Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
குஜராத் கலவரத்தைப்பற்றி குஜராத்தில் பணிபுரிந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ்மந்தர் தரும் செய்தி...
2 posters
Page 1 of 1

குஜராத் மாநிலத்தைக் குலுக்கிய, 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற அப்பாவி முஸ்லிம் மக்கள் படுகொலை நடந்தேறி பத்து நாட்கள் கழித்த பிறகு, பேரச்சத்துடனும், மிகுந்த மன வேத னையுடனும், வெறுப்புடனும், ஏமாற்றத் துடனும் மனம் மரத்துப் போன நிலை யில் குஜராத்திலிருந்து நான் திரும்பி வந்தேன். குற்ற உணர்வினாலும், அவமான உணர்வினாலும் எனது மனம் நோய்வாய்ப் பட்டது; எனது ஆன்மா சோர்வடைந்தது; எனது தோல்கள் வலித்தன.
இக்கலவரத்தில் உயிர் தப்பி வீடிழந்த 53,000 மக்கள் -ஆண்கள், பெண்கள், குழந்தைகள்- தங்க வைக்கப்பட்டிருந்த 29 தற்காலிக முகாம்களினூடே நடந்து செல்லும் போது, அசாதாரணமான, கட்டுக் கடங்கா சோகம் அங்கே நிலவுவதைக் காண முடிந்தது.. முகாம்களில் இருந்த மக்கள் அன்று அவர்களுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள இருந்த ஒரே உடமையான சிறு சிறு துணி மூட் டைகளை - அதுவும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினால் - கண்ணீரால் கலங்கிய கண்களுடன், தங்கள் கைகளில் பத்திரமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர். சிலர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர். மற்றும் சிலர் அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உணவையும் குழந்தைகளுக்கான பாலையும் தேடிப் பெறும் செயலில் ஈடுபட்டிருந்தனர். மற்றும் சிலர் காயமடைந்தவர்களின் காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டி ருந்தனர்.
இத்தகைய முகாம்கள் ஒன்றின் ஏதோ ஓரிடத்தில் நீங்கள் உட்கார்ந்தீர் களானால், அங்கிருக்கும் மக்கள் உங்களுடன் பேசத் தொடங்கி விடு வார்கள். நீண்ட நாட்களாக ஆறாமல் புரையோடிப் போயிருக்கும் புண்ணை அறுத்தால் கொட்டும் சீழ்போல் அவர்கள் சொற்கள் இருக்கும். தங்க ளுக்கு இழைக்கப்பட்ட கொடுமை களைப் பற்றி அவர்கள் தெரிவித்த செய்திகளை எழுத எனது பேனாவும் நடுங்கியது. ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் கும்பல் திட்டமிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்திய இரக்கமற்ற காட்டாண்டித்தனமான தாக்குதலும், இழைக்கப்பட்ட கொடுமைகளும், கடந்த நூற்றாண்டில் நடந்தேறி நமது தேசத்தை அவமானத்தால் குன்றிப் போகச் செய்த இதற்கு முன் நடந்த எந்த ஒரு கலவரத்திலும் கண்டிராத அளவுக்கு இருந்தன.
அவர்களிடமிருந்து கேட்ட செய் திகள் மற்றும் நேரில் கண்ட நிகழ்ச்சி களில் ஒரு சிலவற்றையாவது கட்டாய மாக எழுதவேண்டும் என்று எனக்கு நானே தீர்மானித்துக் கொண்டேன். இவற்றைப் பற்றியெல்லாம் நாமெல்லோ ரும் அறிந்து கொள்வது முக்கியம் என்பதே இதன் காரணம். அத்துடன், எனது மனச் சுமையை இதன் மூலம் நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள் ளவும் இயலக்கூடும்.
தன்னைக் கொல்லாமல் விட்டு விடும்படி 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மன்றாடியதைப் பற்றியும், ஆனால் அவளைத் தாக்கியவர்கள், அவளது வயிற்றினைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து, அவளது கண் முன்னாலேயே அதனை வெட்டிக் கொன்றதைப் பற்றியும் உங்களால் என்ன கூற இயலும்? 19 பேர் வாழ்ந்து வந்த ஒரு வீட்டிற்குள் தண்ணீரை நிரப்பி, அதில் மின்சாரம் பாய்ச்சி அவர்களைக் கொன் றதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்?

Last edited by Muthumohamed on Mon 23 Dec 2013 - 6:05; edited 1 time in total
Re: குஜராத் கலவரத்தைப்பற்றி குஜராத்தில் பணிபுரிந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ்மந்தர் தரும் செய்தி...
தனது தாயையும், தனது 6 சகோதர சகோதரிகளையும் தன் கண் முன்னா லேயே வெட்டிக் கொலை செய்ததைப் பற்றி ஜூஹாபுரா முகாமில் இருந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் கூறியதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்? அவன் தாக்கப்பட்டபோது மயங்கி விழுந்து விட் டதால், அவன் இறந்து விட்டான் என்று நம்பி கலவரக்காரர்கள் விட்டு விட்டுச் சென்றதால் அச்சிறுவன் உயிர் தப்பினான். கலவரத்தால் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்ட அஹமதாபாதின் நரோடா - பாடியா குடியிருப்பில் இருந்து தப்பி ஓடிய ஒரு குடும்பத்தினர், எவ்வாறு ஒரு இளம்பெண்ணும் அவளது மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளனர். அவளை ஒரு காவலர் பாதுகாப்பான இடம் என்று கூறி அனுப்பி வைத்த இடத்தில் ஒரு கலவரக்கார கும்பலால் அவளும் அவளது குழந்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி எவ்வாறு எரிக்கப்பட்டனர் என்பதை அவர்கள் கூறியுள்ளனர்.
குஜராத்தில் ஒட்டு மொத்தமாக நடந்தேறிய காட்டாண்டி செயல்களில், பெண்களின் மீதான பாலியல் வன் கொடுமையை ஒரு வன்முறைக் கருவி யாகவே பரவலாக பயன்படுத்தியதைப் போன்று, இதற்கு முன் நடந்தேறிய எந்த ஒரு கலவரத்திலும் நடந்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.
இளம்பெண்களும், முதிர்பெண்களும் கூட்டங் கூட்டமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டது பற்றிய அறிக்கைகள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து கொண்டேயிருந்தன. இப்பெண்கள் எல்லாம் அவர்களது குடும் பத்து ஆண்களின் கண் முன்னாலேயே பாலியல் வன்முறை செய்து, பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ அல்லது சம்மட்டியால் அடித்தோ கொல்லப்பட்டுள்ளனர்; ஓரிடத் தில் ஒரு ஸ்க்ரூ டிரைவராலேயே ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.
அச்சத்தினால் பீதியடைந்திருந்த பெண்களை மேலும் அச்சுறுத்துவதற் காகவே, அவர்களின் கண் முன்னாலேயே, ஆயுதம் ஏந்திய கலவரக்கார ஆண்கள் தங்களை நிர்வாணப்படுத்திக் கொண் டனர் என்ற செய்தியை ஆமன் சவுக் முகாமில் இருந்த பெண்கள் கூறினர். அஹமதாபாத்தில் நான் சந்தித்த - சமூகப் பணியாளர்கள், பத்திரிகையா ளர்கள், கலவரத்தில் இருந்து உயிர் தப்பி யவர்கள் - ஆகிய மக்களில் பெரும்பா லோர், குஜராத்தில் நடந்தது கலவரமே அல்ல என்பதையும், நன்கு திட்டமிடப் பட்ட ஒரு தீவிரவாத இனப் படுகொ லையே அது என்பதையும் ஒப்புக் கொண்டனர்.
ஒரு வெளிநாட்டு எதிரியின் படை மீது நடத்தப்படும் ராணுவத் தாக்குதல் போன்று நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப் பட்ட படுகொலை, கொள்ளையைப் பற்றியே ஒவ்வொருவரும் பேசிக் கொண்டனர்.
கலகத்தைத் தூண்டிவிடும் முழக்கங் களை முன்னே வரும் ஒரு டிரக் ஒலி பரப்பிக் கொண்டே வரும். அதன் பின்னே வரும் பல டிரக்குகளில் கலவரக் கும் பலைச் சேர்ந்த, ராணுவ சீருடை போல காக்கி கால்சட்டையும், காவி மேல்சட் டையும் அணிந்த இளைஞர்கள், நெருக் கியடித்துக் கொண்டு வந்தனர். அவர்கள் நவீன ஆயுதங்களையும், நாட்டு ஆயுதங் களையும், கத்திகளையும், திரிசூலங் களையும் ஏந்தி வந்தனர். தங்களுக்கு தாகம் எடுத்தபோது அருந்துவதற்காக தண்ணீர் பாட்டில்களையும் அவர்கள் கொண்டு வந்தனர்.

கலவரப் பகுதிகளில் இருந்த கலவரக் காரர்களுடன் அவர்களின் தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அறிவுரை வழங்கிக் கொண்டும், கலவர நிகழ்ச்சிகளைப் பற்றி ஓருங் கிணைப்பு மய்யத்துக்கு அவ்வப்போது செய்திகளைத் தெரிவித்துக் கொண்டு மிருந்ததைக் காணமுடிந்தது. முஸ்லிம் குடும்பங்கள் அவர்களது சொத்துகள் பற்றிய விவரங்கள் பட்டியலிடப்பட்டிருந்த ஆவணங்களையும், கணினி தகவல் விவரங்களையும் சிலர் பார்த்துக் கொண் டிருந்தனர். சிறுபான்மை சமூகத்தினரான முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வியாபாரம், குடும்பங்கள் போன்ற விவ ரங்களை அவர்கள் நன்கு அறிந்திருந் தனர். இந்து பெண்களை மணந்து கொண்ட முஸ்லிம்கள் கலவரத்தில் கொல்லப் படாமல் இருக்க அத்தகை யவர்களின் பட்டியலும் அவர்களிடம் இருந்தது.
பொது மக்கள் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு யதேச்சையாக கோபத்துடன் கொதித்து எழுந்த நிகழ்ச்சியல்ல அது; மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையே அது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு டிரக்குகள் சென்றன. பணக்கார முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் முதலில் கொள்ளையடிக்கப்பட்டன; அவர்களிடமிருந்து மதிப்பு மிகுந்த பொருள்களை எல்லாம் கொள்ளை யடித்தபிறகு, எரிவாயு சிலிண்டர்களில் இருந்து காஸ் அவர்களின் வீட்டிற்குள் சிறுது நேரம் செலுத்தப்படும். குழுவில் உள்ள பயிற்சி பெற்ற நபர் ஒருவர் கட்டிடத்தினுள் செலுத்தப்பட்ட எரி வாயுவை மிகத் திறமையாக வெடிக்கச் செய்வார். சில இடங்களில் வெல்டிங் வேலை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஆசிடிலின் வாயு சிலிண்டர்களும் பெரிய கான்கிரீட் கட்டடங்களைத் தகர்க்கப் பயன்படுத்தப்பட்டன. மசூதி களும், தர்காக்களும் தரைமட்ட மாக்கப்பட்டன. அந்த இடங்களில் ஹனுமான் சிலைகள் வைக்கப்பட்டு, காவிக் கொடிகள் ஆங்காங்கே ஏற்றப் பட்டன.
அகமதாபாத் மாநகரத்தின் சில குறுக்குத் தெருக்களில் இருந்த தர்காக் கள் இரவோடு இரவாக இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன. அந்த இடங்களில் சாலை அமைக்கும் கட்டுமானப் பொருள்கள் வைக்கப்பட்டு, அந்த இடங்கள் சாலைகளாக மாற்றப்பட்டன. இடிக்கப்பட்ட இடங்களை வேறுபடுத் திக் காண முடியாதபடி அவை அடை யாளம் தெரியாத அளவுக்குத் சாலை களாகவே ஆக்கப்பட்டுவிட்டன. முன்பு தர்காக்கள் இருந்த இடங்கள் மீது, அங்கு தர்காக்களே எப்போதும் இருந் தது இல்லை என்று எண்ணும்படி, இப்போது வாகனங்கள் பயணித்துக் கொண்டுள்ளன.
காவல் துறையும், நிர்வாகத் துறையும் மனச்சாட்சியே இல்லாமல் கலவரத்தை அடக்கத் தவறியது மட்டுமல்லாது, கலவரக்காரர்களுக்கு ஆதரவாக உதவிகள் செய்ததும் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும். காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை கலவரக் காரர்கள் இருக்கும் இடத்துக்கே ஏமாற்றி அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. பாதுகாப்பு அளிக்கக் கோரிய அப்பாவி முஸ்ஸிம் மக்களின் கோரிக்கையை செவியில் ஏற்காத காவல்துறையினர் கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங் களில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
(ஏக்ஷன் எய்ட் (Action Aid) என்னும் ஒரு முன்னேற்ற திட்ட அமைப்பில் தற்போது அயல் பணியாற்றிவரும் ஹர்ஷ்மந்தர் ஒரு அய்.ஏ.எஸ். (I.A.S.) அதிகாரியாவார்.)

-
வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்போது
இவர் சாட்சியம் அளித்தாரா..?
-
வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்போது
இவர் சாட்சியம் அளித்தாரா..?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25302
மதிப்பீடுகள் : 1186
Re: குஜராத் கலவரத்தைப்பற்றி குஜராத்தில் பணிபுரிந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ்மந்தர் தரும் செய்தி...
rammalar wrote:-
வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்போது
இவர் சாட்சியம் அளித்தாரா..?
-
சாட்சியம் அளிக்க இவரை மோடி அரசு விட்டு இருக்காதே .........
Similar topics
» கமல் செய்தி குழுவில் மும்பை பெண் அதிகாரி
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்..........!!
» விஷத்தை கண்டுபிடிக்க அவரது உணவை சாப்பிடச் சொன்ன ஹிட்லர்- பணிபுரிந்த பெண்
» குஜராத்தில் 9 குழந்தைகள் பலி : விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum