சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பெண்கள் பார்வையில் திருமணம் Khan11

பெண்கள் பார்வையில் திருமணம்

5 posters

Go down

பெண்கள் பார்வையில் திருமணம் Empty பெண்கள் பார்வையில் திருமணம்

Post by Nisha Wed 30 Apr 2014 - 11:00

பெண்கள் பார்வையில் திருமணம்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற கருத்து காலம் காலமாய் மக்களின் வாய் வார்த்தைகளாக வருவதுண்டு.

ஆனால் இதனை யார் சொன்னது, இது உண்மையா என்ற கேள்விக்கான பதில்கள் எவரிடமிருந்தும் வருவதில்லை.

அப்படி பார்க்கையில் சிலருக்கு சொர்க்கத்தில் நிச்சயித்த திருமணம் நரகமாய் அமைவதுண்டு, பலருக்கு சொர்க்கமாகவே அமைகிறது.

பொதுவாக இந்த திருமண பந்தத்தில் ஆண்களை விட பெண்களுக்கு கொஞ்சம் பயம் அதிகமாகவே இருக்கும், ஏனெனில் வேறு ஒரு குடும்பத்தில் இணையப்போகிறோம், திருமண உறவு பற்றி ஏராளமான எதிர்பார்ப்புகள் என்று இன்னும் பல கனவுகளோடு அடியெடுத்து வைப்பார்கள்.

ஆனால் ஆண்களுக்கு அந்தவாறு இல்லை, நல்ல வேலையுடன், சம்பாத்யமும் இருந்தால் திருமணத்துக்கு ரெடியாகி விடுவார்கள்.

இந்த சமூகத்தில் பெண்கள் பார்வையில் திருமணம்

குடும்ப சூழல்
சில பெண்கள் தங்களை பணம் செலவழித்து படிக்க வைத்த பெற்றோருக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பர். இந்த லட்சியம் நிறைவேறிய பின்னரே திருமணம் பந்தத்தில் இணையலாம் என்று எண்ணுவர்.

ஒரு சில பெண்கள் தங்களுக்கென்று சொந்த லட்சியம் வைத்திருப்பர், எங்கே திருமணம் என்ற பந்தத்தால் தங்களின் லட்சியம் சிதைந்து சின்னாபின்னமாகிவிடுமோ என்பதால் திருமண உறவுக்குள் நுழைவதற்கு யோசிப்பார்கள்.

சொந்தச் சூழல்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
யாரையாவது காதலிக்கலாம். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க காத்திருக்கலாம்.
சில காதல்கள் பிரச்சினையை கிளப்பும். அந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும் வரை காத்திருக்க நேரிடலாம்.

திருமணக் காலம்
பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கியமானது. குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் செய்துகொண்டால்தான் வாழ்க்கையை ரசிக்கவும், ருசிக்கவும் முடியும்.

காலம் தாழ்த்தி செய்யும் திருமணங்கள் வெறும் கடமையாக மட்டுமே இருக்கும்.
பெண்களின் திருமணத்தைப் பற்றி குறிப்பிட்ட காலம் வரைதான் அவரை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள்.

குறிப்பிட்ட காலம் வரைதான் மாப்பிள்ளை தேடுகிறார்கள். ஆண்களும், இளம் வயது பெண்களைத்தான் திருமணத்திற்காக தேர்ந்தெடுக்கிறார்கள்.

திருமணம் செய்துகொள்ள மற்றவர்கள் விரும்பும் காலத்தில் மவுனமாக இருந்துவிட்டு, அதன் பின்பு வரன் தேட ஆரம்பித்தால், ஒப்புக்கு சப்பான வரனே அமையும் நிலை ஏற்பட்டு விடும்.

தகுதியான மாப்பிள்ளை
உயர்ந்த பணியில் அமர்ந்துவிடும் பெண்கள், தங்களுக்கு தகுதியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அதனால் திருமணத்தை தள்ளி வைப்பதாக சொல்கிறார்கள்.
அவர்களைவிட அதிகம் படித்தவரை, அதிகம் சம்பாதிப்பவரை திருமணம் செய்தால்தான் தங்கள் தகுதி அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள்.

படிப்பிலோ, உத்தியோகத்திலோ தன்னைவிட குறைந்த ஆணை திருமணம் செய்ய மறுக்கிறார்கள்.

திருமண வாழ்க்கை வெற்றியடைய படிப்பு, பணம், அந்தஸ்து போன்றவை மட்டுமே காரணம் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள அதிக காலம் அவசியப்படுகிறது.
எது எப்படியாயினும் ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பழமொழிக்கேற்ப, பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விதத்தில் தான் அவர்களின் வாழ்கை உள்ளது.

திருமணம் என்பது பெண்களின் வாழ்க்கையில் விழும் முற்றுப்புள்ளி அல்ல. அது அவர்களது திறமைக்கு கிடைக்கும் தொடக்க புள்ளியாகவும், வெற்றிப் புள்ளியாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.
http://www.newindianews.com/page.php?marriage


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்கள் பார்வையில் திருமணம் Empty Re: பெண்கள் பார்வையில் திருமணம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Apr 2014 - 12:44

இங்கு குறிப்பிட்டிருக்கின்ற விடயங்கள் பெண்களின் திருமண விடயத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் சில சமுகத்தில் குறிப்பாக இஸ்லாமிய சமுகத்தில் பெண்கள் பெற்றோரை நோக்கி எதிர்பார்த்திருப்பார்கள் 
பெண்கள் திருமணத்திற்கு தயாரான நிலையிலும் தங்களது குடும்பத்தினர் அதனை தயார் செய்ய வேண்டும் அவர்கள் பார்க்கின்ற மாப்பிள்ளைகளைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் காத்திருப்பார்கள் ஆனால் குடும்ப சூழல் அவர்களின் திருமணத்தில் வெகுவாக காரணமாக அமைந்துவிடும் 
இதற்கு சமுதாய அமைப்புகளும் காரணமாகிவிடுகிறது மார்கத்துடன் பயணிப்பவர்களைத்தவிர சீதனம் என்ற ஒரு கொடுமையின் பின்னால் இளைஞர்கள் இருப்பதால் அச்சீதனத்தினை தேடிக்கொள்வதற்கு பெற்றோருக்கு அதிக காலம் எடுக்கிறது உடன் பிறப்புகளும் சேர்ந்து உழைத்து அத்தனையும் தயார்செய்து முடிக்கின்ற போது பெண்களுக்கான வயது 30யை தொட்டிருக்கும் இப்படி பல்வேறு பிரச்சினைகளுடன் பெண்கள் திருமணத்தினை எதிர்கொள்கிறார்கள் 

என்னுடன் படித்த ஒரு தோழி இவ்வாறான பிரச்சினையுடன் இன்னும் திருமணம் முடிக்காமல் இருக்கிறார் அவருடய முத்த சகோதரியும் அவ்வாறே காத்திருக்கிறார் என்றால் சமுக்தின் நிலை பற்றி சிந்தித்துப்பாருங்கள் 
இவற்றுக்கு பொறுப்பாளிகள் சமுகத்தைச் சார்ந்தவர்களே என்பதில் சந்தேகமில்லை


பெண்கள் பார்வையில் திருமணம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்கள் பார்வையில் திருமணம் Empty Re: பெண்கள் பார்வையில் திருமணம்

Post by பானுஷபானா Wed 30 Apr 2014 - 14:15

பெண்கள் விசயத்தில் பெற்றோர் எடுக்கும் சில கல்யாண முடிவு பெண்களின் தலைக்கு கொள்ளிக்கட்டையாகவே இருக்கிறது.

என் அனுபவம் எல்லோரையும் குறித்து சொன்னதல்ல.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்கள் பார்வையில் திருமணம் Empty Re: பெண்கள் பார்வையில் திருமணம்

Post by Nisha Wed 30 Apr 2014 - 14:49

திருமணம் , சீதனம் குறித்து என் புரிதலை நான்  பின்னர்  தருகின்றேன்.

ரெம்ப தட்டச்சிட முடியல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்கள் பார்வையில் திருமணம் Empty Re: பெண்கள் பார்வையில் திருமணம்

Post by rammalar Thu 1 May 2014 - 7:59

மனைவி சொல்லே மந்திரம்
என மதிக்கும் கணவன் வாய்க்கப்
பெறுவதே மிக்க சந்தோஷம் தரும்
-
 பெண்கள் பார்வையில் திருமணம் Arya-vora5
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பெண்கள் பார்வையில் திருமணம் Empty Re: பெண்கள் பார்வையில் திருமணம்

Post by ராகவா Thu 1 May 2014 - 10:06

பெண்கள் பார்வையில் திருமணம் Marriage_001
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பெண்கள் பார்வையில் திருமணம் Empty Re: பெண்கள் பார்வையில் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum