சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குடும்ப வாழ்வில்..... Khan11

குடும்ப வாழ்வில்.....

5 posters

Go down

குடும்ப வாழ்வில்..... Empty குடும்ப வாழ்வில்.....

Post by Nisha Mon 9 Jun 2014 - 12:32

ஒரு பெண்ணுக்கு ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது

'குடும்பம் ஒரு கோயில்' என்ற நம் கலாசாரத்தின் ஆணிவேர் நம்பிக்கை மெல்ல மெல்ல உருமாறி, உருக்குலைந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த வாழ்க்கையே கணவன் - மனைவி உறவுச் சிக்கல்கள்.

ஏன் இந்த உறவு சிக்கல்கள்... இத்தனை உறவுச் சிக்கல்கள்?! "பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்"

ராமாயணம் போன்ற இதிகாசங்களில் 'பிறன் மனை நோக்காமல் இருப்பதுதான் பேராண்மை' என்று போதிக்கப்பட்டது. இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?

இரண்டாவது காரணம், முந்தைய தலைமுறை மனிதர்கள் 'மானம் பெரிது' என்றார்கள். இன்றைய தலைமுறைக்கு 'பணம்தான் வாழ்க்கை' என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின் மூலகாரணம். 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்தைவிட 'எப்படியும் வாழலாம்' என்கிற மனநிலையை வளர்க்கும் சூழ்நிலைகள் பெருகி வருவதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை போதிக்கும் வழிமுறைகள் வீடு, கல்விக்கூடம் என எங்கும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்"

குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன, கணவன்-மனைவி உறவு இதயத்துக்கு இணக்கமாகவும், உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க வழிகள் என்ன?

"ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. 'என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்' என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.

ஆனால், ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவ தில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர் பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.

அடுத்த காரணம், ஆண், பெண் இருவருக்கும் நடக்கும் இளவயது திருமணங்கள். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறார்கள்.

அதேபோல் அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி, அந்த எதிர்பார்ப்பில் பலன் பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியாக இந்த காரணங்கள் உறவுச் சிக்கலை எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன. இதைத் தொடர்ந்து விவாகரத்துகள் அதிகரிக்கும், தனித்து வாழும் பெண், ஆண் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரச்னைகளும் அதிகரிக்கும்.

லங்காசிறி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குடும்ப வாழ்வில்..... Empty Re: குடும்ப வாழ்வில்.....

Post by Nisha Mon 9 Jun 2014 - 12:35

வாழ்க்கை இனிக்க சில வழிகள்...


கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், 'யார் சரி?' 'யார் தவறு'? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!

நம் சமூகத்தில், மனைவி தன்னை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், அலுவலக வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது... கணவர் கண்ணியம் மீறுகிறார். அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே 'வாழும் கலை'.

கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.

நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும். எதற்கு வன்முறைக்கு வழி செய்ய வேண்டும்..?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குடும்ப வாழ்வில்..... Empty Re: குடும்ப வாழ்வில்.....

Post by rammalar Mon 9 Jun 2014 - 12:56

கணவனின் உறவுகளை (அவனது மாமனார் மாமியாரை)
நன்கு உபசரிப்பதில் வல்லவளாக மனைவி
இருக்கிறார்...!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குடும்ப வாழ்வில்..... Empty Re: குடும்ப வாழ்வில்.....

Post by ahmad78 Tue 10 Jun 2014 - 11:23

பயனுள்ள தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குடும்ப வாழ்வில்..... Empty Re: குடும்ப வாழ்வில்.....

Post by jaleelge Tue 10 Jun 2014 - 11:50

கருத்துப் பதிவுகள்  மிக மிக ஆரோக்கியமானதே நிஷா மேடம்! !!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

குடும்ப வாழ்வில்..... Empty Re: குடும்ப வாழ்வில்.....

Post by ராகவா Tue 10 Jun 2014 - 11:55

நன்றி நிஷா அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

குடும்ப வாழ்வில்..... Empty Re: குடும்ப வாழ்வில்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum