Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
4 posters
Page 1 of 1
பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
பிரெஞ்சு பேரரசன் நெப்போலியன் காதலி ஜோசபைனுக்கு எழுதியது :
உன்னை விட்டு பிரிந்த பின்னர் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் நான். உன்னோடு அருகில் இருப்பது தான் எத்தனை சந்தோசமானது ? ஓயாமல் உன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய அன்பு மிகுந்த தொடுதல்கள்,கண்ணீர்,பாசம் பொங்கும் அக்கறை எல்லாவற்றிலும் வாழ்கிறேன் நான். ஒப்பிட முடியாத ஜோசபைனின் அழகு மனதில் காதல் தீயை கொழுந்து விட்டு எரிய வைக்கிறது. எல்லா வகையான அக்கறைகளில் இருந்து,கொடுமைப்படுத்தும் கவனிப்புகளில் இருந்து விடுதலை கிடைத்து உன்னோடு என்னுடைய எல்லா பொழுதுகளையும் கழிக்க முடியுமா ? உன்னை மட்டுமே காதலித்துக்கொண்டு,உன்னை மட்டுமே நேசிக்கிறேன் என்று சொல்வதன் உற்சாகத்தை உணர்ந்து கொண்டு,அதை உன்னிடம் நிரூபிப்பதில் வாழ்நாளையே எப்பொழுது கழிக்க முடியும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.
Last edited by Muthumohamed on Thu 13 Feb 2014 - 19:28; edited 1 time in total
Re: பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
ஓவியர் ப்ரீடா காலோ டீகோ ரிவீராவுக்கு எழுதியது :
உன்னுடைய கரங்களுக்கு,பச்சை தங்கம் போல ஒளிரும் கண்களுக்கு இணையானது எதுவுமில்லை. என் உடல் முழுக்க உன்னாலே எல்லா நாளும் நிரம்பியிருக்கிறது. என்னுடைய இரவின் கண்ணாடி நீ. வலிதரும் மின்னலின் வெளிச்சம் ,பூமியின் ஈரப்பதம். உன்னுடைய கரத்தின் இடுக்குகள் என்னுடைய வசிப்பிடம். உன்னுடைய ரத்தத்தை என்னுடைய விரல்கள் தொடுகின்றன. உன்னுடைய மலர் வீழ்ச்சியில் இருந்து வரும் வாழ்க்கை ஊற்றை உணர்வதே எனக்கு முழு மகிழ்ச்சி. உன்னுடையதான என்னுடைய நரம்புகளை அந்த ஊற்றால் நிறைக்கிறேன் நான் !"
Last edited by Muthumohamed on Thu 13 Feb 2014 - 19:28; edited 1 time in total
Re: பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
கவிஞர் ஜான் கீட்ஸ் காதலி ஃபேனிக்கு எழுதியது :
நீயில்லாமல் நான் வாழமுடியாது. எல்லாவற்றையும் நான் மறந்துவிடுகிறேன். ஆனால் உன்னை பார்த்ததும் அங்கேயும் என் வாழ்க்கை நின்று விடுகிறது,அதைத்தாண்டி எதையும் நான் பார்ப்பதில்லை. என்னை நீ உறிஞ்சிக்கொண்டாய்.
நான் கரைவது போல இந்த கணத்தில் உணர்கிறேன். ஆண்கள் மதத்துக்காக ஆண்கள் தியாகிகளாகி உயிர் துறப்பார்கள் என்பதை கேட்டு நடுங்கியிருக்கிறேன். இப்பொழுது நான் நடுங்கவில்லை. நானும் மதத்துக்காக உயிர் துறக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். காதல் என் மதம் ; அதற்காக இறப்பேன் நான். உனக்காக என்னால் இறக்க முடியும். என்னுடைய சமயம் காதல்,நீயே அதன் அடிப்படை. எதிர்க்க முடியாத அளவுக்கு என்னை ஆட்கொண்டு பேரின்பம்
தருகிறாய் நீ !

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் காதலி ஸ்டெல்லா கேம்ப்பெல்லுக்கு எழுதியது :
திரும்ப வேண்டும்
என்னுடைய கருப்பழகி, தேவதை எனக்கு வேண்டும்'
என்னைத்தூண்டும் அவள் வேண்டும்
என் அன்பானவள் அவளின் ஆப்பிள்களோடு வரவேண்டும்
அழகு,மதிப்பு,புன்னகை, இசை, காதல், வாழ்க்கைஅ மரத்துவம் எனும் ஏழு விளக்குகளை
எற்றுபவள் எனக்கு வேண்டும்
என்னுடைய உத்வேகம், முட்டாள்தனம், மகிழ்ச்சி, புனிதம், பைத்தியக்காரத்தனம், சுயநலம்
எல்லாமும் வேண்டும்.
என்னுடைய நல்லறிவு ,புனிதப்படுத்தல்
என்னுடைய தூய்மை,மாற்றத்தை தந்தவள்
கடலின் நடுவே எனக்கான வெளிச்சம்
பாலைவனத்தின் நடுவே எனக்கான பேரீச்சை
தோட்டத்தின் காதல் மலர்கள்
பெயரில்லா பல லட்சம் ஆனந்தம்
என்னுடைய அனுதின சம்பளம்
என் இரவின் கனவு
என் செல்லம்
என் நட்சத்திரம்
என்னுடைய இருப்பிடமற்ற போக்கிரிபெண் எனக்கு

இசைமேதை பீத்தோவன் "சாகவரம் பெற்ற பிரியைக்கு" எழுதியது :
பீத்தோவன் இறந்த பின்னர் அவரின் கடித குவியலில் இருந்து "immortal beloved" என்று ஒரு பெண்ணுக்கு எழுதிய காதல் ததும்பும் கடிதங்கள் கிடைத்தன. அவர் யாரென்றே தெரியவில்லை. இருந்தாலும் அந்த கடிதங்கள் உருக்கி விடுபவை
ஏன் மிகவும் நேசிக்கிற ஒருவரிடம் இருந்து பிரிந்தே இருக்குமாறு நேரிடுகிறது ? வியன்னாவில் என்னுடைய வாழ்க்கை துன்பமயமாக இருக்கிறது. உன் காதல் மாந்தருள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவனாகவும்,சோகம் நிறைந்தவனாகவும் ஆக்கியிருக்கிறது....அமைதியாக இரு. என்னை காதலி ! இன்று-நேற்று-எத்தகைய கண்ணீர் தரும் காத்திருப்பை உனக்கு நான் தந்திருக்கிறேன். உனக்காக,என் வாழ்க்கையான உனக்காக... தொடர்ந்து என்னை காதலி ! உன் காதலனின் நன்றி
மிகுந்த இதயத்தை எப்பொழுதும் தவறாக எடை போட்டு விடாதே.

நோபல் பரிசை ஏற்க மறுத்த சார்த்தர் தன் காதலி பூவாருக்கு எழுதியது :
இன்று இரவு இதுவரை நீ அறியாத வகையிலே உன்னை காதலிக்க போகிறேன். உனக்காக என் காதலை மேலும் செம்மைப்படுத்திக்கொண்டே இருக்கிறேன். அந்த காதலை எனக்குள் செலுத்தி அதுவாகவே ஆகிக்கொண்டு இருக்கிறேன் நான். இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்வதை விட அதிகமாக நிகழ்கிறது,உனக்கு கடிதம் எழுதுகிற பொழுது அடிக்கடி நிகழ்கிறது. என்னை புரிந்துகொள் ! வெளி விஷயங்களில் கவனம் செலுத்துகிற பொழுதும் உன்னை காதலிக்கிறேன். டூலோஸ் நகரில் உன்னை வெறுமனே காதலித்தேன். இன்று இரவு வசந்த காலமாலையில் உன்னை நேசிக்கப்போகிறேன். ஜன்னல்களை திறந்து வைத்து காதலிக்க ப்கிறேன். நீ என்னவள்,யாவும் என்னுடையது ! என் காதல் சுற்றியிருப்பவற்றை மாற்றுகிறது,சுற்றியிருப்பவை என் காதலை மாற்றுகிறது
Re: பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
கார்ல் மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம்:
முத்தமிடுகிற பொழுது என்னுடைய துயரங்களையும் முத்தமிட்டு வெகுதூரத்துக்கு அனுப்பிவிடுகிறேன். உன்னுடைய கரங்களில் புதைந்து உன் முத்தங்களால் புத்துயிர் பெறுகிறேன் நான்.
என் பிரியத்துக்குரியவளே பிரியா விடை தருகிறேன். உனக்கும், நம்
பிள்ளைகளுக்கும் ஆயிரம் முத்தங்கள் !
எத்தனையோ பெண்கள் உலகில் இருக்கிறார்கள். அதில் சிலர் அழகிகளாக இருக்கிறார்கள். ஆனால்,ஒரு பெண்ணின் ஒவ்வொரு பண்பும்,ஏன் சுருக்கங்கள் கூட என்னுடைய வாழ்க்கையின் உன்னதமான,இனிமையான நினைவுகளை தருகிற முகத்தை நான் வேறெங்கே கண்டுபிடிப்பேன் ? என்னுடைய முடிவில்லாத துயரங்கள்,என்னுடைய ஈடுசெய்ய முடியா இழப்புகள் எல்லாவற்றையும் உன்னுடைய முகக்களையில் படித்து விடுகிறேன். உன்னுடைய இனிமை மிகுந்த முகத்தை
முத்தமிடுகிற பொழுது என்னுடைய துயரங்களையும் முத்தமிட்டு வெகுதூரத்துக்கு அனுப்பிவிடுகிறேன். உன்னுடைய கரங்களில் புதைந்து உன் முத்தங்களால் புத்துயிர் பெறுகிறேன் நான்.
என் பிரியத்துக்குரியவளே பிரியா விடை தருகிறேன். உனக்கும், நம்
பிள்ளைகளுக்கும் ஆயிரம் முத்தங்கள் !
Re: பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
பாப்லோ நெரூடா தன்னுடைய காதலி மடில்டா உருட்டியாவுக்கு எழுதியது :
காடுகள் அல்லது கடற்கரைகள் வழியாக நடக்கிற பொழுது,மறைந்த ஏரிகளின் வழியாக நாம் கடந்து வருகிற பொழுது சாம்பல் தூவப்பட்ட நிலங்களில் இருந்து தூய்மையான மரக்கட்டைகளை நாம் சேகரித்தோம். அந்த மரக்கட்டைகள் நீரில் அடித்துக்கொண்டு முன்னும்,பின்னும் நகர்ந்து வந்தவை இல்லையா ? இந்த மென்மையான பொருட்களை வெட்டுக்கத்தி மற்றும் சிறுகத்தியால் இந்த காதல்மர அடுக்குகளை நான் கட்டினேன். பதினான்கு பலகைகளை கொண்டு சின்னஞ்சிறிய வீடுகளை கட்டினேன் நான். இந்த வீடுகளில் நான் ரசித்த,பாடல் பாடிய உன் கண்கள் வாழட்டும் ! என் காதலின் அடிப்படைகளை உனக்கு அறிவித்த பின்னர் இந்த நூற்றாண்டை உனக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த மரக்கவிதைகள் நீ உயிர் தந்ததால் எழப்போகின்றன.
Re: பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
சூப்பர்மேனாக நடித்த கிறிஸ்டோபர் ரீவ் குதிரை மீது இருந்து விழுந்து கழுத்துக்கு கீழே எந்தப்பகுதியும் செயல்படாது என்கிற சூழலுக்கு உள்ளானார். அப்பொழுது அவரின் மனைவி டானா எழுதிய கடிதம் :
நாம் செல்ல வேண்டிய பாதை கணிக்க முடியாததாக,மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. அது ஆழ்ந்த சவால்களை கொண்டிருக்கிறது. என்றாலும் இது நிறைவாகவே இருக்கிறது. இந்த பாதையில் முன்னேறிச்செல்வது என்று நாம் உறுதி பூண்டிருக்கிறோம். இந்தப்பாதையில் தாமதமாக முட்செடிகளும்,தடைகளும் வந்து சேர்ந்திருக்கின்றன. எனக்கு வருத்தங்கள் எதுவுமில்லை. இந்த துன்பங்கள் எல்லாமும் நான் எவ்வளவு ஆழமாக உன்னை காதலிக்கிறேன் என்று காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தப்பாதையை நாம் இணைந்து கடப்போம் என்பது எனக்கு நெகிழ்வைத்தருகிறது. நம்மின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. காரணம் என்ன தெரியுமா ? நாமிருவரும் நமக்காக எப்பொழுதும் இருக்கிறோம் .
என்னுடைய இதயம் மற்றும் ஆன்மாவால் உங்களை காதலிக்கும்
டானா
அன்புக்குரிய தோப் !

எழுத்தாளர் பிரான்ஸ் காஃப்கா தன்னுடைய காதலி பெலிஸ்க்கு எழுதியது :
- பூ.கொ.சரவணன்
vikatan
உன்னிடம் ஒரு உதவியை நான் கேட்கப்போகிறேன். அது உனக்கு பைத்தியக்காரத்தனமானதாக தெரியலாம். அது இதுதான். எனக்கு வாரம் ஒருமுறை மட்டுமே கடிதம் எழுது. அப்படி நீ ஒரே ஒருமுறை எழுதினால் எனக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கடிதம் வந்து சேரும். உன்னுடைய கடிதங்கள் அனுதினமும் வருவதால் அவற்றை என்னால் தாங்கமுடியவில்லை. உன்னுடைய ஒரு கடிதத்துக்கு நான் பதிலெழுதிய பின்னர் விளக்க முடியாத அமைதியோடு படுக்கையில் வீழ்கிறேன். என் இதயம் என் உடல் முழுமைக்கும் நான் உனக்கு மட்டுமே உரியவன் என்று துடிக்கிறது. இதைத்தவிர எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. ஆனால்,இது வலிமையாக நினைப்பதை சொல்லவில்லை. இதனாலே நீ என்ன அணிந்திருக்கிறாய் என்று நான் அறிந்துகொள்ள விரும்பவில்லை. அது என்னை குழப்பி என் வாழ்க்கையை எதிர்கொள்ளாமல் தடுமாற செய்கிறது. நீ என்னை நேசிக்கிறாய் என்று நான் அறிந்துகொள்ள விரும்பவில்லை. அப்படி தெரிந்து கொண்டால் அலுவலகத்தில் அல்லது வீட்டில் அமர்ந்திருப்பதை விட கண்களை மூடிக்கொண்டு உனக்காக இதயத்தை திறந்துகொண்டு வேகமாக நகரும் ரயில் முன்னாள் விழுந்து விடுவேன் நான் !"
- பூ.கொ.சரவணன்
vikatan
Re: பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
எல்லாம் அழகாக உள்ளது அதிலும் டானா பிரான்ஸ் காஃப்கா இவர்கள் கடிதம் இன்னும் அழகாக உள்ளது பகிர்ந்தமைக்கு நன்றி குண்டுப்பையா
அன்பு மீனுகா
heart
அன்பு மீனுகா
heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
பாப்லோ நெருடா வாழ்ந்த இல்லம்
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பிரபலங்களின் டாப் 10 காதல் கடிதங்கள்...
rammalar wrote:பாப்லோ நெருடா வாழ்ந்த இல்லம்
-
)(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum