சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! Khan11

உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!

3 posters

Go down

உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! Empty உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!

Post by ahmad78 Tue 27 May 2014 - 9:09

[size=undefined]
உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!
[/size]
[size=undefined]வேண்டாம் அலட்சியம்![/size]

[size=undefined]உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! P42aசமீபத்தில் தினசரி நாளிதழில் வந்த இந்தச் செய்தி, படித்தவர்கள் நெஞ்சைப் பதற வைத்தது. சென்னை கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் ஆலன் ஜோயஷ் சாமுவேல். இவர், சக தோழியுடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தார். அருகில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குட்டி நாய்களில் ஒன்று, இருவரையும் கடித்துள்ளது. அதில், சாமுவேலுக்குக் கையில் லேசான காயம். இருவரும் கல்லூரி வளாகத்திலேயே இருந்த மருத்துவமனையில் காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
 அதன் பிறகு சாமுவேலின் தோழி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு முறையான சிகிச்சையைத் தொடர... 'சின்னக் காயம்தானே... அதுவும் குட்டி நாய்தானே கடித்தது’ என்று சாமுவேல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். விளைவு..?
சாமுவேலுக்கு ரேபீஸ் என்ற நோய் முற்றிவிட, சென்னை, வேலூர் என்று தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
'' 'சின்னக் காயம்தானே!’ என்று நாங்களும் அலட்சியமாக இருந்துவிட்டோம். நாய் கடித்ததாக அவன் சொன்னப்பவே, நாங்க முறையான சிகிச்சை எடுத்திருந்தால், என் மகனைக் காப்பாற்றியிருக்கலாமே!'' என்று கதறுகின்றனர் சாமுவேலின் பெற்றோர்.
சிறிய அலட்சியம்கூட ஓர் உயிரையே பறித்துவிடக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவமேஉயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! P42bஉதாரணம். ரேபீஸ் பற்றி மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு போதுமான அளவுக்கு இல்லை. ரேபீஸ் எப்படிப் பரவுகிறது, அதற்கான சிகிச்சை முறைகள் என்ன, அதில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் மூளை மற்றும் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் அலீமிடம் பேசினோம்.
''எந்தப் பிராணி கடித்தாலும் ஆபத்துதான். முக்கியமாக நாய்க்கடி ரொம்பவே ஆபத்து. நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் உண்டு. அதில் முக்கியமானது வெறிநோய் எனப்படும் ரேபீஸ். இதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட வேண்டும். டெவலப் ஆகிவிட்டால், உலக அளவில் இதற்கு சிகிச்சை இல்லை.''
''ரேபீஸ் எப்படி மரணத்தை விளைவிக்கிறது?''
''ரேபீஸ் நோயால் தாக்கப்பட்ட வெறிநாய், மனிதனைக் கடிக்கும்போதோ... காயம் உள்ள இடத்தில் அதன் உமிழ்நீர் படும்போதோ, ரேபீஸ் மனிதனையும் தாக்குகிறது. வெறிநாய் கடித்த ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரைகூட எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. 90 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.
உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! P42d(2)கடிபட்ட பகுதியில் ரேபீஸ் வைரஸ் படிந்தவுடன், தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்தில் இருந்து நரம்பு வழியாக மூளையை நோக்கி நகர்கிறது. நாய் எந்த இடத்தில் கடித்தது, எந்த அளவுக்குக் காயத்தின் தன்மை இருக்கிறது என்பதைப் பொறுத்து, ரேபீஸ் வைரஸ் மூளையை அடையும் காலகட்டத்தில் வித்தியாசம் இருக்கும். காலில் கடித்தால், பாதிப்புகள் தெரிய நாட்கள் அதிகம் ஆகலாம். அதுவே கையிலோ முகத்திலோ கடித்தால், பாதிப்பு வெகு விரைவிலேயே தெரிய ஆரம்பிக்கும்.
ரேபீஸ் வைரஸ் மூளைக்குள் பரவியதும், நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. அதனால் உடலில் உள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குரல் நாய் குரைப்பதைப் போலவே இருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால், தண்ணீர் குடிக்க முடியாமல் போகும். உமிழ்நீர்கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். தண்ணீரைக் கண்டால் பயம் ஏற்படும். இதனை, 'ஹைட்ரோஃபோபியா’ என்பார்கள். தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தி, முடிவில் மரணத்தில் கொண்டுபோய் விடும்.''
''சிகிச்சை முறை என்ன?''உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! P42c
''முதலில் நாய் கடித்ததும் அந்த இடத்தை கிருமி நாசினிகளைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டும் தன்மை இல்லாத கட்டுப்போடும் துணியைக் கொண்டு காயத்தை மூட வேண்டும். கண்டிப்பாக தையல் போடக் கூடாது. பிறகு மருத்துவமனைக்கு அழைத்துவந்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற வேண்டும். நாய் கடித்த அன்றே சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
தொப்புளைச் சுற்றி 14 ஊசி போடுவார்கள் என்று பயந்தே பலரும் சிகிச்சைக்கு வருவது இல்லை. அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டது. சாதாரணமாக புஜத்தில் ஊசி போட்டாலே போதும். 'ஹுயூமன் ரேபீஸ் இம்யூன் குளோபலின்’ (Human Rabies Immune Globulin) என்ற ஊசி மருந்தை ஒரு டோஸும், ரேபீஸ் வேக்ஸின் என்ற தடுப்பூசி மருந்தை நான்கு டோஸ்களும் போட வேண்டும். நாய் கடித்த முதல் நாள், ஏழாம் நாள், 14-ம் நாள், 28-ம் நாள் என்று நான்கு முறை தொடர்ச்சியாக ஊசி போட்டாலே போதும். காயத்தின் தன்மையைப் பொறுத்து சிலருக்கு மட்டும் 3-ம் நாளோ அல்லது 28-ம் நாளுக்குப் பிறகோ ஊசி போட வேண்டியிருக்கும். சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்று பயப்படத் தேவை இல்லை. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கென இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிராமப்புற மக்களிடையே வெறி நாய்க்கடி குறித்து நல்ல விழிப்பு உணர்வு உள்ளது. நகரப்புற மக்கள்தான் இந்த விஷயத்தில் சற்று அலட்சியமாக இருக்கிறார்கள்.
உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! P40g
வெறிநாயை அடையாளம் காண முடியுமா?
 கடித்தது வெறிநாயா... சாதாரண நாயா என்பதை அதன் அன்றாடச் செயல்பாடுகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! P40fவெறிநாய் என்றால் அதிக கோபத்தன்மையுடன் இருக்கும். ஓர் இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் வரை ஓடும். நாக்கு அளவுக்கு அதிகமாக வெளியே தள்ளியிருக்கும். மூச்சு வேகமாக வரும். எச்சில் ஒழுகும். கல், மண், சகதி எல்லாம் சாப்பிடும். அதன் குரலில் ஒரு மாற்றம் இருக்கும். குரைப்பது ஊளையிடுவதுபோல இருக்கும். அருகில் போனாலே மிரண்டு கடிக்க வரும். இதர நாய்கள் அந்த வெறிநாயைக் கடிக்காது. அந்த நாய்தான் எதிரில் தென்படும் மனிதன் மற்றும் விலங்குகளைப் பாரபட்சம் பார்க்காமல் கடிக்கும். இதே நிலைதான் வெறி நாய் கடித்து நோய் பரவிய மற்ற உயிர்களுக்கும் ஏற்படும். வெறிநாய் போலவே அலைந்து திரிந்து மற்றவர்களைக் கடிக்கும். இதற்கு நேர்மாறாகவும் வெறிநாய் இருக்க வாய்ப்பு உண்டு. அதாவது மிகவும் அமைதித் தன்மையுடன் இருக்கும். எப்போதும் தனிமையில் இருக்கும். சாப்பிடாமல் இருந்து, இறந்துபோகும் 
இனிமேல், ரேபீஸ் பாதிப்பால் எந்த உயிரும் பலியாகாமல் இருப்பது நம் கையில்தான் இருக்கிறது.''
- ஆர்.லோகநாதன்,
[/size]


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! Empty Re: உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!

Post by ராகவா Tue 27 May 2014 - 10:34

நான் ஒரு நாள் சேலத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தேன்..
அப்போது இரவு நேரம் நாய்கள் குளைக்கும் சத்தம் கேட்டது..
நான் தனியாக செல்ல செல்ல ஒரு நாய் குலைக்க சில நாய் ரெடியாக என் பக்கம் வர பயம் தலைக்கு ஏறியது..ஓடவும் முடியல...
என்னை நெருங்க நெருங்க எங்க கடித்து விடுமோ என்று பயம் ...திக்..திக்..
உடனே ஒரு குச்சியே ஒடித்து குலைக்கும் போது அதை ஆட்டி..ஆவ்விடம் சுமர் ஒரு கிலோமீட்டர் நகர்ந்தேன்..
அப்பாடா...என்னால் மறக்கமுடியாது..


இது கொடுமையான நோய்...காப்பது சிறந்தது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! Empty Re: உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!

Post by rammalar Tue 27 May 2014 - 10:46

நாய் கடித்தால் உடனே தக்க சிகிச்சை
எடுத்துக்கொள்ள வேண்டும்
-
அந்த காலத்தில் ஒரு துணை ஆட்சியர்
நாய் கடித்ததற்கு தகந்த சிகிச்சை
எடுத்துக் கொள்ளாததால் மரணமடைந்தார்
-
அப்போது மக்களிடையே ஒரு விழிப்புணரச்சி
ஏற்பட்டது..
-
அவர் பணி புரிந்த பகுதியில் சர்க்கரை ஆலை
கொண்டு வர அரும்பாடு பட்டவர்...அந்த
கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவர் பெயரையே
சூட்டி கௌரவித்தது அப்போதைய அரசு
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! Empty Re: உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!

Post by ராகவா Tue 27 May 2014 - 10:47

rammalar wrote:நாய் கடித்தால் உடனே தக்க சிகிச்சை
எடுத்துக்கொள்ள வேண்டும்
-
அந்த காலத்தில் ஒரு துணை ஆட்சியர்
நாய் கடித்ததற்கு தகந்த சிகிச்சை
எடுத்துக் கொள்ளாததால் மரணமடைந்தார்
-
அப்போது மக்களிடையே ஒரு விழிப்புணரச்சி
ஏற்பட்டது..
-
அவர் பணி புரிந்த பகுதியில் சர்க்கரை ஆலை
கொண்டு வர அரும்பாடு பட்டவர்...அந்த
கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவர் பெயரையே
சூட்டி கௌரவித்தது அப்போதைய அரசு
-

அவரின் பெயர்,போட்டோ உள்ளதா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! Empty Re: உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!

Post by rammalar Tue 27 May 2014 - 10:51

அவர் பெயர் செங்கல்வராயன்
-
விழுப்பரம் மாவட்டம் பெரிய செவலையில்
அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை
அவர் பெயரால் இயங்குகிறது..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! Empty Re: உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!

Post by ராகவா Tue 27 May 2014 - 10:55

rammalar wrote:அவர் பெயர் செங்கல்வராயன்
-
விழுப்பரம் மாவட்டம் பெரிய செவலையில்
அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை
அவர் பெயரால் இயங்குகிறது..
-

நன்றி நண்பா.. !_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்! Empty Re: உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum