Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்
+7
rammalar
நண்பன்
பானுஷபானா
*சம்ஸ்
jafuras
Muthumohamed
ராகவா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்
First topic message reminder :
பச்சை வாழை அல்சர் நோயைக் குணப்படுத்தும். அதிக அளவில் சக்தியைத் தருவதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
சீதபேதி உள்ளவர்களுக்கு வாழைப் பழத்தைப் பிசைந்து, சிறிது உப்பு சேர்த்து உண்ணக் கொடுத்தால் சீதபேதி கட்டுப்படும்.
மலச்சிக்கலைத் தவிர்க்கும். மூலநோய் உள்ளவர்கள் தினமும் இரவில் தவறாமல் வாழைப்பழம் உண்ண வேண்டும்.
இரத்த சோகை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப்பழம் உண்டு வந்தால் உடலில் இரத்தம் ஊறும்
.
காசநோய் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகும்.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி:லைப் ஸ்டைல்
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது.
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.
மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.
எளிதில் ஜீரணமாகும். நோயாளிகளும் உண்ணலாம்.பச்சை வாழை அல்சர் நோயைக் குணப்படுத்தும். அதிக அளவில் சக்தியைத் தருவதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
சீதபேதி உள்ளவர்களுக்கு வாழைப் பழத்தைப் பிசைந்து, சிறிது உப்பு சேர்த்து உண்ணக் கொடுத்தால் சீதபேதி கட்டுப்படும்.
மலச்சிக்கலைத் தவிர்க்கும். மூலநோய் உள்ளவர்கள் தினமும் இரவில் தவறாமல் வாழைப்பழம் உண்ண வேண்டும்.
இரத்த சோகை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப்பழம் உண்டு வந்தால் உடலில் இரத்தம் ஊறும்
.
காசநோய் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகும்.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்
நாரத்தம் காய் என சொல்வது ஆரஞ்சு போல் தோலை எடுத்து விட்டு சாப்பிட கூடிய மண்டரின் பழவகைகளில் பச்சை தோலை உடைய பழம் தானே..
பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்.
பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்
மண்டரின் பழவகைகளின் ஒன்றுதான் இதுவும். )(Nisha wrote:நாரத்தம் காய் என சொல்வது ஆரஞ்சு போல் தோலை எடுத்து விட்டு சாப்பிட கூடிய மண்டரின் பழவகைகளில் பச்சை தோலை உடைய பழம் தானே..
பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
பேரிக்காயின் மகத்துவம்!
பேரிக்காயின் மகத்துவம்!
குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பேரிக்காயை நாம் காய் என்று அழைத்தாலும் உண்மையில் அது பழம் தான்.
மலைப்பகுதிகளில் விளையக்கூடிய இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து கணிசமான அளவு உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு
வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.
இதயப் படபடப்பு நீங்க
இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.கர்ப்பிணிப் பெண்களுக்கு
கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.தாய்ப்பால் சுரக்க
பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
வாய்ப்புண் குணமாக
வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு.தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
வயிற்றுப் போக்கு
உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.சிறுநீரக கல்லடைப்பு நீங்க
இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.cool swiss
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்
இதயம் சீராக துடிக்க வேண்டுமா? கிவி பழம் சாப்பிடுங்கள்
மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.
கிவி பழத்தின் தோல் பச்சை நிறத்துடனும், பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும்.
இப்பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ அதிகம்.
இது தோல் நோய்கள், இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்க வைட்டமின் சியை பயன்படுகிறது.
இதில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் டயாபடீஸ் நோய் குணமாகும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சளி போன்றவற்றிலிருந்து கிவி பழம் பாதுகாக்கும்.
இது குறைந்த அளவு கொழுப்பு சத்துகளை கொண்டுள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம்.
முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய கண் புரை, விழித்திரை சிதைவு, கண் நோய்களைத் தடுக்க தேவையான அளவு வைட்டமின் சி சத்துகளை கொண்டுள்ளதால் முதுமையில் இந்நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மேலும் இதயத்துடிப்பின் சீரற்ற நிலையை தடுத்து சீரான இயக்கத்திற்கு உதவி புரிகிறது.
கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது
நன்றி..லங்காசிறி

சுகமான வாழ்க்கை தரும் சுவையான பலா
முக்கனிகளில் ஒன்றான பலா மிகுந்த சுவை கொண்டதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.
* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.
* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.
* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.
* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.
* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.
* பலா மரத்தின் வேலை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.
* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு தேய்த்தால் அவை குணமாகும்.
* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.
ஒரு எச்சரிக்கை:
பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.
* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும்.
* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.
* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.
* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும்.
இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

ஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை
பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம்.
அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், சாராசரியாக மனித ஆயுளை 10 சதவீதம் அதிகரிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
தக்காளி, ப்ராகலி, ப்ளூபெரி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிக அளவு உள்ளது. அவற்றில் பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் ஆயுளையும் அதிகரிக்கிறது. இது ஆப்பிளில் மிக அதிக அளவில் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடல் மற்றும் மூளைச் செல்களின் செயல்பாட்டையும் தூண்டுகிறது.
அன் ஆப்பிள் எ டே, கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது அனைவரும் அறிந்த மொழி. “நாளும் ஒரு ஆப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு.பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது.
கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.
ஆப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய ஆப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. ஆப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போனது. மேலும் இந்தக்கட்டிகள் தீங்கற்றவையாகவும் மாறிப்போயின.
மனிதர்களிலும் விலங்குகளிலும் மார்பகப்புற்றுநோய்க்கு காரணமான adenocarcinoma எனப்படும் ஆபத்தான கட்டிகள் மரணத்தை விளைவிக்கக்கூடியவை. பேராசிரியர் லியு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 81 சதவீதமாக இருந்தது.
24 வாரங்களுக்கு நாளொன்றுக்கு ஓர் ஆப்பிள் பழத்தின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 57 சதவீதமாக குறைந்தது.
நாளொன்றுக்கு மூன்று ஆப்பிள் பழங்களின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 50 சதவீதமாகவும், நாளொன்றுக்கு ஆறு ஆப்பிள் பழங்களின் சாறு கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு இந்த பாதிப்பு 23 சதவீதமாகவும் குறைந்து போயிருந்தது.
ஆப்பிள்பழங்களில் காணப்படும் phytochemicals எனப்படும் வேதிப்பொருள்கள் மார்பகப் புற்றுநோய் செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் NFkB என்ற பாதையை தடைசெய்துவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அன்றாட உணவில் பழங்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் பால்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டுப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே பொருள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இருந்தாலும் அந்தக் கட்டுரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் லியு வின் புதிய ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ள phenolics or flavonoids எனப்படும் phytochemicals பெற்றிருக்கின்றன என்பதை படம் தெளிவாக்குகிறது
http://www.lankasritechnology.com/view.php?22yOld0bcX90Qd4e24MM302cBnB3ddeZBnL303e6AA2e4C09racb2lOI43

ஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை...!
-
இயற்கை உரம் போட்டு வளர்த்த
காலத்தில் ஏற்பட்ட பழமொழி...!
-
செயற்கை உரத்தில் விளையும் ஆப்பிளுக்கு
பொருந்தாது...!
மேலும் பழங்கள் நீண்ட காலத்துக்கு கெடாமல்
இருக்க ரசாயன பூச்சு தடவப்படுகிறது..! என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும்...

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்
மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.
. தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.
. ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
. நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
. ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.
. அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும், நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.
.நெல்லிக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும், குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும்.
இவ்வாறான வழிகளில் நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், மரணத்தை கூட தள்ளிப்போடலாம்.
Lankasri

rammalar wrote: ஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை...!
-
இயற்கை உரம் போட்டு வளர்த்த
காலத்தில் ஏற்பட்ட பழமொழி...!
-
செயற்கை உரத்தில் விளையும் ஆப்பிளுக்கு
பொருந்தாது...!
மேலும் பழங்கள் நீண்ட காலத்துக்கு கெடாமல்
இருக்க ரசாயன பூச்சு தடவப்படுகிறது..! என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும்...
-
-
சுத்தமான நீரில் கழுவுவதோடு தோலோடு சாப்பிடாமல் தோலை சீவி வீசி விட்டு சாப்பிடலாம். எங்களுக்கு இங்கே பிரெஷ் அப்பிள் பழங்களே கிடைக்கும். ஆப்பீள் பழங்கள் பழுக்க முன் வரும் பருவம் மாங்காய் போல் புளிப்பாய் இருக்கும். உப்பு தூவி சாப்பிடுவோம்
திருட்டு மாங்காய் போல் திருட்டு ஆப்பிளில் சுவையே தனி என்பதை இப்போதும் சுவைத்து அனுபவிப்பர்கள் நாங்களாக்கும்.
ஆப்பிள் மட்டுமல்ல இப்பொழுது எல்லாக்காய்கள் பழங்கள் கீரைகள். பருப்பு பயறு வகைகள் நெல் என எல்லாமே செயற்கை உரம் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்
சத்தான சப்போட்டா
தித்திக்கும் சுவை கொண்ட சப்போட்டா அதிக மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்தது.
சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது.
செரிமானப் பாதையை சரிசெய்வதன் மூலம், அது உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. கூடுதல் அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன.
இத்தகைய கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.
சப்போட்டா பழத்தைத் சாப்பிடுவதால், மார்புகளில் சளித்தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவாசக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இருமலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை தின்பதால், அது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாகச் (அதிகமாக வெளியேற்ற) செயல்படுத்தப் பயன்படுகின்றன. இதனால் சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை மற்றும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது.
சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத் தலாம். சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.
அதிலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் `ஈ' சத்தி னால், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் பெற உதவி செய்கிறது.
எனவே, சப்போட்டா பழம் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது. சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது.
கூல் சுவிஸ்

வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும்.
ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.
அதில் வைட்டமின் `ஏ’, வைட்டமின் `பி’ 6, வைட்டமின் `சி’, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக வாழைப்பழத்தில் மட்டும் நன்மைகள் நிறைந்திருப்பதில்லை, வாழைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையில் பயன்படுகிறது. மேலும் அதன் ஒவ்வொன்றிலும், நிறைய சத்துக்கள் உள்ளன.
இப்போது அதில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
அலர்ஜி
அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும்.
ரத்த சோகை
அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி, ரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும்.
அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.
வயிற்றுக்கடுப்பு
மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தலை பாரம்
மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.
புகைப்பிடித்தலை நிறுத்த
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.
மன அழுத்தம்
வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
குடல் கோளாறு
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும்.
மூளை செயல்பாடு
பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை தொடங்குங்கள்.
சிறுநீரக பிரச்சனை
வாழைப் பழத்தில் உள்ள குறைந்த அளவு புரோட்டீன் மற்றும் உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும்.

பயன்தரும் தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பழங்களும் அதன் பயன்களும். வரம் தரும் வாழைப்பழம்
ஆனால், இப்போதெல்லாம் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு
மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைப் பழத்தை சாப்பிட
வேண்டாம் என்று சில மருத்துவர்களே ஞாபகமாக எச்சரித்து
அனுப்புகிறார்களாம்.
-
தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-
தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்
கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி,
புட் பாய்சன் என்று அவதிப்பட இந்த மரபணு மாற்று மஞ்சள்
வாழைப்பழங்களும் ஒரு காரணம் எனறு கூறப்படுகிறது.
-
குழந்தைகளுக்கோ உறவினர்களுக்கோ வாழைப்பழம் வாங்கப்
போகும் போது இந்த பெரிய வகை மஞ்சள் பழங்களை
வாங்குவதைத் தவிர்க்கலாம்.
-
----------------
மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைப் பழத்தை சாப்பிட
வேண்டாம் என்று சில மருத்துவர்களே ஞாபகமாக எச்சரித்து
அனுப்புகிறார்களாம்.
-
தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-
தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்
கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி,
புட் பாய்சன் என்று அவதிப்பட இந்த மரபணு மாற்று மஞ்சள்
வாழைப்பழங்களும் ஒரு காரணம் எனறு கூறப்படுகிறது.
-
குழந்தைகளுக்கோ உறவினர்களுக்கோ வாழைப்பழம் வாங்கப்
போகும் போது இந்த பெரிய வகை மஞ்சள் பழங்களை
வாங்குவதைத் தவிர்க்கலாம்.
-
----------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பழங்களும் பயன்களும்
» பழங்களும் பயன்களும்!
» பழங்களும் அதன் குணங்களும்..
» அபிசேகங்களும் அதன் பயன்களும்
» பாக்கு அதன் பயன்களும்.
» பழங்களும் பயன்களும்!
» பழங்களும் அதன் குணங்களும்..
» அபிசேகங்களும் அதன் பயன்களும்
» பாக்கு அதன் பயன்களும்.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum