சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம் Khan11

அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம்

4 posters

Go down

அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம் Empty அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம்

Post by Muthumohamed Sun 5 Jan 2014 - 21:58


அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம் 1545176_447563245372126_1727978773_n


மதீனாவுக்கு புனித யாத்திரை சென்ற 299 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திளுடன் சவுதி அரசுக்கு சொந்தமான ‘போயிங் 767’ ரக விமானம் அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம் - அல்லாஹு அக்பர் ஈரான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஷாட்டில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு புனித யாத்திரை சென்ற 299 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திளுடன் சவுதி அரசுக்கு சொந்தமான ‘போயிங் 767’ ரக விமானம் இன்று மதீனா நகரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக விமானத்தின் வலதுபுற சக்கரம் வெளியே வருவதில் இடையூறு ஏற்பட்டது. இதனால், அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதிக்குமாறு மதீனா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அனுப்பினார். அதிகாரிகளும் உரிய அனுமதியை வழங்கினர். இதனையடுத்து, விமானத்தை தாழ்த்தி ஓடுபாதையில் இறக்குவதற்கு விமானி முயன்றார். விமானம் சமமான நிலையில் தரை இறங்குவதற்கு வலது மற்றும் இடது புறத்தில் உள்ள சக்கரங்கள் ஒரே நேரத்தில் தரையை தொட வேண்டும். ஆனால், திடீர் கோளாறு காரணமாக வலதுபுற சக்கரம் கீழே இறங்காததால் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய அந்த விமானம் நிலை தடுமாறியது. விமானத்தின் வலதுபுற வயிற்றுப் பகுதி ஓடுபாதையில் தேய்த்துக் கொண்டே சென்றது.

இதனால் ஏற்பட்ட உராய்வின் வெப்பத்தில் விமானத்தில் இருந்து தீப்பொறி கிளம்பியது. இந்த அதிர்வினால் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் நிலைதடுமாறிப் போனார்கள். 29 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 17 பேர் முதலுதவிக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர். 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தினால் விமான நிலையத்தின் ஓடுபாதை 24 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது. ஓடுபாதையை செப்பனிடும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான். 4:100 (நபியே! ) உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 15:99

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக. 62:8 உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். 63:10 இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான் 22:66

முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான். 3:156

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!” 4:78
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம் Empty Re: அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம்

Post by பானுஷபானா Mon 6 Jan 2014 - 12:20

அல்லாஹ் அக்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம் Empty Re: அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம்

Post by *சம்ஸ் Mon 6 Jan 2014 - 15:16

அல்லாஹூ அக்பர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம் Empty Re: அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம்

Post by gud boy Tue 7 Jan 2014 - 19:24

அல்லாஹு அக்பர்...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம் Empty Re: அல்லாஹுவின் மாபெரும் பேரருளால் - புனித மதீனாவில் ஒற்றை சக்கரத்துடன் தரையிறங்கிய விமானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum