சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்து சமயம்-வரலாறு.. Khan11

இந்து சமயம்-வரலாறு..

Go down

இந்து சமயம்-வரலாறு.. Empty இந்து சமயம்-வரலாறு..

Post by ராகவா Mon 23 Sep 2013 - 23:23

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது . பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.
இந்து சமயம்-வரலாறு.. 128px-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF
இந்து சமய கொடி..
இந்து சமயம்-வரலாறு.. 376px-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்து சமய குறியீடுகள் (தாமரை, சுவஸ்திகா, ஓம், தீபம், திரிசூலம்)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்து சமயம்-வரலாறு.. Empty Re: இந்து சமயம்-வரலாறு..

Post by ராகவா Mon 23 Sep 2013 - 23:26

சொல்லிலக்கணம்


இந்து என்பது சமஸ்கிருத சொல்லாகும். பாரசீகத்தினர் சிந்து நதியின் கிழக்குப் பக்கம் வசிப்பவர்களை சிந்துக்கள் என்றும் அவர்களது இறையுணர்வு முறையை (மதத்தை) சிந்து மதம் என்றும் அழைக்கலாயினர். பிற்காலத்தில் சிந்து என்ற சொல்லானது திரிந்து இந்துவாக மாறியது. இந்த வார்த்தையானது முதன்முதலில் ரிக்வேதத்த்ல் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூதர்களின் எஸ்த்தர் என்ற வரலாற்று நூலில் இந்து தேசம் என்று குறிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு கடவுளுக்கு பயந்த சுபாவம் என்ற அர்த்தமுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிந்து நதியில்லை என்றால் இந்துமதம் இல்லை என பாரத பிரதமர் நேரு அவர்கள் தெரிவித்துள்ளார்.
வரலாறு

இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காட்டுநெருப்பு போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதன், அவற்றை கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள். சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இவை சிந்து நதிக்கரையில் நிகழ்ந்ததாகவும், இவர்களில் ஒரு பிரிவினரே தற்போதைய ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்களை வரலாற்று ஆசிரியர்கள் ஆரிய இனத்தவர் என்று அழைக்கின்றனர்.
பல்வேறு முனிவர்களாலும், முன்னோர்களாலும் செவிவழியாக கடத்தப்பட்ட வேதம் எனும் வாழ்வியல் முறையை விளக்கமானது, நாகரீகம் வளர்ந்த பின் ஓலைச்சுவடியில் பதியப்பட்டது. இந்த வேதங்களில் உள்ள ரிசா, குபா, கரமு போன்ற நதிகள் ஆப்கான் தேசத்தினை சேர்ந்தவை என்பதால், சிந்து நதி நாகரீகம் அதுவரை பரவியிருந்ததாக கூறப்பெறுகிறது. இவ்வாறான வேதத்தினை முன்நிறுத்துகின்ற மதம் வேதமதமெனவும் அழைக்கப்பெறுகிறது.
வேதத்தின் உட்பொருளை கொண்டு எளிமையாக மக்களுக்கு கூறுவதற்காக உபநிடதங்கள் உருவாயின. அதனினும் எளிமையாக கதைவடிவில் வேதம் மற்றும் உபநிடதங்களை விளக்குவதற்காக புராணங்கள் தோற்றுவிக்கப்பெற்றன. இவற்றில் பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், சில உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
ஆரியர்களின் வருகைக்கு முன்பு, ஏறத்தாள 450 மதங்கள் இந்தியப்பகுதியில் இருந்துள்ளன. அவற்றோடு வேதமதம் இரண்டறக் கலந்து தற்போதுள்ள இந்து மதமாக அறியப்பெறுகிறது.
ஒரு சுருக்கமான மேலோட்டம்


இந்து சமய கருத்துருக்கள்
லீலை
மாயை
கர்மா
ஆத்மா
பிரம்மம்
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
நிர்வாணம்
மோட்சம், வீடு
அவதாரக் கோட்பாடு
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தந்திரம்
தவம்

இந்து சமய சடங்குகள்

பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்

இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி இயக்கப் பிரிவுகள், மற்றும் தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.
சனாதன தர்மம்

"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.
யோக தர்மம்
இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், மற்றும் ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான புத்தகங்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தத்துவங்கள்

வேதாந்தம்
சித்தாந்தம்
அத்வைதம்
துவைத்தம்
விசிச்தஅத்வைதம்
கர்மமிமாம்சம்
வைதிகம்
சைவ சித்தாந்தம்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்து சமயம்-வரலாறு.. Empty Re: இந்து சமயம்-வரலாறு..

Post by ராகவா Mon 23 Sep 2013 - 23:47

வாழ்வின் நான்கு இலக்குகள்
தொடர்பான கட்டுரை
இந்து சமயம்
இந்து சமயம்-வரலாறு.. 586px-Om_white
தத்துவங்கள்
கடவுள்கள்
மெய்யியல்
நூல்கள்
திருவிழாக்கள்
தத்துவஞானிகள்
வேறு தலைப்புகள்


இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயென கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளில் அறம், வீடு ஆகியனவற்றை கரைகளாகவும், இன்பம், பொருள் ஆகியவற்றை அவற்றிடையே ஓடும் ஆறு எனவும் சிலர் நோக்குவர்.
இறைத்தொண்டு / சமூக சேவை

இறைத்தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களை புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.

இந்து சமயம்-வரலாறு.. 619px-Rigveda_MS2097
பழமையான ரிக் வேதத்தின் ஒரு பகுதி
நூல்கள்


வேதங்கள்
உபநிடதங்கள்
புராணங்கள்
ஸ்மிதி
ஸ்மிருதி
ஆமகங்கள்
இதிகாசங்கள்

புள்ளிவிவரங்கள்

இந்து சமயம்-வரலாறு.. 800px-Hindu_distribution 

இந்து மதம் - நாட்டின் சதவீதம்
ஒவ்வொரு நாட்டின் இந்து மத மக்களின் சதவீதம் 2006 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசுத்துறை சர்வதேச மத சுதந்திர அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பில் (2007 மதிப்பீடுகள்) இருந்து எடுக்கப்பட்டது.சதவீத அடிப்படையில், உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன.
இந்து சமய மக்கள் நிறைந்த நாடுகள் ( உலக நாடுகளில் இந்து சமயம் )
மக்கள் தொகையில் இந்து மதம் கிறித்துவம் மற்றும் இஸ்லாமியத்துக்குப் பின்னர், உலகின் மூன்றாவது பெரிய மதம் இருக்கிறது.
திருவிழாக்கள்


மகா சிவராத்திரி
பொங்கல்
ஹோலி
வசந்த பஞ்சமி
தைப்பூசம்
ராம நவமி
கிருஷ்ண ஜெயந்தி
விநாயகர் சதுர்த்தி
சிக்மோ
தசரா
துர்கா பூசை
தீபாவளி
குடீ பாடவா
உகாதி
பிகு
போனலு
ரதை யாத்திரை
குரு பூர்ணிமா
ரக்சா பந்தன்
ஓணம்
கௌரி ஹபா
சத் பூசை
விசு

இந்து சமயம்-வரலாறு.. Rath_Yatra_Puri_07-11027
இந்து சமயம்-வரலாறு.. 408px-Saraswati_f._Strassenpuja
இந்து சமயம்-வரலாறு.. 800px-Kumbh_Mela2001இந்து சமயம்-வரலாறு.. 800px-Anant_Chaturdashiஇந்து சமயம்-வரலாறு.. Deepawali-festival
சமூகம்
இந்து மத பிரிவுகள்
இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.
சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
வைணவம் - திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம்
சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்

வர்ணம்

வேதாந்த காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சாத்வீகம்- அமைதி,இராஜசீகம்- மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமசீகம்-சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.
பிராமணர் - மிகு சாத்வீகம்.
சத்திரியர்-குறை சாத்வீகம்- அதிக ராஜசீகம், குறை தமாசீகம்.
வைசியர்-சாத்வீகமற்றவர், குறை ராஜசீகம், அதிக தாமாசீகம்.
சூத்திரர்-சாத்வீகமற்றவர், ராஜசீகமற்றவர், தாமசீகம் மட்டும்.
Divide and Fool - All Indians are equal

ஆசிரமம் (நான்கு நிலைகள்)
இந்து மதம் வழமையான வாழ்க்கையை நான்காக பிரிக்கின்றது. இவை ஆசிரமம் என்று அழைகப்பெறுகின்றன. அவையாவன,.
பிரம்மச்சாரியம்
கிரிகஸ்தம்
வானபிரஸ்தம்
சன்னியாசம்
அகிம்சை
தாவரங்கள் மற்றும் மனிதர் அல்லாத உயிரினத்திடமும் அன்பு பாராட்டுவதும், உயிர்களுக்கு துன்பம் தராமல் இருப்பதுவும் அகிம்சைக் கொள்கையாகும். இந்து சமய நெறிகளை விளக்கும் உபநிடதங்களிலும், இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த அகிம்சைப் பற்றி குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சைவ உணவு பழக்கம்

அகிம்சைக் கொள்கைப்படி உயிர்களை வதைத்தலை தவிர்க்கும் பொருட்டு சைவ உணவு பழக்கத்தினை பல இந்துகள் கடைபிடிக்கின்றனர்.

மதமாற்றம்

இறை நம்பிக்கையில்லாதவர்களும், மற்ற மத நம்பிக்கை கொண்டவர்களும் இந்து மதத்திற்கு மாறியதன் பட்டியல் கீழே,.
ஜூலியா ராபர்ட்ஸ்
ஜார்ஜ் ஹாரிசன்
நயன்தாரா

நன்றி:விக்கிப்பீடியா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்து சமயம்-வரலாறு.. Empty Re: இந்து சமயம்-வரலாறு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum