Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது நினைவில் கொள்ளவேண்டியவை..
4 posters
Page 1 of 1

1. மாப்பிள்ளை பார்க்கும் போது, இன்னதை எல்லாம் தாருங்கள் என பட்டியல் இடுவோரை துளியும் யோசிக்காமல் ...ஒதுக்கிடுங்கள். என்ன கேட்டாலும், நிலம் விற்று, கடன் வாங்கி பாடாய் பட்டேனும் கேட்டதைக் கொடுத்து திருமணம் செய்து வைப்பேன் என்ற நினைப்பை தவிர்த்திடுங்கள். அப்படி கடினப்பட்டு செய்வதெல்லாம் ஓர் நாள் நிகழ்வுக்கு தான். பெண்ணுக்குத் தானே தருகிறோம் மகிழ்ச்சியாய் இருப்பாள் என்ற கனவு பொய்த்த பின் அழது பிரோஜனம் இல்லை. மனம் பணத்தை விரும்பும் இடத்தில் மகிழ்ச்சி நிரந்தரமாய் இருக்காது.
2. சில நல்ல எண்ணம் கொண்டவர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லை, நீங்கள் முடிந்ததைச் செய்யுங்கள் இல்லையெனினும் குறையில்லை என்றால், உடனே " இந்த மாப்பிள்ளைக்கு ஏதோ குறை, அது தான் எதுவுமே வேண்டாம் என்கிறார்" என தப்புக் கணக்கு போடாதீர்கள். எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நலமே. அதற்காக, இந்த ஒரே காரணத்திற்காக சந்தேகம் கொள்வது தவறு. மாப்பிள்ளையை நன்றாக விசாரியுங்கள். அதில் தவறில்லை. எதற்காக இவர் ஒன்றும் வேண்டாம் என்கிறார் என்று விசாரிக்காதீர்கள். அந்த ஒரு கண் கொண்டு மட்டுமே விசாரித்தால் நீங்கள் நல்ல வரனை இழக்க கூடும்.
3. வாழ்க்கைத் துணைவி இந்த நடிகையைப் போல் அழகாய் இருக்க வேண்டும் என்பதை விட அவள் என்னுடன் வாழப்போகும் காலத்தில் ஓர்நாள் கூட என்னிடம் நடிக்காதவளாய் இருக்க வேண்டும் என்று ஆண்கள் எண்ணுவதே நலம்.
4. பெண்களும் வாழ்க்கை துணை இந்த நடிகனைப் போல் இருக்க வேண்டும் என ஒரு போதும் எண்ணாமல் இருத்தல் நலம். அப்புறம் உங்களுக்கு ஆபத்து என்றால் சண்டை போட டூப் தேட வேண்டியிருக்கும். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் துணையாய் இருப்பவரே வாழ்க்கை துணை என்பதை நம்புங்கள்.
5. படித்தவர் துணையாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறில்லை. ஆனால் பொறியியல் மட்டுமே படித்திருக்க வேண்டும் கணியில் செய்யும் மென்பொருள் வேலை மட்டுமே நல்ல தொழில் என்று எதிர்பார்ப்பது தவறே. எவ்வளவு பணம் கட்டியாவது பொறியியல் படிக்கவேண்டும் என்ற நிலைமை ஒரு புறம் இருக்க, எவ்வளவு கொடுத்தேனும் பொறியியல் துறை மாப்பிள்ளையை பிடிக்க வேண்டும் என்பது இன்னொரு பக்கம் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.
6. ஆண் வீட்டாரோ, பெண் வீட்டாரோ பார்த்த வரன் பிடித்திருக்கா இல்லையா என்பதை நேரமாய் நேர்மையாய் சொல்லி விடுங்கள். அதில் யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. இன்று சொல்கிறேன், நாளை சொல்கிறேன். இப்ப பிடிச்சிருக்கு ஆனா மேற்கொண்டு அப்புறம் பேசலாம் என்று ஜவ்வு மாறி இழுத்து அடுத்தவர் மனதில் தேவையற்ற எதிர்பார்ப்புகளை விதைத்து அவர்களை துன்புறுத்தாதீர்கள். எந்த அளவுக்கு இன்று மணமுறிவுகள் அதிகம் இருக்கோ அதே அளவிற்கு மனங்கள் இணையும் திருமணமும் கடினமாகத் தான் இருக்கிறது.
இந்த ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டின் 7.4 கோடி மக்கள் தொகையில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற நல்ல நிலையில் தான் இருக்கிறது. இருந்தும் இங்கு பலருக்கு பல வருடங்கள் தேடினாலும் நல்ல வரன் அமைவதில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் தேவையற்ற எதிர்பார்ப்புகளே. உங்களின் அதிக பட்ச எதிர்ப்பார்ப்பாக நல்ல மனதையும், குணத்தையும் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால், இனிதாய் ஓர் இல்லறம் அமைந்துவிடும். இரு மனங்கள் இணைந்தால் மட்டுமே அது திருமணம். மான்யங்கள் கொண்டு விலைபேசப்பட்டால் அது வெறும் மணமே!
நன்றி முகநூல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது நினைவில் கொள்ளவேண்டியவை..
கண்டிப்பாக என்னை போல் உள்ளவர்களுக்கு பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
Re: திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது நினைவில் கொள்ளவேண்டியவை..
!_ !_Muthumohamed wrote:கண்டிப்பாக என்னை போல் உள்ளவர்களுக்கு பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கணினியோடு வேலை செய்யும் போது நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை !
» இவைகளை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோணுறது
» வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.
» வாகனம் ஓட்டும்பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை
» நினைவில் ஒரு சொற்றொடர்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum