சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Khan11

விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

2 posters

Go down

விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by ahmad78 Tue 27 May 2014 - 8:23

[size=undefined] 

விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!
ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்...
சா.வடிவரசு, படங்கள்: செ.சிவபாலன், ச.இரா.ஸ்ரீதர்


விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! P40டந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள், சென்னை, விருகம்பாக்கம், சின்மயா நகரிலிருக்கும் சீனியரான ஒரு டாக்டரின் கிளினிக்கில் நாம் காத்திருந்தோம். அப்போது துவண்டு துவண்டு விழும் ஒரு குழந்தையுடன், இளம்பெற்றோர் அங்கே ஆஜரானார்கள். இருமல், தும்மல், மூச்சிரைப்பு என்று படாதபாடுபட்டுக் கொண்டிருந்தது அந்தப் பிஞ்சு. வெளியில் எட்டிப்பார்த்த டாக்டர், உடனடியாக ஒரு ஊசியைப் போட்டுவிட்டு, ''குழந்தை என் கண்காணிப்பிலேயே கொஞ்ச நேரம் இருக்கணும். அதனால, இங்க இருந்து போயிடாதீங்க...'' என்று சொல்லிவிட்டு, மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்தார். இடையிடையே குழந்தை எப்படி இருக்கிறது என்றும் எட்டிப் பார்த்துக்கொண்டார்.
அந்த இளம்பெற்றோர் டாக்டர் முன் அமர்ந்திருக்க, நாமும் அந்த நேரம் உள்ளே இருந்தோம் (ஒரு நோயாளி இருக்கும்போதே, இன்னொருவரையும் உள்ளே அழைத்து உட்கார வைப்பது இவருடைய வழக்கம்).
அப்போது குழந்தை நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க... ''குழந்தையை ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல கொண்டு வந்திருக்கீங்க. பொதுவா இப்படிப்பட்ட கண்டிஷன்ல வந்தா... எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகச் சொல்லிடுவேன். ஆனா, அந்த நிலையிலயும் குழந்தை இல்ல. அதனால கடவுள் மேல பாரத்தைப் போட்டுத்தான் சிகிச்சையை ஆரம்பிச்சேன். குழந்தை பொழைச்சுடுச்சி. முதல்லயே சொன்னா பயந்துடுவீங்கனுதான் சொல்லல.
ஒருவாரமா நீங்க ஒரு டாக்டர்கிட்ட குழந்தையைக் காட்டியிருக்கீங்க. அந்த டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து போலியானது. நீங்க கொண்டு வந்த இந்த சிரப்ல பாருங்க... ஏதோ ஒரு தெரு பேரைப் போட்டு, வளசரவாக்கம்னு எழுதியிருக்கு. இப்படி ஒரு மருந்து கம்பெனியே இல்ல. ஒருவேளை அந்தத் தெருவுல போய் விசாரிச்சீங்கனா... 'இது ஆபீஸ்... கம்பெனி காட்டாங்குளத்தூர்ல இருக்கு'னு பொய் சொல்லுவாங்க. ஆனா, விவரம் புரியாம இந்த மருந்தையே நீங்க கொடுத்திருக்கீங்க. அதேபோல, தேவையில்லாத ஆன்டிபயாடிக் மருந்தையும் கொடுத்திருக்கீங்க. இதையெல்லாம குழந்தைக்கு கொடுக்கவே கூடாது. அந்த டாக்டர் தெரிஞ்சுதான் எழுதினாரா... இல்லையாங்கிறது கடவுளுக்கே வெளிச்சம்'' என்று பெற்றோரிடம் சொன்ன டாக்டர், 'இனி யாச்சும் கவனமா இருங்க. குழந்தைக்கு ஏதாச்சும்னா.. எந்த நேரம் வேணும்னாலும் போன் பண்ணுங்க...' என்று சொல்லி அக்கறையோடு சொல்லி அனுப்பினார்.
[/size]
விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! P40a
[size][color][size][color][size]
நம் பக்கம் திரும்பியவர், 'ம்... இப்படி மருந்து, மாத்திரைகள் விஷயத்துல ஏகப்பட்ட வில்லங்கம் நடக்குது. மக்களோட உயிரோட விளையாடறாங்க. சில டாக்டர்களும் இதுக்கு உடந்தையாயிட்டாங்க. அதேபோல, மக்களும் தாங்களாவே இஷ்டம்போல மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடறாங்க. என்ன பண்றது?' என்றபடியே... நமக்கான சிகிச்சையை முடித்து அனுப்பினார்.
நமக்கு வந்த காய்ச்சல் குணமானது... ஆனால், டாக்டர் சொன்ன அந்த விஷயம், மூளைக்குள் போய் உட்கார்ந்துகொண்டு குடைய ஆரம்பித்துவிட்டது.
''சார், அமாக்ஸ்லின் (Amoxicillin) மாத்திரை பத்து கொடுங்க...''
''எனக்கு பெனிசிலின் (Penicillin) மாத்திரை ஒரு இருபது கொடுங்க...''
- டாக்டர் பரிந்துரைத்த மருந்து சீட்டுடன், மருந்துக்கடைகளில் நாம் நின்று கொண்டிருக்கும்போது, பரபரவென்று வந்து நிற்கும் சிலர், இப்படி மாத்திரைகளின் பெயர்களைச் சொல்லிச் சொல்லி கேட்க... சட்டென்று கடைக்காரர் எடுத்துக் கொடுக்க... நம்மில் பலர் ஆச்சர்யமாக பார்த்திருப்போம் அவர்களை! 'அட, மாத்திரை பேரெல்லாம் என்ன அழகா தெரிஞ்சு வெச்சிருக்காங்க' என்று அவர்களைப் பற்றி பெருமிதமாக நினைத்தது நினைவுக்கு வந்தது.
சிலர், 'எனக்கு பத்து நாளா வயித்த வலிக்குதுங்க. போன தடவை கொடுத்தீங்களே... அதே மாத்திரை பத்து கொடுங்க' என்று கேட்க...
'புரூஃபென் மாத்திரைதானே... இதோ தர்றேன்' என்றபடி கடைக்காரர் எடுத்துக் கொடுக்க...
'அட, இது தெரியாம நாம டாக்டர்கிட்ட இல்ல அடிக்கடி போறோம். நேரடியா இங்கயே வந்துட்டா... டாக்டர் செலவு மிச்சமாச்சே' என்று யோசித்ததும்... நினைவிலாடியது.
ஆனால், இப்படி டாக்டரின் பரிந்துரை இல்லாமலும், ஏற்கெனவே ஒரு தடவை பரிந்துரைத்த மருந்து என்பதற்காகவும் இஷ்டம்போல மாத்திரைகளை வாங்கிச் சென்று பயன்படுத்துவது மிகமிக ஆபத்தானது என்கிற உண்மை, நன்றாகவே உறைத்தது! சொல்லப் போனால், டாக்டரின் பரிந்துரையோடு சாப்பிடும் மருந்து, மாத்திரைகளே... 'சைடு எஃபெக்ட்' என்ற பெயரில் வயிற்றுவலி, தலைவலி, அலர்ஜி என்று பலவித உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த் துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், டாக்டர் சொல்லாமலே மருந்துகளைச் சாப்பிடுவதும்... எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பதும் பெருங்கொடுமைதானே!
நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்... என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்... தாராளம்!
விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! P40bமருந்தே விஷமாகும்!
''புதிதாக செல்போன் வாங்கினால், 'இது என்ன மாடல், லேட்டஸ்ட் வெர்ஷனா, என்னென்ன வசதிகள் உண்டு..?’ என்று, கேட்க பல கேள்விகள் உண்டு நம்மிடம். ஆனால், மாத்திரை, மருந்து வாங்கும்போது, 'எந்த பிரச்னைக்கு எந்தெந்த மாத்திரைகள்..?’ என்று அதை எழுதிய டாக்டரிடமோ, 'காலாவதியாகும் தேதி என்ன?’ என்று மெடிக்கல் ஷாப்பிலோ யாரும் கேட்பதில்லை. ஆனால், மருந்தே விஷமாகும் அபாயம்கூட இன்றைய மருத்துவச் சந்தையில் சாத்தியம்!'' என்று அதிர்ச்சி கூட்டுகிறார், ஓய்வுபெற்ற அரசு பொதுநல மருத்துவர் நாராயணன். மருந்து, மாத்திரை குளறுபடிகள் பற்றி, தன் 48 ஆண்டுகால மருத்துவ அனுபவத்திலிருந்து பேசினார் டாக்டர்.  
'ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரை கொடுங்க..!’
''ஆன்டிபயாடிக் மருந்துகளை இன்று மருத்துவர்களின் பரிந்துரை இன்றி மக்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்வது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு தடவை ஜுரத்துக்காக டாக்டர் எழுதிக் கொடுத்த அதே மருந்தை, அடுத்த முறை ஜுரம் வரும்போது... 'ஏற்கெனவே இதைத்தானே எழுதினார்' என்றபடி நேரடியாக மருந்துக்கடைக்குச் சென்று வாங்கிச் சாப்பிடுவதும் வழக்கமாகி வருகிறது. ஆன்டிபயாடிக் மருந்து என்பது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, உடலில் உள்ள கிருமிகளின் தாக்கத்தை நிறுத்தி, மேலும் வளரவிடாமல் தடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பிரச்னைகளைத் தீர்க்கும். ஆனால், எல்லாவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகளும், உட்கொள்ளும் அனைவருக்கும் இதைச் செய்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. எனவே, ஒவ்வொருவரின் உடல் பிரச்னையைப் பொறுத்து, துல்லிய சோதனைக்குப் பிறகு, அவருக்கான மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார்.
பலரும் இன்றைக்கு மருந்துக்கடைகளுக்குச் சென்று, தங்களின் பிரச்னையை அங்கே எடுத்துச் சொல்லி, மருந்துகளையும், ஆன்டிபயாடிக் மாத்திரைகளையும் வாங்கி உட்கொள்கிறார்கள். இதனால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படலாம், அழிக்கப்படாமலும் போகலாம். ஒருவேளை அது அவரது பிரச்னைக்கு ஏற்ற மருந்தாக இல்லாமல் இருந்தால், வாய்ப்புண், குடற்புண், எரிச்சல் என அது கூடுதல் பிரச்னைகளை விளைவிக்கும். மேலும் 5 - 7 நாட்கள் உட்கொள்ள வேண்டிய இதை, அதைவிடக் குறைந்த அல்லது அதிகமான நாட்களுக்கு எடுத்துக்கொள்கிறார்கள். இதுவும் கூடுதல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
நம் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது, அதன் பெருக்கத்தைக் குறைத்தோ, அதை முற்றிலுமாக அழித்தோ நம்மை நோயிலிருந்து காக்கும் மருந்துகளே, ஆன்டிபயாடிக் மருந்துகள். பொதுவாக, பாக்டீரியா தொற்று ஏற்பட்டால்... நம் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே, பாக்டீரியாவை எதிர்த்துப் போராடி, நோயில் இருந்து காக்கும். அது திறன் குறையும் போதோ அல்லது தொற்றின் வீரியம் அதிகமாக இருக்கும்போதோ, இந்த மருந்துகள் தேவையாகின்றன. இதுவே தொடர்ச்சியாக இந்த மருந்தை எடுக்கும்போது, ஒருகட்டத்தில் குறிப்பிட்ட பாக்டீரியா, அந்த மருந்தை எதிர்க்கப் பழகிவிடும். பின் மருந்து பயனற்றுப் போக, அந்த பாக்டீரியா தொற்றை ஒழிக்க முடியாமலேயே போய்விடும். எனவேதான், அதிகமாகவோ... தொடர்ச்சியாகவோ இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
மேலும், ஆன்டிபயாடிக் மருந்துகள்... பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் அளவுக்கு... வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடாது. சளி, தடுமன் போன்ற வைரஸால் ஏற்படும் உடல் அசௌகரியங்களுக்கு இது தீர்வாகாது. சோர்வு, வாய் மற்றும் செரிமானப் பாதையில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று முதலிய பக்கவிளைவுகளையும் இந்த மருந்துகள் ஏற்படுத்தும். இந்த மருந்துகளை, மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது அலர்ஜி ஆகும் வாய்ப்புகளும் உண்டு. சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆன்டிபயாடிக் எடுப்பது கூடாது. இத்தனை ஆபத்தான விஷயங்கள் உண்டு என்பதால், மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக்கடை யில் நீங்களாகவே வாங்கி உட்கொள்வது கூடவே கூடாது'' என்று வார்த்தைகளில் கண்டிப்பு காட் டிய டாக்டர் நாராயணன், தொடர்ந்தார்...
வலி நிவாரணி தரும் வலிகள்!
''சோர்வு, சத்துக்குறைபாடு உள்ளிட்ட காரணத்தால்கூட தலைவலி, உடல்வலி ஏற்படலாம். இதற்கு ஓய்வும், ஊட்டச்சத்து உணவுமே மருந்து. ஆனால், மக்களுக்கோ... 'வலி நிவாரணியே... இன்று சர்வரோக நிவாரணி' என்றாகிவிட்டது. பலரும் எல்லாவிதமான உடல் சௌகரியங்களுக்கும் ஏதோ சாக்லேட் சாப்பிடுவதைபோல, வலிநிவாரணியைப் போட்டுக்கொள்கிறார்கள். இதனால் ஒவ்வாமை, அலர்ஜி, வாந்தி, பேதி என்று தொடங்கி... நரம்புத்தளர்சி, கிட்னி பாதிப்பு வரை ஏற்படலாம். உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது கிட்னியின் பொறுப்பு. அதிகமாக வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும்போது, அந்த மருந்துக் கழிவுகளை ஓயாமல் வெளியேற்றிக்கொண்டே இருக்கும் செயல்பாடு காரணமாக சிறுநீரகம் பழுதாகலாம். எனவேதான் வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும் பலரையும் அது சிறுநீரகப் பிரச்னையில் கொண்டுபோய் விடுகிறது'’ என்று எச்சரிக்கை தந்த டாக்டர் நாராயணன்,
தரமற்ற மருந்துகள்..!
விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! P40d''ஊழல் இல்லாத இடம் எதுவுமில்லை. அது மருந்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். விளைவு, தரமில்லாத மருந்துகள் இப்போது அதிகமாக புழக்கத்துக்கு வருகின்றன. அவற்றை சிரமமின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க, மருத்துவர்களுக்கு 'காம்ப்ளிமென்ட்’ என்ற பெயரில் கமிஷன் கொடுத்து, தங்கள் நிறுவன மருந்துகளையே அதிகமாக எழுத வைக்கின்றன சில நிறுவனங்கள். எனவே, நீங்கள் நாடிச் செல்லும் மருத்துவர் நம்பகமானவராக, நீங்கள் நீண்ட நாள் அறிந்தவராக இருக்க வேண்டியது அவசியம். 'பெரிய மருத்துவமனை’ என்பதைவிட, நல்ல மருத்துவமனையை நாடிச் செல்லுங்கள்.
எல்லா மருந்து, மாத்திரைகளையும் 'எக்ஸ்பைரி டேட்’ (காலாவதி தேதி) பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியம். மருந்துக்கடைகளில், நீங்கள் கொடுத்த மருத்துவச் சீட்டில் உள்ள மருந்துக்குப் பதிலாக, 'இந்த கம்பெனி மருந்து இல்லை, வேற கம்பெனி மருந்து தரட் டுமா?’ என்று கேட்பது பெரும்பாலும் நடக்கும். இத்தகைய சூழலில், வேறொரு கடையை நாடிச் செல்வது நலம். அங்கும் கிடைக்கவில்லை என்றால்... இரண்டு நிறுவன மருந்துகளின் சேர்க்கைப் பொருட்களும் ஒன்றுதானா என்பதை உறுதிபடுத்திக்கொண்ட பிறகு வாங்குங்கள். இது தொடர்பாக டாக்டரின் அறிவுரையையும் கேட்டுப் பெறுங்கள்.
மருத்துவச் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை வழங்குவது தடை செய்யப்பட்டிருப்பதைப் போல, ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, விட்டமின், ஹார்மோன், மனஅழுத்த மருந்துகளையும் இஷ்டம்போல விற்பனை செய்யாமல், மருத்துவ பரிந்துரையின் பேரில் விற்பனை செய்யும் வகையிலான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இதற்கு விடிவு காலம் பிறக்கும்'' என்று அக்கறை யோடு சொன்னார்.
இத்தகைய மருந்துகளால் அதிகம் பாதிக்கப்படுவது... குழந் தைகளும் பெண்களும்தான். அந்த பாதிப்புகள் எந்தெந்த வகைகளில் வருகின்றன... அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன..?
[/size][/color][/size][/color][/size]
அடுத்த இதழில் பார்ப்போம்...



[size][color][size][color][size]
அமெரிக்காவில்..!
நோயாளியின் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்காமல், காதில் கேட்டபடியே புரியாத கையெழுத்தில் மருந்து, மாத்திரைகளை எழுதித்தள்ளி, 'எங்க ஃபார்மஸியிலேயே வாங்கிடுங்க...’ எனும் மருத்துவர்களின் பிம்பங்களே இங்கு அதிகம். ஆனால், வெளிநாடுகள் பலவற்றிலும், இந்த விஷயத்தில் அரசாங்கங்கள்... மக்களின் பாதுகாவலனாகவே நிற்கின்றன. குறிப்பாக, அமெரிக்காவில், ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு என்ன பிரச்னை, எதனால் அது வந்தது, மருந்துகள் இல்லாமலேயே அதை சரிசெய்ய முடியுமா, அல்லது பக்கவிளைவுகளற்ற என்னென்ன மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்பது உள்ளிட்ட பலவற்றையும் பரிசீலித்தே சிகிச்சை கொடுப்பார். சாதாரண கோளாறுக்கான ஏதாவது ஒரு மாத்திரையை அவர் தவறாக எழுதிவிட்டாலும், அவரை ஜெயிலின் கதவுகள் திறந்து வரவேற்கும் என்பது ஹைலைட். இங்கோ, அறுவை சிகிச்சையின்போது ஆக்ஸிஜன் சிலிண்டரையே மாற்றிக்கொடுத்து நோயாளியை கோமாவுக்கு கொண்டு சென்றாலும், 'நான் காரணமல்ல, லேப்தான் பொறுப்பு’ என்று சொல்லி தப்பித்துக்கொள்ளும் மருத்துவர்கள்தான் அதிகம்! இது நம் சாபக்கேடு!
விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! P40cமுப்பது ரூபாய் டாக்டர்!
க்களின் மீதான அக்கறையோடு இங்கே பேசியிருக்கும் சென்னை, சூளைமேடு, டாக்டர் நாராயணன், அங்கே உள்ள தன் கிளினிக்கில் நோயாளிகளிடம் பெற்றுக்கொள்ளும் கட்டணம் 30 அல்லது 40 ரூபாய் மட்டுமே. பணி ஓய்வுக்குப் பின் மருத்துவத்தை சேவையாக செய்துவரும் இந்த டாக்டர், ''மக்கள் பணத்துலதான் நான் மருத்துவம் படிச்சேன். இப்போ அவங்களுக்காக பணி செய்யுறேன். இந்தக் கட்டணத்தைக்கூட கிளினிக் நடத்துற இடத்துக்கான வாடகைக்காகத்தான் வாங்குறேன்!'' என்கிறார்.
இந்தப் பெரிய மனது எல்லோருக்கும் வாய்க்க வேண்டும்!
விளம்பரத்தால் ஏமாறாதீர்கள்!
டி.வி. விளம்பரங்களில் வரும் மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை, மருத்துவர்கள் மற்றும் உரிய நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் வாங்கி உட்கொள்வது, ஆபத்தையே விளைவிக்கும். 'ஆல்ப்ஸ் மலையிலிருந்து வரவழைக்கப்பட்டது... ஆப்பிரிக்க காடுகளில் இருந்து பறித்து வரப்பட்டது' என்றெல்லாம் விற்பனையைக் கூட்டுவதற்காக கலர்கலராக படம் காட்டி விளம்பரப்படுத்துவார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாறாமல் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். தரமற்ற பொருட்களையும், விளம்பரங்களையும் மக்களிடம் பரப்புவதை அரசாங்கம் தடை செய்யவேண்டும்.[/size]



[/color][/size][/color][/size]
[size][color][size][color]

 

[/color][/size]
__,_._,___[/color][/size]


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty Re: விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by ராகவா Tue 27 May 2014 - 10:49

எல்லாம் போலி.....விளம்பரம் மனிதனின் பெருமூச்சு..
விழுந்தால் ஏமாற்றமே...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum