சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Khan11

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Empty ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:02

First topic message reminder :

தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது.

கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான்.

மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார்.இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது.

தஞ்சாவூர் 8-ஆம் நுற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது. மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன. இத்தகைய தஞ்சை மாநகரை சுற்றிப்பார்ப்போமா தஞ்சை பெரிய கோவில் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 65 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.அத்தகைய  சிறப்புவாய்ந்த கோவிலை உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகள் கண்ட வண்ணம் இருக்கின்றனர்.தஞ்சை பெரிய கோவில் சுவாரஸ்ய தகவல்கள் இந்த ஆலய கட்டிட வேலைகள் 1003 ம் ஆண்டு தொடங்கி 7 வருடங்களில் முடிவுற்றதாக குறிபிடப்படுகின்றது.முதன்மையான கோபுரத்தின் உயரம் 215 அடி (65 மீட்டர் என கணக்கிடப் பட்டுள்ளது. இது கருவரையின் மேலே 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது. கருவறையின்மீது கட்டிய இந்த மிகப்பெரிய விமானமே இக்கோயிலின் பெரும் சிறப்பாக போற்றப்படுகின்றது.


கோபுரத்தின் நிழல் எக்காலத்திலும் நிலத்தில் படாத வண்ணம் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்ப்பகிரகத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் படும் வண்ணம் அற்புதமான கட்டிட கலையால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் கருவறையில் அமைந்துள்ள ஆவுடையார் எனும் மூல லிங்கம் விசேட ரகத்தில் அமைந்த தனியான கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 23 அடி , சுற்றளவு 54 அடி உடையதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவிலின் முன் அமர்ந்த கோலத்தில் உள்ள தனி கல்லில் செதுக்கிய நந்தி எடை , 12 அடி உயரம் , 8 அடி அகலம், 20 அடி நீளமும் உடையது.


கோபுரத்தின் உச்சியில் விமானத்தில் உள்ள எண்கோண கலசம் 3.8 மீற்றர் உயரமும் 81 எடை ( அண்ணளவாக 15 யானைகள் எடை) உடைய தனியான 25 அடி சதுர கல்லில் செதுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு மூலைக்கு இரண்டு நந்திகளாக எட்டு நந்திகள் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன
மேல் சொல்லப்பட்ட கலசத்தினை செய்வதற்கு வேண்டிய அந்த கல்லை அக்காலத்தில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு வந்த மகா திறமை இன்றும் புரியாத புதிராக உலகில் பலராலும் பேசப்படுகின்றது.
தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு இந்தியாவின் பல பகுதியிலும் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களின் மொத்த அளவானது ஜீசா பிரமிட்டு கட்டுவதற்கு பயன் படுத்தியதை விடவும் அதிகம் என ஆராச்சி செய்வோர் கணக்கிட்டுள்ளனர்.


இந்த ஆலயத்தின் சுற்று சுவர்கள் அடங்கலான பகுதிக்குள் 200 தாஜ் மஹால்களை அடைக்கும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக விரிந்து பரந்துள்ளதாக வியந்த பேசப்படுகின்றது.
தமிழர்களின் கலை, கலாச்சாரம், கற்பனைத் திறன், சிற்பத் திறன் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தஞ்சை பெரிய கோயிலானது தமிழர்களின் ஆட்சி , அறம் இவற்றுடன் ஆன்மீகப் பணிக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.


இராஜ ராஜ பேரரசர் கோவில் திருப்பணியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாகவும் சுபீட்சமாகவும் வாழ்ந்தனர் எனவும் சொல்லப்படுகின்றது. மக்களுக்காக உயர் கல்விக்கூடங்கள், அருட்சாலைகள், அறச்சாலைகள் போன்ற பொது நற்பணி மன்றங்களையும் மன்னர் நிறுவியிருந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது.
இந்த ஆலயத்தின் வெளியே சோழ பேரரசன் இராஜராஜனின் சிலைஅமைக்கப்பட்டுள்ளது.இந்தக் கோவில் தற்போது மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இருந்துவருகின்றது.இந்த ஆலயத்தை UNESCO  உலக கலாச்சார சின்னமாக அறிவிள்ளது.


தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்:


தஞ்சாவூரிலிருந்து சுமார் 5 கீ.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து ஆட்டோ அல்லது பேரூந்து மூலம் இக்கோவிலுக்கு செல்லலாம். 1680 ம் ஆண்டு  மராட்டிய அரச பரம்பரையை  சேர்ந்த வெங்கோஜி சத்ரபதி, திருச்சி அருகே உள்ள சமயபுரத்தில் படை வீடூ அமைத்து தங்கி இருந்த போது, அவனுடய கனவில் தோன்றிய மாரியம்மன்…….தஞ்சாவூரின் அருகில் புன்னை மரங்கள்  நிறைந்த இடத்தில் தனக்கொரு அமைவிடம் இருப்பதாகவும், அந்த இடத்துக்கு வந்து வழிபட்டால் அவனுக்கு வெற்றி கிடைக்கும் எனவும் கூறியதாம்.சிறிதும் தாமதிக்காத வெங்கோஜி உடனடியாக கிளம்பி சென்று, தஞ்சாவூரீன் கிழக்கே அமைந்திருந்த புன்னை மர காட்டின் உள்ளே தேடி, அங்கு இருந்த ஒரு புற்றுதான் அம்மனின் இருப்பிடம் என்பதை கண்டறிந்து வழிப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
தஞ்சையில் காணவேண்டிய மேலும் சில இடங்கள் :


ராஜராஜன் மணி மண்டபம்:


இந்த மண்டபம் 8-ம் உலக தமிழ் மாநாட்டின் போது கட்டப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான பொருட்களை கொண்டு சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் ராஜ ராஜன் மணிமண்டபத்தின் அடிதளத்தில் சுற்றுலா பயணிகள் பயனடைய செயல்படுகிறது. தமிழக அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது
சோழர் காலத்தின் சிற்பங்களை சிறப்புற விளக்கும் இக்கோவில் கி.பி 1005-ம் ஆண்டு தஞ்சைக்கு மிக அருகாமையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பிரார்த்தனை, அழகியியல், புராண கதை போன்றவற்றிற்கு பிரசித்தமாக விளங்குகிறது. வெளிநாட்டவர்கள் பலரும் இக்கோவிலில் உள்ள சிற்பங்கள், கல்வட்டு முதலியவற்றை ஆர்வமுடன் அறிந்து கொள்கிறார்கள்.

குவார்ட்ஸ் தேவாலயம்: அரண்மனை தோட்டத்தில் உள்ள இந்த தேவாலயம் கி.பி 1779ம் ஆண்டு சரபோஜி மன்னரரால் கட்டப்பட்டுள்ளது.


சரபோஜி மன்னர் சமய பிரசாரகர் Rev.C.V குவார்ட்ஸ் மேல் கொண்ட அன்புக்கு அடையாளமாக இந்த தேவாலயத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த காலத்தில் வெள்ளையரின் இராணுவம் வழிப்பட்டதாக கூறப்படுகிறது.

தஞ்சைக்கு செல்வது எப்படி :
விமானம் வழியாக: விமானம் வழியாக சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்துவிடவும். நீங்கள் திருச்சியை சுற்றிபார்க்க திட்டமிட்டிருந்தால் அதன் பிறகு தஞ்சைக்கு செல்வது நல்லது. திருச்சியிலிருந்து தஞ்சைக்கு செல்ல 1 மணிநேரம் ஆகும். எண்ணற்ற பேரூந்துகள் திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து பல்வேறு ரயில்கள் தஞ்சைக்கு செல்கிறது. ரயில் மூலம் ஒரு சிறந்த பயண அனுபவத்தை உணர வேண்டுமானால் கம்பன் எக்ஸ்பிரஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சென்னை எழும்பூரிலிருந்து

இரவு 11.15 க்கு புறப்படும் இந்த ரயில் சரியாக மறுநாள் கலை 5.30 க்கு தஞ்சாவூரை அடையும். மலைக்கோட்டை, ஜனதா உள்ளிட்ட எக்ஸ்பிரஸ்களும்  தஞ்சாவூருக்கு செல்கிறது. இதன் கால அட்டவணையை இணையத்தில் காணவும் பேரூந்து பயணம் : சென்னை கோயம்பேட்டிலிருந்து பல்வேறு அரசு பேரூந்துகள் தஞ்சாவூருக்கு தினமும் செல்கின்றன SRM நிறுவனத்தின் தனியார் பேரூந்துகளும் தஞ்சாவூருக்கு இயக்கப்படுகின்றன. இதுவும் கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. சொகுசு பேரூந்துகள், குளிர்சாதன வசதிகொண்ட

பேரூந்துகள், செமி சிலீப்பர் எனப்படும் படுக்கை வசதிகொண்ட பேரூந்துகள் இந்த இரண்டு பஸ் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன தங்கும் விடுதிகள் : தஞ்சாவூரில் பல்வேறு விடுதிகள் உள்ளன இருந்தபோதிலும் உங்கள் தொடர்புக்கு ஒரு விடுதியின் முகவரியை தருகிறோம். தஞ்சையை சுற்றிபார்க்க இரண்டு நாட்களில் தம்பதி ஒருவருக்கு 6000 ரூபாய் வரை  செலவாகும்.குழந்தைகள் ஒருவர் அல்லது இருவர் இருப்பின் அதற்கு ஏற்ப 15 வரை கூடுதல் செலவாகும்.

ஹோட்டல்  சங்கம் திருச்சி ரோடு, தஞ்சாவூர் குறிப்பு: இந்த விடுதி எங்களால் பரிந்துரைக்கப்படவில்லை. தஞ்சாவூரின் சிறந்த விடுதிகளுள் ஒன்று என்ற  அடிப்படையிலேயே தரப்படுகிறது..

நானும் பகிர்கிறேன்..


Last edited by அனுராகவன் on Tue 29 Apr 2014 - 15:44; edited 2 times in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:57

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Thanjavur%20033
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Thanjavur%20110
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Thanjavur%20119
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by ராகவா Tue 29 Apr 2014 - 15:58

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Thanjavur%20035
ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Thanjavur%20011
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by சேனைப் பூங்காற்று Wed 11 Jun 2014 - 10:34

அழகா இருக்கு
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்?? - Page 2 Empty Re: ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum