Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி
3 posters
Page 1 of 1
தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி
தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி.. நண்பர்களே பகிருங்கள்...
பண்டிகை தினங்கள் படும் பாடு சொல்லி மாளது. பண்டிகைகள் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து மகிழும் நாளாகவே கடந்த சில வருடங்கள் வரை நிகழ்ந்து வந்தது. அதை வணிகர்கள் தினமாக மாற்றிய பெருமை நமது தொலைக்காட்சி நிறுவனங்களையும், மற்றும் ஆசை காட்டி மோசம் செய்யும் வியாபாரிகளையே சாரும் ........
எந்த மாதம் பண்டிகை இல்லை? எந்த நாளில் வர்த்தகம் இல்லை? எதற்கு இந்த இரண்டையும் இணைத்து, வியாபார நோக்கங்களை தவறான பாதையில் செலுத்த வேண்டும்?
இந்த உள்ளக் குமுறல், பண்டிகை நாட்களை வைத்து வியாபாரம் செய்யும் குள்ள நரி வணிகர்களைக் குறித்தும், அதனால் கடனாளியாகி உபாதைகளுக்கு உள்ளாகும் சாமான்ய மக்களைக் குறித்தும்தான்.
மேற்கு நாடுகளில் கிருத்துமஸ் தினத்திலும் புது வருட முதல் நாளில் மட்டுமே 'தள்ளுபடி' விற்பனை எனும் உத்தி, இது நாள் வரை இருந்து வருகிறது.
இதைப் பார்த்த நம்மூர் முதலாளிகளுக்கு, இந்த சென்டிமென்டினால் வரும் மிகப்பெரிய இலாபம் குறித்து சிந்திக்க தொடங்கியதன் பலன்தான் 'தள்ளுபடி' வியாபாரம்.
இதன் பின்னே உள்ள உளவியல் கருத்து என்ன? ரொம்பவும் எளிமையான ஒன்று.
பண்டிகை நாட்களில் உங்களுக்கு விடுமுறை. நீங்களும் சமைத்து சாப்பிட்டு நிம்மதியாக தூங்க உங்களுக்குக் கிடைத்த 24 மணி நேர சாவகாசம். வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறீர்கள். வெளியே செல்லவில்லை என்றால் பொருட்கள் வாங்க மாட்டீர்கள். ஆகவே வியாபாரம் மந்தமாகிப் போகிறது.
ஆக வணிகர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள், சும்மா வீட்டில் இருக்கும் உங்களை வெளியே வரவைக்க வேண்டும். உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் உங்களை எதையாவது வாங்க வைத்து விட வேண்டும்.
அதற்கான மாஸ்டர் ப்ளான் அவர்களிடம் இருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்....
பண்டிகையும் நகை வாங்கும் நாளையும் அவர்கள் நிர்ணயிக்கிறார்கள். பக்கம் பக்கமாக ஏன் அட்சயத் திருதியை அன்று தங்க நகை அல்லது பிளாட்டினம் வாங்க வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஏன்? அவர்களுக்கு வியாபாரம் நடக்க வேண்டாமா?
வருடம் முழுதும் மாதங்கள் வருகிறது. மாதத்தில் சில நாட்கள் தவிர மற்ற நாட்களில் எல்லா மதத்தவருக்கும் ஏதாவது ஒரு பண்டிகை அல்லது விழா வருகிறது. இந்த நாட்கள் தள்ளுபடி விற்பனை வணிகர்களுக்கு கொண்டாட்ட நாள்.
சில முக்கியமான தள்ளுபடி நாட்களை நினைவு கூறுகிறேன், புது வருடம், ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு, சித்திரை விஷு, ஆடிமாதம் முழுதும், தீபாவளி, பொங்கல், ரம்ஜான், உகாதி, அட்சயத் திருதியை, கிருத்துமஸ், மொஹரம், ஈத் பெருநாள், ஈஸ்டர், தனிப் பெரும் தள்ளுபடி விழா என்று தீவுத்திடலிலும், வள்ளுவர் கோட்டத்திலும், சென்னை வர்த்தக மையத்திலும், மற்றும் பல கல்யாண மண்டபங்களிலும் என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தள்ளுபடி நாளுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே நீங்கள் தள்ளுபடி விலையைப் பெறலாம் என்று விளம்பரங்கள் தினசரி பத்திரிக்கைகளில் வந்து கொண்டே இருக்கும். பண்டிகை நாள் நெருங்க நெருங்க தினசரிப் பத்திரிகையில் செய்திகளுக்கு பதில் இவர்களது தள்ளுபடி விளம்பரங்களே மிகையாக இருக்கும். சமீபத்தில் வந்த ஒரு விளம்பரம், செய்திகள் வடிவில் அதே பாணியிலேயே முதல் இரண்டு பக்கங்களுக்கு இருந்தது.
இதில் முக்கிய விஷயம் இந்த் விளம்பரத்திற்காக அவர்கள் கொடுக்கும் பணம் சுமார் ரூ 10 இலட்சம் வரை, ஒரு முழுப் பக்கத்திற்கு. இந்தப் பணத்தைப் பற்றி குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். வேறு ஒரு இடத்தில் இதை குறித்து விவாதிப்போம்.
இந்த விளம்பரங்களில் மிக விஞ்சி இருப்பது வீட்டு உபயோகத்திற்கான டிவி குளிர் சாதனப் பெட்டி, குளிர்சாதனக் கருவி, மிக்சி, கிரைண்டர், ஃபேன் மற்றும் கட்டில் அலமாரி முதலான வீட்டு சாதனங்கள் அடங்கியவை.
ஆனால் தள்ளுபடி விலையில் வராதவைகள் தங்க நகைக் கூலி, சேதாரம், கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர்கள். மோட்டார் சைக்கிள்கள், கார், மினி லாரி போன்ற விலை எந்நாளும் ஏறிக்கொண்டே இருக்கும் சாதனங்கள்.
நீங்கள் பார்க்கும் இந்த வீட்டுச் சாதனங்கள் விற்பனையாளர்களை, சென்னையில் விரல் விட்டு எண்ணி விடலாம். மிஞ்சிப் போனால் சுமார் 20 பேர் மட்டுமே. இவர்கள்தான் இந்த வர்த்தக உலகை ஆள்கிறார்கள். இது மிகச் சமீபமாக நிகழ்ந்த நிகழ்வு. இவர்களில் பெரும்பாலும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரே மாதிரியான வர்த்தக உத்திகளை கையாள்கிறார்கள். ஒரே இடத்தில் அடுத்தடுத்து கடை விரித்து வியாபாரம் செய்கிறார்கள் .
இவர்கள் நிஜமாகவே தள்ளுபடி விலையில் சாதனங்களைக் கொடுக்கிறார்களா? ஒரு பொருளை லாபம் இல்லாமல் விற்க இவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
இங்கேதான் விஷயமே இருக்கிறது. தள்ளுபடி என்பது ஒரு நாள் மட்டுமே நடக்கும் கூத்து அல்ல. அது வருடம் முழுதுமே நடந்து கொண்டு இருக்கிறது. எல்லாப் பண்டிகைகளின் முன்னேயும் பின்னேயும் ஒரு பத்து நாட்கள் இட்டால், உங்களுக்கு வாரக் கடைசி நாட்களுடன் சேர்ந்து 365 நாட்களும் தள்ளுபடி நாட்களே.
அப்படி என்றால் நிஜமாகவே தள்ளுபடி செய்வதில்லையா என்று கேட்டால்..... சிரிப்பைத்தான் பதிலாகத் தரமுடியும். உங்களை வீட்டிலிருந்து வெளியே இறக்கிக் கொண்டு வந்து பொருள்களை குறைந்த விலையில் வாங்கச் சொல்லி உங்களுக்கு பரிவுடம் சொல்லும் இவர்கள் உங்கள் மாமன் அல்லது மச்சானா என்ன?
இலாபம் இல்லாத வணிகம் இல்லை. தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் ஒரே நாளில் மிகப் பெரிய வியாபாரம் நிகழ்த்தி இவர்கள் சாதனை செய்கிறார்கள். இந்த வணிகத்திற்குச் சரியான வரி கணக்கீடு செய்யப் படுகிறதா? அந்த விற்பனைக்கு உரிய வரிப் பணம் அரசாங்கத்திற்குப் போய் சேர்கிறதா? இதை கவனிக்கும் வணிக வரித்துறை, என்றைக்காவது, சிபிஐ ரைடு போலவோ, இல்லை வருமான வரித்துறையின் ரைடு போலவோ தள்ளுபடி விற்பனை நாட்களில், இந்த நிறுவனங்களில் ரைடு நடத்தி இருக்கிறார்களா?
இந்த நிறுவனங்கள் நடத்தும் வணிகத்திற்கு உரிய ரசீது தான் கடைசி வரை வணிக வரித்துறைக்குப் போய் சேர்கிறதா, இல்லை பிரத்தியேகமாக வேறு கணக்குகள் சாமர்த்தியமாகக் வருமான வரி இலாக்காவிற்கு மாற்றிக் காட்டப் படுகிறதா?
இதையெல்லாம் வணிக வரித்துறை சோதனை செய்திருக்கிறார்களா?
என் ஒரே கேள்வி இதுதான். பண்டிகை நாள் தள்ளுபடி தினத்தில் ஏன் வணிக வரித்துறை அலுவலர்கள் பெரும் வணிகம் நடக்கும் இடங்களில் நின்று வரி சரியாக வசூல் ஆகிறதா என்று சோதிப்பதில்லை? வணிகம் நடக்கும்போதே அரசாங்க அதிகாரி அங்கிருக்கிறார் என்றால் இந்த வணிகர்கள் ரசீத் போடாமல் 'எஸ்டிமேட்' எனும் தாளைத் தந்து வணிக வரி ஏய்ப்பு நடத்துவதைத் தடுக்கக் கூடாது?
தள்ளுபடி விலையில் லாபம் இல்லை என்றால் கொள்ளை கொள்ளையாக பணம் கொடுத்து விளம்பரங்கள் கொடுப்பது ஏன்?
வாடிக்கையாளர்களிடம் பணம் இல்லாவிட்டாலும் 0% வட்டி ஸ்கீம், கிரெடிட் கார்ட் பேமென்ட் ஸ்கீம், பிலேடட் பேமென்ட் ஸ்கீம், என்று சொல்லி தங்களின் பொருட்களை வாடிக்கையாளர்கள் மீது திணிப்பத்தின் நோக்கம் என்ன?
தற்காலம் எல்லாவற்றிற்கும் வங்கிக் கடனை ஏற்பாடு செய்கிறார்கள். கார் தொடங்கி, ஏசி, டிவி மற்றும் உல்லாசச் சுற்றுலா வரை, எல்லா விதமான உங்களின் செலவிற்கும், உங்களுக்குக் கடன் கொடுக்க வங்கிகள் தயாராக இருக்கின்றன.
நீங்கள் அந்தக் கடனை அடைக்க சுமார் 12 முதல் 24 மாதம் வரை அயாராது உழைக்க வேண்டும். பிடிக்காத மேனேஜரை பகைத்துக் கொள்ள முடியாமல் அவ்ருடனேயே பணி செய்ய வேண்டும். புதிய வேலைக்கு முயல முடியாது. காரணம் கடன் உங்கள் கண் முன் வந்து கையாட்டும். போகட்டும் அடுத்த வருஷம் பார்க்கலாம் என்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்களது முடிவு அல்ல, அது கடன் உபாதையால் ஏற்படும் முடிவு. ஆகவே உங்களது எதிர்காலம் பாதிக்கப் பட்டு நல்ல வாய்ப்புகளை இழக்கிறீர்கள்.
வரவு எட்டணா, செலவு பத்தணா எனும் பாடல்தான் நினைவிற்கு வருகிறது. இதுபோல தள்ளுபடி விலை, கடன் அட்டை, தவணை முறை என்று ஒரு ஒரு தலைமுறையைத் தொலைத்து கடனாளியாக்கி, வணிகம் அமெரிக்க மக்களை தன்னுள் அழுத்திப் பிடித்துக் கொண்டது. அமெரிக்காவில் கடன் அட்டை உபாதைகளால் மஞ்சள் நோட்டிஸ் கொடுத்தவர்கள் பலர்.
இன்று, அதேதான் இங்கும் நடக்கிறது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிவி இருக்கிறது. பெட்ரூமில் ஒன்று ஹாலில் ஒன்று. வீட்டில் ஃ பிரிட்ஜ் பழுதாகிவிட்டால் உடனே கடனுக்கு ஒரு புதிய ஃ பிரிட்ஜ் வாங்குபவர்களே அதிகம். வீட்டு உபயோக சாதனங்களை பழுது பார்ப்பதில்லை. பதிலுக்கு புதியதாக மாற்றுகிறார்கள். வசதி உள்ளவர்கள் செய்தால் பரவாயில்லை. மாத சம்பளம் பெறும் மத்திய வர்க்கம் இதைத்தான் செய்கிறது. கடனாளியாகி மேலும் மேலும் புதிய வங்கிகளில் கடன் அட்டைகளைப் பெறுகிறார்கள். புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்கிறார்கள்.
வசதிக்கும் நம் சௌகரியத்திற்கும் வாங்கலாம் தப்பில்லை. ஆனால் அதன் செலவை ஈடு கட்டும் விதத்தில் நீங்கள் உங்கள் பணியில் உயர்ந்தீர்களா என்பதே இங்கே கேள்வி. உங்கள் சம்பளமோ உங்கள் பதவி நிலையோ உயர்ந்து இதையெல்லாம் செய்தால் மகிழ்ச்சி. ஆனால் இன்றைக்கு இருக்கும் மேம்போக்கான நிறுவனங்களும், பணி நிரந்தரம் இல்லாத வேலைகளும் பெருகிவிட்டபோது, வாழும் முறை மட்டுமே பெரும் செலவாக மாறிக்கொண்டு இருக்கிறது.
அத்தகைய போலியான கடன் வாழ்வு வாழ்க்கைக்குப் பெரிதும் தூபம் போடுபவர்கள் இந்த தள்ளுபடி வணிகர்கள்.
அடுத்த முறை தள்ளுபடி விளம்பரம் வந்தால் யோசியுங்கள். நீங்கள் பணக்காரர் ஆகிவிட்டீர்களா அல்லது அந்த வணிகனை பணக்காரன் ஆக்கப் போகிறீர்களா என்று......
நன்றி : முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி
மிக பயனுள்ள பகிர்வு நன்றி அஹமத்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தள்ளுபடி விற்பனை எனும் புதை குழி
பகிர்வு நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சிரிக்காமலே குழி விழுகிறது..!
» 260 அடி குழி வெட்டி தப்பித்த கைதிகள்
» அவர் கூடவே இருந்து குழி பறிப்பவர்..!
» அதுக்கு பேரு பதுங்கு குழி மொழியாம்..!!
» பதுங்கு குழி நல்லா வெட்டுவேன், மன்னா…!
» 260 அடி குழி வெட்டி தப்பித்த கைதிகள்
» அவர் கூடவே இருந்து குழி பறிப்பவர்..!
» அதுக்கு பேரு பதுங்கு குழி மொழியாம்..!!
» பதுங்கு குழி நல்லா வெட்டுவேன், மன்னா…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum