சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Khan11

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

+2
ahmad78
*சம்ஸ்
6 posters

Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by *சம்ஸ் Thu 7 Nov 2013 - 16:30

எனக்கு தலைச்சுற்று இல்லை, தலையிடி இல்லை, களைப்போ சோர்வோ இல்லை, ஆனால் டாக்டர் பிரஸர் என்று சொல்கிறாரே" என நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Hypertensive-Urgency
ஆனால் அதுதான் உண்மை. பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். எனவேதான் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள். 

சிலர் அறிவதற்கு முன்னரே அதன் பாதிப்புகளால் இறந்து போகவும் கூடும்.

கடுமையான பாதிப்புகள்
  
எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.

  • பிரஸர் இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.

  • உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.

  • பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.

  • சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.

  • விழித்திரையின் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் பார்வை இழப்பு நேரிடலாம்.
பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் High-B-P-complications.gif
கடுமையான நிலையின் அறிகுறிகள்
  
இத்தகைய பாதிப்புகள் உள்ளுரப் பாதிக்க ஆரம்பித்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கும்;.
உதாரணமாக 

  • கடுமையான தலையிடி

  • மூக்கால் இரத்தம் வடிதல்

  • பார்வை மங்கல்

  • மூச்செடுப்பதில் சிரமம்

  • கால் வீக்கம்
போன்ற அறிகுறிகள் நோய் தீவிரமாகி நீண்ட காலம் சென்ற பின்னரே வெளிப்படும்.

பிரசரின் ஆரம்ப நிலையிலோ அல்லது சற்றுத் தீவிரம் அடைந்த நிலையிலோ வெளிப்படையாக எதுவும் தெரியாது. எனவே அத்தகைய அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது மருத்துவரிடம் சென்று பிரசரைப் பாருங்கள்

யாருக்கு வரும்

எவருக்கும் வரலாம் ஆயினும் கீழ்க் கண்டவர்களுக்கு பிரசர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  • தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இந்நோய்க்கு பரம்பரை அம்சம் உள்ளது எனலாம்.

  • வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். வயது செல்லச் செல்ல இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். 

  • உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.

  • அதீத எடையுள்ளவர்கள்

  • புகைப்பவர்கள்

  • அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.

  • தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.

  • கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.

  • கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.
எவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை இடையிடையே சோதித்துப் பார்ப்பது நல்லது. ஆயினும் மேற் கூறியவர்கள் வருடம் ஒரு முறையாவது சோதித்துப் பார்ப்பது அவசியம்.

பிரசரில் நான்கு நிலைகள் உண்டு. 

அவையாவன

சாதாரண அளவு    120/80 க்கு கீழ்
முன்நிலை   140/90வரை
நிலை 1    160/100வரை
நிலை 2    160/100 க்கு மேல்

Blood Pressure
Category
Systolic
mm Hg (upper #)
Diastolic
mm Hg (lower #)
Normalless than 120andless than 80
Prehypertension120 – 139or80 – 89
High Blood Pressure
(Hypertension) Stage 1
140 – 159or90 – 99
High Blood Pressure
(Hypertension) Stage 2
160 or higheror100 or higher
Hypertensive Crisis
(Emergency care needed)
Higher than 180orHigher than 110
உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான (Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும் அதனால் அதிகம் இல்லை என நம்பப்பட்டது.

அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.

முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே.

தனியாக கீழே உள்ள அலகு சாதாரணமாக இருந்தாலும் மேலே உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.

பிரசர் உள்ளவர்கள் மேலும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

  1. இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு  (Lipid Profile) 

  2. சிறுநீரில் புரதம் போகிறதா என அறிய சிறுநீர்ப் பரிசோதனை (Urine Full report)

  3. சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என அறிய இரத்தப் பரிசோதனைகள் (Blood Urea, Creatinine) 

  4. குருதி உப்பு அளவுகள்  (Serum Electrolytes) 

  5. ஈசிஜி (ECG)

  6. ஆல்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasound Scan abdomen Kidney) 

  7. வருடம் ஒருமுறையாவது கண்பரிசோதனை- விழித்திரையில் குருதிக் கசிவு, நீர்க் கசிவு ஆகியவற்றால் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக.

பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை எவை?

  1. உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்.
  2. உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு  போதிய இடம் கொடுங்கள்.
  3. உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். முக்கியமாக எடை அதிகரிகக் கூடிய இனிப்பு, கொழுப்பு, மற்றும் துரித உணவுகளைக் குறைத்த காய்கறி, பழவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேருங்கள்.
  4. உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.
  5. புகைத்தலைத் தவிருங்கள்.
  6. மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.
  7. உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள்.
  8. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்

நன்றி ஹாய் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by ahmad78 Sat 9 Nov 2013 - 11:55

அறிய வேண்டிய தகவல்கள்

பதிவிற்கு நன்றி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by *சம்ஸ் Sat 9 Nov 2013 - 12:10

ahmad78 wrote:அறிய வேண்டிய தகவல்கள்

பதிவிற்கு நன்றி
கண்டிப்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டியவை. மறுமொழிக்கு நன்றி தோழரே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by பானுஷபானா Sat 9 Nov 2013 - 14:26

பயனுள்ள குறிப்பு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by *சம்ஸ் Sat 9 Nov 2013 - 15:32

பானுஷபானா wrote:பயனுள்ள குறிப்பு நன்றி தம்பி
!_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by Muthumohamed Sat 9 Nov 2013 - 20:25

*சம்ஸ் wrote:
ahmad78 wrote:அறிய வேண்டிய தகவல்கள்

பதிவிற்கு நன்றி
கண்டிப்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டியவை. மறுமொழிக்கு நன்றி தோழரே
!_ !_ !_
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by rammalar Mon 11 Nov 2013 - 6:30

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.அவர்களின்
மருத்துவ குறிப்புகள் பயனுள்ளவை...
-
:”@: 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by நண்பன் Mon 11 Nov 2013 - 8:43

மிக மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி)( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by *சம்ஸ் Mon 11 Nov 2013 - 9:27

rammalar wrote:டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.அவர்களின்
மருத்துவ குறிப்புகள் பயனுள்ளவை...
-
:”@: 
!_ )(

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by பானுஷபானா Mon 11 Nov 2013 - 14:45

எனக்குத் தான் இப்போ பிரசர் அதிகமா இருக்கு:(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by நண்பன் Mon 11 Nov 2013 - 15:11

பானுஷபானா wrote:எனக்குத் தான் இப்போ பிரசர் அதிகமா இருக்கு:(
எனக்கு இப்போ பயமா இருக்கு _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by பானுஷபானா Mon 11 Nov 2013 - 15:39

நண்பன் wrote:
பானுஷபானா wrote:எனக்குத் தான் இப்போ பிரசர் அதிகமா இருக்கு:(
எனக்கு இப்போ பயமா இருக்கு _* 
என்ன் பயம்#) #) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by நண்பன் Mon 11 Nov 2013 - 16:39

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எனக்குத் தான் இப்போ பிரசர் அதிகமா இருக்கு:(
எனக்கு இப்போ பயமா இருக்கு _* 
என்ன் பயம்#) #) 
இப்போதெல்லாம் பயங்கரமாக கோபம் வருகிறது அதிகமாக கோபத்தை அடக்கிக்கொண்டிருக்கிறேன் அதான் பயமாக உள்ளது_* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by *சம்ஸ் Mon 11 Nov 2013 - 18:58

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:எனக்குத் தான் இப்போ பிரசர் அதிகமா இருக்கு:(
எனக்கு இப்போ பயமா இருக்கு _* 
என்ன் பயம்#) #) 
இப்போதெல்லாம் பயங்கரமாக கோபம் வருகிறது அதிகமாக கோபத்தை அடக்கிக்கொண்டிருக்கிறேன் அதான் பயமாக உள்ளது_* 
இந்த பதிவை பகிர்ந்து விட்டு உங்களிடம் எத்திவைக்க நினைத்தேன் பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள் Empty Re: பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) பற்றி அறிய வேண்டிய அடிப்படை விடயங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum