Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
+2
Nisha
பானுஷபானா
6 posters
Page 1 of 1
கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
அக்பர் நடத்தும் அனைத்து சோதனைகளிலும் பீர்பால் வெற்றி பெற்று வந்ததை பொறாமைக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்பரும் பீர்பாலை ஏதாவது ஒரு வகையில் திணற வைத்து அவருக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் காய்ச்சலால் அவதிப்படுவது போலவும் நடித்தார். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்.
அக்பர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதைக் கேள்விபட்ட பீர்பால் பதட்டத்தோடு சென்றுப் பார்த்தார். தன்னை வைத்தியர்கள் வந்து பார்த்து விட்டதாகவும் உடல்நிலை தேறவில்லை என்றும் கூறினார். பீர்பால் வருத்தத்துடன் அக்பரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பீர்பால் எனது உடல்நிலை குணமடைய வைத்தியர் ஒரு வைத்தியம் கூறினார். அதை யாராலும் செயல்படுத்த முடியவில்லை. உங்களால் மட்டும் தான் முடியும் செய்வீர்களா? என்றார் அக்பர்.என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள், என்றார் பீர்பால்.எருதின் பாலை கொண்டு வந்து அதை சூடாக காய்ச்சி கல்கண்டு போட்டு குடித்தால் சரியாகி விடும் என்று வைத்தியர் கூறினார். என்றார் அக்பர். பீர்பால் வசமாக மாட்டிக் கொண்டார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
எருதின் பால் என்றதும் பீர்பால் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது அரசரின் விபரீத சோதனை என்பதை புரிந்து கொண்டார்.
அரசே….. எருதின் பாலை கொண்டு வர எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுங்கள். எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு மன்னரிடம் விடைபெற்றார். இந்த முறை நிச்சயம் பீர்பால் வெற்றி பெற இயலாது என்று இறுமாப்புடன் சிறித்துக் கொண்டார் அக்பர். வீட்டுக்கு சென்ற பீர்பால் இரவு முழுவதும் தூங்காமல் அரசரிடண் கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டேயிருந்தார். முடிவில் அருமையான யோசனை ஒன்றைக் கண்டுபிடித்த பிறகு தான் அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டு உறங்கினார்.
பீர்பாலின் மனைவி நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்த அழுக்குத் துணிகளை மூட்டையாக கட்டிக் கொண்டு அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த குளக்கரைக்குச் சென்றார். மூட்டையிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து பெரிய கல் ஒன்றின் மீது பலமாக துவைக்க ஆரம்பித்தாள். அமைதியான அந்த நேரத்தில் துணி துவைக்கும் ஓசை அரண்மனையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்த அக்பரின் காதுகளை எட்டியது.
இந்த ராத்திரியில் எதற்காக துணி துவைக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு அரண்மனையிலிருந்து வெளியில் வந்து குளக்கரைக்குச் சென்றார்.பீர்பாலின் மனைவியை இதற்கு முன்னால் அக்பர் பார்க்காதபடியால் ஏனம்மா எதற்காக நடு இரவில் துணிகளை துவைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கோபமாகக் கேட்டார்
அரசே, ரெண்டு நாட்களுக்கு முன்புதான் என் கணவர் பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தார். உதவிக்காக சேர்ந்திருந்த வேலைக்காரியும் இன்று வரவில்லை. துவைக்க வேண்டிய துணி நிறைய சேர்ந்து விட்டது. வேறு என்ன செய்வது. எல்லா வேலைகளையும் பார்த்து விட்டு துவைப்பதற்காக இப்போது கொண்டு வந்தேன்! என்று துக்கம் தொண்டையை அடைக்க கூறினாள் பீர்பாலின் மனைவி. இதைக் கேட்ட அக்பர் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார். ஆண்களுக்கு பிரசவமா? கேள்விக் குறியோடு யோசித்தார் மன்னர். இதுதான் சமயம் என்று எண்ணிய பீர்பாலின் மனைவி எருதின் பாலை அரசர் கொண்டு வர சொல்லுவதை விட ஆண்கள் பிள்ளை பெறுவதில் ஆச்சர்யமோ, அதிசயமோ இல்லையே! என்றாள். பொறுமையாக அதன் பிறகு தான் பீர்பாலின் மனைவி என்பதை தெரிந்து கொண்டார். தனக்கு சரியாக பாடம் புகட்டியதை உணர்ந்தார்ய வேறு வழியில்லாமல் அக்பர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பீர்பாலை வரச்சொல்லி பரிசுகளை கொடுத்து அனுப்பினார்.
நன்றி லினோஜ்

Last edited by பானுஷபானா on Fri 13 Jun 2014 - 14:28; edited 1 time in total
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
அக்பரின் சோதனையை சமயோசிதமாக கையாண்ட பிர்பாலின் புத்திசாதூர்யம் மெச்சத்தக்கது.
நல்லதொரு கதைப்பகிர்வுக்கு நன்றி பானு. இதே போல் அக்பர் பீர்பால் கதைகளை தேடி இதே திரியில் தொகுத்து வாருங்கள் பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
Nisha wrote:அக்பரின் சோதனையை சமயோசிதமாக கையாண்ட பிர்பாலின் புத்திசாதூர்யம் மெச்சத்தக்கது.
நல்லதொரு கதைப்பகிர்வுக்கு நன்றி பானு. இதே போல் அக்பர் பீர்பால் கதைகளை தேடி இதே திரியில் தொகுத்து வாருங்கள் பானு!
நன்றி நிஷா)(
ம்ம்ம் அப்படியே செய்கிறேன் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
சேனையில் தெனாலி ராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள், நீதிக்கதைகள் என நிரம்ப தொகுக்கலாம் பானு!
அங்கங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பதை தேடி அவர்களுக்கு நன்றி சொல்லி ஒரே தொகுப்பாய் எடுத்தால் நம் சேனை ஒரு களஞ்சியமாய் இருக்கும் பானு.
நேரம் ஒத்துழைத்தால் முயற்சி செய்யுங்கள்.
அங்கங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பதை தேடி அவர்களுக்கு நன்றி சொல்லி ஒரே தொகுப்பாய் எடுத்தால் நம் சேனை ஒரு களஞ்சியமாய் இருக்கும் பானு.
நேரம் ஒத்துழைத்தால் முயற்சி செய்யுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
கடைசியில் எருதின் பால் கிடைக்காமலே போய் விட்டதே ஹா ஹா நானும் நினைத்தேன் பீர்பால் எப்படிடா சமாளிக்கப்போகிறார் என்று
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி அக்கா
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
அக்பர் சபையில் அமர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு விநோதமான எண்ணம் தோன்றியது.
உடனே அமர்ந்திருந்த அமைச்சர்களை நோக்கி, பொதுவாக ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அவரது கை உயர்ந்தும், வாங்குபவரின் கை தாழ்ந்தும் இருப்பது உண்மை! ஆனால் தானம் தரும் சமயத்தில் கை தாழ்ந்தும் பெறுபவரின் கை உயர்ந்தும் இருப்பது எந்த சமயத்தில்? இதற்கு சரியான விளக்கம் கூறுங்கள் என்றார் அக்பர்.
சக்ரவர்த்தி கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் எவ்வளவு யோசித்தும் விடை சரியாகக் கிடைக்கவில்லை. ஆதலால் மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லாது மவுனமாக இருந்தனர்.
அச்சமயம் பீர்பால் சபையில் வந்து அமர்ந்தார் மற்ற அமைச்சர்களிடம் கேட்ட அதே கேள்வியை பீர்பாலிடம் அக்பர் கேட்டார். பீர்பால் சிரித்துக் கொண்டே சக்ரவர்த்தி அவர்களே எல்லோரும் எளிதாகப் பதில் சொல்லி விடுவார்கள். இதற்கு விடையளிக்க வேண்டும் என்பதினால் விடையளிக்கிறேன்.
ஒருவர் மூக்குப் பொடி டப்பியைத் திறந்து மூக்குக்குப் பொடி போடும்போது மற்றொருவர் கொஞ்சம் மூக்குப் பொடி தாருங்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அச்சமயம் அவர் அந்த டப்பியை அவர் முன் நீட்டுவார். மூக்குப் பொடியை எடுப்பவர் கொடுப்பவரின் கையைவிட எடுப்பவரின் கை சற்று மேலே இருக்கும்.
ஆகையினால் மூக்குப் பொடி தானம் தரும் சமயம் கொடுப்பவரின் கை கீழேயும் – வாங்குபவரின் கை மேலேயும் உயர்ந்திருக்கும் என்றார் பீர்பால்.
இந்த சின்ன விஷயம் கூட நமது அறிவுக்கு எட்டவில்லை என்று மற்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டனர்.
தன்னுடைய கேள்விக்கு சட்டென்று பதில் சொன்ன பீர்பாலை அக்பர் மிகவும் பாராட்டினார்.
நன்றி.
தமிழ் கடல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
பானுஷபானா wrote:

மூக்குப் பொடி...சிக்கரட் பெட்டி...தீப் பெட்டி...என்று தொடர்கிறது...
நாம புகைபிடிப்பதில்லையே... வெற்றிலையும்,,,மஸ்துக்களும்......
பாவிப்பதில்லையே அதுதான் நிறம்பத் தெரியாது.
நல்ல கருத்தாழமுள்ள கதைகள் தொடருங்கள்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
மூக்குப்பொடி போடும் பழக்கம்
அக்பர் காலத்தில் இல்லை...!
-
இப்பழக்கம் 17ம் நாற்றாண்டில்தான்
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு பரவியது..!!
-
அக்பர் காலத்தில் இல்லை...!
-
இப்பழக்கம் 17ம் நாற்றாண்டில்தான்
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு பரவியது..!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
rammalar wrote:மூக்குப்பொடி போடும் பழக்கம்
அக்பர் காலத்தில் இல்லை...!
-
இப்பழக்கம் 17ம் நாற்றாண்டில்தான்
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு பரவியது..!!
-
நீங்களும் பித்திசாலித்தனமாக யோசிக்கிறீங்க ராம்மலர்..
நீங்கள் யார் காலத்து மனிதர் என்று கேட்டுடப் போறாங்க சேர்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
அக்பர் அரசாண்ட காலம் எந்த நூற்றாண்டு..?
-
பொழுது போக்கு கதைகள் என்றாலும்
அதிலும் காலப்பிழை இருக்க கூடாதல்லவா..?!
-
-
பொழுது போக்கு கதைகள் என்றாலும்
அதிலும் காலப்பிழை இருக்க கூடாதல்லவா..?!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கொடுக்கும் கை கீழே... வாங்கும் கைமேலே....– அக்பர் பீர்பால் கதை
rammalar wrote:அக்பர் அரசாண்ட காலம் எந்த நூற்றாண்டு..?
-
பொழுது போக்கு கதைகள் என்றாலும்
அதிலும் காலப்பிழை இருக்க கூடாதல்லவா..?!
-
அது முக்கியம்தான் ராம்மலர் அவர்களே !
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum