Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இராமாயணத்தில் இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம் எது?’
Page 1 of 1
இராமாயணத்தில் இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம் எது?’
-
ராமாயணத்தில் இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம் எது?’
என்ற கேள்வியை நேற்று எங்கள் காலனிமகளிர்
மன்றத்தில் ஒருவர் எழுப்பினார்.
-
பெங்களூரில் மாதர்சங்கங்கள் மகளிர் மன்றங்கள் என்றால்
நாலைந்து மொழிபேசுபவர்களும் இருப்பார்கள். அவரவர்கள்
தாய்மொழியில் அறிந்துகொண்ட விஷயங்களை பொதுவான
மொழியான ஆங்கிலத்தில் கூறுவார்கள்
எங்கள் சங்கத்தில் நிறைய உறுப்பினர்கள் தமிழர்களாக
இருப்பதால் தமிழிலேயே சொல்வார்கள்.
நேற்று அனைவருக்குமே இரக்கத்திற்குரிய ராமாயணப்
பெண்பாத்திரம் என்றதும்
கோசலை
சீதை
மண்டோதரி
சூர்ப்பனகை
என்றெல்லாம் நினைவலைகள் ராமாயணக்கடலில் மூழ்கி
எழுந்தன..
-
கௌசல்யாவின் தாய்மையை,பட்டாபிஷேகம் நடக்கிற
நிலையில் மகனைப்பிரிந்த ஏக்கத்தை ஒருவர் அழகாக
சொன்னார்.
-
"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி”
-
கம்பனின் இந்தப்பாடலைக்கூறி நான் மண்டோதரியைப்பற்றிய
என் எண்ணத்தை எடுத்துவைத்தேன்.
-
கைகேயியைக்கூட அவள் கூனியால் புத்தி இழந்த பெண்
இல்லாவிடில் அழகிலும் அறிவிலும் சிறந்த பெண் தான் பரதனிடம்
அப்படி ஒரு கடும் சொல்லை வாங்கிக் கட்டிக்கொண்ட கைகேயி
இரக்கத்திற்குரியவள் என்றார் இன்னொரு கன்னடப்பெண்மணி.
-
சூர்ப்பனகையையும் அவள் மூக்கறுபட்டதை பரிதாப நி்கழ்வாக
நினைத்து இரக்கப்பட்டார் ஒரு துளுப்பெண்!
சீதையை சிலாகித்தவர் பலர். அக்கினிப்பிரவேசத்திற்கு
ஆயத்தமான சீதைதான் இரக்கத்திற்குரிய பெண் பாத்திரம் என்றே
முடிவும் கட்டிவிட்டனர்.
எல்லார்பேசுவதையும் கேட்டுக்கொண்டு அமைதியாய்
ஒருவர்இருக்கவும் கூட்டம்கேட்டது
.”என்னாச்சு சாந்தம்மா, மௌனமாகிட்டீங்க?”
புன்னகைத்தபடி,”நான் ஒ்ருவரைச் சொல்வேன் அதை நீங்கள்
ஏற்பீர்களா தெரியவில்லை” என்றார் சாந்தம்மா.
-
தமிழ்மொழியும் நன்கறிந்தவர்..கன்னடத்துப்பத்திரிகைகளில்
அவ்வப்போது சிறு கவிதைகள் கட்டுரைகள் எழுதுபவர் எழுத்தாளர்
சாந்தம்மா.
”அட! சீதா தேவியைவிடவும் இரக்கத்திற்குரிய பாத்திரம்
ராமாயணத்தில் இருக்கமுடியுமா யார் அது சொல்லுங்க?”
சாந்தம்மா சொல்ல ஆரம்பித்தார்.
‘வனவாசம் முடிந்து வருவான் வருவான் தன்கணவன் என
அவள் காத்திருக்கிறாள்.. 14ஆண்டுகளின் பரிதவிப்பான காத்திருப்பு
அன்று முடிகிறது
கணவன் வருகிறான்.
ஆசை அணைஉடையும் நேரம் அள்ளி அணைப்பான்
கொஞ்சிப்பேசுவான் என மகிழ்ந்து காத்திருந்தவள் தன்னைக்
கண்டதும்
,” கண்ணே! அண்ணனுக்குப்பணிவிடை செய்து இந்தப்
பதினாலுவருடமும் நான் தூங்கவே இல்லை. தேக்கிவைத்த
தூக்கத்தை மொத்தமாய் தூங்கவேண்டும் ஊர்மிளா உன்
மடியைக்கொடு தலைசாய்த்துப்படுக்கிறேன்” எனறு மனைவி
மடியில் தலைவைத்துத்தூங்க ஆரம்பித்தானாம் கணவன்
லட்சுமணன்!
-
தசரதன் மனவிமார்கள் கணவரை இழந்தவர்கள்.
மண்டோதரி கணவனோடு மாண்டவள்.
சீதை மீண்டும் கணவனை அடைந்தவள் .
கணவன் இருந்தும் இல்லாமலிருந்த ஊர்மிளா தான்
ராமாயணத்தில் பெரிதும் இரக்கத்திற்குரியவள்.’
-
என்ன, சாந்தம்மா சொல்வது சரிதானே நீங்கள் என்ன
சொல்கிறீர்கள்?!
--
>ஷைலஜா
-
-------------------------------------------------
(படித்ததில் பிடித்தது)
படம்: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum