சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Khan11

இராமாயணம் (வினா-விடை வடிவில்)

4 posters

Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by *சம்ஸ் Wed 26 Mar 2014 - 16:48

தொகுப்பு: சத்யகாமன்

1.    உலகத்தின் முதல் காவியம் என்று போற்றப்படுவது எது?
இராமாயணம்.

2.ஆதிகவி என்று புகழ்பெற்றவர் யார்?
வால்மீகி.

3.    வால்மீகி முனிவருக்கு இராமபிரானின் வரலாற்றைக் கூறியவர் யார்?
நாரதர்.

4.    இராமாயண மகா காவியத்தில் எத்தனை காண்டங்கள் (பிரிவுகள்)? அவற்றின் பெயர்கள் என்ன?
ஏழு காண்டங்கள். 1.பாலகாண்டம். 2.அயோத்யா காண்டம். 3.ஆரண்ய காண்டம். 4.கிஷ்கிந்தா காண்டம். 5.சுந்தரகாண்டம். 6.யுத்தகாண்டம். 7.உத்தரகாண்டம்.

5.    வால்மீகி இராமாயணத்தில் எத்தனை சுலோகங்கள் உள்ளன?
இருபத்து நாலாயிரம் சுலோகங்கள்.

6.    வால்மீகி முனிவருக்கு அந்தப் பெயர் வருவதற்குக் காரணம் என்ன?
அவர் மிக நீண்ட காலம் இராமநாமம் கூறியபடி தவம் செய்தார். அப்போது அவரைச் சுற்றி வல்மீகம் (புற்று) வளர்ந்து மூடிக்கொண்டது. பின்னர், அந்தப் புற்றிலிருந்து வெளிப்பட்டதால், வால்மீகி என்ற பெயர் ஏற்பட்டது.

7.    தசரதன் ஆண்ட நாட்டின் பெயர் என்ன? அந்த நாட்டின் தலைநகரம் எது?
கோசல நாடு; அயோத்தி நகரம்.

8.    அயோத்தி எந்த நதியின் கரையில் அமைந்திருக்கிறது?
சரயூ நதி.

9.    தசரதனின் பட்டத்து அரசியர் பெயர்கள் என்ன?
கௌசல்யை, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவிகள்.

10.   தசரதனின் ஆசாரியர் யார்? அவருடைய மனைவியின் பெயர் என்ன?
ஆசாரியர், வசிஷ்டர்; அவருடைய மனைவி அருந்ததி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty Re: இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by ராகவா Wed 26 Mar 2014 - 18:32

அண்ணா..சிறப்பான பதிவு.........
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty Re: இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by Nisha Thu 27 Mar 2014 - 1:35

பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty Re: இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by rammalar Thu 27 Mar 2014 - 2:32

அருந்ததி சப்தரிஷிகளுள் ஒருவரான வஷிச்டரின்
மனைவியாவர். இவரது தந்தை பதஞ்சலியும்
ஒரு மகரிஷியே.

அருந்ததி வானில் தோன்றும் ஒரு நட்சத்திரமாகவும்
கருதப்படுகிறது.

வானசாஸ்திரத்தின்படி மிஜார் விண்மீன் வஷிஷ்டராகவும்,
ஆல்கர் விண்மீன் அருந்ததியாகவும்
கருதப்படுகிறது. இந்து திருமணங்களில் அருந்ததி
பார்த்தல் என்பது ஒரு சடங்காகும்.
-

-http://ta.wikipedia.org/wikiஅருந்ததி_(விண்மீன்)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty Re: இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by rammalar Thu 27 Mar 2014 - 5:27

11.   தசரதன் புத்திரப்பேறு பெறுவதற்காகச் செய்த யாகம் யாது?
-


புத்திர காமேஷ்டி யாகம்.




12.   எந்த முனிவரின் துணை கொண்டு அந்த வேள்வியைச் செய்தான்?
-


ரிஷ்ய சிருங்கர் (கலைக்கோட்டு முனிவர்) என்பவர், அந்த வேள்விக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார்.

-


13.   தசரதனுக்கு எத்தனை புதல்வர்கள் பிறந்தார்கள்? அவர்களின் பெயர்கள் என்ன?
-


கௌசல்யையிடமிருந்து இராமன் தோன்றினார்; சுமித்திரையிடமிருந்து லட்சுமணன், கையேயியிடமிருந்து பரதனும், சத்ருக்னனும் தோன்றினார்கள். ஆக, நான்கு மைந்தர்கள்.

-


14.   விசுவாமித்திரர், இராமனை எதன் பொருட்டு அழைத்துச் சென்றார்?
-


அவர் யாகம் செய்யும்போது அரக்கர்கள் வந்து இடையூறு செய்தார்கள். அவர்களை அடக்கினால் தான் வேள்வியை நிறைவேற்றமுடியும். அவர்களை எதிர்த்து அடக்கி யாகத்தைக் காப்பாற்றும் வல்லமை இராமனுக்கு உண்டு என்பதால் அழைத்துச் சென்றார்.




15.   விசுவாமித்திரர் யாகம் செய்த புண்ணிய ஸ்தலம் எது?
-


சித்தாசிரமம்.

-

16.   சித்தாசிரமம் போகும் வழியில், இராமன் முதலியோரைத் தடுத்து நிறுத்தியது யார்?
-


தாடகை என்னும் அரக்கி. கொடூரமனம் படைத்த அவளை இராமபிரான் எளிதாகக் கொன்றார்.

-


17.   விசுவாமித்திரர் யாகம் செய்து கொண்டிருந்தபோது இடையூறு செய்ய வந்த ராட்சஸத் தலைவர்கள் யார்? அவர்கள் என்ன கதி அடைந்தார்கள்?
-


சுபாகு என்ற அரக்கத் தலைவன் இராமனால் கொல்லப்பட்டான்; மாரீசன் என்பவன், வெகுதூரத்துக்கு அப்பால் கடலில் எறியப்பட்டான்.

-


18.   விசுவாமித்திரர், இராமனுக்கு உபதேசித்த இரு மந்திரங்களின் பெயர் என்ன? அவற்றின் பயன் யாது?
-


பலை, அதிபலை என்ற இரு மந்திரங்களை உபதேசித்தார். அவற்றின் பயனாக நீண்ட நடைபயணத்தின் போதோ, பிற ஆபத்துக் காலங்களிலோ, பசி, தாகம், தூக்கம் முதலிய துன்பங்கள் ஏற்படமாட்டா.

-


19.   யாகம் முடிந்ததும் விசுவாமித்திரர் என்ன செய்தார்?
-


இராம-லட்சுமணர்களை அழைத்துக் கொண்டு, மிதிலை நகரத்துக்குச் சென்றார்.

-


20.   மிதிலை செல்லும் வழியில், ஒரு கல்லின் மேல் இராமனின் திருவடி பட்டதும் அது பெண்ணாக மாறியது. அவள் யார்? அவள் எந்த முனிவருடைய மனைவி?
-


அகலிகை. கௌதம முனிவருடைய மனைவி.

-

-------------
நன்றி:
http://www.ammandharsanam.com
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty Re: இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by *சம்ஸ் Thu 27 Mar 2014 - 7:35

21.   தேவலோக நதியான கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தவர் யார்?
பகீரதன். கங்கைக்கு, பாகீரதி, ஜாஹ்னவி என்ற பெயர்களும் உண்டு.

22.   கங்கை, ஜாஹ்னவி என்று அழைக்கப்படுவது ஏன்?
ஜஹ்னு என்ற மாமுனிவரின் ஆசிரமத்தை, தன் வேகத்தால் நாசப்படுத்தி அழித்ததால் அவர், கங்கையை ஆசமனம் செய்து தன்னுள்ளே அடக்கிவிட்டார். பகீரதனின் வேண்டுகோளுக்கிணங்க, வலச்செவியின் வழியே வெளியே விட்டார். ஜஹ்னு முனிவரின் புதல்வி என்று பொருள்படும் ஜாஹ்னவி என்ற பெயர் கங்கைக்கு உண்டாயிற்று.

23.   விசுவாமித்திரரின் இன்னொரு பெயர் என்ன?
கௌசிகர்.
24.   விசுவாமித்திரர், மன்னராக இருந்தபோது, வசிஷ்ட முனிவரிடம் எந்தப் பொருளைக் கேட்டார்?
விரும்பிக் கேட்பவை எல்லாம் கொடுக்கக்கூடிய காமதேனு என்னும் தெய்விகப் பசு, வசிஷ்டர் ஆசிரமத்தில் இருந்தது. அரசனான தன்னிடம் தான் அது இருக்க வேண்டும் என்று கூறி, அந்தப் பசுவைக் கொடுத்து விடும்படி கேட்டார்.

25.   விசுவாமித்திரர் நெடுங்காலம் தவம் செய்யக் காரணம் என்ன?
வசிஷ்டரிடமிருந்து காமதேனுவை அடையும் முயற்சியில், ஆயுதங்களால் போர் செய்து தோற்றுப் போனதால், ஆன்மிக ஆற்றலான பிரும்மதேஜஸை அடைய விரும்பித் தவம் செய்தார்.

26.   விசுவாமித்திரரின் கடுந்தவத்தைக் கெடுப்பதற்காக வந்த அப்சரப் பெண் யார்?
தவத்தைக் கலைக்க வந்தவள் பெயர் மேனகை. விசுவாமித்திரருடன் தங்கி, சகுந்தலையைப் பெற்றெடுத்தாள்.

27.   மிதிலை மன்னர் ஜனகருடைய குலகுரு யார்?
சதானந்தர்.

28.   சீதை, ஜனகருக்கு எவ்வாறு கிடைத்தாள்?
வேள்வி செய்வதற்கு முதல் கட்டமாகப் பூமியை உழுதபோது, ஏர்க்காலில் சின்னஞ்சிறு குழந்தையாக ஒரு பெட்டியில் கிடைத்தாள்.

29.   சீதையின் வேறு பெயர்கள் என்னென்ன?
ஜனகன் மகள் என்பதால், ஜானகி; விதேக நாட்டு இளவரசி (விதேக மன்னன் புதல்வி) என்பதால், வைதேகி; மிதிலாபுரி மங்கை என்பதால், மைதிலி.

30.   ஜனகர் சபையில் இராமன் செய்த வீரச்செயல் யாது?
எவராலும் தூக்கக்கூட முடியாத சிவதனுஸைத் தூக்கி வளைத்தார்; அது, இடையில் முறிந்து விழுந்தது.

நன்றி http://www.ammandharsanam.com/


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty Re: இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by rammalar Thu 27 Mar 2014 - 8:35

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Images?q=tbn:ANd9GcQZsUr8_KMft7JOEqdikyWko6vRoalIHb6yPUgKVeABHyxWuK3_
-பகீரதன் தவம்
---
கங்கையை பகீரதன் வரவழைத்த
நாள்- வைகாசி மாத வளர்பிறை 10-ஆம் நாளில்தான்.
--
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty Re: இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by *சம்ஸ் Thu 3 Apr 2014 - 10:51

31.   இராமனும் அவர் சகோதரர்களும் யார், யாரை மணந்தனர்?
இராமன், சீதையை மணந்தார்; லட்சுமணன், ஊர்மிளையையும்; பரதன், மாண்டவியையும்; சத்ருக்னன், சுருதகீர்த்தியையும் மணந்தார்கள்.

32.   இராமன் முதலியோர் மிதிலையிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் போது, அவரைத் தடுத்து எதிர்த்தவர் யார்?
பரசுராமர்.

33.   இராமர், பரசுராமரை எவ்வாறு வென்றார்?
எவராலும் கையாள முடியாத வைணவவில்லை பரசுராமர் மிகவும் ஆணவத்துடன் இராமனிடம் நீட்டினார். இராமன் அதைப் பெற்று, வளைத்துக் காட்டியதும், பரசுராமரின் கர்வம் அடங்கியது.

34.   பரசுராமரின் பெற்றோர் யார்?
தந்தை-ஜமதக்னி முனிவர். தாய்-ரேணுகை.

35.   இராமனுடைய பட்டாபிஷேகம் தடைபடுவதற்கு மூலகாரணமாக இருந்தவர் யார்?
மந்தரை என்னும் மூதாட்டி. இவள், கைகேயியின் பணியாளாக, கேகய நாட்டிலிருந்து வந்தவள். கூன் விழுந்த முதுகை உடையவள் என்பதால், கூனி என்றும் அழைக்கப்பட்டாள்.

36.   கைகேயி, தசரதனிடம் கேட்ட இரு வரங்கள் யாவை?
1.பரதன், கோசல நாட்டை ஆள வேண்டும். 2.இராமன், பதிநான்கு ஆண்டுகள் காட்டில், ஒரு துறவிபோல் வாழ வேண்டும்.


7.   கைகேயியிக்கு இரண்டு வரங்கள் தருவதாக தசரதன் எப்போது வாக்களித்தார்?
முன்னொரு காலத்தில், தேவர்களுக்கு உதவி செய்வதற்காக சம்பராசுரன் என்னும் அசுரனுடன் தசரதன் போர் புரிந்தார். அப்போது, மிகவும் ஆபத்தான ஒரு தருணத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு, தசரதன் உயிரைக் காப்பாற்றினாள் கைகேயி. அந்த வேளையில், அன்பு மிகுதியால், கைகேயிக்கு இரண்டு வரங்கள் கொடுப்பதாக தசரதன் கூறினார். ஆனால், அதுவரை அந்த வரங்களை கைகேயி கேட்டுப் பெற்றதில்லை.

38.   கைகேயியின் தந்தை பெயரென்ன?
அசுவபதி. கேகய நாட்டு மன்னர்.

39.   கேகயநாட்டின் தலைநகர் எது?
ராஜகிருஹம் என்ற நகரம்.

40.   இராமனுடன் யார், யார் காட்டுக்குச் சென்றார்கள்?
லட்சுமணனும் சீதையும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty Re: இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by Nisha Thu 3 Apr 2014 - 12:51

இராமாயணம் குறித்த வினா விடை பகிர்வு நன்று !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இராமாயணம் (வினா-விடை வடிவில்)   Empty Re: இராமாயணம் (வினா-விடை வடிவில்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum