சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Khan11

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

+5
நண்பன்
Muthumohamed
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty ரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 14:07

லேசாக காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தாலோ அல்லது உடல் வலிக்கோ, தலைவலிக்கோ `ஆஸ்பிரின்’ மாத்திரை எடுத்துக்கொள்வது பலரது வழக்கம்.

அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது.

அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறும்போது, “ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அது, வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது” என்று தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty காய்கறிகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 13:14

நாம் உண்ணும் உணவில் தினந்தோறும் ஏதாவது ஒரு காய்கறியினை சேர்த்துக்கொள்கிறோம். அந்த காய்கறிகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன? அவற்றை எதற்காக உண்கிறோம் என்பதைப்பற்றி பெரும்பாலோனோருக்குத் தெரிவதில்லை.
காய்கறிகள் நம் உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதோடு நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. ஒரு சில முக்கியமான காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

கத்தரிக்காய்

அன்றாடச் சமையலில் இடம் பெறும் மிக முக்கியமான காய் கத்தரி. இதில் பாஸ்பரஸ், ஃ போலிக் அமிலம், வைட்டமின் பி, சி போன்றவை உள்ளன. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும் உதவும்.

பீன்ஸ்

பீன்ஸ் காயில் புரதச்சத்தும் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இரும்புச்சத்துடன், உயிர்சத்துக்களான ஏ,பி,சி ஆகியவை உள்ளன. இதனால் எலும்பு வளர்ச்சியடையும், உடல் உறுதிப்படும்.

சௌ சௌ

புது விதமான வடிவத்தில் இருக்கும் சௌ சௌ காய் சாம்பாரிலும், கூட்டு செய்யவும் அதிகம் பயன்படுகிறது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், போன்ற சத்துக்களும், வைட்டமின் பி,சியும் காணப்படுகின்றன. இது எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

பூசணிக்காய்

பச்சடி, கூட்டு செய்யப் பயன்படும் கொடி வகை காயான பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி போன்றவையும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்களும் காணப்படுகின்றன. இது இரத்தத்தை விருத்தி செய்யும்.

வெள்ளரிக்காய்

சமைக்காமல் சாப்பிடும் காயான வெள்ளரிக்காயில் ஃபோலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ், போன்றவை காணப்படுகின்றன. தவிர இதில் வைட்டமின் பி, சி யும் உள்ளன. வெள்ளப்பிஞ்சானது தாகத்தை தணிக்கும். உணவை எளிதில் ஜீரணமாக்கும்.


காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by *சம்ஸ் Wed 9 Oct 2013 - 10:13

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் 3d8b525a-beeb-417d-9fae-5411c15e89e1_S_secvpf



கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்... 

* பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். 

* குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. 

* பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. 

* 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான். 

* உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய். 

* பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும். 

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும். 

* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும். 

* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். 

* வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. 

* பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by பானுஷபானா Wed 9 Oct 2013 - 15:23

எனக்கு ரொம்ப பிடிக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by *சம்ஸ் Fri 11 Oct 2013 - 18:16

பானுஷபானா wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்
முன்னாடி பிடிக்காது என்று சொன்னீர்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty காய்கறிகளின் பயன்களும், பக்க விளைவுகளும்

Post by *சம்ஸ் Sun 13 Oct 2013 - 21:41

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் C3f258da-939e-45e1-a35d-786c1ad8ba13_S_secvpf



உடல் நலத்தை பேணுவதில் காய்கறிகளின் பங்கு அதிகம். இருந்தபோதிலும் ஒரு சில காய்கறிகள் சிலரது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் வகையில் குணநலன்களை கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்களை கீழே காண்போம். 

கத்தரிக்காய் என்ன இருக்கு: விட்டமின் `சி', மற்றும் இரும்புச் சத்து 

யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்கவைக்கும். 

யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது. 

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும். 

முருங்கைக்காய் என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் `ஏ', `சி'. 

யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும். 

யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப்பிடிப்பை ஏற்படுத்தும். 

பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும். 

அவரைக்காய் என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து. 

யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு. 

யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது. 

பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது. 

பீர்க்கங்காய் என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும் 

யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சாப்பிடக்கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக் கூடாது. தலையில் நீர்க் கோத்துக்கொள்ளும். 

பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். 

புடலங்காய் என்ன இருக்கு: உயர்நிலை புரதம், விட்டமின் `ஏ', சுண் ணாம்புச்சத்து, கந்தகச்சத்து. 

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு. 

யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. 

பாகற்காய் என்ன இருக்கு: பாலிபெப்டு டைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது 

யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு 

யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு ஏற்படும். 

பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும். 

சுரைக்காய் என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். 

யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம் 

யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு 

பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீத ளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள். 

பூசணிக்காய் என்ன இருக்கு: புரதம், கொழுப்பு யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக்கூடாது 

யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது 

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூச ணியே நல்லது. 

கொத்தவரைக்காய் என்ன இருக்கு: நார்ச்சத்து 

யாருக்கு நல்லது: நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு. 

யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும். 

பலன்கள்: ருசி மட்டுமே வாழைக்காய் 

என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் `இ'. 

யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும் 

யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது 

பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும். 

காரட் என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள். 

யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு. 

யாருக்கு வேண்டாம்: குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 

பலன்கள்: கண் பார்வைக்கு உகந்தது. உடல் பரும னாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும். 

பீன்ஸ் என்ன இருக்கு: புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள். 

யாருக்கு நல்லது: ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. 

யாருக்கு வேண்டாம்: குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும். 

பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பள பளப்புக்கு உதவும். வாயு நீக்கும். 

பீட்ரூட் என்ன இருக்கு: க்ளூ கோஸ் 

யாருக்கு நல்லது: ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும். 

யாருக்கு வேண்டாம்: சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது. 

பலன்கள்: ரத்தத்தை வளப் படுத்தும். சுறுசுறுப்பை அளிக் கும். மேனி நிறம் பெறும். 

முள்ளங்கி (வெள்ளை) என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து. யாருக்கு நல்லது: சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும். 

யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு. 

பலன்கள்: அதிகம் குளிர்ச் சியை தரும். வாயுவை வெளியேற்றும். 

காலிஃபிளவர் என்ன இருக்கு: பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ் பரஸ், மெக்னீசியம், விட்ட மின் ஏ, இ. 

யாருக்கு நல்லது: புற்று நோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். 

பலன்கள்: மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும். 

முட்டைக்கோஸ் என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ. 

யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது. 

யாருக்கு வேண்டாம்: பனி காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. 

பலன்கள்: ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty ரத்த அழுத்தத்தை குறைக்கும் பீட்ரூட்

Post by *சம்ஸ் Mon 18 Nov 2013 - 10:15

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் C2544373-c98f-4a2e-9265-259af673d0dd_S_secvpf



பீட்ரூட்... வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளுள் மிக முக்கியமான பீட்ரூட்டின் மகிமையை பற்றி நம் அம்மாக்களும், பாட்டிகளும் வாய் ஓயாமல் பேசுவதை நாம் கேட்டிருப்போம். வேரிலிருந்து கிடைக்கும் இந்த கருஞ்சிவப்பு வண்ண காயானது, பெரும்பாலான இந்திய வீடுகளில் ரத்தசோகைக்கு உகந்த, பிரசித்தி பெற்ற மாற்று மருந்தாகத் திகழ்கிறது. 

ரோமானியர்கள் தங்கள் இல்லற நலத்தை பேண இதனை நம்பி இருப்பது தொடங்கி, இந்தியர்கள் இதனை ரத்த சோகை மற்றும் உடல் அயர்ச்சி போன்ற உடல் நலக்கோளாறுகளுக்கு உபயோகிப்பது வரையிலான பல்வேறு நலன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது 

பீட்ரூட். பீட்ரூட்டை உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியதற்கான காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. 

ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் : 

நைட்ரேட்டுகளின் தலை சிறந்த மூலாதாரமாக விளங்கும் பீட்ரூட், வயிற்றுக்குள் சென்ற பின் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு என்றழைக்கப்படும் வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்விரண்டு கூறுகளும் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, ரத்த அழுத்தத்தை குறைக்க வும் உதவுகின்றன. தினமும் 500 கிராம் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவரின் ரத்த அழுத்தத்தை சுமார் 6 மணி நேரத்திலேயே குறைத்து விடலாம். 

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்  : 

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் ஆகியவற்றை அபரிமிதமான அளவுகளில் கொண்டிருப்பதாக அறியப்படுவதாகும். பீட்டாஸையனின் என்ற கூறு, பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. 

இது எல்டிஎல் கொழுப்பின் ஆக்ஸிடேஷனுக்கு உதவுவ தோடு, ரத்த நாளங்களின் சுவர்களில் அது படியாமல் தடுக்கவும் செய்கிறது. இதனால் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது. 

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகச் சிறந்தது  :

பீட்ரூட்டின் மற்றொரு வியத்தகு அம்சம், ஃபோலிக் ஆசிட்டின் அமோக விநியோகம் ஆகும். ஃபோலிக் ஆசிட், கருவிலிருக்கும் குழந்தையின் தண்டுவடம் ஒழுங்காக உருவாவதற்கு உதவுவதோடு, ஸ்பைனா பிஃபிடா (பிறவியிலேயே குழந்தையின் தண்டுவடம் முழுமையாக உருவாகாமல், பெரும்பாலும் அடிப்பகுதியில் இரண்டாக பிளவுபட்டது போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு நிலை) போன்ற குறைபாடுகளில் இருந்து அக் குழந்தையைப் பாதுகாக்க வல்லது. 

அதனால் ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணி தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியம். மேலும் பீட்ரூட், தாயாகப் போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்கவல்லதாகும். 

எலும்புருக்கி நோயை எதிர்க்கும்  :

பீட்ரூட்டில் நிரம்பியுள்ள சிலிகா, உடல் தனக்குத் தேவையான கால்சியம் சத்தை சிறப்பாக உபயோகித்துக் கொள்ள உதவும் மிக அவசியமான ஒரு தாதுப்பொருளாகும். பொதுவாக எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. எனவே, தினந்தோறும் ஒரு டம்ளர் பீட்ரூட் சாற்றை பருகி வந்தால், எலும்புருக்கி மற்றும் எலும்புச் சிதைவு நோய்களை அண்ட விடாமல் தடுக்கலாம். 

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும்  :

சர்க்கரை நோயாளிகள் அனைவரும், தங்களின் இனிப்பு சாப்பிடும் வேட்கையை, சிறிது பீட்ரூட்டை உட்கொள்வதன் மூலம் தணித்துக் கொள்ளலாம். இது கொழுப்புச்சத்து அற்றதாக, குறைவான மாவுச்சத்துடன் கூடியதாக, நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக் ஸைக் கொண்டதாக இருப்பினும், இதில் சர்க்கரை சத்து இருப்பதனால், மருத்துவர்கள் இதனை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறார்கள். 

நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸ் என்றால், அது சர்க்கரைச் சத்தை மிக மெதுவாகவே ரத்தத்திற்குள் விடுவிக்கும் என்று அர்த்தம். பீட்ரூட்டின் இந்த அம்சமானது, ஒருவரின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைவாக வைத்திருக்க உதவுகிறது. 

ரத்தசோகையை குணமாக்கும்  : 

பீட்ரூட் கருஞ்சிவப்பு நிற த்தில் இருப்பதால், அது இழந்த ரத்தத்தை மீட்க உதவும்; அதனால் இது ரத்தசோகைக்கு மிகவும் நல்லது என்றொரு மூட நம்பிக்கை உலவி வருகிறது. இந்த மூட நம்பிக்கையில் ஒரு பாதி உண்மையே உள்ளது. 

பீட்ரூட்டில் அபரிமிதமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவக்கூடியதான ஹீமோக்ளூட்டினின் என்ற திரவத்தின் உருவாக்கத்துக்கு உதவக்கூடியதாகும். ரத்த சோகையை குணமாக்க உதவுவது பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து தானேயொழிய அதன் நிறமல்ல. 

உடல் சோர்விலிருந்து நிவாரணம் பெற உதவும்  : 

பீட்ரூட் ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவக்கூடியது. அதன் நைட்ரேட் உட்பொருள், ஒருவரின் ரத்த நாளங்களை விரிவாக்கி, பிராணவாயு உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சீரான முறையில் சென்றடைய உதவி புரிந்து, அவரது ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது. பீட்ரூட்டில் இரும்புச்சத்து செறிந்திருப்பதால், அது ஒருவரின் சகிக்கும் தன்மையை மேம்படுத்துகிறது. 

பாலியல் நலம் மற்றும் சகிக்கும் தன்மையை மேம்படுத்தும்  : 

"இயற்கையான வயாக்ரா'' என்றும் அழைக்கப்படும் பீட்ரூட், பாலியல் நலனை மேம்படுத்தும் நோக்கிலான பழங்கால சம்பிரதாயங்கள் பலவற்றில் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. பீட்ரூட் நைட்ரேட்களின் செறிவான மூலாதாரமாக விளங்குவதால், இது நைட்ரிக் ஆக்ஸைடை உடலுக்குள் செலுத்தி, ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 

இதே செயல்பாட்டைத் தான் வயாக்ரா போன்ற மருந்துகள் நகலெடுத்துள்ளன. மனித உடலில் பாலியலைத் தூண்டும் ஹார்மோனின் சுரப்புக்கு மிக முக்கியமானதான போரான் என்ற வேதியியல் கூறு, பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளது என்பது மற்றொரு அறிவியல் உண்மையாகும். எனவே அடுத்த முறை, நீல நிற மாத்திரைகளை தூக்கி எறிந்து விட்டு, அதற்கு பதிலாக கொஞ்சம் பீட்ரூட் சாற்றைப் பருகுங்கள். 

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்  : 

பீட்ரூட்டின் பீட்டாஸையனின் உட்பொருள் மற்றொரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் உள்ள ஹேவார்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் புற்று செல்லின் வளர்ச்சியை, பீட்டாஸையனின் சுமார் 12.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இது புற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றின் சிகிச்சைக்கும் உதவுவதோடல்லாமல், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தோர் புற்றுநோயினால் மீண்டும் பாதிப்படையாத வண்ணம் நீண்ட நாட்கள் நலமோடு வாழ்வதற்கும் உதவி செய்கிறது. 

மலச்சிக்கலை எதிர்க்கும்  : 

பீட்ரூட், எளிதில் கரையும் தன்மையாலான நார்ச்சத்துடன் கூடிய உட்பொருளைக் கொண்டிருப்பதனால், இது மிகச்சிறந்த மலமிளக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. அதிலும் இது பெருங்குடலை சுத்தமாக்கி, வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி, மலங்கழிப்பை சீராக்கும். 

நைட்ரேட் உட்பொருள் அதிக அளவில் இருக்கக் கூடிய பீட்ரூட் சாற்றை பருகுபவரின் சகிக்கும் தன்மையானது சுமார் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் உடல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிராணவாயுவை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக அறியப்படும் பீட்ரூட், மூளையின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, மறதி நோயையும் குணமாக்கக் கூடியதாகும். 

நைட்ரேட், நைட்ரைட்டாக மாற்றப்படும் போது, அது நரம்புகளில் ஏற்படக்கூடிய அலைகளைத் தூண்டி, அவற்றை சீரான முறையில் பரப்புவதன் மூலம் மூளையை மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by பானுஷபானா Mon 18 Nov 2013 - 11:22

பயனுள்ள தகவல் நன்றீ தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by Muthumohamed Mon 18 Nov 2013 - 14:49

எனக்கு மிகவும் பிடிக்குமே :”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty காய்களின் மருத்துவ பயன்கள. பீர்க்கங்காய்

Post by *சம்ஸ் Wed 27 Nov 2013 - 10:37

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் 9b85cb91-7e46-4c18-bd81-0fb75b9b3cbd_S_secvpf



கத்தரிக்காயில் அதிளவு சத்துக்கள் உள்ளன.பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. 

மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%. 
ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். 

மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம். சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்..

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.  கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர். 

நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by பானுஷபானா Wed 27 Nov 2013 - 11:10

பயனுள்ள குறீப்பு நன்றீ தம்பி எனக்கு ரொம்ப பிடிக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by நண்பன் Wed 27 Nov 2013 - 16:14

பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by *சம்ஸ் Wed 27 Nov 2013 - 18:22

நண்பன் wrote:பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 
உங்களுக்கு பிடிக்குமா? அதிர்ச்சி *#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by நண்பன் Wed 27 Nov 2013 - 18:49

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 
உங்களுக்கு பிடிக்குமா? அதிர்ச்சி *#
சாரி பாஸ் ராங் நம்பர்_* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by *சம்ஸ் Thu 28 Nov 2013 - 7:20

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 
உங்களுக்கு பிடிக்குமா? அதிர்ச்சி *#
சாரி பாஸ் ராங் நம்பர்_* 
இப்ப என்னாச்சி பாஸ் :}


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by நண்பன் Thu 28 Nov 2013 - 8:00

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 
உங்களுக்கு பிடிக்குமா? அதிர்ச்சி *#
சாரி பாஸ் ராங் நம்பர்_* 
இப்ப என்னாச்சி பாஸ் :}
நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது தயவு செய்து இலக்கத்தை சரி பார்த்து மீண்டும் அழைக்கவும்^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by *சம்ஸ் Thu 28 Nov 2013 - 8:03

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 
உங்களுக்கு பிடிக்குமா? அதிர்ச்சி *#
சாரி பாஸ் ராங் நம்பர்_* 
இப்ப என்னாச்சி பாஸ் :}
நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது தயவு செய்து இலக்கத்தை சரி பார்த்து மீண்டும் அழைக்கவும்^_ 
சரியான இலக்கத்தை தாருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by நண்பன் Thu 28 Nov 2013 - 8:04

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 
உங்களுக்கு பிடிக்குமா? அதிர்ச்சி *#
சாரி பாஸ் ராங் நம்பர்_* 
இப்ப என்னாச்சி பாஸ் :}
நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது தயவு செய்து இலக்கத்தை சரி பார்த்து மீண்டும் அழைக்கவும்^_ 
சரியான இலக்கத்தை தாருங்கள்
பானுக்காவிடம் கேழுங்கள்(_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by பானுஷபானா Thu 28 Nov 2013 - 11:12

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 
உங்களுக்கு பிடிக்குமா? அதிர்ச்சி *#
சாரி பாஸ் ராங் நம்பர்_* 
இப்ப என்னாச்சி பாஸ் :}
நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது தயவு செய்து இலக்கத்தை சரி பார்த்து மீண்டும் அழைக்கவும்^_ 
சரியான இலக்கத்தை தாருங்கள்
பானுக்காவிடம் கேழுங்கள்(_ 
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by நண்பன் Thu 28 Nov 2013 - 11:19

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 
உங்களுக்கு பிடிக்குமா? அதிர்ச்சி *#
சாரி பாஸ் ராங் நம்பர்_* 
இப்ப என்னாச்சி பாஸ் :}
நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது தயவு செய்து இலக்கத்தை சரி பார்த்து மீண்டும் அழைக்கவும்^_ 
சரியான இலக்கத்தை தாருங்கள்
பானுக்காவிடம் கேழுங்கள்(_ 
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by பானுஷபானா Thu 28 Nov 2013 - 12:12

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:பிஞ்சி கத்தரிக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் :”@: 
உங்களுக்கு பிடிக்குமா? அதிர்ச்சி *#
சாரி பாஸ் ராங் நம்பர்_* 
இப்ப என்னாச்சி பாஸ் :}
நீங்கள் அழைத்த இலக்கம் தவறானது தயவு செய்து இலக்கத்தை சரி பார்த்து மீண்டும் அழைக்கவும்^_ 
சரியான இலக்கத்தை தாருங்கள்
பானுக்காவிடம் கேழுங்கள்(_ 
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
^_ 
என்ன இளிப்பு?(_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by Nisha Sat 19 Apr 2014 - 18:40

வரி வரியாய் நார்ச்சத்து கொண்ட பீர்க்கங்காய்

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Angular_gourd_002

பீர்க்கங்காயில் இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம்.

பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது.

இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.
இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால் அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும்.

தோல் வியாதிகளான சோரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும், உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும்.

வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும்.
சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு சிறந்தது.

பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

நன்றி லங்கா சிறி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by பானுஷபானா Mon 21 Apr 2014 - 12:35

எனக்கு மிகவும் பிடித்த காய்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by ராகவா Tue 22 Apr 2014 - 4:55

எனக்கும் பிடித்த காயும் கூட..
நன்றி பகிற்வுக்கு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by Nisha Wed 23 Apr 2014 - 13:07

சுவையுடன் சுகம் தரும் கத்தரிக்காய்


காய்கறிகளில் என்ன சத்துகள் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து சாப்பிட்டால் நல்லது.
காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Brinjal_003
எத்தனை பேருக்கு தெரியும் நாம் சாப்பிடும் காய்கறியில் என்ன சத்துகள் இருக்கிறது என்று, கேரட், கறிவேப்பிலை கண்களுக்கு உகந்தது என பொதுவாக நாம் அறிந்திருப்போம்.
அந்த வகையில் கத்தரிக்காயின் மருத்துவ நலன்கள் பற்றி அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சுவையுடன் எண்ணற்ற மருத்துவ நலன்களையும், கத்தரிக்காய் நமக்கு அள்ளித்தருகிறது.

பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.
ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம்.

சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.

கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர். நரம்புகளுக்கு வலுவூட்டும், சளி, இருமலை குறைக்கும்.

கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

லங்காசிறி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட் Empty Re: காய்களின் மருத்துவ பயன்கள. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கலர்புல் பீட்ரூட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum