Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நயினாகுளம் அருள்மிகு அரிகரபுத்திர ஐயனார் ஆலயம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
நயினாகுளம் அருள்மிகு அரிகரபுத்திர ஐயனார் ஆலயம்
வரலாற்று ஒப்பியல் நோக்கு
அனலைதீவின் காவல் தெய்வமான ஐயனாரின் தோற்றமானது, சேது கடலில் அடைந்து வந்த பெட்டகம் ஒன்றின் மூலமே சாத்தியமானது. அனலை மேற்கு கடல் எதிரே இந்திய தொண்டி கடல் காணப்படுகிறது. இது தென் இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் ஆகும். இங்கு தேவகோட்டை மற்றும் காரைக்குடிக்கு இடையான ஆற்றங்கரை கிராமமே கல்லல் என்ற தற்போதைய கிராமம் ஆகும். இது முன்னர் கல்லல் துடல் என அழைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் அதிக ஐயனார் ஆலயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தற்போது சுமார் 12 க்கு மேற்பட்ட பெரிய ஐயனார் ஆலயங்களை கொண்டு விளங்குகின்றது. இவை ஆதி குண்ட வரத ஐயனார், ஆதீனமிளகிய ஐயனார், சேருவிலங்க ஐயனார், அடைக்கலம் காத்த ஐயனார், பொய் சொல்ல மெய் ஐயனார் என நீண்டு செல்கிறது. இதில் கல்லல் எனும் இடத்தில் ஆதீனம் இளகிய ஐயனார் எனும் கோவில் உள்ளது.
இவ்வாலய மூல விக்கிரகமே சுமார் 13 ஆம் நூற்றாண்டில் புதிய விக்ரகம் ஸ்தாபிக்கும் பொருட்டு பழைய விக்கிரகம் ஆற்றில் விடப்பட்டு இருக்கலாம் அல்லது 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசர் ஆக்கிரமிப்பின் போது பாதுகாப்பின் நிமித்தம் பெட்டகத்தில் வைத்து ஆற்றில் விடப்பட்டு, கடல் வழியாக அனலையை அடைந்தார். இவ்விரு சந்தர்பத்தில் ஒன்று தான் ஐயனின் அனலை பிரவேசமும் வழிபட்டு ஆரம்பமும் ஆகும்.
இதன் தொடர்ச்சிகளே ஏனைய தீவுகளில் ஐயனார் வழிபாடு பரவி இன்று உலகளாவிய ரீதியில் ஐயனின் அருள் மேலோங்கி நிற்கிறது. அனலை ஐயனார் தான் விரும்பிய அனலையம் பதியில் நயினாகுளம் கூழாவடியில் கோயில் கொண்டருளினார். மூர்த்தி தீர்த்தம் விருட்சம் ஆகியன முறையே ஶ்ரீ பூரணை புஷ்கலா சமேத ஹரிஹர புத்ர ஐயனார், சேது(இந்து ) சமுத்திரம், கூழா மரம் என்பனவாகும்.
பொதுவில் ஐயனார் வழிபாடு கிராமிய தெய்வ வழிபாட்டில் அடங்கினாலும் இங்கு ஆகம முறையில் ஆலய அமைப்பு, பூஜை நிகழ்வுகள் இடம் பெறுவது சிறப்பாகும். மகா சாஸ்தாவிற்கு உரிய வாகட(வேதாகம) முறையில் தனித்துவமான முறையில் கிரியைகள் மந்திர சுலோகங்கள் இடம் பெறும் இம்முறைமை இவ்வாலய இறைவனனின் பூர்விக இடமாகிய கல்லல் துடல் ஐயனார் ஆலய முறைகளை பின்பற்றி ஊரெழு சிவஶ்ரீ பாலசுந்தரக்குருக்கள் வைத்தியநாத குருக்கள் பரம்பரையினரளும் அவர்களது சிஷ்ய சிவாச்சாரிகளாலும் செய்யப்பட்டு வருகிறது.
இருந்தும் கிராமிய வழிபாட்டின் எச்சமாக பொங்கல் குளிர்த்தி உற்சவம் வருடாவருடம் சித்திரை முதல் திங்களில் இடம்பெறும். வருடாந்த உற்சவம் ஆரம்பத்தில் பத்து தினமாகவும், இடைக்காலத்தில் 15 தினமாகவும் தற்போது மீண்டும் பத்து தினமாக கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசையை நிறைவு செய்து வரும் சுக்ல பட்ச ஐந்தாம் நாள் முதல் பூரணை வரையிலான நாட்களே திருவிழா நாட்களாகும்.
இத்திருவிழா காலத்தில் ஐயனாரின் கிருபை மீது நம்பிக்கை கொண்டோரின் பக்தி பரவசம், காவடிகள் நேத்திகடன்கள் என வெகு விமரிசையாக அனுஸ்டிக்கப்படும்.இவற்றில் உச்சமாக இலங்கையில் மிகப்பெரிய சித்திர தேரில் ஐயனார் வீதி வலம் வரும் தருணங்கள் மெய்சிலிர்க்க செய்யும்.
அனலையில் ஆரம்பத்தில் மூலமூர்த்தியான விளங்கிய(பழையவர்) ஐயனார் இரு மனைவியர் சகிதம் இருந்த நிலையில் யோக நிஷ்டையில் வலக்கால் நிலத்தில் ஊன்றி இடக்கால் சற்றே உயர்த்தியும் கெண்டை ஏந்திய வண்ணம் விளங்குகின்றார்.
பெட்டியில் வந்த முன்னைய சில விக்கிரகம் ஒரே கல்லில் உருவானது. இதனை சுயம்பு லிங்கம் என்றும் கருதுவர். {இது பரசுராமரால் உருவாக்கபட்ட 16 ஐயனின் கோவில்களின் ஒன்றாகவும் இருக்கலாம் ஏன் எனில் இதில் அச்சன் கோவில் ஆரியம் காவு சபரிமலை என இன்னும் சில கோவில்கள் தவிர ஏனையவை இனம் காணப்படவில்லை தவிர காலத்தால் அழிந்து போயிருக்கலாம் எனவே அனலையின் பழைய ஐயனாரையும் பழைய பெட்டகத்தினையும் தொல்லியல் ஆய்விற்கு உட்படுத்தினால்(காபன் 14 பரிசோதனை) அதன் மூலம் அவற்றின் காலத்தினை மதிப்பிடலாம்.}
எது எப்பிடியோ காலத்தால் முந்திய பழமையான ஐயனாருக்கு தேய்மானம் அதிகமாக இருந்தால் புதிய விக்ரகங்கள் தமிழ் நாட்டிலிருந்து செய்து தருவிக்கப்பட்டது. இருந்தும் ஐயனின் அருளிலும் மகிமையிலும் என்றும் குறை இல்லை. இதனாலேயே இங்கு சுமார் 150 வருடங்களுக்கு மேலாக மகோற்சவம் இடம் பெற்று வருகின்றது. இவ்வாலயத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட தேர் ஒன்றும் இன்னும் கம்பீரமாக இயங்கு நிலையில் உள்ளது.
அனலையில் மகோற்சவங்கள் ஆரம்பிக்க முதல் திருவிழாவினை ஊரின் மணியக்காரர்கள் (அப்போதைய ஆளும் குழாத்தினர்/உடையார் வம்சம் ) தொடக்கி வைப்பார் அதனை தொடர்ந்து ஒவ்வொரு சமூக பிரிவினருக்கும் தலா ஒருநாள் திருவிழா உபயம் வழங்கப்படும்………எழுவைதீவு மற்றும் வன்னி மக்களுக்கும் உபயம் இருந்தன.
தேர் திருவிழா பொதுவானதாக இருந்த போதும் அப்போது அங்கே கத்தோலிக்க மதம் மாறுதலுக்கு உள்ளான உயர் பணக்கார குடும்பத்தினரை மீண்டும் சைவசமயத்திற்கு கொண்டு வர அவர்களுக்கான உபயமாக தேர்த்திருவிழா வழங்கப்பட்டது. அவர்களே தமது செலவில் அப்போதைய தேரினை உருவாக்க உதவினர். அதன் பின்னர் 1976 முதல் 1980 வரையிலான காலப்பகுதிகளின் மிகுந்த அரசியல் பொருளாதார இடர்களின் மத்தியில் இந்திய ஸ்தபதிகள் மூலம் உருவாக்கப்பட்ட சித்திர தேர் இலங்கையின் மிகப்பெரிய சித்திரத்தேர் என்ற உயர் நிலையில் மிளிரும் வண்ணம் உருவாக்கி ஐயன் திருவுலா வர ஏற்பாடு செயப்பட்டது. இத்தேர் சுமார் 38 அடிகளையும் தேர் முட்டி 44 அடிகளையும் கொண்டு விளங்குகின்றது. ஐயனுக்கு இவ்வளவு பெரிய தேர் எவ்வாறு சாத்தியமானது.
அனலை ஐயனின் பெரும் புகழ் இன்று உலகெலாம் ஒலிக்க அவரது அருள் மகிமைகளே காரணம் ஆகும். ஐயன் விரும்பி வாசம் செய்யும் இத்தலத்தில் தேவர்கள் முனிவர்கள் அர்த்த யாமத்தில் பூஜை செய்து வழிபடுவதாகவும் கர்ண பரம்பரை கதைகள்(செவி வழி உலாவி), இறை விருப்பின் பிரகாரமே ஐயனார் இங்கு கோயில் கொண்டதாக புராண இதிகாச கதைகள் (பழைய ஏற்பாடுகள் ) கூறுகின்றன. தவிரவும் ஐயனின் அருளால் கடந்த காலங்களில் பல அற்புதங்கள் நடந்தன.
இவற்றுள் 1627 இல் யாழ் தீவகத்தை தாக்கிய (இப்பேரழிவு பற்றி யாழ்ப்பாண வைபவ மாலை எடுத்துரைக்கின்றது.)கடல் கோளினை (சுனாமி) ஐயனார் தடுதாட்கொண்டாமை முதன்மை பெறுகின்றது. நிலநடுக்கத்தால் கடல் பொங்கி பேரலைகள் ஊரில் நுழைய மக்கள் ‘ஐயனே ஓலம்’ என முறையிட அவர் அப்பேரலையை தடுத்து ஊர்மக்களை காத்தருளியமை முதலே ஐயன் அனலையின் காவல் தெய்வமானார். இது குறித்த பாடலை முத்துகுமாரசுவாமி புலவர் பதிவு செய்து வைத்துள்ளார். தவிரவும் ஐயனின் புதிய சித்திர ரதத்தில் இவை அழகிய சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் வரட்சி, பஞ்சம், அரச அடக்குமுறைகள், யுத்தம் என்பவற்றிலிருந்து அன்று தொடக்கம் இன்று வரை மக்களை காத்து வருவது எங்கள் குலதெய்வம் ஐயனாரே!
உதாரணமாக 30 வருட ஆயுத மோதலில் ஒரு குண்டு வெடிப்பையோ அல்லது போரின் நேரடியான தாக்கங்களை எதிர் கொள்ளாத ஒரே ஒரு தீவு அனலை எனலாம். இது ஐயனின் கிருபையே ஆகும். அப்பேற்பட்ட ஐயனுக்கு பெருந்தேர் என்ன ராஜா கோபுரம் கூட எழுப்ப எம்மக்கள் பின்னின்றது இல்லை. ஐயனின் பெரும்தேர் அமைக்க வந்த இந்திய சிற்பிகள் விசா கெடுபிடியை எதிர்கொண்ட வேளை. ஐயனின் இன்னொரு அனுக்கிரகம் இடம் பெற்றது. பருத்திதீவினை 1977 இல் பாதுக்காக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனப்படுத்தி குடியிருப்புகளை அப்புறப்படுத்திய தருணம் அங்கு விஜயம் செய்த அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் எதிர் கட்சி தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோரின் படகு செயல் இழந்து அனலைதீவில் கரை சேர வேண்டிய சூழலில் அவர்கள் ஐயனை தரிசிக்க நேர்ந்தது அப்போது இந்திய விசா தொடர்பான சிக்கலை தாமே தீர்த்து தருவதாக கூறி அவர்களது விசா நீடிக்கப்பட்டது.
(தவிர இவர்களே செல்வ சந்நிதி முருகன் ஆலய சித்திர தேரினை சமகாலத்தில் செய்து வந்தனர் அத்தேரும் இலங்கையின் மிகப்பெரிய இரதமாக சம அளவில் செய்யப்பட்டது. இருந்தும் 1990 இல் பாதுகாப்பு படையினரால் அது தீயில் இட்டு அழிக்கப்பட்டது). எனவே ஐயனின் ரதமே இன்று இலங்கையில் மிக பெரிய தேர் என்ற நிலையில் உள்ளது. இதனை நல்லையின் இரு ஆதின முதல்வர்களான ஶ்ரீ ஞான சம்பந்த பரமாச்சாரியாரும், ஶ்ரீ சோம சுந்தர பரமாச்சாரியாரும், சிவச்செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா, ஶ்ரீமதி வசந்தா வைத்தியநாதன் போன்றோர் உயர்வாகப் பேசி விழித்துள்ளனர்.
ஐயனார், ஐயப்பன் குறித்த தெளிவினை வாசகர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அனலை ஐயனின் பக்தனின் கடமையாகும். இந்தவகையில் ஐயனார் அவரின் தோற்றம் வடிவங்கள், அவதாரம், வழிபட்டு முறை என்பன குறித்த சிறு இலகு விளக்கங்கள் இதோ!
ஐயனார் சிவ, விஷ்ணு ஐக்கியத்தின் வெளிப்பாடு எனக்கூறப்படுகிறது. மகிஷி என்ற அரக்கியின் வரம் ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் அன்றி வேறு யாராலும் தனக்கு அழிவு வரகூடாது என்ற தனது புத்தி சாதுரியமான வரம் மூலம் சாகாவரம் வேண்டியதாக கர்வம் கொள்ளவே. பிறந்தவர் இறக்க வேண்டியது நியதி ஆதலால் பிரம்ம தேவன் தான் வழங்கிய வரம் மூலம் சிவ விஷ்ணு ஐக்கியத்தின் தேவையை உணர்த்தினார்.
அதே நேரம் சிவனிடம் பத்மாசுரன் என்பான் தான் தொட்டதெல்லாம் அனலாகி அழிய வேண்டும் என்ற வரத்தினை பெறுகின்றான். இவன் தான் பெற்ற வரத்தினை புத்திசாலித்தனமாக பயன் படுத்துவதாக கருதி அவ்வரத்தை சிவனிடமே பரீட்சித்துப்பார்க்க எண்ணினார்.
இதனை அறிந்த சிவன் தமது சக்தியின் மூன்று வடிவங்களான காளி, உமை, மோகினி ஆகியோரில் மோகினியே வேண்டிய வடிவங்களை பெறக்கூடிய சக்தியான விஷ்ணு ஆவார். இவர் சிவனின் இடப்பாகத்தில் குடிகொண்டுள்ளார். இதனாலேயே விஷ்ணு உமையாளின் சகோதரன் என்கிறோம். எனவே சிவனை அவரது சித்தின் பிரகாரம் காப்பாற்ற வேண்டிய கடப்பாட்டில் விஷ்ணு மோகினி வடிவெடுத்து பத்மாசூரன் முன் தோன்றி அவனின் கொலை வெறியை அடக்கி இச்சையை தூண்டிவிட்டு சாதுரியமாக அவனை அளித்துவிடுகின்றார். இதன் பின்னர் ஏலவே மகிஷியின் வரம் குறித்த சிக்கலை தீர்க்க சிவனும் விஷ்ணுவும் தமது கையின் மூலம் சிருஷ்டித்த கடவுளரே கையனார் ஆவார்.(ஆணும் ஆணும் இணைந்து ஓரின உயிர் அணுக்கள் {XX} மூலம் ஆண் கருவினை உருவாக்கலாம் என்ற அறிவியல் உண்மை இதன் மூலம் புலனாகிறது .
நாளடைவில் கையனார், ஐயனார் என்று விழிக்கபடுகின்றார். இவை புராண, இதிகாச கதையாகும். நால் வேதங்களில் இரு வேதங்களில் ஐயனார் பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் ஐயனார் முருகனுக்கும் அண்ணன் என்றும் விழிக்கப்படுகின்றது.
வரலாற்று அடிப்படையில் ஐயனார் மூதாதையர் வழிபாடு மூலம் தோற்றம் பெற்றது என்பர். சாத்தனார், சாத்தப்பன் என்ற திராவிட பண்பாடே ஆரியரால் சாஸ்தா, ஐயப்பன் என முலாம் பூசப்பட்டதகவும் தவிர கௌதம புத்தரை இந்து மதத்தின் ஏழாம் பிரிவாக கொண்டு வர முடியாது போகவே அதனை சைவ வைஷ்ண சமாதான கடவுளராக உருவாக்கி இருந்தனர் என்றும் கருதுவர். (நோக்குக சரணம் போடல், கணபதி வணக்கம் இ திருமண கோலம் சித்தார்த்தர், ஐயனார் + பிரமச்சரியம் கௌதமர், ஐயப்பன், யானை வாகனம், யோக நிஷ்ட்டை, சின் முத்திரை, ஜடா முடி, கேரளா-பௌத்த கட்டிடவாக்கம், தாள வாத்தியங்கள், சிங்கள(மாதம்பே, கதிர்காமம் ) குதிரை வீர ஐயனார், கண்ணகி வழிபாடு, என்பன மூன்று விதமான ஐயனார் வழிபாட்டுடன் பௌத்த மதம் தொடர்பு படுவது புலனாகும்)
தர்ம, காவல், ஞான, கலியுக, கடவுளராக ஹரிஹர புத்ர ஐயனார் (யானை வாகனம் ) என சோழ நாட்டிலும், ஐயப்பன் (புலிவாகனம் ) என கேரளா நாட்டிலும், பாண்டிய நாட்டில் மதுரைவீரன் காவல் ஐயனார் (குதிரை வாகனம் ) என மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை என்பவற்றோடு இணைத்து இறைவழிபாடு எனும் தூய நல்வழிப்பாதையை நம் முன்னோர்கள் உருவாக்கி இருந்தனர்.
ஐயப்பன் அவதாரம் என்பது ஐயனாரின் 16 வடிவங்களுள் ஒன்றான பிரமச்சரிய (யுவ) ஐயனார் இன் வடிவம் ஆகும். பந்தள மன்னனின் மகனாக அவதரித்த மணிகண்டன் எனும் புனிதனின் ஆத்மா ஜோதி வடிவாய் சபரிமலையில் பரசுராமரால் வடிவமைக்கபட்ட ஐயனாரின் வடிவமான நாம் இப்போது தரிசிக்கும் இருகால்களையும் கட்டிய நிலையில் ஞான நிலையில் இருக்கும் வாலிப(யுவ) ஐயனாரின் வடிவத்தினுள் ஐக்கியமானார்.
இது சிதம்பரத்தில் நடராஜரின் வடிவத்தில் மாணிக்க வாசகர் ஜோதி வடிவாய் சங்கமாகிய நிலைக்கு ஒப்பானதாகும். எனவே ஹரிஹர புத்ர ஐயனார் இங்கு விஷ்ணு போன்றும் ஐயப்பன் கிருஷ்ணரை போன்று அவதார புருசரகவும், காவல் தெய்வமாக கிராமிய வழிபாட்டில் இடம் பெரும் குதிரை வீரன் ஐயனார் இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய வழிபாடாகவும் காணப்படுகின்றது. எனவே சோழத்தமிழர்களான தீவக மக்கள் ஹரிகர புத்ர ஐயனாரை மங்களகரமாக இரு மனைவியர் சகிதம் தர்மம், ஞானம் வழங்கும் கலியுக காவல் தெய்வமாக வழிபடுகின்றனர்.
ஐயனார், ஐயப்பன் குறித்த விளக்கம் இருவரும் ஒருவரே என்பதை சுட்டி நின்றது. ஐயனாரின் பிறப்பிடம் பற்றி இன்னுமொரு கதை உள்ளது. சிவன், மோகினி ஆகிய இருவரும் கூடி ஐயனாரை சிருஸ்டித்த இடம் நாவலம் பெருந்தீவு எனக்கூறப்படுகின்றது. இத்தீவு எது என்பது குறித்து பல்வேறு கருத்தாடல்கள் காணப்படுகின்றது. இத்தீவு ஈழத்தினை குறிப்பதாகவும் அல்லது நாகதீபம் என்கின்ற யாழ்ப்பாணத்தை குறிப்பதாகவும் கருதுவர் இதைவிட நாகதீபம் நயினாதீவே என வாதிடும் ஒரு சாராரும் உள்ளனர்.
இதில் நாகதீபம் என்பது ஈழத்தின் ஏழு தீவுகளை உள்ளடக்கிய நிலப்பகுதியாக இருக்கலாம். ஏன் எனில் நாவலம் பெருந்தீவு காடுகள் மலைகள் ஆறுகள் சூழ்ந்த இடம் எனக்கூறப்படுகின்றது.
தீவகம் குமரி கண்ட கடல் கோளின் போது அழிவடைந்த எஞ்சிய நிலப்பரப்புகள் என்ற புவியியல் கருத்தும் ஏழாற்று பிரிவு (பஃறுளி) என்ற கடலுக்கான சொல்லாடல், பண்டைய நாகேஸ்வரம் {புளியந்தீவு சிவன் கோவில்} புவனேஸ்வரி அல்லது பர்வத வர்த்தினி ஆலயம் என்பவற்றின் இருப்பு என்பன இவ்விடம் தெய்வ சங்கல்ப்பத்துக்கான இடம் ஆக நோக்க வைக்கின்றது.
தவிர அனல் ஐயன் தீவு என்ற காரணப்பெயர் ஐயன் தோன்றிய இடமாகவும் அவர் மீண்டும் விரும்பி வாசம் செய்யும் இடமாகவும் கருத இடம் உண்டு . எனவே ஐயனாரை சிருஷ்டித்த இடம் எப்போதும் அழிவடையா வண்ணம் ஐயனார் கத்து அருளும் சைவ மணிதீவு அனலைதீவு என நாமும் பெருமை கொள்ளலாம். எனவே ஐயனாரை நாம் எப்போதும் நாவிலும் மனத்திலும் ஏந்துவது போன்று அவனது புகழையும் பெருமைகளையும் மென்மேலும் பரப்பி ஐயன் பெயரால் ஊரையும் உலகையும் நல்வழிப்படுத்துவோம்.
மேலும் ஐயனார் வடிவம், வழிபாடு பற்றிய சந்தேகங்களை இங்கே களைய வேண்டியது அடியேனின் கடமையாகும். ஐயனாருக்கு (ஐயப்பன் உட்பட) இருகரங்கள் மட்டுமே என்பது பலரது அனுமானம் ஆனால் ஐயனாருக்கு இரண்டு, நான்கு, எட்டு, பன்னிரண்டு கரங்கள் என வடிவங்கள் உண்டு. இதில் நாம் வணங்கும் ஐயனார் கிராமத்தில் இருப்பதால் இரு கரங்களுடன் விளங்குகிறார்.
நகரத்தில் இருந்தால் நான்கு கரங்கள், மலையில் இருந்தால் எட்டு கரங்கள், காட்டில் இருந்தால் பன்னிரு கைகள் என இருக்க வேண்டும் என்கிறது புராணம். மேலும் கிராம தேவதையான பூத நாதன் என்று விளிக்கப்படும் ஐயனாருக்கு சிவாகம முறையிலோ வைணவாகம முறையிலோ ஆலயம் அமைக்கப்படும் போது முறையே பைரவர், அனுமார் சந்நிதிகள் அமைக்கப்படும். இவை தவிர கிராம கடவுளுக்கு ஆகம பூஜை வேண்டுமா? என்றும் ஐயனாருக்கு கோபுரம் கட்டக்கூடாது என்றும் ஒரு சிலர் வாதிடுவர்.
நாம் ஏலவே கூறிவாறு மூதாதையரின் இயற்கை மற்றும் இறந்த முதியோர்களை (மன்னர்கள், பெரியோர்கள் )வணங்கும் பண்பாட்டிலிருந்து தோன்றிய ஐயனாரின் வழிபாட்டு முறையை சமஸ்க்ருத மயமாக்கலுக்கு உட்படுத்திய வேளை அல்லது தர்ம சீலம் என்று கூறப்படும் பௌத்தம் மற்றும் சமண சமயத்தை இந்து வழிபாட்டு முறைக்கு மாற்றி அமைத்த போது திராவிட வழிபாட்டு முறைக்குள் ஆரியம் கலந்தன இதனை சேர சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களும் கடைப்பிடித்தனர். இதிலே சோழ மன்னர்கள் திராவிடப் பாரம் பரியத்திற்கும் சிவாகம முறைகளுக்கும் முன்னுரிமை வழங்கினார்.
இதன் போது சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டது. அப்போதே ஐயனாருக்கு ஆகம வழிபாடுகள் வரலாற்று காலத்தில் மீண்டும் இயற்றப்பட்டன. அதன் தொடர்ச்சி தான் இன்று அனலையில் ஐயனுக்கு சிவனின் அம்சமாக கருதி சிவ ஆகம வழிபாடுகள் இடம்பெறுகின்றது. இவை ஏலவே கூறிய சோழவள நாட்டின் கல்லல் துடல் ஐயனார் ஆலய வழிபட்டு முறையை பின்பற்றியது. எனவே ஐயனாருக்கு கோபுரம் அமைப்பதில் தவறில்லை.
இலங்கையில் சைவ மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஆறுமுக நாவலரே பல கிராமிய ஐயனார் வழிபாடுகளை ஆகம முறைகளுக்கு உட்படுத்தினார். இன்னும் சில ஐயனார் ஆலயங்கள் சிவாலயமாக பரிணமித்தது (ஈழத்து சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் சிவன் கோவில் முன்னர் ஐயனார் கோவில் ஆகும்.) நயினாதீவில் மிகப் பழைமையான ஐயனார் கோவில் உள்ளது. நெடுந்தீவு, புங்குடுதீவு, சுருவில் எனத் தீவகம் எங்கும் ஹரிகர புத்திர ஐயனாரின் அருள் கடாட்சமே மேவியுள்ளது.
தீவகம் தாண்டி யாழ்ப்பாணம், வன்னி எங்கும் ஐயனார் வழிபாடுகள் காணப்படுகின்றது. மலைநாட்டில் மதுரை வீரன் ஐயனார் வழிபாடு காணபடுகின்றது. மட்டக்களப்பு, சிலாபம், கதிர்காமம் என்பவற்றில் கிராமத்து குதிரை வாகன ஐயனார் வழிபாடு காணப்படுகின்றது. சிங்கள மக்கள் பாண்டிய வம்சாவளி மக்கள் ஆதலால் அவர்களும் குதிரை வாகன மதுர வீரன் ஐயனாரை வழிபடுகின்றனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நயினாகுளம் அருள்மிகு அரிகரபுத்திர ஐயனார் ஆலயம்
தவிரவும் ஐயப்பன் வழிபாடு இலங்கையில் காலம் தாழ்த்தியே தொடங்கியது. இவை ஐயனாரை அடையாளப்படுத்தும் படங்களாகவே அனலையில் ஐயப்பன் அறிமுகமாகினார். பின்னாளில் (1970 களின் பின்னர் ) சபரி மலை யாத்திரைகள் முதன்மை பெற்று இன்று பல ஐயப்பன் ஆலயங்கள் இலங்கை எங்கும் பரவிக்காணப்படுகின்றது. ஐயனின் அருள் மகிமைகளே இன்று இந்து தர்மத்தில் சாதி, மத பேதமின்றி ஐக்கியம், தர்மம், ஞானம்(அறிவு) என்பவற்றை அருளும் கலியுக காவல் தெய்வம் ஐயனாரை விளங்கச்செய்தது என்றால் ஐயமே இல்லை.
ஐயனாரின் கரங்கள் குறித்த விளக்கம் ஏலவே கூறப்பட்டது இரு கரங்கள் மனித வடிவத்தையும், நன்கு கரங்கள் காத்தல் கடவுளான தேவ (விஷ்ணு ) வடிவத்தையும், எட்டுக்கரங்கள் ஞானக்கடவுளான நான்முகனையும் பத்துக்கரங்கள் பஞ்ச கிருத்திய பரம் பொருளான சதாசிவனை பாவனை செய்து உள்ளன.
அதே போன்று ஐயனாரின் பதினாறு வடிவங்கள் என்பவை பால ஐயனார், யுவ ஐயனார் (பிரம்மசாரி /ஐயப்பன் ), மத கஜ(யானை ) வாகன ஐயனார், வீர ஐயனார், லட்சுமி ஐயனார், பூரணை ஐயனார், புஷ்கலை ஐயனார், துரக(குதிரை) வாகன ஐயனார் (வேட) புலிவாகன ஐயனார், மதன ஐயனார், விஷ்ணு (மோகினி சுத)ஐயனார், மகா சாஸ்த ஐயனார் அம்ருத (சிவசுத ) ஐயனார், சௌந்தர ஐயனார் மற்றும் பூரணை புஷ்கலை சமேத ஹரிஹர புத்திர ஐயனார் என்பனவாகும்.
ஐயனாரது வடிவம், இவருள் அனைத்து கடவுளரும் அடங்கியிருப்பதை காணாலாம். தட்சனாமூர்த்தியை போன்ற ஜடா முடி, சின்முத்திரை, பிரமனுக்கும் சரஸ்வதிக்கும், குருவிற்கும் நிகரான ஞானம், விஷ்ணுவின் மகனாக காத்தல் தொழில், சிவனின் வடிவங்களும் அவரது பிள்ளைக்களுமான பிள்ளையாருக்கு நிகாரன ஐயன் (தலைவன் ) பூத நாதனகவும் இ முருகனுக்கு நிகாரன கலியுக வரதனாக போர்க்கடவுளாக, வீரபத்திரர், பைரவர் ஆகியோர் வரிசையில் ஐயனார் உம் காவல் தெய்வமாக அடக்கம் பெறுகின்றார்.
சிவனின் இடப்பாகம் உமையும், விஷ்ணும்(அர்த்த நாரீஸ்வரர், சங்கர நாராயணர் ) குடி கொள்ளஇ விஷ்ணுவின் மார்பினில் லட்சுமி குடி கொள்ள, தொப்பிளில் பிரமன் கமல ரூபனாக வீற்று இருக்க அவன் நாவில் நாமகள் குடி கொண்டுள்ளதால் அனைத்து கடவுளரும் ஒருவரே என ஐக்கியம் பேசும் சிவ- விஷ்ணு-பிரம்மன் ஐக்கியமான தத்தாத்திரேயர் போன்று ஹரி ஹர சுத ஐயனின் வழிபாடு இந்து சமயத்தில் அதனை கடைப்பிடிப்பவர்கள் மதம் கொள்ளாது நல் வழியில் வாழ நெறிப்படுத்தும் சைவ-வைணவ நெறியாம் ஐயனாரின் தினமும் வழிபட்டால் அனைத்து கடவுளரையும் வழிபட்டதற்கு சமமமாகும்.
அதனாலேயே அனலை ஐயனின் பக்கதர்கள்இ இருந்தாலும் எழுந்தாலும் உறங்கச்சென்றாலும், அச்சம், அழிவு, ஏற்பட்டாலும் ஏன்? ஐயோ என அலறாது “என்ர ஐயனாரே” என விழிப்பார்கள். இது இவர்கள் ஐயன் மீது வைத்துள்ள பக்தியினை வெளிப்படுத்தி நிற்கின்றது. இன்று ஐயனின் பக்தர்கள் நாடு தழுவிய ரீதியிலும் புலம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்தாலும் ஐயனையும் அவர் மகிமைகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றனர்.
திருவிழாக் குருக்கள் ஊரெழு சிவஶ்ரீ பால வைத்தியநாதக் குருக்கள் அவர்களும், வேத பாராயணம், மற்றும் உதவிக்குருமார் என ஒரு தொகை அந்தணகுருமார் கிரியைகளை சிறப்பாக செய்வார்கள். ஐயனுக்கு திருவிழா என்றால் அவரை அபிஷேகம் செய்ய குடம் குடமாய் நன்னீர், இளநீர், பால், தயிர் என்பன மழையாய் சொரியும். மற்றும் பழவகை திரவியங்கள் என ஆகம விதி மீறாது அச்சொட்டாக கிரியைகள் இடம் பெறும். கிரியைகள் சுருக்கி செய்தலோ நீக்கி செய்தலோ கிடையாது. இதானால் தான் “ஆலய வழிபாட்டுக்கு அனலைதீவு” ஆலய பரிபாலனத்திற்கு அனலைதீவு என்ற அடை மொழிகள் ஏற்பட்டது.
நவனகும்பம். 108, 1008 சங்காபிஷேகங்கள் என்பன பகல் திருவிழாவிலும், இரவு உருத்திர கும்ப அபிசேகமும் தினமும் நடைபெறும். ஐயனார் தினமும் அனைத்து விதமான வாகனகளில் திருக்கட்சியருள்வார்.
பிரதான திருவிழாக்களான முத்து சப்பரம், கைலாச வாகனம், வேட்டை திருவிழா, சப்பரம் தேர், தீர்த்தம், கொடியிறக்கம், திருக்கல்யாணம், பிராயசித்தம் வைரவர் மடை என பிரசித்தமாக இடம் பெறும். பகலில் பூரணை புஷ்கலை சமேதராக காட்சி தரும் ஐயனார், இரவில் மின்சார விளக்குகள் வேலை பாடுகள் நடுவே தனித்தனியாக காட்சி கொடுப்பார். இதனை பார்க்க ரம்மியமாக இருக்கும்.
வேட்டை திருவிழா என்றால் ஐயன் தனியாக குதிரை வாகனத்தில் நகர வலம் வருவார். வேட்டையாடல் புளியந்தீவு நாகேஸ்வரத்தில் இடம் பெறும் மாலை வேளை ஐயன் உழவு இயந்திரத்தில் பவனி வர ஆயத்தமாகும் பொது முதலில் வருவது பிள்ளையார் கோவிக்கு அடுத்து ஊடு முருகன் கோவில்இ கலட்டி முருகன் கோவில் என்பன சென்று புளியந்தீவு சிவன் கோவிலில் பூசைகள் இடம்பெற்ற பின்னர் வேட்டை திருவிழா இடம் பெறும். அதன் பின்னர் ஐயனார் மீண்டும் ஆலயம் செல்ல முன்னர் தரவை வைரவர் கோயிலில் பூசைகளை முடிதவாறு தெரு வீதிகளில் வைக்கபட்டு இருக்கும் அர்ச்சனை மடை பந்தல்களில் பூசைகளை நிறைவு செய்து ஆலயத்தினை அடைந்த பின் கோவிலை விட்டு ஊருக்குள் பிரவேசித்தமைக்காகவும் வேட்டை ஆடியமைக்காகவும் பிராயசித்த அபிஷேகம் நடைபெறும்.
பின்னர் அன்றைய இரவுத் திருவிழா சப்பரத் திருவிழா விடிந்ததும் தேர்த்திருவிழா. தேர் என்றால் மிக விசேட திருவிழா அனைவரும் ஐயனின் வடம் பிடித்து பேரின்பம் கொள்ளவர். அதற்கான ஆயத்தமாக மலை போன்ற குவியல் தேங்காய்கள் சிதறி உடைக்கப்படும். ஐயனின் மிகப்பெரிய தேரை இழுக்க அயல் ஊரில் இருந்து அடியவர்கள் வந்தால் தான் அதனை இலகுவாக நகர்த்த முடியும். அவ்வாறே ஐயனாருக்கான நேத்தி காவடிகள் ஆலயத்தை மேன்போலும் பக்தி பரவசமூடி விடும்.
ஐயன் தேர் ஏற, சிவப்பு நிற அலங்காரங்களுடன் தாமரைப் பூமாரி பொழிய, மல்லாரி இசைக்கு ஏற்றவாறு ஆடி ஆடி வரும் அற்புதக்கோலம் ஆஹா என்னே அழகு!!! அவ்வாறே தேர் வீதிவலம் வந்து இருப்பிடம் வந்ததும் ஐயனுக்கு அர்ச்சனை செய்ய வரிசை கட்டி நிற்கும் பக்க்தர்களின் நீட்சி அது அனலைக்கும் நயினைக்குமே சொந்தமாகும். அதன் பின்னர் பச்சை சாத்தி ரத அவரோகணம் இடம்பெற்று ஐயனாரை பக்கவாட்டில் திருநடனம் செய்விக்கவும் பச்சிலையும் பன்னீர் கலந்து சாத்தும் தருணம் பக்தி மேலீட்டால் அரோகரா கோசங்கள் வானை பிளக்கும். ஐயனுக்கு அரோகரா, கூழாவடியானுக்கு அரோகரா, நயினா குளத்தானுக்கு அரோகரா, சேது சமுத்திரதானுக்கு அரோகரா, பூரணை புஷ்கலைக்கிறைவனுக்கு அரோகரா, அரிகர புத்திர ஐயனாருக்கு அரோகரா. என்ற கோஷங்கள் ஐயனுக்கு மென்மேலும் அருள் மகிமையை வழங்கி நிற்கும். அதுவே அடியார்க்கு குறைகள் நீக்கி நல்வாழ்வை நல்கும் இதுவே ஆன்மீக(உளவியல்) உண்மையாகும்.
தேரால் வந்த இறைவனுக்கு அழித்தல் தொழில் செய்ததன் நிமித்தம் பிராயச்சித்த அபிஷேகம் இடம் பெறும். அன்றிய தினம் மாலையே தீர்த்த திருவிழாவும் இரவு துவஜா அவரோகணம் என்னும் கொடியிறக்கம் இடம் பெறும். மறுநாள் காலை மீண்டும் குறைகள் தவறுகள் நீங்கும் பெருட்டு இறுதியாக பிராயச்சித்த அபிசேகமும் மலையில் வைரவர் மடை இடம்பெற்றுஇ மகோற்சவம் (பிரம்மோற்சவம்) நிறைவு பெறும். ஆனால் இன்று இவைகள் தனிதனி திருவிழாக்களாக இடம் பெறுகின்றது.
அனலை ஐயனாரை முதல் கடவுளராகவும் சுற்று பிரகார கடவுளராகவோ அல்லது ஐயப்பன் விக்ரகமாகவோ உள்ள ஈழத்தின் உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் இக்காலங்களில் விசேட பூஜைகள் இ அலங்கார திருவிழாக்கள் மற்றும் மகோற்சவங்கள் என்பன இடம் பெற்றுக்கொண்டு இருகின்றதாக தகவல் கிடைக்கின்றன, உதாரணமாக கனேடிய அனலைதீவு ஐயனார் ஆலயத்திலும், கனேடிய ஐயப்பன் இந்து ஆலயத்திலும் மகோற்சவம் இடம் பெறுகின்றது. கனடாவின் பிரம்டன் கற்பக விநாயகர் கோவில்இ கணேஷ துர்க்கா கோவில், மிஸ்ஸிஸ்சாஹா முத்துமாரி அம்மன் கோவில், என்பவற்றில் ஐயனாருக்கு அலங்கார திருவிழாவும் இடம்பெறுகின்றன. தவிரவும் சுவிஸ், இங்கிலாந்து, யேர்மனி, என்பவற்றிலும் அனலை ஐயனுக்கான வழிபாடுகள் இயற்றப்படுகின்றன.

இவற்றுக்கு அனலை ஐயனின் அருள் மகிமைகளே காரணம் ஆகும். எனவே நாமும் ஐயனை தொழுதும் போற்றிப் பாடியும் ஐயன் புகழ் பாடியும் பயனடைவோம்!
தொகுப்பு – அனலைக்குமரன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஐயனார்-வரலாறு
» அருள்மிகு நடராசர் 8 போற்றிகள்
» அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்
» அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம்
» மலைமண்டலப் பெருமாள் ஆலயம்
» அருள்மிகு நடராசர் 8 போற்றிகள்
» அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்
» அருள்மிகு துர்காம்பிகை திருக்கோவில், பட்டீஸ்வரம்
» மலைமண்டலப் பெருமாள் ஆலயம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum