சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ் மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்..? Khan11

தமிழ் மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்..?

Go down

தமிழ் மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்..? Empty தமிழ் மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்..?

Post by rammalar Fri 27 Sep 2013 - 9:30

தமிழ் மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்..? Tarun-vijay

”உலகின் மிக மூத்த மொழியான தமிழ் நம்முடைய மொழி. அதைப் பேசுபவர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். அத்தகைய மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்? இலக்கிய வளம் நிறைந்த தமிழ் எல்லா இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் இருக்க வேண்டும். அதற்கு அது இரண்டாவது தேசிய மெழியாக அறிவிக்கப்பட வேண்டும்’’.
-
“”ராஜ்ய சபாவில் கேட்ட இந்தக் குரல் எந்தவொரு தமிழக அரசியல் கட்சி உறுப்பினர்களுடையதும் அல்ல. பேசியது, உத்தரகாண்ட் பிஜேபி எம்.பி., தருண்விஜய். தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கிற கட்சிகளே, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்த அத்தனை மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினால் போதும்’ என்று சொல்லி வருகிற நிலையில், ஒரு வட இந்திய எம்.பி., தமிழுக்கு இரண்டாமிடம் கேட்டிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
-
பி.ஜே.பி.யின் திடீர் தமிழ்ப்பாசம் குறித்து தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
-
“”தமிழகம் மட்டுமல்ல. எந்த மாநிலமானாலும் அதோட நலனுக்காக ஒரு நடவடிக்கை எடுக்கணும்னா, அக்கம்பக்கத்து சச்சரவுகளையெல்லாம் கண்டுக்காம, சுயநலமில்லாத ஒரு முடிவை எடுக்க பி.ஜே.பி.யால மட்டும்தான் முடியும். தருண்விஜய் கருத்தை தேர்தல் ஆதாயமா கருதக்கூடாது. அவர் தமிழ் பேச, எழுத கத்துக்கிட்டு, நம்ம கலாச்சாரம், பாரம்பரியத்தை தெரிஞ்ச பிறகே பேசியிருக்கார். அன்னிக்கு சபையில இருந்த நம்ம உறுப்பினர்கள் நல்லா கைதட்டி அவருக்கு வாழ்த்துச் சொன்னார்களாம்.
-
தமிழன் பெருமையெல்லாம் தெரிஞ்ச இவங்களுக்கு எப்போதாவது இதைக் கேட்கத் தோணியிருக்கிறதா? சென்னையைத் தாண்டுகிற வரை தான் இவங்களுக்குத் தமிழ் வேண்டும். கூட்டணி, பதவின்னு வந்துட்டா, அதைத் தூக்கி ஓரமா வச்சுட்டு உட்கார்ந்துகிடுவாங்க. மத்தியிலே பி.ஜே.பி. ஆட்சி வரட்டும். இது மட்டுமல்ல. தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு இன்னும் எவ்வளவோ செய்வோம்’ என்கிற பொன்.ராதாகிருஷ்ணன் தருணுக்கு திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறாராம்.
-
ஓரளவு தமிழ் பேச ஆரம்பித்திருக்கும் தருண்விஜய், “”எம்பியா ஃபாரின் டூர் போனப்ப, தொடர்ந்து சில இடங்களில் தமிழ் ஆளுங்களைச் சந்திச்சேன். அங்க நல்ல ஸ்டேட்டஸ்ல இருக்காங்க. அப்பதான் தமிழ்நாடு பத்தி தெரியணும்னு ஆர்வம் வந்தது. அதுக்கு ட்ரை பண்ணி இப்ப தமிழ்மேல லவ்வே வந்திடுச்சு. பாரதி மாதிரி தேச ஒற்றுமைக்கு ஆசைப்பட்டவங்க இந்தப்பக்கம் கூட யாரும் இருந்ததா தெரியலை. ஸோ, பாரதி, வள்ளுவர்னு எல்லோரையும் படிக்க ஆரம்பிச்சேன். ரெண்டுவரி குறள்ல எவ்ளோ விஷயம்? வட இந்தியர்கள் இதையெல்லாம் மிஸ் பண்ணணுமான்னுதான் இப்படியொரு கோரிக்கையைப் பதிவு பண்ணுனேன்’’ என்கிறார்.
-
“இந்திக்கு அடுத்து தமிழ் சாத்தியமாகுமா? அல்லது இது வழக்கமான அரசியல் ஸ்டன்டா?’ என தமிழருவி மணியனிடம் கேட்டோம்.
-
“தமிழ் வடக்கே போகணுமா இல்லையாங்கிறது இப்ப முக்கியமான பிரச்னை இல்லை. தமிழுக்கு இங்கு என்ன நிலை? காங்கிரஸ் ஆட்சிக்காலத்துல 11வது வகுப்பு வரை தமிழ் மீடியம் மட்டுமே இருந்தது. திராவிடக் கட்சிகள் வந்து என்ன செய்தார்கள்? அதைக் கல்லூரி அளவில் உயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலவழிக் கல்விக்கு கதவு திறந்துவிட்டிருக்கிறார்கள். தமிழைக் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்றாக்கிவிட்டு பிறகு எதை வேண்டுமானாலும் படிக்கச் சொல்லலாமே? இங்கு நிர்வாக, நீதிமன்ற மொழியாக தமிழ் நூறு சதவிகிதமும் வந்துவிடவில்லை.
-
“தாய்மொழி, ஆங்கிலம் தவிர, ஏதாவதொரு விருப்ப மொழியைக் கற்கலாம்’ எனக் கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையையும் திராவிடக் கட்சிகள்தான் விரட்டின.
இரட்டை நாக்கும், முகமும் கொண்ட இந்தக் கட்சிகள் தமிழை முழுக்க முழுக்க ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டன.
-
முதலில் தமிழ்நாட்டில் தமிழில் படித்தால் வேலை, மரியாதை எல்லாம் கிடைக்கும்படி இவர்கள் செய்தாலே போதும். மற்றபடி, எல்லை தாண்டி கேட்கும் இது மாதிரியான பேச்சுக்களையெல்லாம் என்னால், சீரியசாக எடுத்துக்கொள்ள முடியவில்லை’ என்கிறார் தமிழருவி மணியன்.
-
------------------------------------
-அய்யனார் ராஜன்
நன்றி: குமுதம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum