அனைவருக்குமே ஆசை ஏற்படுகிறது. நிச்சயம் அதுபோன்று போஸ்டர் அடித்துக் கொள்ளும் பிற பிராந்திய தலைவர்களைக் காட்டிலும் மோடி தகுதியானவர்தான் என்பதில் ஐயமில்லை.
ஆனாலும் மோடி வந்தால் இது நடந்து விடும் அது நடந்து விடும், ஊழலை ஒழிப்பார் என்பது போன்ற சமூக கற்பனை வெளி அவரது ஆட்சி பற்றிய ஒரு முன் கூட்டிய கற்பனைக்கு மக்களின் மனதை தயார்படுத்தியுள்ளது. இதுதான் அபாயகரமான விஷயமாகும். ஏனெனில் நாளை அவர் பிரதமராகி அவரால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனாலும் அவர் ஏதோ பெரிதாக சாதித்து விட்டது போல் நாமே பேசத் தொடங்கிவிடுவோம். அல்லது மோடி பிரதமராகிவிட்டால் ஊடகங்கள் அதனை தங்களது வெற்றியாக கொண்டாடும் சூழலில் அவர் எது செய்தாலும் ஏதோ சாதனையே என்று மேலும் ஊதிப்பெருக்கம் செய்யும் அபாயமும் உள்ளது.
மோடி பற்றி குஜராத் முஸ்லிம்களுக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை. அவர் முஸ்லிம்களின் நண்பர் என்று கூறப்பட்டு வருகிறது. அப்படிக் கூறுபவர்கள் யார் என்றால் ஜில்லா பரிஷத், முனிசிபல் கார்ப்பரேஷன், கிராமப் பஞ்சாயத்து ஆகிய உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவிடம் டிக்கெட் பெற்ற முஸ்லிம்களே.
முஸ்லிம்களில் சிலர், தாழ்த்தப்பட்ட முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் உட்பட பாஜகவில் சில பல சீப் பதவிகளை பெற்றுவிட்டதால் முஸ்லிம் பெருமக்களுக்கு அவர் நல்லது செய்துவிட்டாதாகாது.
நம் நாட்டில் எந்த சாதியை சேர்ந்தவர் அரசியல் பதவி பெற்றாலும் பதவி கிடைத்தவுடன் சமூகப் பொறுப்பின்றி மகாராஜாக்கள் போல் வாழ்பவர்கள்தான்! அந்த வகையில் குஜராத் பாஜகவில் வெற்றி பெற்ற முஸ்லிம்களால் முஸ்லிம்களுக்கே ஏதாவது நன்மை ஏற்பட்டிருக்கிறதா என்பது ஆய்வுக்குறிய விஷயம்.
பொருளாதார விஷயங்களில் தன்னை அவரே அல்லது பிறரோ 'வளர்ச்சிக் கொள்கையுடையவர் மோடி' என்று கூறி வருகின்றனர்.
தனிநபர் வருமானத்தில் குஜராத் மாநிலம் 11-வது இடத்திலேயே உள்ளது. ஹரியானா, மகாராஷ்ட்ரா மாநிலங்களே இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
GDSP வளர்ச்சியில் தமிழகத்துடன் குஜராட் 9வது இடத்தில் உள்ளது. மாநிலங்கள் அளவில் வளர்ச்சி என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சி ஆளும் ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பின்னால்தான் உள்ளது மோடியின் குஜராத்.
சரி மற்ற மாநிலங்களை விடுவோம், குஜராத் முதல்வர்களில் மோடிக்கு முந்தைய காங்கிரஸ் முதல்வர் காலக்கட்டங்களை ஒப்பிட்டுப்பார்ப்போம்:
1990- 94 ஆம் ஆண்டு வரை ஆண்ட காங்கிரஸ் முதல்வர் சிமன் பாய் படேல் காலக்கட்டத்தில் குஜராஜ் 16.75% வளர்ச்சியடைந்துள்ளது. மாறாக மோடியின் குஜராத் வளர்ச்சி 6.1 % என்பது குறிப்பிடத்தக்கது. (கடந்த 9 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி இது). அதுவும் மத்தியில் புதிய பொருளாதார கொள்கையினால் ஏற்பட்ட வளர்ச்சி! (இங்கு நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும், மத்தியில் கொண்டு வந்த பொருளாதாரக் கொள்கை உண்மையில் முன்னேற்றத்தை சாதித்துள்ளதா என்பதே அந்த எச்சரிக்கை).
சிமன் பாய் படேல் முதல்வராக ஆவதற்கு முன்பாக 1980- 81 - 90 வரை ஆண்ட காங்கிரஸ் முதல்வர்கள் காலக்கட்டத்தில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 14.8%.! இந்த வளர்ச்சி புதிய பொருளாதார தராளமய கொள்கைகள் வருவதற்கு முன்பு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மோடியின் ஆட்சிக் காலத்தில் கடன் அதிகரித்துள்ளது. 2001ஆம் ஆண்டு 42,780 கோடியாக இருந்த கடன் 2013ஆம் ஆண்டு 1,76,490 கோடியாக அதிகரித்துள்ளது.
தனி நபர் கடன் சுமை குஜராத்தில் மற்ற மாநிலங்களை விட அதிகம். இது மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் 46% அதிகரிக்கும் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
என்ன வளர்ச்சி கண்டுள்ளது குஜராஜ்? துக்ளக் சோ போன்றவர்கள் இன்னும் விரிவாக ஆழமாக சிந்திக்கவேண்டும்.
மேலும் அவரது ஆட்சியில் நீதி தேவதை நடனமாடுகிறாள் என்று அவரது ஆட்சிக்கு ஒரு அறவியல் அந்தஸ்து கொடுக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. 2002 குஜராத் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சமீப நேர்காணலில் கூட 'குத்தே கா பச்சா' (நாய்களுக்கு பிறந்தவர்கள்) என்று வர்ணித்துள்ளார்.
அனைவருக்கும் நீதி - அவரது ஆட்சியின் ஸ்லோகனாம்! குஜராத் கலவர வழக்குகள் அந்த மாநிலத்த்லிருந்து மாற்றப்பட்டது ஏன்? நீதி தேவதையை தடுத்ததினால்தானே? 10 ஆண்டுகள் ஆகியும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் அகதி முகாம்களில் வசித்து வரும் மர்மம் என்ன?
மேலும் அந்த வழக்கில் மோடிக்கு கிளீன் சிட் கிடைத்து விட்டது என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆனால் அதுபோன்ற கிளீன் சிட்கள் வழங்கப்படவில்லை. நவீன நீரோ என்றே மோடி வர்ணைக்கப்பட்டார்.
போலி என்கவுண்டர்களுக்கு பேர் போன் மாநிலமாக ஆகியுள்ளது குஜராத். இந்தியாவிலேயே அதிக அளவில் ஐபிஎஸ். ஆபீசர்கள் ஜெயிலில் இருப்பது அந்த மானிலத்தில்தான்!
சும்மா இன்டெர்னெட்டிலும், சமூக வலைத்தளங்களிலும் மோடி பிரபலமானவராக இருக்கிறார். இது வாக்குகளாக மாறும் அவ்வளவே. இதற்கும் வாக்களிக்கும் மக்களுக்கான மனோ நிலைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.
இன்னும் கொஞ்ச நாளில் குஜராத்தில் பிறந்த, வன்முறைக்கு குழி தோண்டிய மகா மனிதர், மகாத்மா காந்தியை நாம் மறந்தே போய்விடுவோம் என்றே தோன்றுகிறது.
குஜராத் கவிஞர் ஒருவர் சமீபத்தில் எழுதிய கவிதையில், "வீடுகளின் கூரைகளும் இந்து முஸ்லிம்களாக பிளவுண்டு கிடப்பது கண்டு மேலே பறக்கும் காற்றாடிகளும் அதிர்ச்சியடைந்தன" என்றார்.
இதுதான் உண்மை நிலவரம், இதுதான் மோடியின் குஜராத்! எனவே மத்தியதர வர்க்க, மேட்டுக்குடி பார்ப்பணர்களும், அவாள் வாசிக்கும் ஊடகங்களும் மோடியை ஒரு மிகப்பெரும் பிம்பமாகக் கட்டமைப்பது கண்டு மக்கள் ஏமாறக்கூடாது.
நடப்பு ஆட்சியின் கொடூரங்கள் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான் அதனை பயன்படுத்திக்கொண்டு வாக்குகளாக மாற்றும் முயற்சியில் பாஜக் இறங்கியுள்ளது. அதில் ஒரு உத்திதான் நரேந்திர மோடி என்ற பெயரே தவிர இதனானெல்லாம் ஏதோ நாடு சுபிட்சமாகிவிடும் என்று நம்புவதைப் போன்ற அசட்டுத் தனம் வேறு எதுவும் இல்லை.
சில பொருளாதார நிலைமகளை மாற்ற எந்த மோடி வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்பதே இன்றைய நிலவரம்!

Similar topics
» ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்
» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
» மோடிக்கு விருந்து ஒரு கவிதையாய் பதில் கொடுங்கள்
» பிரதமர் மோடிக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி
» சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum