சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் 2ம் சுற்று வாக்களிப்பு ஒத்திவைப்பு Khan11

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் 2ம் சுற்று வாக்களிப்பு ஒத்திவைப்பு

Go down

Sticky மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் 2ம் சுற்று வாக்களிப்பு ஒத்திவைப்பு

Post by நண்பன் on Mon 11 Nov 2013 - 10:14

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் 2ம் சுற்று வாக்களிப்பு ஒத்திவைப்பு
தற்போதைய ஜனாதிபதியின் பதவி இன்றுடன் நிறைவு அதிகார மோதலின் உச்சகட்டம்; நiடின் ஆதரவாளர்கள் சீற்றம்
மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட் அதிக வாக்குகளை வென்றிருந்த போதும், தேர்தல் இரண்டாவது சுற்றுக்குச் சென்றது. எனினும் வேட்பாளர் ஒருவரின் எதிர்ப்பால் நேற்று நடைபெறவிருந்த இரண்டாவது சுற்று தேர்தலை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடும் இழுபறிக்குப் பின் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் நiட் சுமார் 47 வீத வாக்குகளை வென்று முன்னிலை பெற்றார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றிபெற தேவையான 50 வீத வாக்குகளை வெல்ல தவறியதால் இரண்டாவது சுற்று தேர்தலை நடத்த வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டிருந்த போதும் முதல் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அப்துல்லா யமீன், புதிய தேர்தல் பிரசாரத்திற்கு அவகாசம் கோரினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வலுக் கட்டாயமாக பதவி விலகச் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி நiட் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற போராடி வருகிறார். நiட் பதவி கவிழ்க்கப்பட்ட சம்பவத்திற்கு பின் மாலைதீவு அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் இழுபறி ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும்.

கடந்த செப்டெம்பர் 7ஆம் திகதி நடந்த தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்திருந்தது. அந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் காசிம் இப்ராஹிம் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக செய்த முறைப்பாட்டை அடுத்தே அந்தத் தேர்தல் முடிவு ரத்துச் செய்யப்பட்டது. அதற்கு பதில் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த புதிய வழிகாட்டியை அறிமுகம் செய்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் வழி காட்டல் கடை பிடிக்கப்படவில்லை எனக் கூறி கடந்த அக்டோபர் 19ஆம் திகதி நடத்தப்படவிருந்த புதிய தேர்தலை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் அரசியலமைப்பின்படி இன்று திங்கட்கிழமைக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்வாகி இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக முதல் சுற்று தேர்தல் நடந்து அடுத்த தினமான நேற்றைய தினத்திலேயே இரணடாவது சுற்றுத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் ஏற்பட்டிருக்கும் சட்ட சிக்கல் குறித்து மாலைதீவு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் பின் இரவில் ஆராய்ந்தது. இதன் போதே தேர்தலை ஆறு தினங்களுக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. யமீனின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் சுற்று தேர்தலை நடத்தவது யாப்புரிமையை மீறும் செயல் என்று அறிவித்தது.

வாக்களிப்பு செயற்பாடுகளில் மேலும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது என மொஹமட் நiடின் கட்சி மற்றும் பொது நலவாய நாடுகளின் விசேட குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மாலைதீவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த முதலாது ஜனநாயக தேர்தலில், அந்நாட்டை மூன்று தசாப்தங்களாக ஆண்ட மஹ்மூன் அப்துல் கயூமுக்கு பதில் மொஹமட் நiட் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் சனிக்கிழமை நடந்த ஜனாதிபதி தேர்தலில் நiட் 46.93 வீத வாக்குகளை வென்றார். அதேபோன்று சர்வாதிகார ஆட்சியாளர் கயூமின் சகோதரர் அப்துல்லா யமீன் 29.73 வீத வாக்குகளை வென்று இரண்டாவது இடத்தை படித்தார். கையூம் ஆட்சியில் அமைச்சராக இருந்துவரும் தொழிலதிபரு மான காசிம் இப்ராஹிம் 23.34 வீத வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அரசியலமைப்பின்படி தற்போதைய ஜனாதிபதி மொஹமட் வாஹித் ஹஸனின் பதவிக்காலம் இன்று நவம்பர் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அரண்டாவது சுற்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் புதிய ஜனாதிபதி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போதைய ஜனாதிபதி தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்த போதும், அது தேவைப்படாது என ஹஸன் கூறியுள்ளார்.

மறுபுறத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதால், அவரது கட்டளைக்கு அடி பணியப் போவதில்லை என ஒரு சில இராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் 2ம் சுற்று வாக்களிப்பு ஒத்திவைப்பு

Post by Muthumohamed on Mon 11 Nov 2013 - 20:22

மாலத்தீவை சுற்றி எப்போதுமே சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கிறதே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் 2ம் சுற்று வாக்களிப்பு ஒத்திவைப்பு

Post by rammalar on Tue 12 Nov 2013 - 7:32

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் 2ம் சுற்று வாக்களிப்பு ஒத்திவைப்பு Maladives
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15704
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் 2ம் சுற்று வாக்களிப்பு ஒத்திவைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum