Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
1330 டியூன் - இலவசமாக ஒரு இசை ஆல்பம்! - பரத்வாஜ்.
Page 1 of 1
1330 டியூன் - இலவசமாக ஒரு இசை ஆல்பம்! - பரத்வாஜ்.
-
பெரிய காரியத்தை தனியாளாய் செய்து
முடித்திருக்கிறார் பரத்வாஜ். 1330 திருக்குறளுக்கும்
இசையமைத்து முடித்திருக்கிறார். வரும் ஜூன்
மாதம் முதல்வர் ஜெயலலிதாவை வைத்து
ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்.
-
இந்தக் கனவு பிராஜெக்ட்டிற்காக கிட்டத்தட்ட நாலு
வருஷம் சினிமாவுக்கு இசையமைப்பதையே
நிறுத்திவிட்டார். பணம் சம்பாதிக்கும் திரைத்
துறையினருக்கு இடையில் இப்படியொரு மனிதரா?
-
சினிமாவுக்கு மியூசிக் போடுறது என்பது வேற.
இந்த மாதிரியான இலக்கியத்திற்கு இசையமைப்பது
வேற. ஒரே சிந்தனையில் "டெடிக்கேட்'டா வேலை
பார்க்கணும் இல்லையா?
-
அஃப்கோர்ஸ், சந்தேகமே இல்ல. இந்த வேலை
சினிமா பாட்டுக்கு ட்யூன் போடறதைப் போல
லேசான காரியமில்லை. ஏன்னா, இது தமிழ்ப்
பாரம்பரியம், இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம்.
தப்பாச்சுன்னா தமிழ் அறிஞர்களுக்கு பதில்
சொல்லணும்.
-
ஆசை இருந்து ஆரம்பிச்சிருந்தாலும் போகப்போக
இது லேசான விஷயம் இல்லனு தோணியிருக்குமே?
-
நல்ல கேள்வி. முதல்ல ஆசையில வேலையைத்
தொட்டாச்சு. முதல்ல நானே முழு ஆலயபத்தையும்
பாடிடலாம்னு நினைச்சேன். பிறகு அப்படி பண்ண
வேண்டாம்னு முடிவெடுத்தேன். கடவுள் வாழ்த்துப்
பகுதியில இருக்குற பத்துக் குறளையும் 10 ஸ்கூல்ல
இருந்து 100 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து பாட
வச்சிருக்கேன். ரொம்ப பிரமாதமா வந்திருக்கு.
-
இப்படி ஒவ்வொன்றுக்கும் புதுப்புது ஐடியாவைச்
சேர்த்த போது வேலை பல மடங்கா அதிகமாயிடுச்சு.
இதனால வந்த சினிமா சான்ஸையெல்லாம் கொஞ்சம்
கொஞ்சமா தவிர்க்க வேண்டியிருந்தது.
-
"என்னப்பா அஜித்துக்கு பாட்டுப்போட்டிருக்க. கமலுக்கு
பாட்டு போட்டிருக்க. வாய்ப்பு இருக்கும்போதே நாலு
காசு பார்க்காம இந்த வேலையெல்லாம்
தேவைதானா'னு கேட்டாங்க. எனக்கு பணத்தாசையை
விட இந்த ஆல்பம் மேல இருந்த ஆசை தூக்கலா
இருந்தது.
-
ரெண்டாயிரம் வருஷம் முன்னாடி ஒரு தமிழன்
இப்படி சாதிச்சிருக்கான். நாம ஏதாவது பண்ண
வேண்டாமானு உள்மனசுல வெறி. அத வெளியில
இருக்குறவங்களுக்கு புரிய வைக்க முடியாது. இந்த
வேலைக்காக மொத்தம் 12 நாடுகளுக்கு சொந்தக்
காசுல சுத்தியிருக்கேன். குறளுக்கு இசைமைக்கும்
போது நான் உணர்ந்த ஆச்சர்யமான விஷயம்
என்னன்னா... 1330 குறள்களும் "கண்டநடை'யில்
இருக்கிறது. என்பதை, "கண்டநடை'யின்னா "தகதகிட'
ஐந்து எண்ணிக்கையில் இருக்கும். கண்டநடையில்
இசையமைத்தால் பேசுற அளவுக்கே பாட முடியும்.
வேகமாகப் போக முடியாது. தகதகிடவுல மியூசிக்
போட்டதும் சரியா செட் ஆச்சு. இதக் கண்டு
பிடிப்பதுலதான் ஃபர்ஸ்ட் சிரமம் இருந்தது. இந்த
மீட்டரை பிடிச்சதும் வேலைகள் வேகமாயிடுச்சு.
-
ஆல்பத்தை முதல்வர் ஜெயலலிதாவை வைத்து
வெளியிட போறீங்களாமே?
-
ஆமாம் அதுல அரசியல்லாம் இல்ல. தமிழ்ல ஒரு
பெரிய விஷயத்தை பண்றோம். நம்ம ஸ்டேட்டுக்கு
இப்ப அவங்கதான் முதல்வர். அவர் மூலமா வெளி
வருவதுதான் திருக்குறளுக்குப் பெருமை. நான்
எனக்காக எதையும் யோசிக்கல. இந்த ஆல்பத்தை
எம்.பி.3 வடிவில் இலவசமாகதான் கொடுக்கப்போறோம்.
இரண்டாயிரம் வருஷம் பழமையான ஒரு
ஸ்கிரிப்டுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள், கர்நாடிக்
சிங்கர், ப்ளேபாய் சிங்கர்ஸ், தமிழ் அறிஞர்கள்,
உலகத் தமிழர்கள், சயிண்டிஸ்ட், சாதாரண மக்கள்னு
ஏறக்குறைய ஆயிரம் பேர்க்கு மேல சேர்ந்து
பாடியிருக்காங்க. அந்த உழைப்பு உலகம் பூரா போய்ச்
சேரணும். அதற்காக அம்மா கலந்துக்கணும்னு
ஆசைப்படுகிறோம்.
-
காலர் ட்யூனாக கேட்கும் பாடல்களுக்கு ராயல்டி
வேண்டும்னு சில மியூசிக் டைரக்டர்ஸ் குரல் கொடுக்க
ஆரம்பிச்சிருக்காங்க?
-
இதுக்கு ஐ.பி. ஆக்ட்னு பேர். உலகம் முழுக்க
இண்டலக்ச்சுவல் பிராப்பர்டி சட்டத்தை சரியா
பயன்படுத்துறாங்க. இந்த விஷயத்தில் இந்தியா
"ரோக்' கண்டரி. யார் வேண்டுமானாலும் எப்படி
வேண்டுமானாலும் நடந்துக்கலாம். இப்ப பாடகர்களும்
பங்கு கேட்கிறார்கள். ஒரு பாடலுக்காக ஒரு பாடகர்
ஒரு மணி நேரம்தான் செலவு செய்கிறார். மியூசிக்
டைரக்டர் 100 மணிநேரம் செலவு செய்கிறார். இந்த
நாட்ல மியூசிக் டைரக்டருக்கு என்ன வேலையிருக்கு
என்பதே பலருக்கும் தெரியல. மியூசிக்னா அதற்கு
ஒரு மரியாதை வேணும் சார். அது நம்ம நாட்டுல
சுத்தமா இல்ல.
-
அஜித் படங்கள்னாலே நீங்க இருப்பீங்க... இப்ப நீங்க
மிஸ் ஆகுறீங்க... வருத்தம் இருக்கா?
-
ஒரு வருத்தமும் இல்லை. அவருக்கு எப்ப என்
டைப் பாட்டு வேணும்னு விரும்புகிறோரோ அப்ப
திரும்ப வரலாம். அவங்கதான் என்னை செலக்ட்
பண்றாங்க. நான் யாரையும் செலக்ட் பண்ணல.
-
-------------------------------
- கடற்கரய்
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum