சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Khan11

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

2 posters

Go down

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Empty சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

Post by ahmad78 Mon Jun 02, 2014 12:49 pm

உங்கள் வீட்டில் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒரே இடம் சமையலறை தான். காரணம் அங்கே தான் ஆபத்தான மற்றும் எரிபொருள் சம்பந்தப்பட்ட பொருட்கள் உள்ளது. அதனால் உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை.


சமையலறையின் உள்ளேயும் வெளியேயும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான டிப்ஸ்களை பற்றி இப்போது விளக்க உள்ளோம். இதனால் உங்களுக்கும் உங்கள் மனம் விரும்பியவர்களும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Empty Re: சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

Post by ahmad78 Mon Jun 02, 2014 12:50 pm

குழந்தைகளையும் செல்லப் பிராணிகளையும் சமையலறைக்குள் விடாதீர்கள்

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531049-1home-improve
சமையலறையில் நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கவனத்தை திசை திருப்புவத்தில் குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல காரணங்களுக்காக, கூர்மையான பல கருவிகள் அங்கே அடுப்பு மேடையில் இருப்பதால், அதனை கொண்டு அவர்கள் தங்களை காயப்படுத்திக் கொள்ளலாம். அதனால் குழந்தைகளையும் செல்லப்பிராணிகளையும் சமையலறையை விட்டு வெளியேற்றுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு வேலையில் உதவி செய்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும். சூடான பாத்திரங்களை கையாளும் போதும் சூடு பட்டு விடலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Empty Re: சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

Post by ahmad78 Mon Jun 02, 2014 12:54 pm

கால்களை மூடும் செருப்பு அல்லது ஷூ மற்றும் பாதுகாப்பு ஆடை அணிவித்தல்

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531055-2home-improve

சமையலறையில் எப்போதுமே பாதுகாப்பான ஷூக்கள் அல்லது கால்களை மூடும் செருப்புக்களை அணிய வேண்டும். இதனால் கை தவறி, கத்தி போன்ற கூர்மையான கருவிகள் கீழே விழும் போது கால்கள் பாதுகாப்பாக இருக்கும். கத்தி அல்லது பிற கூர்மையான பாத்ஹ்டிரங்கள் கீழே விழும் போது, பொதுவாக நம் கால்களில் விழுவது தான் வழக்கம். அப்படிப்பட்ட நேரத்தில் தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்படலாம். அதனால் திடமான காலணிகளை அணிந்து கொள்ளுங்கள்.


அதே போல் சமைக்கும் போது, நீண்ட கைகளை கொண்ட லூசான ஆடைகளை அணியக் கூடாது. காரணம் அவ்வகை துணிகளில் எளிதில் நெருப்பு பற்றிக் கொள்ளும். அதே போல் சமையலறையில் வேலை பார்க்கும் போது சிந்ததிக் வகை ஆடைகளை அணியக் கூடாது. அவ்வகை ஆடைகளில் தீ பற்றிக் கொண்டால், அவை உங்கள் சருமத்தொடு ஒட்டிக் கொள்ளும். இதனால் காயங்கள் அதிகமாகும்.

-----------------------------------------

சமையலறை பகுதியில் அவதி அவதியென செயல்படாதீர்கள்
சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531062-3home-improve


வேகமாக அவதி அவதியுடன் வேலை பார்ப்பதாலேயே சமையலறையில் பல விபத்துகள் நடைபெறுகிறது. வேகமாக வேலை செய்யும் போது கவனக்குறைவு ஏற்பட்டு அதனால் விபத்துகள் நேரிடும். காய்கறிகளை வேகமாக நறுக்காதீர்கள். அதனால் உங்கள் விரல்கள் வெட்டுப்படலாம். அதே போல் அடுப்பில் இருக்கும் சூடான சட்டி அல்லது குக்கரை வேகமாக இறக்க முற்படாதீர்கள். அது உங்கள் மேலே விழுந்து விடலாம்.


செய்யும் வேலையை பொறுமையுடன் செய்யுங்கள். என்ன மிஞ்சி போனால் ஒரு 15 நிமிட தாமதம் ஆகுமா? ஆனால் விபத்துகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது முக்கியமல்லவா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Empty Re: சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

Post by ahmad78 Mon Jun 02, 2014 12:55 pm

ஹாட் பேட்கள்


சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531068-4home-improve
சமையலறையில் சூடான சட்டிகள் மற்றும் குக்கர்களை கையாள ஹாட் பேட்களை (சூட்டை தாங்கும் கையுறை) பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. மைக்ரோவேவ்வில் வைக்கப்படும் பாத்திரங்களில் பொதுவாக கடும் சூடு இருக்கும். அவைகளை வெறும் கையால் தொடவே முடியாது. அவைகளை தூக்க ஹாட் பேட்கள் கண்டிப்பாக தேவைப்படும். தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அவைகளை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Empty Re: சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

Post by ahmad78 Mon Jun 02, 2014 12:57 pm

கிண்டும் போது தள்ளி நில்லுங்கள்
சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531073-5home-improve 
அடுப்பில் எதையாவது கிண்டும் போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிண்டாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர் திசையிலேயே எப்போதும் கிண்டுங்கள். அப்படி செய்தால் சமைக்கும் போதோ கொதிக்க வைக்கும் போதோ, தீக்காயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். இது பொதுவாகவே நம்மில் பலர் செய்யும் தவறாகும். அதனால் கொதிக்கும் நீர் அல்லது எண்ணெயினால் உடல் பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படலாம்.

-------------------------------------

கத்திகளை திறமையாக பயன்படுத்த வேண்டும்
சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531078-6home-improve
சமையலறையில் கத்தியை கையாளுவது, சமையலறையில் உள்ள சவாலான வேளைகளில் ஒன்றாகும். எப்போதும் கூர்மையான கத்தியை பயன்படுத்த வேண்டும். காரணம் மொட்டை கத்தி அடிக்கடி வழுக்கி, காயங்களை ஏற்படுத்தும். காயம் ஏற்படாமல் கத்தியை எப்படி திறமையாக எப்படி கையாளுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் முனைப்பாக பயன்படுத்தாத கையை பொருட்களை பிடிக்க பயன்படுத்துங்கள். பின் முனைப்புடன் செயல்படும் கையை கொண்டு அதனை கத்தியை கொண்டு அறுக்க பயன்படுத்துங்கள். நன்றாக பழக்கம் ஏற்படும் வரை கத்தியை மெதுவாக கையாளுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Empty சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

Post by ahmad78 Mon Jun 02, 2014 12:58 pm

அனைத்து உபகரணங்களையும் சரியாக பயன்படுத்துங்கள்
 
சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531084-7home-improve
எந்த ஒரு உபகரணத்தை பயன்படுத்துவதற்கு முன்பு, அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அதனுடன் சேர்ந்து வரும் பயன்பாட்டு புத்தகத்தை படிக்க வேண்டும். இது அந்த உபகரணத்தின் இயற் பண்பை பற்றி உங்களுக்கு புரிய வைக்கும். மேலும் அந்த உபகரணத்தை பயன்படுத்தும் போது எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளலாம். ஃபுட் ப்ராஸசர் போன்ற உபகரணங்களை தண்ணீரில் கழுவ கூடாது. இது மின்கசிவை ஏற்படுத்தி உங்கள் உபகரணத்தை பாதித்து விடும். இருப்பினும் அதன் சில பகுதிகளை ஈரத் துணியால் துடைக்கலாம்.
 
 
சிந்திய பொருட்களை சுத்தமாக துடைத்தல்
சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531091-8home-improve

சமைக்கும் போது சில பொருட்கள் சிந்தும். கீழே சிதறி கிடக்கும் பொருட்களை துடைக்க தயங்காதீர்கள். அவைகள் விபத்துகள் ஏற்பட காரணமாக அமையலாம். எந்த ஒரு கரைகளும் இன்றி அவைகளை சுத்தமாக துடைக்க மறக்காதீர்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Empty Re: சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

Post by ahmad78 Mon Jun 02, 2014 1:01 pm

பொருட்களை தூக்கும் போது கவனமாக இருங்கள்
சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531097-9home-improve
சூடான சட்டிகளை தூக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களால் எவ்வளவு எடையை சுலபமாக தூக்க முடியும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்களால் சில பாத்திரங்களை தூக்க சிரமமாக இருந்தால், வீட்டில் உள்ள ஆண்களின் உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அதில் உள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக வேறு சில பாத்திரத்தில் மாற்றி அவைகளை தேவையான இடத்திற்கு தூக்கிச் செல்லுங்கள்.


---------------------------------------
சூடான உணவுகளின் மீது வரும் ஆவியை கவனியுங்கள்
சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... 31-1401531103-10home-improve
கொதிக்கும் உணவு மேலே பட்டால் எவ்வளவு காயம் ஏற்படுமோ, அதே அளவு காயம், உணவின் ஆவி முகத்தில் அடிக்கும் போதும் ஏற்படும். ஆவி பறக்கும் உணவுகளை கையாளும் போது அதிக கவனம் தேவை. உதாரணத்திற்கு, மைக்ரோவேவ்வில் எதையாவது கொதிக்க வைக்கும் போது, அதன் மூடி உங்கள் பக்கம் திறந்து இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
http://tamil.boldsky.com/home-garden/improvement/2014/10-safety-tips-follow-while-working-the-kitchen-005927.html#slide690270


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Empty Re: சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

Post by பானுஷபானா Mon Jun 02, 2014 4:19 pm

பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்

என் பொண்ணு எண்ணைச் சட்டி அடுப்புல இருக்கும் போது தான் அடிக்கடி கிச்சனுக்குள்ள வருவா ரொம்ப பயமா இருக்கும் நல்லா திட்டி அனுப்பிருவேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்... Empty Re: சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum